Published:Updated:

`குடும்பச் சொத்தில் பெண்களுக்கு சம உரிமை!’ - உச்ச நீதிமன்றம் அதிரடி

சொத்தில் பெண்களுக்கும் சம உரிமை!
சொத்தில் பெண்களுக்கும் சம உரிமை!

'குடும்பச் சொத்தில் ஆண் பிள்ளைகளைப்போல பெண் பிள்ளைகளுக்கும் சொத்தில் சம உரிமை உண்டு' என உச்ச நீதிமன்றம் இன்று அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

பெண் அடிமைத்தனத்தையும் ஆண் ஆதிக்கத்தையும் ஒழிப்பதுடன் பெண்களுக்குச் சம அந்தஸ்து வழங்கும் வகையில் 1989-ம் ஆண்டு தி.மு.க ஆட்சிக் காலத்தில் தமிழகத்தில், 'குடும்பச் சொத்தில் பெண்களுக்குச் சம உரிமை உண்டு' என்று சட்டம் கொண்டுவரப்பட்டது. அதேபோல, 2005-ம் ஆண்டு மத்தியில் காங்கிரஸ் ஆட்சி இருந்தபோது இந்தியா முழுவதும் பெண்களுக்குச் சொத்தில் சம உரிமை வழங்கும் சட்டம் அமல்படுத்தப்பட்டது.

உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்

இதை ஏற்றுக்கொள்ளாதவர்கள் பெண்களுக்குச் சொத்தில் சம உரிமை இல்லை என்றும் இந்தச் சட்டம் 2005-ல் கொண்டுவரப்பட்டதால் அதற்கு முன்பு அப்பாவை இழந்த பெண்களுக்கு இந்தச் சட்டம் பொருந்தாது என்றும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். நீண்ட காலமாக நடந்துகொண்டிருந்த இந்த வழக்கில் இன்று அதிரடி தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றம், “ஆண் வாரிசுகளைப் போலவே பெண்களுக்கும் சொத்தில் சம உரிமை உண்டு. இது 2005-ம் ஆண்டுக்கு முன்பு அப்பாவை இழந்த பெண்களுக்கும் பொருந்தும். எனவே, குடும்பச் சொத்தை ஆண்களுக்குச் சமமாகப் பிரித்து வழங்குவதுபோல, பெண்களுக்கும் வழங்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளது.

அடுத்த கட்டுரைக்கு