Published:Updated:

பெண் பாதுகாப்பை உறுதி செய்வோம்! #MyVikatan

women safety

ஏதேனும் அசம்பாவிதம் நிகழும்போது மட்டும் பெண்பிள்ளைகள் பாதுகாப்பு பற்றி ஆவேசத்துடன் அக்கறைப்படாமல் அன்றாடம் நாம் எதிர்கொள்ளும் சவால்களுக்கான விடைகள் பற்றி சிறிது யோசிக்க முயல்வோம்.

பெண் பாதுகாப்பை உறுதி செய்வோம்! #MyVikatan

ஏதேனும் அசம்பாவிதம் நிகழும்போது மட்டும் பெண்பிள்ளைகள் பாதுகாப்பு பற்றி ஆவேசத்துடன் அக்கறைப்படாமல் அன்றாடம் நாம் எதிர்கொள்ளும் சவால்களுக்கான விடைகள் பற்றி சிறிது யோசிக்க முயல்வோம்.

Published:Updated:
women safety

மகளிர் தினத்தை முன்னெடுக்கும் ஒரு மாதத்திற்கு அடியெடுத்து வைக்கிறோம். வெறும் கொண்டாட்டங்களுடனும் வாழ்த்துக்களுடனும் நின்று விடாமல் சிறுமிகள் மற்றும் பெண்கள் நலன் கருதும் சில புதிய சிந்தனைகளையும் முன் வைப்போம்

1. தற்காப்பு பயிற்சி

ஏதேனும் அசம்பாவிதம் நிகழும் போது மட்டும் பெண் பிள்ளைகள் பாதுகாப்பு பற்றி ஆவேசத்துடன் அக்கறைப்படாமல் அன்றாடம் நாம் எதிர்கொள்ளும் சவால்களுக்கான விடைகள் பற்றி சிறிது யோசிக்க முயல்வோம். கடந்த காலங்களில் பெண் பிள்ளைகளை படிக்க பள்ளிக்கு அழைத்து வந்தோம். பாடங்கள் தாண்டி வெளியுலகம் பார்த்திட வழிவகை செய்து கொடுத்தோம். அந்த பள்ளிக்கூடங்களில் வாரம் நாற்பது மணி நேரம் தோராயமாக செலவழிக்கிறார்கள். அதில் ஒரு மணி நேரம் பெண் பிள்ளை பாதுகாப்பு வகுப்பாக மாற்றி பெண்களுக்கு தேவையான தற்காப்பு பயிற்சி, சவால்களை எதிர்கொல்லும் பயன்பாட்டு வழக்குகள் - அதைப்பற்றிய அறிவு (USECASES) மற்றும் எதிர் பாலினத்தினரை கையாளும் உளவியல் கலைகளை மாணவியருக்கு வழங்கலாம். மாணவர்களுக்கும் அதே மணி நேரத்தில் பெண் பிள்ளைகள் முக்கியத்துவம், அவர்கள் மேற்கொள்ளும் இன்னல்கள், அவர்களுக்காக குரல் கொடுக்கும் ஊடகங்கள் மற்றும் எதிர் பாலினத்தினரை கையாளும் உளவியல் ஆலோசனைகளை கற்றுக்கொடுக்கலாம். இதன் மூலம் ஒரு ஆரோக்கியமான தலைமுறை உருவாக வழிவகை செய்து கொடுக்க இயலும். இந்தப் பயிற்சி வகுப்புகள் அரசு மற்றும் தனியார் என அனைத்து பள்ளி, கல்லூரிகளிலும் நிகழுமாறு அரசாங்கம் ஒரு ஆணை பிறப்பிக்கலாம்.

பெண் பாதுகாப்பை உறுதி செய்வோம்! #MyVikatan
அரசாங்கம் செய்யட்டும் என்று ஒதுங்கி நிற்காமல் தொண்டு நிறுவனங்களோ, பொதுமக்களோ, பெண் பிள்ளை நலன் விரும்பும் எவரும் ஒருவரோடு ஒருவர் கைகோத்து செய்ய முன் வர வேண்டும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

2. இலவச அழைப்பு மையம்

காவலன் போன்ற செயலிகள் பெண்கள் பாதுகாப்பிற்கு கொண்டுவரப்பட்டாலும், ஆபத்துக் காலத்திலேயே அதனை நாடுகிறோம். மேலும் காவல் நிலையம் என்றால் சிலர் தயங்கவும் செய்யலாம். ஆதலால், ஓர் இலவச அழைப்பு மையம் (CALL CENTRE) சேவையை உருவாக்கி அதன் மூலம் வெவ்வேறான புகார்களை திரட்டி அரசாங்கமே காவல் துறை நடவடிக்கைக்கு அதனை அனுப்பலாம். உதாரணமாக, நீண்ட காலம் பின் தொடரும் அல்லது தொல்லை கொடுப்பவர் பற்றியோ, பள்ளியிலோ-பணியிடத்திலோ நடமாடும் கயவர்கள் பற்றியோ , சைக்கோ போன்று பொது இடங்களில் நடமாடும் சந்தேகத்திற்குரிய நபர் பற்றியோ, பொதுவெளிகளில் பெண்கள் முன்பு தவறாக நடந்து கொள்ளும் நபர், இல்லை அந்த இடம் பற்றியோ, பேருந்து நிலையம், கல்லூரி/பள்ளி வாசல் முன்பு கிண்டல் செய்யும் ரோமியோக்கள் பற்றியோ புகார் தெரிவிக்கலாம். அவை பரிசீலனை செய்யப்பட்டு காவல் துறையின் மறைமுக நடவடிக்கைக்கு அனுப்பி வைக்கலாம் அல்லது அரசாங்கமே ஆவண செய்ய முற்படலாம். உதாரணமாக இருட்டாக இருக்கும் இடமே தவறு செய்ய தூண்டுமாயின் அரசாங்கம் அங்கே கூடுதல் மின் விளக்குகள் மற்றும் மறைக்காணி (CCTV) அமைத்துத் தரலாம். காவல் துறையினர் அந்த இடங்களுக்கு சில surprise விசிட் செய்து அக்கயவர்களுக்கு ஒரு அச்சத்தை ஏற்படுத்தலாம். இந்த சேவை மையம் எந்த வயதுடைய, துறையுடைய பெண்களாயினும் அனைவரது குறைகளையும் கேட்கும் வகை செய்யலாம்.

இதற்கு ஆகும் செலவு, திட்ட செயலாக்கம் குறித்த தகவல்கள் அல்லது மாதிரிகளை அரசாங்கம் மட்டுமே செய்ய வேண்டும் அவர்களே பொறுப்பு என்று ஒதுங்கி நிற்காமல் தொண்டு நிறுவனங்களோ, பொதுமக்களோ, பெண் பிள்ளை நலன் விரும்பும் எவரும் ஒருவரோடு ஒருவர் கைகோத்து செய்ய முன் வர வேண்டும். இதன் மூலம் முழுமையாக இல்லாவிட்டாலும் நம்மால் இயன்ற அளவு பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்கலாம். குற்றம் நடந்த பிறகு நாம் சிந்தும் கண்ணீரோ, புலம்பலோ, சமூக ஊடகப் பதிவோ எதையும் மாற்றிவிடுவதில்லை. இது போன்ற சில உடனடி செயல்களே சிறந்த நடவடிக்கை!

- சு. நாகசரஸ்வதி
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism