Published:Updated:

ஜனநாயகத்தில் பெண்களின் பங்கு: கட்டுப்பாடுகளை விதிக்கிறதா ஆண் சமூகம்? கவுன்சிலர்கள் சொல்வதென்ன?

கவுன்சிலர்கள்

``இரவு 2 மணிக்கும் களத்தில் நிற்க வேண்டும். என் அலுவலகத்துக்கு ஏரியா பிரச்னைகள் குறித்து முறையிட வரும் ஆண்களை, அண்ணா, தம்பி என்று கூப்பிட்டு குறைகளைக் கேட்பேன். பெண்களுக்கு அனுபவம் இல்லை, அறிவு இல்லையென்று சொல்லி மட்டம் தட்டி மூலையில் உட்கார வைக்கிறார்கள்..."

ஜனநாயகத்தில் பெண்களின் பங்கு: கட்டுப்பாடுகளை விதிக்கிறதா ஆண் சமூகம்? கவுன்சிலர்கள் சொல்வதென்ன?

``இரவு 2 மணிக்கும் களத்தில் நிற்க வேண்டும். என் அலுவலகத்துக்கு ஏரியா பிரச்னைகள் குறித்து முறையிட வரும் ஆண்களை, அண்ணா, தம்பி என்று கூப்பிட்டு குறைகளைக் கேட்பேன். பெண்களுக்கு அனுபவம் இல்லை, அறிவு இல்லையென்று சொல்லி மட்டம் தட்டி மூலையில் உட்கார வைக்கிறார்கள்..."

Published:Updated:
கவுன்சிலர்கள்

சென்னை நந்தனத்தில் உள்ள தக்கர் பாபா வித்யாலயா பள்ளியில், பெண் கவுன்சிலர்கள் கலந்து கொண்ட `அடித்தட்டு மக்களுக்கான ஜனநாயகம்’ என்பது குறித்த உரையாடல், பெரியார் பிறந்தநாளான செப்டம்பர் 17-ம் தேதியன்று நடைபெற்றது. இந்நிகழ்வை, `மக்களின் குரல்’ (Voice of people) என்ற தன்னர்வல அமைப்பு ஒருங்கிணைத்தது.

இந்திய ஜனநாயகத்தில் முக்கியமான மூன்று வேர்கள் உள்ளன. ஒன்றிய அரசாங்கம், மாநில அரசாங்கம், உள்ளூர் அரசாங்கம். இவற்றில் மூன்றாவது வேராக இருக்கும் உள்ளூர் அரசாங்கம் முறையாகச் செயல்படுகிறதா? ஊராட்சி, நகராட்சிகளில் உள்ள கட்டமைப்புகள் என்ன? உள்ளூர்களில் மக்கள் சந்திக்கும் பிரச்னைகள் என்ன? என்பன போன்ற பல கேள்விகளுக்கும், அவற்றுக்கு பதிலளிக்கும் விதமாகவும் உரையாடல் இருந்தது.

ஜனநாயக நாட்டில் முக்கியமானவர்கள் பெண்கள். ஜனநாயக நாட்டில் பெண் கவுன்சிலர்களின் பங்கு எப்படி உள்ளது? பெண் கவுன்சிலர்கள் சந்திக்கும் சவால்கள் என்னென்ன என்பது குறித்த உரையாடல் நிகழ்த்தப்பட்டது.

இந்நிகழ்வில் மயிலாப்பூர் கவுன்சிலர் அமிர்தவர்ஷினி (காங்கிரஸ்) , தண்டையார்பேட்டை கவுன்சிலர் ரேணுகா (சிபிஐ), சிபிஎம் கவுன்சிலர் விமலா, திருவான்மியூர் கவுன்சிலர் கயல்விழி (திமுக), அசோக் நகர் கவுன்சிலர் யாழினி (விசிக) ஆகியோர் கலந்து கொண்டனர்.

பார்வையாளர்கள்
பார்வையாளர்கள்

விசிக கவுன்சிலர் யாழினி பேசுகையில், ``எனது வார்டில் கவுன்சிலராக போட்டியிட, கட்சியில் இருந்து பதினோரு பேர் மனு அளித்திருந்தனர். அந்த 11 பேருமே, களத்தில் வேலை செய்யும் கட்சி உறுப்பிர்களின் வீட்டுப் பெண்கள். கட்சியின் தலைவர், அவர்களுக்கு எல்லாம் இந்த வார்டை ஒதுக்கீடு செய்யாமல், களத்தில் நிற்கும் பெண்ணான எனக்கு ஒதுக்கீடு செய்தார். மக்களுக்கு கவுன்சிலர்கள் ஏன் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள் என்ற புரிந்துணர்வே இல்லை. அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

மக்களுக்கான பணிகளைச் செய்ய நியமிக்கப்பட்ட எங்களை, மக்கள் கேள்வி கேட்பதற்கான அனைத்து உரிமைகளும் உள்ளன. திட்டினாலும் நாங்கள் அதை வாங்கித்தான் ஆக வேண்டும். ஏனென்றால் நாங்கள் மக்கள் பிரதிநிதிகள். மக்கள் பணி என்று வந்துவிட்டால் ஆண்- பெண் என்ற பாகுபாடெல்லாம் பார்க்க முடியாது. வேலை நடக்க வேண்டும் என்றால் இரவு 2 மணிக்கும் களத்தில் நிற்க வேண்டும். என் அலுவலகத்துக்கு ஏரியா பிரச்னைகள் குறித்து முறையிட வரும் ஆண்களை, அண்ணா, தம்பி என்று கூப்பிட்டு குறைகளைக் கேட்பேன். பெண்களுக்கு அனுபவம் இல்லை, அறிவு இல்லையென்று சொல்லி மட்டம் தட்டி மூலையில் உட்கார வைக்கிறார்கள். ஆனால், பெண்களுக்கு அனுபவமும் அறிவும் அதிகமாக உண்டு. இட ஒதுக்கீடு மூலம் 102 பெண் கவுன்சிலர்கள் மாமன்றத்தில் அமர்ந்துள்ளோம். எங்களால் திறம்பட வேலை செய்ய முடியும்” என்றார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கவுன்சிலர் விமலா பேசுகையில், ``நகராட்சியில் உள்ள ஒவ்வொருவரும் வார்டு கவுன்சிலர் யார், கவுன்சிலர் அலுவலகம் எங்குள்ளது என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும். என் வார்டில் ஏதாவது பிரச்னை என்றால் எனக்கு மக்கள் வாட்ஸ்அப்பில் தகவல் அனுப்புவார்கள். நான் அந்தப் பிரச்னையை உடனடியாகத் தீர்க்க முயல்வேன். சென்னையிலேயே பெரும்பாலான பெண் கவுன்சிலர்களுக்கு பதிலாக அவர்களின் குடும்பத்து ஆண்கள் செயல்படுகிறார்கள். பெண்களால் செயல்பட முடியாது என்று அர்த்தமல்ல. ஆனால் அவர்கள் ஆண்களால் கட்டுப்படுத்தப்பட்டதால் அவர்களுக்கான வெளி உலக அனுபவம் குறைவாக இருக்கும். பெண் கவுன்சிலர்களுக்கு அரசால் பயிற்சி அளிக்கப்பட வேண்டும். ஆண்கள் பெண்களைக் கட்டுப்படுத்த நினைத்தாலும் சில ஆண்கள் பெண்களின் முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருக்கிறார்கள்” என்றார்.

திமுக கவுன்சிலர் கயல்விழி பேசுகையில், `` 2006 –ம் ஆண்டு வெளிநாட்டில் இருந்து இந்தியா வந்தேன். சமூக சேவையில் ஈடுபட விருப்பம். அதனால் திமுகவில் இணைந்து வேலை செய்தேன். அப்படித்தான் கவுன்சிலராக போட்டியிட வாய்ப்பு கிடைத்தது. என் வார்டில் உள்ள 144 தெருக்களிலும் ஆர்வம் கொண்ட ஒருவரை, தகவல் பெறுவதற்காக வைத்திருக்கிறேன். அதனால் என் வேலை எளிதாகிவிடுகிறது” என்றார்.

பெண் கவுன்சிலர்கள்
பெண் கவுன்சிலர்கள்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கவுன்சிலர் ரேணுகா பேசுகையில், ``ஏரியாவில் பிரச்னை என்றால் ஆன்லைன் பெட்டிஷன் மட்டுமே போட்டுக் கொண்டிருந்த என்னால், மக்கள் பிரச்னையை கையில் எடுத்துச் செயல்பட முடிவது மகிழ்ச்சியாக இருக்கிறது. மாநில சுயாட்சியை வலியுறுத்தும் நாம், உள்ளாட்சிகளில் சுயாட்சியை வலியுறுத்துவது இல்லை. உள்ளாட்சிகளின் சுயாட்சி வலுப்பெற்றால்தான் உள்ளூர் ஜனநாயகம் செழுமைப்படும்” என்றார்.

காங்கிரஸ் கவுன்சிலர் அமிர்தவர்ஷினி பேசுகையில், ``குடும்பமா...சமூகமா என்றபோது முன்பெல்லாம் குடும்பம் முதலில் இருந்தது; தற்போது சமூகம் முதலில் இருக்கிறது. வார்டில் உள்ள பிரச்னைகளுக்குத் தீர்வு காண யாரை அணுகுவது என்று எங்களுக்கு தடுமாற்றம் உள்ளது. அதனால் ஒவ்வொரு பிரச்னைக்கும் யாரை அணுகலாம் என்று பயிற்சி அளிக்கப்பட வேண்டும்” என்றார்.