Published:Updated:

ஆசிரியை முதல் பத்திரிகையாளர் வரை; பணியிடங்களில் நிகழும் உழைப்புச் சுரண்டல்கள் என்னென்ன?

Office (Representational Image) ( Photo: Pixabay )

தாங்கள் அனுபவிக்கும் உழைப்புச் சுரண்டல், ஊதியப் பாகுபாடு, பணியிடப் பிரச்னை, பாலியல் தொல்லை குறித்து, தங்கள் அடையாளத்தை தவிர்த்து, தமிழகம் முழுக்கவுள்ள சில பெண்கள் பகிர்ந்துகொண்டவை இந்தக் கட்டுரையில் இடம்பெறுகின்றன.

ஆசிரியை முதல் பத்திரிகையாளர் வரை; பணியிடங்களில் நிகழும் உழைப்புச் சுரண்டல்கள் என்னென்ன?

தாங்கள் அனுபவிக்கும் உழைப்புச் சுரண்டல், ஊதியப் பாகுபாடு, பணியிடப் பிரச்னை, பாலியல் தொல்லை குறித்து, தங்கள் அடையாளத்தை தவிர்த்து, தமிழகம் முழுக்கவுள்ள சில பெண்கள் பகிர்ந்துகொண்டவை இந்தக் கட்டுரையில் இடம்பெறுகின்றன.

Published:Updated:
Office (Representational Image) ( Photo: Pixabay )

வயல் வேலைகளில் இருந்து ஒயிட் காலர் ஜாப்கள் வரை, பெண்களின் மீதான உழைப்புச் சுரண்டல் வெவ்வேறு பரிணாமங்களை எடுத்துள்ளதே தவிர, அதற்குத் தீர்வு என்பது தூரத்திலேயே கிடக்கிறது. இந்நிலையில், உழைப்பு முதல் பாலியல் தொல்லைகள் வரை பணியிடங்களில் பெண்கள் சுரண்டப்படுவதற்கு எதிரான குரலை, #StopExploitingWomen பிரசாரமாக இந்த மகளிர் தினத்தில் முன்னெடுக்கிறது அவள் விகடன்.

மகளிர் தினம்
மகளிர் தினம்

தங்கள் மீது நடத்தப்படும் உழைப்புச் சுரண்டல் குறித்து குரல் எழுப்ப பிரபலங்கள், அதிகாரவர்க்கத்திலேயே சில பெண்கள்தான் முன்வருகின்றனர். அந்தளவுக்குப் பெண்களுக்கு பாரபட்சமான, கடுமையான சூழல்தான் இங்கு நிலவுகிறது. இந்நிலையில், சாமான்யப் பெண்களைப் பொறுத்தவரை, பணியிடங்களில் தங்களுக்கு நேரும் சுரண்டல்கள் பற்றிக் குரல் எழுப்பினால் தங்கள் வேலை, எதிர்காலம், குடும்பப் பொருளாதாரம் பாதிக்கப்படுமே என்ற அச்சத்தினால், தங்கள் குரல்களை தங்களுக்குள்ளேயே புதைத்துக்கொள்கின்றனர். அந்த வகையில் தாங்கள் அனுபவிக்கும் உழைப்புச் சுரண்டல், ஊதியப் பாகுபாடு, பணியிடப் பிரச்னை, பாலியல் தொல்லை குறித்து, தங்கள் அடையாளத்தை தவிர்த்து, தமிழகம் முழுக்கவுள்ள சில பெண்கள் பகிர்ந்துகொண்டவை:

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

கோவையைச் சேர்ந்த பத்திரிகையாளர்

``நான் ஹைதராபாத்தில் பத்திரிகை நிறுவனம் ஒன்றில் ஒரு வருடம் வேலைசெய்தேன். அப்போது எனக்கு அரசியல் செய்திகள் மற்றும் முக்கியச் செய்திகள் எதுவும் தரமாட்டார்கள். சமையல் குறிப்பு, அழகுக்குறிப்பு, சிறப்புக் கட்டுரைகள் மட்டுமே தருவார்கள். ஒருமுறை டாக்ஸி டிரைவர்கள் ஆர்ப்பாட்டம் ஒன்று நடந்தது. அங்கே நான் செய்தி சேகரிக்கச் சென்றிருந்தபோது கூட்ட நெரிசலாக இருக்கிறது என்று என்னை காரில் இருந்து இறங்கவே விடவில்லை. இத்தனையும் மீறி அரசியல், ஆர்ப்பாட்டம் போன்ற செய்திகள் எனக்குக் கொடுக்கப்பட்டால் அது வெறும் Package செய்திகளாக மட்டுமே இருக்கும்.

Representational Image
Representational Image

அரசியல் உள்ளிட்ட பகுதிகள் ஆண்களுக்குத் தரப்படுவதால் அவர்களுக்கு அதிக சம்பளம் கிடைக்கிறது. பெண்களுக்கு அவர்களைவிடக் குறைவான சம்பளம்தான் கொடுக்கப்படுகிறது. ஒரே அளவு அனுபவம் உள்ள ஆணுக்கும் பெண்ணுக்கும் சமமான சம்பளம் கிடைப்பதில்லை. ஒரு பிரபல தேசிய ஊடகம் ஒன்று வேலைக்கு ஆள்களைச் சேர்க்க விண்ணப்பப் படிவம் வெளியிட்டிருந்தது. விண்ணப்பத்தில் எதுவும் குறிப்பிடவில்லை. நான் நேர்முகத் தேர்வுக்குச் சென்றபோதுதான், ஆண்களை மட்டும்தான் வேலைக்கு எடுக்கிறார்கள் என்று தெரியவந்தது.''

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த தூய்மைப் பணியாளர்

``எங்கள் வேலையில் சாதிப் பாகுபாடு இருக்கிறது. பெரும்பாலான இடங்களில் குறிப்பிட்ட சாதியைச் சேர்ந்தவர்கள்தான் இந்த வேலை பார்க்கிறோம். எங்களைக் `குப்பை அள்ளுறவங்க' என்பதைவிட, `தூய்மைப் பணியாளர்கள்' என்று சொல்லும்போது சந்தோஷமாக இருக்கும். எங்கள் ஊரில் மூன்று தூய்மைப் பணியாளர்களுமே பெண்கள்தான். ஆண்களுக்குச் சளைக்காமல் வேலைசெய்வோம். ஆனாலும், `பொம்பளதான...' என்று பலரும் எங்களை மதிப்பதே இல்லை. ஒருநாள் சாதியைச் சொல்லி ஒருவர் கடுமையாகத் திட்டிவிட்டார். எங்கள் மேல் தப்பு இல்லை என்றாலும் பதில் பேச முடியவில்லை. குப்பை எடுக்கும்போது நாங்கள் விசில் அடித்துவிட்டுத்தான் வருவோம். ஆனாலும் உடனே குப்பையை எடுத்து வரமாட்டார்கள். ரொம்ப நேரம் காக்க வைப்பார்கள். எங்கள் சம்பளம் மாதம் 3,600. வேலைக்கு ஏற்ற சம்பளமும் இல்லை. உலகம் முழுக்கவே, ஒடுக்கப்பட்டவர்கள்தான் பெண்கள். அதிலும், ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பெண்கள் இன்னும் அவலமாக ஒடுக்கப்படுவது எங்கள் துயரம்.''

தூய்மைப் பணியாளர் (மாதிரி படம்)
தூய்மைப் பணியாளர் (மாதிரி படம்)

திருச்சியைச் சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர்

``அலுவலக வளாகத்தில் வேலைரீதியாக ஆணும் பெண்ணும் பேசிக்கொண்டால்கூட பெண்களை அநாகரிகமாகப் பேசுவார்கள். ஆம், ஆணும் பெண்ணும் பேசிக்கொண்டிருந்தாலும் பட்டங்கள் எல்லாம் பெண்களுக்கு மட்டும்தான். ஆண்கள் லீவ் கேட்டால் அதிகக் காரணம் கேட்கமாட்டார்கள். ஆனால் நானோ, சக பெண் ஊழியரோ லீவ் கேட்டால், `லீவே வேண்டாம்' என்று நினைக்கும் அளவுக்கு கேள்வி கேட்பார்கள்.

நான் விடுதியில் தங்கி வேலைபார்க்கிறேன். சில நேரங்களில் ஏதேனும் அவசர வேலைக்காக அரை மணி நேரமோ, ஒரு மணி நேரமோ பெர்மிஷன் கேட்டால், நான் கேட்ட காரணத்துக்காகத்தான் அனுமதி பெற்றிருக்கேனா என்பதை வேவு பார்க்கப் பின்னால் ஒருவரை அனுப்புவார்கள்.

அலுவலக நேரத்தில் போன் பேசக்கூடாது என்பது எங்கள் நிறுவன விதி. ஒருவேளை அவசரமாகப் பேச வேண்டுமென்றால் அதிகாரியிடம் அனுமதி கேட்டு இரண்டு நிமிடங்கள் மட்டும் பேசிக்கொள்ளலாம். ஒருநாள் ஒரு அவசர காரணமாக, இரண்டு நிமிடங்கள் அனுமதி கேட்டுப் பேசினேன். அது நான்கு நிமிடங்களாக நீண்டுவிட்டது. அதற்காக, `என்ன...உன் பாய் ஃப்ரெண்ட்கூட பேசிகிட்டு இருந்தியா?' என்பதுபோல வார்த்தைகளைப் பிரயோகித்தார்கள். அதிலிருந்து என்ன அவசரம் என்றாலும் நான் போன் பேசுவதே இல்லை.

என் திருமணத்துக்கு முன் நான் செய்த வேலைதான். அதையே திருமணத்துக்குப் பிறகு செய்தபோது, அதில் ஏதேனும் தவறு இருந்தால் அதைப் பெரிதுபடுத்தி, `என்ன.. ராத்திரி முழுக்க ரொமான்ஸா? அதான் கவனம் இங்க இல்ல', `வீட்டுக்காரர் ஞாபகத்திலேயே இருக்கிறியா' என்றெல்லாம் நகைச்சுவை என்ற பெயரில் ஆபாசமாகப் பேசுவார்கள், சீரியஸாகவும் கேட்பார்கள்.''

Education (Representational Image)
Education (Representational Image)

கள்ளகுறிச்சியை சேர்ந்த ஆசிரியர்

``பள்ளிகளில் வெளி வேலைகள் மற்றும் உள் வேலைகள் என்று பல வேலைகள் ஆசிரியர்களுக்கு இருக்கும். சில வெளி வேலைகளுக்காக ஆண் ஆசிரியர்கள் செல்வதுண்டு. ஆனால் ஒரு சில ஆண்கள் அரை நாள் வேலையை முழுநாள் வேலை இருப்பதுபோல் கணக்குக்காட்டி அன்றைய நாள் முழுவதும் விடுப்பு எடுத்துவிடுவார்கள். இதனால் பள்ளியில் அன்றைய தினம் அவர்கள் செய்ய வேண்டிய எல்லா வேலைகளையும் பெண் ஆசிரியர்கள் தலையில் திணித்து விடுவார்கள். இது கூடுதல் வேலைப்பளுவை ஏற்படுத்திவிடுகிறது.''

சென்னையைச் சேர்ந்த பொறியியல் பயிற்சியாளர் 

``எனக்கு ஐந்து வருடங்களுக்கும் மேலாக அனுபவம் உள்ளது. அப்படியிருந்தும் ஓர் ஆண் வேலைக்குச் சேரும்போது, அவருக்கு ஆலோசனையோ, கட்டளையோ நான் வழங்கினால் அதை ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மை அவருக்கு இருப்பதில்லை. அவர்கள் என்னைவிட அதிகமாகப் படித்திருக்கிறார்கள் என்பதைக் காட்டிலும், `ஒரு பெண் நமக்குக் கட்டளையிடுவதா' என்ற எண்ணமே ஆண்களிடம் மேலோங்கி இருக்கிறது.

Office
Office
Pixabay

ஜூனியர்கள் மட்டுமல்ல, சீனியர்களும் சிக்கல்தான். என்னுடன் படித்த அண்ணா ஒருவர் திடீரென இறந்துவிட்டார். அலுவலகத்திலிருந்து புறப்பட்டுச் சென்றுவிட்டேன். அடுத்த நாள் நான் அலுவலகத்துக்குச் சென்றபோது மேலதிகாரி, ``என்னம்மா... சாவுன்னா அப்புறம் போய்ப் பார்க்க வேண்டியதுதான..." என்று திடீரென சத்தம் போட்டுக் கேட்டார். எல்லோரது முன்னிலையிலும் ஏதோ குற்றம் செய்தவரைப்போல என்னை நடத்தியதை இப்போது நினைத்தாலும் மனம் வருத்தப்படும். அதிகாரக் குரல் இதேபோல் ஆண்களிடம் நீளாது. ஒரு குழுவின் தலைவராக ஒரு பெண் தேர்ந்தெடுக்கப்பட்டால் ஆண்கள் மத்தியில் அவர் மீதான நம்பிக்கை மிகவும் குறைவாகவே உள்ளது. ஆண், பெண் பாகுபாடு ஒழிந்தால்தான் பணியிடத்தில் பெண் முன்னேற முடியும்."

கோவில்பட்டியைச் சேர்ந்த பள்ளி ஆசிரியர்

``நான் வேலைக்குச் சேர்ந்த புதிதில் ஒருநாள் வகுப்பை முடித்துவிட்டு மாணவர்களது நோட்டுகளைத் திருத்த அமர்ந்தேன். அதைப் பார்த்த தலைமை ஆசிரியை நாற்காலியை எடுக்கச் சொல்லிவிட்டார். அதற்குப் பிறகு மேசையையும் எடுக்கச் சொல்லிவிட்டார். இது குறித்து, மேனேஜரிடம் புகார் கொடுத்தேன். நான் புகார் கொடுத்ததால் என் பெர்ஃபார்மன்ஸ் சர்வீஸ் ரெஜிஸ்டரில் கை வைப்பதாக நேரடியாகவே மிரட்டினார்கள்.

School (Representational Image)
School (Representational Image)
AP Photo

வேண்டுமென்றே பணிகளில் குறைகள் சொன்னார்கள். பெண்கள் என்றால் வேலையை ஓவர்லோடு செய்யலாம் என்பது, எல்லா பணியிடங்களிலும் புழங்கும் சுரண்டல்.''

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism