Published:Updated:

``40% என்பதை வரவேற்கிறோம்; ஆனால்..?" - பெண்கள் இட ஒதுக்கீடு குறித்து பெண் அரசியல் ஆளுமைகள்

woman (Representational image) ( Image by RAEng_Publications from Pixabay )

தமிழகத்தில் அரசு வேலைவாய்ப்பில் பெண்களுக்கு இதுவரை 30 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வந்த நிலையில் அது 40 சதவிகிதமாக உயர்த்தப்படும் என்று சமீபத்தில் அறிவித்திருக்கிறார் அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன். இந்த அறிவிப்பு குறித்து பெண் அரசியல் ஆளுமைகள் என்ன சொல்கிறார்கள்?

``40% என்பதை வரவேற்கிறோம்; ஆனால்..?" - பெண்கள் இட ஒதுக்கீடு குறித்து பெண் அரசியல் ஆளுமைகள்

தமிழகத்தில் அரசு வேலைவாய்ப்பில் பெண்களுக்கு இதுவரை 30 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வந்த நிலையில் அது 40 சதவிகிதமாக உயர்த்தப்படும் என்று சமீபத்தில் அறிவித்திருக்கிறார் அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன். இந்த அறிவிப்பு குறித்து பெண் அரசியல் ஆளுமைகள் என்ன சொல்கிறார்கள்?

Published:Updated:
woman (Representational image) ( Image by RAEng_Publications from Pixabay )

பைஅரசுப் பேருந்துகளில் இலவசப் பேருந்து பயணம், இல்லத்தரசிகளுக்கு மாதம் 1,000 ரூபாய் உரிமைத் தொகை எனப் பெண்கள் நலனை முன்னிறுத்திப் பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ள தி.மு.க அரசு, தன் தேர்தல் அறிக்கையில் சொன்ன, `அரசு வேலை வாய்ப்பில் பெண்களுக்கு 40 சதவிகிதம் இட ஒதுக்கீடு' என்ற அறிவிப்பை அமல்படுத்தியிருப்பது பெண்கள், பெண்ணுரிமை செயற்பாட்டாளர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.

Minister PTR Palanivel Thiagarajan
Minister PTR Palanivel Thiagarajan
Photo: Twitter / OfficeOfPTR

தமிழகத்தில் அரசு வேலைவாய்ப்பில் பெண்களுக்கு இதுவரை 30 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வந்த நிலையில் அது 40 சதவிகிதமாக உயர்த்தப்படும் என்று சமீபத்தில் சட்டமன்றத்தில் அறிவித்திருக்கிறார் நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன். இந்த அறிவிப்பை பலரும் வரவேற்றுள்ளனர். அதேசமயம், இதை 50 சதவிகிதமாக உயர்த்தியிருக்கலாம். அதுதான் சமத்துவமானதாக இருக்கும் என்றும் இந்த 40 சதவிகித இட ஒதுக்கீடானது முழுமையாக அமல்படுத்தப்படுவதை அரசு உறுதிப்படுத்த வேண்டும் என்றும் சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த அறிவிப்பு குறித்து பெண் அரசியல் ஆளுமைகள் என்ன சொல்கிறார்கள்?

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

முன்னாள் எம்.எல்.ஏ-வும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநில துணைத் தலைவருமான கே.பாலபாரதி, ``இந்த அறிவிப்பை சி.பி.எம் கட்சியின் சார்பாக வரவேற்கிறோம். படித்துவிட்டு வீட்டில் இருக்கும் பெண்களுக்கு நம்பிக்கை அளிக்கக்கூடிய அறிவிப்பு இது. அரசாங்கத்தில் வேலைபார்க்கிறோம் என்ற துணிச்சலும் தன்னம்பிக்கையும் இன்னும் நிறைய பெண்களுக்குக் கிடைக்கப்போகிறது என்பதை எண்ணி மகிழ்கிறேன். பெண்கள் அரசுப் பணிகளுக்கு அதிக அளவில் வரும்போது தமிழ்நாடு அடுத்தகட்ட வளர்ச்சியை நோக்கிச் செல்லும்.

பெண்களுக்கான இட ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டிருப்பதை வரவேற்கும் அதேவேளையில் ஏற்கெனவே இருந்த 30 சதவிகித இட ஒதுக்கீடு கடந்த காலங்களில் முழுமையாக வழங்கப் பட்டுள்ளதா என்பதையும் ஆய்வு செய்ய வேண்டும். ஏனெனில், பெண்களுக்கு அரசுப் பணிகளில் 30 சதவிகிதம் இட ஒதுக்கீடு இருக்கிறது என்பதைத் தவிர, இத்தனை பெண்களுக்குப் பணி நியமனம் வழங்கப்பட்டுள்ளது என்ற புள்ளிவிவரத்தை அரசு வெளியிட்டு இதுவரை நான் பார்த்ததே இல்லை.

பாலபாரதி
பாலபாரதி

உதாரணத்துக்கு பொதுப்பணித்துறை சார்பாக 100 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன என்றால், அதில் பெண்களுக்கான இட ஒதுக்கீட்டின்படி 30 பெண்களுக்குப் பணி நியமனம் வழங்கப்பட்டது என்று அறிக்கை வெளியிட வேண்டும். இங்கு எதுவுமே வெளிப்படையாக இல்லை. இப்படி சட்டம் இருக்கிறது என்று நமக்குத் தெரிகிறது. ஆனால், அது அமலாகிறதா என்பது நமக்குத் தெரியாது. பல துறைகள் பெண்களே இல்லாமல் ஆண்களுக்கான துறைகளாகவே இருக்கின்றன. உதாரணத்துக்குத் தீயணைப்புத் துறையைச் சொல்லலாம். அதில் பெண்களையே பார்க்க முடியாது. இதுதொடர்பாக நான் எம்.எல்.ஏ-வாக இருந்தபோது சட்டமன்றத்தில் பேசிய பிறகுதான், அலுவலர்களாகப் பெண்களை நியமிக்கிறோம் என்றார்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அதேபோல அரசு வாகன ஓட்டுநராகப் பெண்களைப் பார்க்கவே முடியவில்லை. இப்படி நிறைய துறைகள் இருக்கின்றன. அதிலெல்லாம் 30 சதவிகித இட ஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டதா என்ற சந்தேகம் எழுகிறது. ஆகையால், இதுகுறித்து அரசு ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். எல்லா துறைகளிலும் பெண்களின் பங்களிப்பு இருப்பதை உறுதி செய்ய வேண்டும். ஒவ்வொரு முறையும் பணி நியமனங்கள் முடிந்த பிறகு, இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் இத்தனை பெண்கள் நியமிக்கப்பட்டிருக்கின்றனர் என்பதை மக்களுக்கு அறிவிக்க வேண்டும்” என்றார்.

வானதி சீனிவாசன்
வானதி சீனிவாசன்

பா.ஜ.க மூத்த தலைவரும், கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசனிடம் பேசியபோது, ``40 சதவிகித இட ஒதுக்கீடு என்பதை நாங்கள் வரவேற்கிறோம். தமிழ்நாட்டில் பெண்கள் கல்வியறிவின் சதவிகிதம் அதிகமாக இருக்கிறது. எனவே, இந்த அறிவிப்பைத் தமிழக அரசு முழுமையாகச் செயல்படுத்தும் என்று நம்புகிறேன்" என்றார்.

சமூக செயற்பாட்டாளரும் எழுத்தாளருமான ஓவியாவிடம் பேசினோம். ``இந்த அறிவிப்பை நான் முழுமனதோடு வரவேற்கிறேன். ஆண்களைச் சார்ந்தே இருப்பதுதான் பெண்களின் மிகப் பெரிய பிரச்னை. அதை உடைக்க வேண்டுமென்றால், அரசு வேலை வாய்ப்பில் பெண்களுக்கான இட ஒதுக்கீட்டினை அதிகரிப்பது அவசியமான ஒன்று. ஒருசிலர், `ஏற்கெனவே அரசுப் பணிகளில் பெண்கள் அதிக அளவில் இருக்கும் சூழலில் பெண்களுக்கு 40 சதவிகிதம் இட ஒதுக்கீடு வழங்கப்படுவது ஆண்களுக்கு இழைக்கப்படும் அநீதி' என்று கருத்திடுவதைப் பார்க்க முடிகிறது.

ஓவியா
ஓவியா

எல்லா மட்டத்திலும் பெண்கள் இருக்கிறார்களா என்பதை அவர்கள் சிந்திக்க வேண்டும். ஆரம்பநிலை பணிகளில் இருக்கும் அளவுக்கு அதிகாரிகள் மட்டத்தில் பெண்களின் எண்ணிக்கை இல்லை என்பதை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும். அதிகாரம் மிக்க பதவிக்கு பெண்கள் வருவதை ஆணாதிக்கம் மிக்க இந்தச் சமூகம் விரும்புவதில்லை. இந்த நிலையை மாற்றி பெண்களை முன்னேற்ற வேண்டுமெனில், பெண்களுக்கான இட ஒதுக்கீடு அவசியம். ஆனால், இதை எப்படி அமல்படுத்துகிறார்கள் என்பதைப் பொறுத்துதான் இதில் உரிய பலன் கிடைக்கும். நேரடியான நியமனங்களில் மட்டுமல்லாது பதவி உயர்வுக்காகத் துறை ரீதியாக நடத்தப்படும் தேர்வுகளுக்கும் இந்த இட ஒதுக்கீடு முறையை அமல்படுத்த வேண்டும். அப்போதுதான் இதன் முழுப் பலனையும் நாம் உணர முடியும்" என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism