லைஃப்ஸ்டைல்
ஆசிரியர் பக்கம்
ஹெல்த்
என்டர்டெயின்மென்ட்
தொடர்கள்
தன்னம்பிக்கை
Published:Updated:

ஐந்து மாநிலங்களில் அசத்தல் பெண்கள்!

ஐந்து மாநிலங்களில் அசத்தல் பெண்கள்!
பிரீமியம் ஸ்டோரி
News
ஐந்து மாநிலங்களில் அசத்தல் பெண்கள்!

தமிழ்நாட்டைப் பொறுத்தவரைக்கும், அனைத்துக் கட்சிகளையும் சேர்த்து 12 பெண்கள் சட்டசபைக்குச் செல்கிறார்கள்.

ஒவ்வொரு முறை தேர்தல் முடிவு வெளிவந்த பிறகும், வெற்றிபெற்ற பெண்களின் வித்தியாசமான பின்புலங்கள் வெளியே வரும். தமிழ்நாட்டைப் பொறுத்தவரைக்கும், அனைத்துக் கட்சிகளையும் சேர்த்து 12 பெண்கள் சட்டசபைக்குச் செல்கிறார்கள்.

முதலில் தி.மு.க...

குடியாத்தம் அமுலு
குடியாத்தம் அமுலு

‘குடியாத்தம் அமுலு’ 15 வருட அரசியல் அனுபவம்கொண்டவர். பஞ்சாயத்து யூனியன் மெம்பராகவும் இருந்தவர், 2016-ல் வேலூர் கே.வி.குப்பம் தொகுதியில் போட்டியிட்டவருக்கு வெற்றி கிட்டவில்லை. இந்த முறை குடியாத்தத்தில் வெற்றி பெற்று சட்டசபைக்குச் சென்றிருக்கிறார்.

கயல்விழி
கயல்விழி

தாராபுரம் தொகுதியில் வெற்றிபெற்ற கயல்விழி செல்வராஜ் எம்.காம். எம்.எட் முடித்தவர். தனியார் பள்ளியில் 19 ஆண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றிய இவருக்கு இதுதான் முதல் தேர்தல் அனுபவம். தற்போது ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சராகவும் பொறுப் பேற்றிருக்கிறார்.

சிவகாமசுந்தரி
சிவகாமசுந்தரி

கிருஷ்ணராயபுரம் தொகுதியில் வென்ற சிவகாமசுந்தரிக்கும் இது முதல் தேர்தல். அடிப்படையில் இவர் வழக்கறிஞர்.

 தமிழரசி
தமிழரசி

மானாமதுரை தொகுதியில் வெற்றி பெற்றுள்ள தமிழரசி, மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றியத் தலைவர், சமயநல்லூர் சட்டமன்ற உறுப்பினர், ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர், தி.மு.க மாநில மகளிரணி துணைச் செயலாளர், மதுரை மாநகர வடக்கு மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் என்று நீண்ட அரசியல் அனுபவம் கொண்டவர்.

கீதா ஜீவன்
கீதா ஜீவன்

தூத்துக்குடியில் வெற்றிபெற்றுள்ள கீதா ஜீவன், வலுவான அரசியல் பின்புலம் கொண்டவர் மட்டுமல்லாமல், பள்ளிக்கூட தலைமை ஆசிரியராகவும் பணியாற்றியிருக்கிறார். இவர் தற்போது சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர்.

வரலட்சுமி
வரலட்சுமி

செங்கல்பட்டு தொகுதியில் வெற்றி பெற்றுள்ள வரலட்சுமி, 2016-லும் இதே தொகுதியில் தி.மு.க சார்பாக நின்று வெற்றிபெற்றிருக்கிறார்.

மற்ற கட்சிகளில் இருக்கிற பெண் எம்.எல்.ஏ-க்கள்...

தேன் மொழி
தேன் மொழி

கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற இடைத்தேர்தலில் நிலக்கோட்டை தொகுதியில் வெற்றிபெற்ற தேன் மொழிக்கு, 2021-லும் அ.தி.மு.க-வில் வாய்ப்பு வழங்கப்பட்டது. தன்னை எதிர்த்துப் போட்டியிட்டவரை 27 ஆயிரத்துக்கும் அதிகமான ஓட்டு வித்தியாசத்தில் ஜெயித்திருக்கிறார்.

மரகதம் குமாரவேல்
மரகதம் குமாரவேல்

மதுராந்தகம் தொகுதியில் வெற்றி பெற்றுள்ள 38 வயது மரகதம் குமாரவேல், திருப்போரூர் ஊராட்சி ஒன்றியக் குழு முன்னாள் உறுப்பினர், காஞ்சிபுரம் மக்களவை தொகுதி முன்னாள் உறுப்பினர், செங்கல்பட்டு கிழக்கு அ.தி.மு.க மாவட்ட மகளிர் அணிச் செயலாளர் என்று வலுவான அரசியல் அனுபவம் கொண்டவர்.

சித்ரா
சித்ரா

2016, 2021 என்று தொடர்ந்து இரண்டு முறை ஏற்காடு தொகுதியில் அ.தி.மு.க வேட்பாளராக வென்றிருக்கிறார் சித்ரா.

விஜயதரணி
விஜயதரணி

காங்கிரஸ் சார்பில் விளவங்கோடு தொகுதியில் வெற்றிபெற்றுள்ள விஜயதரணி, ஒரு வழக்கறிஞர். சென்னை சட்டக்கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தபோது மாணவர் காங்கிரஸில் இணைந்தவர், பின்னர் கட்சியில் இணைந்து செயல்பட ஆரம்பித்தார். தொடர்ந்து மூன்று சட்டமன்றத் தேர்தல்களில் (2011, 2016, 2021) விளவங்கோடு தொகுதியில் வெற்றிபெற்றிருக்கிறார் விஜயதரணி.

சரஸ்வதி
சரஸ்வதி

பா.ஜ.க சார்பில் மொடக்குறிச்சியில் வெற்றிபெற்றுள்ள சரஸ்வதிக்கு வயது 76. மருத்துவர். இவருக்கும் இது முதல் தேர்தல் அனுபவம். அறக் கட்டளை மூலம் ஏழை மக்களுக்குக் கல்வி மற்றும் மருத்துவ உதவிகளைச் செய்துவருபவர் 8 வருடங்களாக பா.ஜ.க-வில் தேசிய பொதுக்குழு உறுப்பினராக இருந்து வருகிறார்.

வானதி சீனிவாசன்
வானதி சீனிவாசன்

பா.ஜ.க சார்பில் கோவை தெற்கு தொகுதியில் வெற்றிபெற்றுள்ள வானதி சீனிவாசன், அடிப்படையில் வழக்கறிஞர். மத்திய திரைப்பட தணிக்கை குழுவின் உறுப்பினராகவும் இருந்திருக்கிறார். பாரதிய ஜனதாவின் மாநில அமைப்பான ஏ.பி.வி.பி-யில் 1989-ல் சேர்ந்த வானதி, கட்சியின் மாநில மகளிர் அணி பொதுச் செய லாளர், மாநில செயலாளர், மாநில பொதுச் செயலாளர் என்று பல்வேறு பொறுப்புகளை வகித்து வந்தவர், தற்போது, கட்சியின் மகளிரணி தேசியத் தலைவராக இருக்கிறார்.

அண்டை மாநில முகங்கள்!

வீணா ஜார்ஜ்
வீணா ஜார்ஜ்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வீணா ஜார்ஜ், கேரளாவின் ஆறன்முளா தொகுதியில் இரண்டாவது முறையாக எம்.எல்.ஏ-வாகியிருக்கிறார். 44 வயதான இவர், அரசியலுக்கு வருவதற்கு முன்பு மலையாள செய்தி சேனல் ஒன்றில் 16 வருடங்களாகப் பத்திரிகையாளராக இருந்திருக்கிறார். தவிர, கேரள ஊடக அமைப்பின் முதல் பெண் தலைவராகவும் இருந்திருக்கிறார். தற்போது, சுகாதாரத்துறை அமைச்ச ராகியிருக்கிறார். ஒரு பெண் பத்திரிகை யாளர் கேரளத்தில் அமைச்சராவது இதுவே முதல் தடவை.

தலீமா
தலீமா

கேரள மக்களுக்கு, அரசியல்வாதி தமீலாவுக்கு முன்னரே பாடகி தலீமா நன்கு அறிமுகம். 5 ஆயிரத்துக்கும் அதிகமான ஆன்மிகப் பாடல்கள் பாடியிருக்கிறார். 20 மலையாளப் படங்களில் பாடியிருக்கிறார். 51 வயதான தலீமா ஜோஜோ தற்போது அரூர் தொகுதி எம்.எல்.ஏ. இவரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்தான்.

ஆர்.பிந்து
ஆர்.பிந்து

திருச்சூர் முனிசிபல் கார்ப்பரேஷனின் முன்னாள் மேயர், இரிஞ்ஜலகுடா தொகுதி இந்நாள் எம்.எல்.ஏ-வான ஆர்.பிந்து, அரசியலுக்கு வருவதற்கு முன் ஆங்கிலப் பேராசிரியர். மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர். இதுவரை, திருச்சூர் மாவட்டத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் மேயர் என்ற பெருமை பெற்றிருந்த ஆர்.பிந்து, தற்போது திருச்சூர் மாவட்டத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு உயர் கல்வித்துறை அமைச்சராகியிருக்கிறார்.

ஜின்சு ராணி
ஜின்சு ராணி

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந் தவர் ஜே.ஜின்சு ராணி. கேரளாவின் சடையமங்கலம் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக வெற்றிபெற்றவருக்கு தற்போது சட்ட அளவீடு, பால் வளர்ச்சி மற்றும் கால்நடை வளர்ப்பு அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டிருக்கிறது.

ஷாஸி பன்ஜா
ஷாஸி பன்ஜா

மேற்கு வங்கத்தின் ஷயாம்புகர் தொகுதியில் வெற்றிவாகை சூடியிருக்கிற ஷாஸி பன்ஜா, அடிப்படையில் மருத்துவர். தற்போது, பெண்கள், குழந்தைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றிருக்கிறார்.

சைலஜா
சைலஜா

அத்தனை பேரிடர் காலத்திலும் கடவுளின் தேசத்தைக் காப்பாற்றி வருகிறவர் கே.கே.சைலஜா. அரசியலுக்கு வருவதற்கு முன்பு இயற்பியல் டீச்சர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த இவர், மட்டணூர் தொகுதியில் ஜெயித்து இரண்டாவது முறையாகக் கேரள சட்டசபைக்குச் சென்றிருக்கிறார். 67 வயதான சைலஜா டீச்சர் அரசியலுக்கு வந்து 25 வருடங்களானாலும், கடந்த 5 வருடங்களாக அவருடைய பேரிடர் மேலாண்மைச் செயல்பாடுகளை உலகமே பாராட்டி வருகிறது. 2016 - கேரள சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த சைலஜா, இந்த முறை கேரள சட்டசபையின் கொறடா.

அதிதி முன்ஷி
அதிதி முன்ஷி

மேற்கு வங்கத்தின் ராஜர்ஹட் கோபால்புர் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக வெற்றிபெற்றிருக்கிற 32 வயது அதிதி முன்ஷி, அகில இந்திய வானொலியில் மியூசிக் ஆர்ட்டிஸ்ட். 2015-ல் புகழ்பெற்ற ரியாலிட்டி ஷோவில் பங்குபெற்றதன் மூலம் புகழ் வெளிச்சத்துக்கு வந்த அதிதி, தற்போது அரசியலில். ஷாஸி, மஞ்சு, அதிதி மூவருமே திரிணாமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள்.

ஐந்து மாநிலங்களில் அசத்தல் பெண்கள்!

அஸ்ஸாமின் கோலகட் தொகுதியில் வெற்றிபெற்றுள்ள அஜந்தா நியாஜ் தொடர்ந்து ஐந்தாவது முறையாக இதே தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராகி யிருக்கிறார். நான்கு முறை காங்கிரஸ் சார்பில், இம்முறை பி.ஜே.பி சார்பில். தற்போது, அஸ்ஸாம் மாநிலத்தின் முதல் பெண் நிதியமைச்சராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.

சுமன் ஹரிபிரியா
சுமன் ஹரிபிரியா

அஸ்ஸாமின் ஹோஜோ தொகுதியில் வெற்றிபெற்றிருக்கிற சுமன் ஹரிபிரியா, திரைப்பட பள்ளியில் படித்தவர். நடிகை. இவர் இயக்கி, தயாரித்த ‘கடம்டோலே கிருஷ்ண நாச்சே’ (Kadamtole Krishna Nache) என்ற அஸ்ஸாமி திரைப்படம் தேசிய விருது பெற்றிருக்கிறது. சுமன் ஹரிபிரியா, பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்தவர்.

மஞ்சு பாசு
மஞ்சு பாசு

மேற்கு வங்கத்தின் நோபரா தொகுதி யில் வெற்றிபெற்றிருக்கிற மஞ்சு பாசு அடிப்படையில் பள்ளி ஆசிரியர்.