Published:Updated:

அடுப்பங்கரையில் இருந்தாலும் பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கப்படும் பெண்கள்-பெண்ணை அறிவோம் பயிற்சி பட்டறை

அச்சம், மடம்,நாணம் -பெண்ணை அறிவோம் பயிற்சி பட்டறை
News
அச்சம், மடம்,நாணம் -பெண்ணை அறிவோம் பயிற்சி பட்டறை

`சொத்தை யார் அனுபவிப்பது என்ற போது தனியுடைமை கொள்கை உருவாகிறது. இதற்கு பின்னரே பெண்ணுக்கான சுதந்திரம் பறிபோகிறது. இதன் விளைவாகவே பெண்ணும், பெண் பெற்ற குழந்தையையும் சொத்தாக ஆண்கள் கருதத் தொடங்கியுள்ளனர்.'

அடுப்பங்கரையில் இருந்தாலும் பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கப்படும் பெண்கள்-பெண்ணை அறிவோம் பயிற்சி பட்டறை

`சொத்தை யார் அனுபவிப்பது என்ற போது தனியுடைமை கொள்கை உருவாகிறது. இதற்கு பின்னரே பெண்ணுக்கான சுதந்திரம் பறிபோகிறது. இதன் விளைவாகவே பெண்ணும், பெண் பெற்ற குழந்தையையும் சொத்தாக ஆண்கள் கருதத் தொடங்கியுள்ளனர்.'

Published:Updated:
அச்சம், மடம்,நாணம் -பெண்ணை அறிவோம் பயிற்சி பட்டறை
News
அச்சம், மடம்,நாணம் -பெண்ணை அறிவோம் பயிற்சி பட்டறை

அச்சம், மடம், நாணம் , பயிர்ப்பு பெண்களுக்கானவை என்றும், வீரமும் அறிவும் ஆண்களுக்கானவை என்றும் காலங்காலமாக பிற்போக்குத்தனம் கற்பிக்கப்பட்டுள்ளது. இதற்குப் பழகிப்போன சமூகம், பகுத்தறிவுடன் கேள்வி எழுப்பும் பெண்களை அந்நியப்படுத்துவதும், அவர்களின் நடத்தையை மோசமாகச் சித்தரிப்பதும் இன்றுவரை தொடர்கிறது. இன்று பெண்கள் படிக்கிறார்கள், வேலைக்குச் செல்கிறார்கள். ஆனால் இன்றும் ஏதோ ஒரு மூலையில் விளிம்புநிலை பெண்களின் கல்வி உரிமையும், அடிப்படை உரிமைகளும் பறிக்கப்படுகின்றன. பெண்ணிய இயக்கங்களும், சமூக ஜனநாயக இயக்கங்களும் பெண் விடுதலைக்கான பிரசாரங்களைத் தொடர்ந்து முன்னெடுக்கின்றன.

இந்த வரிசையில் `இந்தியா யுனைடெட்’ என்னும் அமைப்பு `அச்சம், மடம், நாணம் - பெண்ணை அறிவோம்’ என்ற ஒருநாள் பயிற்சிப் பட்டறையை 8.1.2023 அன்று ஒருங்கிணைத்தது. இப்பட்டறையில் ஐ.ஐ.டி பேராசியர் கல்பனா கருணாகரன், பொறியாளர் சேஷசாயி, திருச்சியைச் சேர்ந்த அசோக்ராஜ், வழக்கறிஞர், ஜோதிலட்சுமி, காங்கிரஸ் கட்சியின் ராமநாதபுர மாவட்ட தலைவர் ராமலட்சுமி, ஆர்கிடெக்ட் உதய்ராஜன், சுபத்ரா, கேரளாவைச் சேர்ந்த செயற்பாட்டாளர் கோமதி ஆகியவர்கள் உரையாற்றினர்.

கல்பனா கருணாகரன்
கல்பனா கருணாகரன்

``ஆணாதிக்கம் எப்படி உருவானது, நாம் எப்படி ஆணாக பெண்ணாக ஆகிறோம்" என்ற தலைப்பில் கல்பனா கருணாகரன் பேசினார். அவர் பேசுகையில் ``பொதுவாக பெண்களை உயிருள்ளவளாக பார்ப்பதில்லை. விவசாய சமூகம் உருவான பிறகு சொத்து உருவாகிறது. சொத்தை யார் அனுபவிப்பது என்ற கேள்வி எழும்போது தனியுடைமைக் கொள்கை உருவாகிறது. இதற்குப் பின்னரே பெண்ணுக்கான சுதந்திரம் பறிபோகிறது. இதன் விளைவாகவே ஆண்கள், பெண்ணையும், பெண் பெற்ற குழந்தையையும் சொத்தாகக் கருதத் தொடங்கினர்.

பெண்கள் வீட்டில் வேலை செய்வதை, சமூகம் அங்கீகரிப்பதில்லை. வீட்டு வேலையையும் ஒரு உழைப்பாக அங்கீகரிக்க வேண்டும். இந்த உலகத்திற்கு அடுத்த தலைமுறை உழைப்பாளிகளை பெண்களே கருவில் சுமக்கிறார்கள். கரு சுமப்பதை சாதாரணமாக கடந்து செல்கிறோம். ஆனால் கரு சுமப்பதை Reproductive labour என்ற அடிப்படையில் உழைப்பாக அங்கீகரிக்க வேண்டும்.

சேஷசாயி
சேஷசாயி

பெண்கள் வருமானம் ஈட்டும் வேலைகளில் ஈடுபட்டாலும் அவர்களின் பிரதான அடையாளமாக இல்லத்தரசி என்பதே இருக்கிறது. பெண்களுக்கு உலகமே தெரியாது, அவர்கள் வெகுளித்தனமானவர்கள், அவர்களுக்கு ஆண்களே வழிகாட்டிகள் என்று திரைப்படங்கள் சித்தரிக்கின்றன. உண்மையில் பெண்கள் தங்களை முன்னேற்றிக் கொள்வதற்கான வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன. அவர்களுக்கும் எல்லா வாய்ப்புகளும் கொடுக்கப்பட்டால் பெண்களின் ஆளுமைப்பண்பு வெளிவரும்'' என்றார்.

சாதி மதங்களுக்கும் பெண்களுக்கும் என்ன தொடர்புள்ளது என்பது சேஷசாயி குறித்து பேசினார். பாரபட்சமின்றி எல்லா மதங்களும் பெண்களை அடிமைப்படுத்துகின்றன. தன் உடை, உடல், நேரம், கல்வி, வேலை குறித்த முடிவுகளை பெண்களால் எடுக்க முடிவதில்லை; முடிவுகளை சாதியமும் மதமும், சாஸ்திரமும் தீர்மானிக்கின்றன. இன்று பொதுச்சமூகம் திருமண உறவில் உள்ள பாலியல் துன்புறுத்தல் ( Marital rape) குறித்துப் பேசத் தயங்குகிறது. எத்தனையோ திருமணங்களில் பெண்கள் வலுக்கட்டாயமாக வல்லுறவுக்கு உள்ளாக்கப்படுகின்றனர். இந்தியாவில் ஒருசில சிறுபான்மையின மதங்களில் பெண்ணுறுப்பு சிதைப்பு நடக்கிறது. இவற்றையெல்லாம் தடுக்க வலுவான சட்டம் வகுக்கப்பட வேண்டும். பிறப்பின் அடிப்படையில் குறிப்பிட்ட சமூகம் தீண்டாமைக்கு உள்ளாக்கப்படுவதைப்போல் பெண்களும் மாதவிடாய் காலங்களில் தீட்டாக கருதப்படுகின்றனர். இவ்வாறான நவீன தீண்டாமையை களைய தீவிர பிரசாரங்கள் தேவைப்படுகின்றன'' என்றார்.

சமூகம்  பேச  தயங்குவது Marital rape
சமூகம் பேச தயங்குவது Marital rape

ராமநாதபுரம் காங்கிரஸ் மாவட்டத் தலைவர் ராமலட்சுமி, `பெண்களும் பேரியக்கங்களும்’ என்ற தலைப்பில் பேசினார். ராமலட்சுமி பேசுகையில், ``குடும்பமும் சமூகமும் பெண்ணுக்கு பல கட்டுப்பாடுகளை விதித்தாலும் எல்லாத் தடைக்கற்களையும் படிகளாக நினைத்து ஏறி வர வேண்டும். பெண்கள் அரசியலில் ஈடுபடுவது காலத்தின் கட்டாயம். பெண்கள் அரசியலில் ஈடுபட்டால் மட்டுமல்ல, அடுப்பங்கரையில் பாத்திரம் விளக்கினாலும் பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கப்படுவர். பாலியல் தொல்லைகளுக்கு பயந்து பெண்கள் மூலையில் முடங்கிவிடக்கூடாது, துணிந்து எழ வேண்டும்'' என்றார்.

நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் சுபத்ரா பேசுகையில் ``நம் முன்னோர்களுக்குக் கிடைக்காத தொழில்நுட்ப வசதிகள் நமக்கு கிடைத்துள்ளன. இவற்றைப் பயன்படுத்திக்கொண்டு பெண் ஆளுமைகளாக உருவாகுவோம்'' என்றார். அசோகராஜ் `பெண் இன்று எங்கே நிற்கிறாள்’ என்ற தலைப்பில் தரவுகளுடன் பேசினார்.