Published:Updated:

`இனி பெண்களும் தேசிய பாதுகாப்புப் படையில் சேரலாம்'- உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு அறிவிப்பு

பெண்கள் ராணுவம்
பெண்கள் ராணுவம்

இனி தேசியப் பாதுகாப்புப் படைகளில் பெண்களும் சேரலாம் என்கிற வரலாற்றுச் சிறப்பு மிக்க முடிவை உச்ச நீதிமன்றத்திடம் இந்தியாவின் கூடுதல் சொலிஸிட்டர் ஜெனரல் ஐஸ்வர்யா பாத்தி தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

கடந்த செப்டம்பர் மாதம் 2020-ம் ஆண்டு பெண் அதிகாரிகளைத் தேர்வு செய்வதற்காகச் சிறப்புத் தேர்வு ஒன்றை இந்திய ராணுவம் நடத்தியது. இந்தத் தேர்வுக்கான முடிவுகள் ஒரு மாதம் கழித்து வெளியிடப்பட்டது. ஆனால் அப்படி தேர்வு செய்யப்பட்ட பெண்களில் சிலர், தாங்கள் ராணுவத்தின் பெர்மனென்ட் கமிஷனுக்கு (Permanent Commission) தேர்வாகாமல் ஷார்ட் சர்வீஸ் கமிஷனுக்கு (Short Service Commission) தேர்வானது குறித்து அதிருப்தி அடைந்தனர். இந்த முடிவுகளை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கையும் தொடர்ந்தனர்.

அதென்ன பெர்மனென்ட் கமிஷன் மற்றும் ஷார்ட் சர்வீஸ் கமிஷன்?

ஒரு பெண்ணோ, ஆணோ ராணுவத்தின் ஆயுதப் படைகளில் பணிக்குச் சேர்ந்தது முதல் ஓய்வு பெறும் வயது வரை அங்கேயே தொடர்ந்து பணியாற்றினால் அது பெர்மனென்ட் கமிஷன். ஆனால் ராணுவத்தின் ஆயுதப் படைகளுக்கு ஒத்துழைப்பு அளிக்கும் பணியில் 10 முதல் 14 ஆண்டுகள் மட்டுமே பணியில் இருந்தால் அது ஷார்ட் சர்வீஸ் கமிஷன்.

ராணுவத்தில் பெண்கள்
ராணுவத்தில் பெண்கள்
பெண்கள் ராணுவ உயர் பதவிகளுக்கு வரக்கூடாதா... என்ன காரணங்கள் சொல்கிறது மத்திய அரசு?

இதில், பெர்மனென்ட் கமிஷனில் பணிபுரிய தங்களையும் அனுமதிக்கவேண்டும் என்று சில பெண்கள் தொடுத்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், சென்ற ஆண்டு பிப்ரவரி மாதம் மிக முக்கியத் தீர்ப்பு ஒன்றை அளித்தது. அதாவது, நமது இந்திய ராணுவத்தின் ஆயுதப் படைகளில் பெண்களையும் நிரந்தரப் பணியாளர்களாக அமர்த்தவேண்டும் என்று மத்திய அரசை அறிவுறுத்தியது. குறிப்பாக பெண்களது உடலியல் வரம்பை (physiological limitation) ஒரு காரணமாகக் காட்டி பெண்கள் மீது காட்டப்படும் பாலினப் பாகுபாட்டை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் நீதிமன்றம் திட்டவட்டமாகத் தெரிவித்தது.

45 வயதுகளில் உள்ள ராணுவப் பணிகளில் இருக்கும் பெண்கள் பெர்மனென்ட் கமிஷனுக்காக முயற்ச்சிக்கும்போது, 25 வயதுகளில் இருக்கும் ஆண் அதிகாரிகளிடம் உள்ள பிட்னெஸ் இப்பெண்களிடமும் இருக்கவேண்டும் என்று இந்திய ராணுவம் ஏன் எதிர்பார்க்கிறது என்றும் உச்சநீதிமன்றம் காட்டமாகக் கேள்வி எழுப்பியது.

உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவுக்குப் பிறகே ராணுவத் தேர்வாணையம் தனது தேர்வு முறைகளில் பல மாற்றங்களைக் கொண்டுவந்தது. இதன் காரணமாக கூடுதலாக 147 பெண்கள் இந்திய ராணுவத்தின் பெர்மனென்ட் கமிஷனுக்குத் தேர்வு செய்யப்பட்டனர். இப்போது வரை மொத்தமாக 424 பெண்கள் பெர்மனென்ட் கமிஷனுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

ராணுவத்தில் பெண்கள்
ராணுவத்தில் பெண்கள்

இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான், இனி இந்திய தேசியப் பாதுகாப்புப் படையில் (National Defence Academy) சேர்வதற்கான சேர்க்கைத் தேர்வில் ஆண்களுடன் பெண்களையும் பங்கெடுக்க அனுமதிக்கவேண்டும் என்று குஷ் கல்ரா என்கிற வழக்கறிஞர் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் அமர்வு, இனி இந்திய தேசியப் பாதுகாப்புப் படைக்கான சேர்க்கைத் தேர்வை பெண்களும் எழுதலாம் என்று அறிவித்தனர். இந்த ஆண்டிற்கான தேர்வு வரும் நவம்பர் 14-ம் தேதி நடக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது.

இவை எல்லாவற்றுக்கும் மேலாக, இனி தேசியப் பாதுகாப்புப் படைகளில் பெண்களும் சேரலாம் என்கிற வரலாற்றுச் சிறப்பு மிக்க முடிவை உச்ச நீதிமன்றத்திடம் இந்தியாவின் கூடுதல் சொலிஸிட்டர் ஜெனரல் ஐஸ்வர்யா பாத்தி தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதுகுறித்த விரிவான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் அவர் உச்ச நீதிமன்றத்தில் கூறியிருக்கிறார். குறிப்பாக, தேசிய பாதுகாப்புப் படையின் ஆயுதப் படைகளில் இனி பெண்கள் பெர்மனென்ட் கமிஷன் பிரிவில் தங்களது சேவையைத் தொடரலாம் என்ற அரசு அறிவிப்பு நாடு முழுவதும் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.

``இனி தேசியப் பாதுகாப்புப் படைகளில் பெண்களும் இணைந்து பணியாற்றலாம் என்கிற முடிவை ஆயுதப் படையே எடுத்துள்ளதை அறிவிப்பதை நாங்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம். அதே சமயத்தில் சீர்திருத்தங்கள் என்பது ஒரே நாளில் நடத்திக்காட்டப்படக்கூடியது அல்ல என்பதை நீங்கள் அறிவீர்கள்.

ராணுவப் பெண்கள்
ராணுவப் பெண்கள்
`கொரோனாவால் ஆதரவிழந்த குழந்தைகளுக்கு உடனடியாக உதவுங்கள்!' - உச்சநீதிமன்றம் உத்தரவு

`பெண்கள் நமது ராணுவத்தின் ஆயுதப்படைகளில் சேர்வதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வகுப்பதற்கும், உள்கட்டமைப்பை ஏற்படுத்துவதற்கும் சிறிது காலம் தேவைப்படுகிறது' என்று மத்திய அரசு கூறியுள்ளது. இதன் அடிப்படையில் வெகுவிரைவாக பெண்களும் ஆயுதப் படைகளில் நிரந்தரப் பணியாளர்களாக சேவையில் இணைவார்கள் என்று நம்புகிறோம் ” என்று உச்சநீதிமன்றம் கூறியிருக்கிறது.

இந்த விவகாரத்தில் அரசு எடுத்துள்ள நிலைப்பாட்டை பாராட்டியிருக்கும் உச்ச நீதிமன்றம், அதே சமயத்தில் இந்த முடிவை விரைவில் செயல்படுத்தும்படி அரசை வலியுறுத்தியுள்ளது. ``ஆயுதப் படைகள் நமது இந்திய ராணுவத்தின் மரியாதைக்குரிய அடையாளம். எனவே இதில் பாலின சமத்துவம் இருக்கவேண்டியது மிக மிக அவசியம்'' என்றும் உச்சநீதிமன்றம் கருத்துத் தெரிவித்துள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு