Published:Updated:

`அனைத்து காவல் நிலையங்களுக்கும் இனி பெண் தலைமை!' - ஆவடி ஆணையரகத்தின் புதிய முயற்சி

காவல் நிலையங்களுக்கு பெண் தலைமை

பெண் காவலர்கள் ஆற்றும் ஒப்பற்ற பணியை அங்கீகரிக்கப்பதற்காகவும், அவர்களுக்கு மதிப்பும் கௌரவமும் தரும் வகையிலும் இந்தப் புதிய முயற்சி செயல்படுத்தப்பட்டுள்ளது.

`அனைத்து காவல் நிலையங்களுக்கும் இனி பெண் தலைமை!' - ஆவடி ஆணையரகத்தின் புதிய முயற்சி

பெண் காவலர்கள் ஆற்றும் ஒப்பற்ற பணியை அங்கீகரிக்கப்பதற்காகவும், அவர்களுக்கு மதிப்பும் கௌரவமும் தரும் வகையிலும் இந்தப் புதிய முயற்சி செயல்படுத்தப்பட்டுள்ளது.

Published:Updated:
காவல் நிலையங்களுக்கு பெண் தலைமை

மார்ச் 8-ம் தேதி சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படும் நிலையில் பெண் காவலர்களைக் கௌரவிக்கும் நோக்கோடு சென்னையை அடுத்த ஆவடி காவல் ஆணையரகத்தில் புதிய மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் ஆவடி காவல் ஆணையரகத்துக்கு உட்பட்ட அனைத்து காவல் நிலையங்களிலும் பெண் காவலர்கள் தலைமை தாங்குவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பெண் காவலர்கள்
பெண் காவலர்கள்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இதைச் செயல்படுத்திய ஆவடி காவல் ஆணையரக காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர் கூறுகையில், ``ஒரு காவல் ஆணையரகத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் பெண்கள் தலைமை தாங்குவது இதுவே முதல் முறை. காவல்துறைக்குப் பெண் காவலர்கள் ஆற்றும் ஒப்பற்ற பணியை அங்கீகரிக்கப்பதற்காகவும், அவர்களுக்கு மதிப்பும் கௌரவமும் தரும் வகையிலும் இந்தப் புதிய முயற்சி செயல்படுத்தப்பட்டுள்ளது. சர்வதேச மகளிர் தினத்தை, பெண்களின் கையில் அதிகாரத்தைக் கொடுத்துக் கொண்டாட விரும்புகிறேன்" என்றார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்தப் புதிய முயற்சியின்படி, போக்குவரத்துக் காவல்துறையின் கூடுதல் ஆணையாளர் பா.விஜயகுமாரி ஆவடி சட்டம் மற்றும் ஒழுங்கு இணை ஆணையாளர் பதவியில் கூடுதல் பொறுப்பு வகிப்பார். அதேபோல நிர்வாகத் துறை துணை ஆணையாளர் கோ.உமையாள் ஆவடி மற்றும் செங்குன்றம் மாவட்டத் துணைக் காவல் ஆணையாளராகச் செயல்படுவார் எனவும் அறிவிக்கப்பட்டது.

மகளிர் தினம்
மகளிர் தினம்

ஆவடி ஆணையரகத்தின் கட்டுப்பாட்டில் 25 காவல் நிலையங்கள் உள்ளன. 650 பெண் காவலர்களும், பெண் அதிகாரிகளும் பணிபுரிகிறார்கள். மகளிர் தினத்தில் காவல் நிலையத்தில் நடக்கும் அனைத்து வேலைகளிலும் கூடுதல் பொறுப்பாக நியமிக்கப்பட்ட பெண் அதிகாரிகள் தலைமைப் பொறுப்பு வகிப்பார்கள். அவர்களின் கீழ் அன்றாட அலுவல்கள் நடைபெறும். அதிகாரிகள் ஒருநாள் மட்டும் கூடுதல் பொறுப்பில் செயல்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.