Published:Updated:

சாமானிய பெண்கள்... அசாதாரண சேவைகள்...

மீள்வோம்... மீட்போம்!
பிரீமியம் ஸ்டோரி
மீள்வோம்... மீட்போம்!

மீள்வோம்... மீட்போம்!

சாமானிய பெண்கள்... அசாதாரண சேவைகள்...

மீள்வோம்... மீட்போம்!

Published:Updated:
மீள்வோம்... மீட்போம்!
பிரீமியம் ஸ்டோரி
மீள்வோம்... மீட்போம்!
கொரோனா என்ற பெருந்தொற்று, சமூக இடைவெளியைப் பழக்கி, சமூக ஒற்றுமையை அதிகரித்துள்ளது. அந்த வகையில் கொரோனா சூழலிலும் மற்றவர்களுக்கு உதவிக்கரம் நீட்டி சிறப்பாகச் செயல்படும் சில பெண்களிடம் பேசினோம்.என்னால முடிஞ்ச உதவி!
சாமானிய பெண்கள்... அசாதாரண சேவைகள்...

மனித சேவை புனிதமானது!

- மஞ்சுப்ரியா, தாம்பரம்

“நான் தாம்பரத்தில் ஒரு தனியார் பள்ளி நடத்திட்டு இருக்கேன். கொரோனா சூழலில் பள்ளியை நடத்துறது கஷ்டமாதான் இருக்கு. ஆனா, இப்படி ஒவ்வொருத்தரும் அவங்க சூழலைச் சொல்லி, சமூகத்தில் இருந்து ஒதுங் கிட்டா, மனுஷங்களோட சேர்ந்து வாழ்றதுல அர்த்தமே இருக்காது. கொரோனா சூழல்ல எத்தனையோ பேர் சாப்பாடு இல்லாம தவிக் கிறாங்க. அதனால் என் பள்ளி ஆசிரியர்களோடு சேர்ந்து கொரோனா பாதிச்சவங்களுக்கு உணவு தயார் செய்து கொடுத்துட்டு இருக்கோம்.

எங்க பள்ளி மைதானத்துலயே வெச்சு சமைக்க ஆரம்பிச்சோம். கொரோனோ பாதிச்சு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வங்களுக்கும் உணவு கொடுக்க ஆரம்பிச்சோம். என் சொந்த பணத்துலதான் பண்ண ஆரம்பிச் சேன். இப்போ சில ஃபிரெண்ட்ஸ் பொருள்கள் வாங்கித்தந்து உதவுறாங்க. மதிய உணவு தயார் பண்ணி நாங்களே அரசு மருத்துவமனையில் கொடுத்துட்டு வந்துருவோம். காய்கறிகள், பழங்கள், முட்டைனு சத்துகள் நிறைந்ததா சமைச்சுக் கொடுக்கறோம். இது தவிர்த்து தாம்பரத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருக்கும் ஆதரவற்ற 200 பேருக்கும் இப்போ மதிய உணவு கொடுத்துட்டு இருக்கோம். மனுஷங்களுக்குச் செய்யுற உதவி கடவுளுக்குச் செய்யும் பூஜையைவிட புனிதமானதுன்னு சும்மாவா சொன்னாங்க'' என்கிறார் மஞ்சுப்ரியா.

சாமானிய பெண்கள்... அசாதாரண சேவைகள்...

அவசர ஆக்ஸிஜன் சேவைக்கு நாங்க இருக்கோம்!

- சீதா தேவி, சென்னை

“சின்ன வயசிலிருந்து வறுமையைப் பார்த்து வளர்ந்த பொண்ணு நான். பி.காம் படிச்சிருக்கேன். எங்க ஏரியா குழந்தைங்களுக்கு இலவசமா டியூஷன் சொல்லிக்கொடுத்துட்டு இருந்தேன். என் சேவையைப் பார்த்துட்டு சிலர் எனக்கு பணம் கொடுத்தாங்க. அந்தப் பணத்துல ஆதரவில்லாதவங்களுக்கு சாப்பாடு வாங்கிக்கொடுக்க ஆரம்பிச்சேன்.

2015-ல் நண்பர்களா சேர்ந்து ‘ ஸ்ட்ரீட் விஷன்’ னு ஓர் அமைப்பை ஆரம்பிச்சு இன்னிக்கு

500 பேருக்கு மதிய உணவும் இரவு உணவும் கொடுக்கிறோம். கொரோனா சூழல்லயும் மாதவரம், மாத்தூர், கொடுங்கையூர் போன்ற பகுதிகளில் உணவு கொடுத்துட்டு இருந்தோம். ஏப்ரல் மாசம் என் அம்மாவுக்கு கொரோனா பாதிப்பு வந்துச்சு. ராஜீவ் காந்தி மருத்துவமனையில் 12 மணி நேர காத்திருப்புக்குப் பிறகுதான் ஆக்ஸிஜன் கிடைச்சுது. அதுக்குள்ள மூச்சுத்திணறல் அதிகமாகி அம்மா இறந்துட்டாங்க. அம்மா மாதிரி எத்தனையோ பேர் இறந்துட்டு இருந் தாங்க. சரியான நேரத்துக்கு ஆக்ஸிஜன் கிடைக்காம உயிருக்குப் போராடுறவங்களுக்கு உதவணும்னு முடிவு பண்ணேன்.

என் நண்பர்களும் கைகொடுத்தாங்க. இலவச உணவு கொடுக்குறதுக்காக நாங்க பயன்படுத்திட்டு இருந்த ஆட்டோவில் ஆக்ஸிஜன் சிலிண்டர் பொருத்தி, ஆக்ஸிஜன் ஆட்டோவா மாத்தினோம். மருத்துவர்கள்கிட்ட முதலுதவிகளையும், ஆக்ஸிஜன் சிலிண்டர் பயன்படுத்தும் விதத்தையும் கத்துக்கிட்டோம். எங்ககிட்ட 48 லிட்டரில் ஒரு சிலிண்டரும் 10 லிட்டரில் 4 சிலிண்டர்களும் இருக்கு. தினமும் சென்னை காவாங்கரையில் ஆக்ஸிஜன் வாங்குறோம். முதல்ல தனியாருக்கெல்லாம் ஆக்ஸிஜன் தர மாட்டோம்னு சொன்னாங்க. அப்புறம் எங்க நோக்கத்தைச் சொன்ன பிறகு புரிஞ்சுக்கிட்டாங்க. சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில்தான் ஆக்ஸிஜன் ஆட்டோ இருக்கும். அவசர ஆக்ஸிஜன் தேவைக்குத் தொலைபேசி மூலம் தெரிவிச்சா நாங்க உடனடியாக உதவுறோம்.

ஒரு மாசத்துல 300-க்கும் அதிகமானவங்களைக் காப்பாத்தி இருக்கோம். ஆதரவற்ற நிலையில் இறந்தவங்களுக்கும் இறுதிச் சடங்குகள் செய்து அடக்கம் பண்றோம். எங்களுக்கு யாரும் பணமா கொடுத்து உதவ வேண்டாம். இன்னும் சில வாகனங்கள் இருந்தா நிறைய பேருக்கு உதவ முடியும். பழைய வாகனங்களைக் கொடுத்தா அவசர சூழலுக்குப் பயன்படுத்திட்டு திரும்பக் கொடுத்துருவோம். முடிஞ்சா உதவுங்க'' என்று கோரிக்கை வைக்கிறார் சீதா.

சாமானிய பெண்கள்... அசாதாரண சேவைகள்...

நம்பிக்கையே அச்சாணி!

- ப்ரீனு, சென்னை

தான் ஒருங்கிணைப் பாளராக உள்ள `என்.பி.எஸ் (NPS - Network of Professional Social workers)’ அமைப்பின் மூலம் ஆயிரமாயிரம் மக்களுக்கு இந்தக் கொரோனா காலகட்டத்தில் உதவி வருகிறார் சென்னையைச் சேர்ந்த ப்ரீனு.

‘`சமூக சேவையில் முதுகலைப் பட்டம் பெற்ற நான், சென்னையில் மனநல ஆலோசனை மையம் வைத்திருக்கிறேன். 2016-ம் ஆண்டு முதல் சமூகப் பணியில் ஈடுபட்டு வருகிறேன். எங்கள் என்.பி.எஸ் அமைப்பு மூலம் பல்வேறு இன்னல்களில் உள்ள பெண்கள், குழந்தைகள் மற்றும் பழங்குடியினருக்கு உதவிவந்தோம். இந்த நிலையில் கொரோனா உதவிகளுக்காக, 20 பேர் கொண்ட குழுவை உருவாக்கி சென்னை முழுக்கச் செயலாற்றி வருகிறோம். மருத்துவ மனைப் படுக்கை, ஆக்ஸிஜன், மருந்து, ஆம்புலன்ஸ் வசதி என வழங்கிவருவதுடன், மனநல ஆலோசனையும் தருகிறோம்.

கிட்டத்தட்ட கொரோனா வார் ரூம் போல செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம். இதற் கிடையில் என் அப்பா கொரோனாவால் பாதிக்கப் பட்டு, தொடர்ந்து சிறுநீரக செயலிழப்பு மற்றும் அறுவைசிகிச்சை என்றிருந்த நிலையையும் நம்பிக்கையை அச்சாணியாகக் கொண்டு கடந்து வந்தது பெரிய அனுபவம். கொரோனாவை வெல்வது அத்துணை கடினம் இல்லை, அதற்காக அது மிக சுலபமும் இல்லை. அனை வரும் பயமின்றி இருப்பதுடன், பாதுகாப்பாக இருங்கள்!” என்கிறார் ப்ரீனு

- வெ.கௌசல்யா

சாமானிய பெண்கள்... அசாதாரண சேவைகள்...

80 பேரை காப்பாத்திருக்கோம்!

- மனிஷா, ஈரோடு

“ ஈரோடு மாவட்டத்தில் இருக்கும் ஆதரவற்றவர்களை மீட்டெடுத்து காப்பகங்கள்ல சேர்த்து அவங்களைப் பாதுகாக்கும் பணியை நானும் என் நண்பர்களும் சேர்ந்து பண்ணிட்டு இருக்கோம். கொரோனா சூழல்லயும் ஆதரவற்றவர்களை மீட்டு காப்பகங்கள்ல சேர்த்தோம். ஆனா, கொஞ்ச நாள்லயே மீண்டும் தெருக்களுக்கு வந்துடுறதைப் பார்க்க முடிஞ்சுது. அதனால மாநகராட்சி ஆணையர்கிட்ட தற்காலிக இடம் கேட்டிருந்தோம். கடந்த நாலு வருஷங்களா எங்க அமைப்பு மத்தவங்களுக்கு உதவுறதைப் பார்த்த மாநகராட்சி கமிஷனர் எங்களுக்கு ஒரு மாநகராட்சி பள்ளியைத் தற்காலிக முகாமாகப் பயன்படுத்திக்க அனுமதி தந்தார்.

சேலம் கருங்காலி பகுதியில் இருந்த 80 பேரை மீட்டு மாநகராட்சி பள்ளிக்குக் கூட்டிட்டு வந்தோம். அவங்களை சுத்தப்படுத்தி, உடல் வெப்பநிலை, ஆக்ஸிஜன் அளவையெல்லாம் செக் பண்ணி, முதல்ல அவங்களை தனிமைப்படுத்தினோம்.

நானும் என் நண்பர்களும் வெளியில போயிட்டு வந்தா முகாம்ல இருக்கறவங்களுக்கு கொரோனா பரவும் வாய்ப்பு இருப்பதால நாங்களும் பள்ளியிலேயே தங்கிட்டோம். அரிசி, காய்கறிகள், பருப்பு, சோப்பு, பேஸ்ட்னு அன்றாடத் தேவைகளுக்கு சமூகத்தில் இருந்து உதவிகள் கிடைக்குது.

தினமும் காலையில யோகா, உடற்பயிற்சிகள் செய்யக் கற்றுக் கொடுத்திருக்கோம். சிலர் மாஸ்க் தைக்கிறாங்க. சிலர் கூடை பின்றாங்க. 80 பேரை கொரோனா பாதிப்பிலிருந்து காப்பாத்திருக்கோம்னு நினைக்கும்போது சந்தோஷமா இருக்கு...’’ நிறைவுடன் சொல்கிறார் மனிஷா.

சாமானிய பெண்கள்... அசாதாரண சேவைகள்...

பசியோடு வர்றவங்களுக்கு சாப்பாடு தர்றோம்!

- சுவேதா சுதாகர், சென்னை

“நான் ஒரு திருநங்கை. நான் தொடங்கின `சாதிக்கப் பிறந்தவர்கள்' அமைப்பின் மூலமாக திருநங்கைகளுக்கு தையல், டிரைவிங்னு எதிர்காலத்துக்கு உதவுற விஷயங்களைச் சொல்லிக் கொடுக்கிறோம். எங்க அமைப்புல டிரான்ஸ் கிச்சன் வெச்சுருக்கோம். பசியில் இருக்கும் திருநங்கைகள் வந்து சாப்பிடுவாங்க. கொரோனா நேரத்துல, தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் மூணு வீடுகளுக்கு உணவு சமைச்சுக்கொடுக்க முடியுமானு ரோட்டரி கிளப்லேருந்து எங்களை அணுகினாங்க. சமைச்சுக் கொடுத்தோம். பொருள்கள் எல்லாம் ரோட்டரி கிளப்பில் இருந்து வந்துரும்... நாங்க சமைச்சு, அவங்க சொல்லும் முகவரியில் டெலிவரி பண்ணிருவோம். கொரோனாவில் தனிமைப் படுத்தப்பட்டிருக்கும் வீடுகள் தாண்டி, தினமும் 50 பேருக்கு மதிய உணவும் இரவு உணவும் இலவசமா கொடுக்கிறோம். கொரோனா சூழல்ல திருநங்கைகளால் முடிஞ்ச உதவிகளைப் பண்ண முடியுதுனு நினைக்கும்போது சந்தோஷமாக இருக்கு” - ஆத்மார்த்தமாகச் சொல்கிறார் சுவேதா சுதாகர்.

சாமானிய பெண்கள்... அசாதாரண சேவைகள்...

என்னால முடிஞ்ச உதவி!

- சின்னத்திரை நடிகை சரண்யா, சென்னை

“கொரோனா காலத்துல மூன்று வேளை உணவு கிடைக்காமல் நிறைய பேர் கஷ்டப்படுறாங்க. என்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உதவிகள் கேட்டு தினமும் நிறைய மெசேஜ் வரும். சில பெண்கள் தங்களுக்கு கொரோனா தொற்று வந்த நிலையிலும் குழந்தைங்களுக்காக கிச்சன்ல நின்னு சமைக்க வேண்டியிருக்குனு சொல்லி உதவிகள் கேட்டிருந்தாங்க.

என்னால முடிஞ்ச உதவிகளை அந்தச் சகோதரிகளுக்கும், அவங்க குடும்பத்துக்கும் பண்ணணும்னு தோணுச்சு. நான் நியூஸ் சேனன்ல வேலைபார்த்தபோது, மீனவப் பெண்கள் வாழ்க்கை சார்ந்து நிறைய கருத்துகளைப் பேசியிருக்கேன். கொரோனா பாதிக்கப்பட்டவங்களுக்கு உணவு சமைச்சுக் கொடுக்கப்போறேன்னு சொன்னதும், எந்தத் தயக்கமும் இல்லாமல், மீனவ குடும்பத்து அக்காக்கள் உதவ முன் வந்தாங்க. ‘shorewomensociety’ என்ற பெயர்ல இன்ஸ்டாகிராம் பக்கத் தைத் தொடங்கி, சென்னைக்குள் கொரோனா பாதிச்சு தனிமைப் படுத்திக்கிட்டவங்க உணவுக்கு எங்களை தொடர்பு கொள்ளலாம்னு அறிவிச்சேன். முதல் வாரம் நான் தனியா பண்ணேன். இப்போ நிறைய பேர் சப்போர்ட் பண்றாங்க. தினமும் இப்போ 120 பேருக்கு சாப்பாடு கொடுத்திட்டிருக்கேன். உணவு கேட்டு, முகவரி அனுப்புற வங்களுக்கு நானே நேர்ல போயி அவங்க வீட்டு வாசல்ல வெச்சுட்டு வர்றேன். இந்த இக்கட்டான சூழல்ல ஏதோ என்னால முடிஞ்ச உதவி’’ - எளிமையாகச் சொல்கிறார் சரண்யா.