Published:Updated:

1091... ஒவ்வொரு பெண்ணின் கையிலும் கட்டாயம் இருக்கட்டும்!

1091
பிரீமியம் ஸ்டோரி
1091

#Utility

1091... ஒவ்வொரு பெண்ணின் கையிலும் கட்டாயம் இருக்கட்டும்!

#Utility

Published:Updated:
1091
பிரீமியம் ஸ்டோரி
1091

1091... இது என்ன என உங்களில் எத்தனை பேருக்குத் தெரியும்? பெண்களுக்கான ஹெல்ப்லைன் எண்ணான இது எப்படியெல்லாம், எந்தெந்த விஷயங்களுக் கெல்லாம் உதவுகிறது என்ற தகவல்கள் ஆச்சர்யமளிக்கின்றன. இது தொடர்பாக ‘விமன் ஹெல்ப்லைன்’ இன்ஸ்பெக்டர் மேரி ராஜுவிடம் பேசினோம்.

ஒரு மாதத்துக்கு 5,000 போன் கால்...

‘`வரதட்சணைக் கொடுமை, குடும்ப வன்முறை, பக்கத்து வீட்டினருடன் சண்டை, நிலத்தகராறு... இப்படி 1091 எனும் உதவி எண்ணுக்கு மாதமொன்றுக்கு குறைந்தபட்சம் 5,000 தொலைபேசி அழைப்புகளாவது வரும். விமன் ஹெல்ப்லைனில் பெண்கள் மட்டுமே இருக்கிறோம். 24 மணி நேரமும் இயங்கிக்கொண்டிருக்கிறோம். போன் செய்தால் உடனே எடுப்போம்” என்றார்கள். நம்முடைய அலுவலக நண்பர் களின் செல்போன் எண்களிலிருந்து போன் செய்து இதை நாம் உறுதிப்படுத்திக்கொண்டோம்.

1091... ஒவ்வொரு பெண்ணின் கையிலும் கட்டாயம் இருக்கட்டும்!

வயதானவர்கள் தெருவில் கிடந்தால்...

``திருவொற்றியூரில் வயதான பெண் ஒருவர் அழுக்கு உடைகளுடன் சாலையோரத்தில் படுத்துக்கிடப்பதாக 1091-க்கு ஒருவர் போன் செய்தார். உடனே அந்தப் பெண் இருக்குமிடத்தைக் கேட்டுத் தெரிந்துகொண்டோம். பிறகு, அதற்கு அருகே இருக்கிற போலீஸ் ஸ்டேஷனுக்கு தகவல் சொன்னோம். அவர்கள், அந்த லொகேஷனுக்கு அருகிலிலுள்ள ரோந்துப் படைக்கு தகவல் சொல்லி, 2 நிமிடங்களில் அவரை கண்டடைந்து விட்டார்கள்.

சாலையில் படுத்துக்கிடந்த அவரை கண்டுபிடித்ததோடு எங்கள் வேலை முடியாது. அவர் பசியாக இருக்கிறார் என்றால் அவருக்கு சாப்பாடு வாங்கிக்கொடுத்து, அவருடைய வீட்டில் கொண்டு போய் சேர்ப்போம். அவரால் வீட்டு முகவரியைச் சொல்ல முடியவில்லையென்றாலோ, குடும்பத்தினர் மீதான கோபத்தால் முகவரி சொல்ல மறுத்துவிட்டாலோ, அரசு காப்பகத்தில் கொண்டுபோய் சேர்ப்போம். அடிக்கடி அவருடன் பேசிக் கொண்டே இருப்போம். ஏதோ வொரு கோபத்தில் வீட்டை விட்டு வெளியே வந்த பெரியவர்கள் சில நாள்களில் கோபம் தணிந்து வீட்டுக்குச் செல்ல ஆசைப் படுவார்கள். அப்படி ஆசைப்பட்டால் அவர்களை வீட்டில் விட்டுவிட்டு வருவோம்.

சில குடும்பங்களில், பிள்ளைகளே பெற்றோரை விரட்டிவிடுவது, வெளியே அழைத்துச்சென்று திட்டமிட்டுத் தொலைப்பதெல்லாம் நடக்கும். இப்படிப்பட்ட முதியோர்களை அவர்களுடைய பிள்ளைகளிடம் சேர்த்துவிட்டு வரும்போது, ‘பெற்றோர்களைப் பத்திரமாகப் பார்த்துக் கொள்ளும்படி’ கவுன்சலிங் கொடுப்பதோடு, ‘இனிமேல் இப்படி நடந்துகொள்ளக் கூடாது’ என்று எச்சரித்துவிட்டும் வருவோம். மீண்டும் அவர்கள் பெற்றோரை தெருவில் விடாம லிருக்க, அந்தக் குடும்பத்தைக் கண்காணிப்போம்.

தப்பு பண்ணிட்டோம்... காப்பாத்துங்க!

திருமணம் தாண்டிய தகாத உறவு தொடர்பான அழைப்புகளும் 1091-க்கு வருகின்றன. ‘மேடம், தப்பு பண்ணிட்டேன். இது என் வாழ்க்கைத்துணைக்குத் தெரியாது. என்கூட தொடர்புல இருக்கிற அந்த நபரோட வாழ்க்கைத்துணைக்கும் தெரியாது. இப்போ என் குடும்பத்தோட நிம்மதியா வாழ விரும்புறேன். ஆனா, அந்த நபர் தொல்லை கொடுக்கிறார். எப்படியாவது என்னைக் காப்பாத்துங்க’ என்றார். அவர் கேட்டுக் கொண்டபடி, தொல்லை கொடுக்கிற நபரை எச்சரித்து, இரண்டு குடும்பங்களுக்கும் தெரியாமல் அந்தத் தொடர்பை துண்டித்து விட்டோம். அவர்களைத் தொடர்ந்து கண் காணித்து வந்ததில் இரண்டு குடும்பங்களும் நிம்மதியாக இருக்கின்றன.

தற்கொலை செஞ்சுக்கப் போறோம்!

போரூரைச் சேர்ந்த ஒருவர், 1091-க்கு போன் செய்து ‘எனக்கு லவ் ஃபெயிலியர் ஆயிடுச்சு. நான் தற்கொலை செஞ்சுக்கப் போறேன்’ என்று சொல்லிவிட்டு தொடர்பைத் துண்டித்து விட்டார். 5 நிமிடங்களுக்குள் அவருடைய லொகேஷனைக் கண்டுபிடித்து, வீட்டுக் கதவை உடைத்துக் காப்பாற்றினோம். ஒரு சிலர், தற்கொலை செய்துகொள்வதற்கான அத்தனை ஏற்பாடுகளையும் செய்து வைத்து விட்டு எங்களிடம் பேசுவார்கள். அப்படிப் பட்டவர்களையும்கூட காப்பாற்றியிருக் கிறோம். தற்கொலை எண்ணம் சிறிது நேரம்தான் வலுவாக இருக்கும். அதற்குள் சம்பந்தப்பட்டவர்களிடம் பேசியோ, அந்த ஏரியா காவல்துறையினர் மூலமோ காப்பாற்றி விடுவோம்.

ஃப்ளைட் ஏத்தி விட முடியுமா?

மகன் பெங்களூரில். அம்மா சென்னை யில். அம்மாவுக்கு மகன் ஃப்ளைட் டிக்கெட் வாங்கிவிட்டார். அம்மாவுக்கு ஏர்போர்ட் சென்று ஃப்ளைட் ஏறத் தெரியவில்லை. மகன் உடனே 1091-க்கு போன் செய்து உதவி கேட்டார். நாங்கள் காவல் துறை ஜீப்பில் அந்த அம்மாவை அழைத்துக்கொண்டு போய் ஃப்ளைட் ஏற்றிவிட்டோம்.

1091... ஒவ்வொரு பெண்ணின் கையிலும் கட்டாயம் இருக்கட்டும்!

பயமா இருக்கு... புதுச்சேரியிலிருந்து ஒரு போன்கால்!

சென்னை - புதுச்சேரி எல்லையிலிருந்து ஒரு போன்கால். ‘வேலை விஷயமா சென்னைக்கு வந்தோம். நைட்டே வீட்டுக்குப் போகணும்னு கார் புக் பண்ணிட்டு வந்தோம். டிரைவர் திடீர்னு வண்டியை நிறுத்திட்டார். நிஜமாவே வண்டியில பிரச்னையா; இல்ல ஏதாவது தப்பு பண்ணப் பார்க்கிறாரான்னு தெரியலை’ என்று பதறியபடி இரண்டு பெண்கள் பேசினார்கள். ஒருவர் அவர்களுடன் தொடர்ந்து பேசிக்கொண்டே இருந்தோம். அதோடு, ஹைவேஸ் ரோந்துப்படைக்குத் தகவல் தெரிவித்தோம். அவர்கள் சில நிமிடங்களில் சம்பவ இடத்துக்குச் சென்று பெண்களைப் பத்திரமாக மீட்டதோடு,

அந்த டிரைவர் மீது தக்க நடவடிக்கையும் எடுத்தார்கள்.

இவை தவிர, கடன் கொடுத்தவர் அதிக வட்டி கேட்டு மிரட்டுகிறார் என்று போன் செய்தவருக்கு உதவியிருக்கிறோம். பெண் ஒருவர், பேருந்து நடத்துநர் கெட்ட வார்த்தையால் திட்டுகிறார் என்று புகார் செய்ய, அடுத்த சில நிமிடங்களில் ஓடுகிற பேருந்தை நிறுத்தி, பிரச்னையை விசாரித்து நடத்துநரை மன்னிப்பு கேட்க வைத்திருக் கிறோம். ஈவ் டீசிங் என்று 1091-க்கு போன் செய்த பெண்களைக் காப்பாற்றி வீட்டில் கொண்டுபோய் சேர்த்திருக்கிறோம். மனநலம் சரியில்லாததால், ஆடையில்லாமல் தெருவில் அலைகிற பெண்கள் பற்றி யாராவது தகவல் கொடுத்தால், தாமதிக்காமல் அவரை கண்டுபிடித்து, காப்பகத்தில் சேர்க்கிறோம். இந்த கொரோனா காலத்தில், வீட்டைவிட்டு வெளியே வர முடியாதவர்களுக்கு மருந்தும் ரேஷன் பொருள்களும்கூட வாங்கிக் கொடுத்தி ருக்கிறோம். பெண்களுக்கு என்ன பிரச்னை யென்றாலும் உதவிக்கு நாங்கள் இருக்கிறோம்’’ என்கிறார் இன்ஸ்பெக்டர் மேரி ராஜு.

பயத்தைப் புறந்தள்ளுவோம்... பயன் பெறுவோம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism