Published:Updated:

கேட்கும் திறனை இழந்த பெண்: ஐ.ஏ.எஸ் அதிகாரியான மோட்டிவேஷனல் கதை! யார் தெரியுமா?

Exam (Representational Image)

தன்னுடைய 16 ஆவது வயதில் 90 முதல் 95 சதவிகித கேட்கும் திறனை இவர் இழந்துள்ளார். நான்கு மாதங்கள் மட்டுமே ஐ.ஏ.எஸ் தேர்வுக்காகப் படித்தவர், தேர்வில் 9 ஆவது இடம் பிடித்துள்ளார். அதுவும் தன்னுடைய முதல் முயற்சியிலேயே இந்தச் சாதனையை நிகழ்த்திக் காட்டியுள்ளார்.

கேட்கும் திறனை இழந்த பெண்: ஐ.ஏ.எஸ் அதிகாரியான மோட்டிவேஷனல் கதை! யார் தெரியுமா?

தன்னுடைய 16 ஆவது வயதில் 90 முதல் 95 சதவிகித கேட்கும் திறனை இவர் இழந்துள்ளார். நான்கு மாதங்கள் மட்டுமே ஐ.ஏ.எஸ் தேர்வுக்காகப் படித்தவர், தேர்வில் 9 ஆவது இடம் பிடித்துள்ளார். அதுவும் தன்னுடைய முதல் முயற்சியிலேயே இந்தச் சாதனையை நிகழ்த்திக் காட்டியுள்ளார்.

Published:Updated:
Exam (Representational Image)

பல தடைகளையும் தாண்டி ஒருவர் சாதிக்கும்போது தான் அவர்களின் வாழ்க்கை, பிறருக்கும் ஊக்கமளிக்கும் வெற்றிக் கதையாகிறது. அப்படியான ஒரு சாதனை பெண்மணிதான் சௌமியா ஷர்மா. டெல்லியை சேர்ந்த இவர், சிவில் சர்வீஸுக்காக பயிற்சி மேற்கொள்ளும் அனைவருக்கும் ரோல் மாடல் என்றே சொல்லலாம்.

சௌமியா ஷர்மா
சௌமியா ஷர்மா
facebook

தன்னுடைய 16 ஆவது வயதில், 90 முதல் 95 சதவிகித கேட்கும் திறனை இவர் இழந்துள்ளார். அதன்பிறகு காது கேட்கும் கருவியைப் பயன்படுத்தி வந்துள்ளார். நான்கு மாதங்கள் மட்டுமே ஐ.ஏ.எஸ் தேர்வுக்காகப் படித்தவர், எந்த கோச்சிங் சென்டரையும் அணுகவில்லை. தேர்வுக்குத் தயாரான நிலையில் 23 வயதில், 2017-ம் ஆண்டு சிவில் சர்வீஸ் தேர்வை எழுதி உள்ளார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

வெளியான தேர்வின் முடிவுகள் அவருக்கு ஆச்சர்யத்தை அளித்துள்ளன. அதாவது ஐ.ஏ.எஸ் தேர்வில் 9-வது இடம் பிடித்துள்ளார். அதுவும் தன்னுடைய முதல் முயற்சியிலேயே இந்தச் சாதனையை நிகழ்த்திக் காட்டியுள்ளார்.

Saumya Sharma
Saumya Sharma
facebook

மேலும், முதன்மைத் தேர்வின்போது (main exam) அவருக்கு கடுமையான காய்ச்சல் இருந்துள்ளது. படுக்கையை விட்டு எழுந்திருக்க முடியாத நிலையிலும் தேர்வுக்குச் சென்று தன்னுடைய கனவை நனவாக்கி உள்ளார். அதுமட்டுமல்லாமல் மாற்றுத்திறனாளிகள் பட்டியலில் சேர்ந்து தேர்வெழுதாமல், பொதுப்பிரிவிலேயே தேர்வெழுதி தேர்ச்சி பெற்றுள்ளார்.

தற்போது மகாராஷ்டிராவில் ஐ.ஏ.எஸ் அதிகாரியாக உள்ளார். இவரை இன்ஸ்டா பக்கத்தில் 2.4 லட்சம் பேரும், ட்விட்டரில் 19,000 பேரும், முகநூல் பக்கத்தில் 16,000 பேரும் பின்தொடர்கின்றனர்.

பயணங்கள் தொடரட்டும்..!