Published:Updated:

சிறகடிப்போம் | பெண்கள் தினம் #MyVikatan

மகளிர் தினம்

சாதிக்க ஆசை இருந்தும் கட்டுப்பாடுகளால் தம் சிறகுகளை கட்டி வைத்திருக்கும் பெண்களுக்காக அவர்களின் இதயமாக இருந்து இன்று நான் எழுதுகிறேன்

சிறகடிப்போம் | பெண்கள் தினம் #MyVikatan

சாதிக்க ஆசை இருந்தும் கட்டுப்பாடுகளால் தம் சிறகுகளை கட்டி வைத்திருக்கும் பெண்களுக்காக அவர்களின் இதயமாக இருந்து இன்று நான் எழுதுகிறேன்

Published:Updated:
மகளிர் தினம்

ஒரு பெண் பிறப்பு முதல் இறப்பு வரை அவள் என்ன என்ன செய்ய வேண்டும் என்பதற்கு ஆயிரம் கட்டுப்பாடுகள் உள்ளன. தற்போதைய காலத்தில் பெண்கள் சுதந்திரமாகத்தான் உள்ளார்கள் என்று அனைவரும் செல்கிறார்கள். ஆனால், அது உண்மைதானா என்ற கேள்வி பெண்ணாக பிறந்த அனைவருக்குள்ளும் உண்டு. 20% சதவீத பெண்கள் மட்டுமே தனக்கு பிடித்ததை செய்து, தனக்காக வாழ்கின்றனர். 30% சதவீத பெண்களுக்கு சுதந்திரம் படிப்பதில் மட்டுமே உள்ளது. படித்து முடித்த உடனே திருமணம் செய்து வைத்து விடுகின்றனர். மீதமுள்ள 50% சதவீத பெண்களுக்கு சுதந்திரம் என்றால் என்னவென்றே தெரியாது. அந்த அளவிற்கு கட்டுப்பாடுகள் உண்டு.

ஓர் ஆண் எந்த அளவுக்கு அதிகமாக குடித்தாலும், ஊதாரியாக சுற்றினாலும் மற்ற எந்தப் பழக்கம் உள்ளவனாக இருந்தாலும் சம்பாதிக்க ஆரம்பித்தால் போதும் அவனுக்கு பெண் கொடுக்க வரிசை கட்டி நிற்பார்கள். அதுவே ஒரு பெண்ணை மாப்பிள்ளை வீட்டார் பார்க்க வரும் வேளையில், யார் அந்த பெண்ணா? என்று ஒரு இழுவை இருந்தால் போதும் எந்த விசாரணையும் கிடையாது. மாப்பிள்ளை வீட்டார் வந்த வழியை பார்த்து ஓடி விடுவார்கள். இதுதான் பெண்களின் நிலை இன்று வரையிலும். நான் அந்த 20% சதவீதத்தை பற்றி கூறப் போவது இல்லை. நான் பேசுவது என்னை போன்ற பெண்களுக்காக. சாதிக்க ஆசை இருந்தும் கட்டுப்பாடுகளால் தன் சிறகுகளை கட்டி வைத்திருக்கும் பெண்களுக்காக மட்டுமே. அவர்களின் இதயமாக இருந்து இன்று நான் இதை எழுதுகிறேன்.

நமக்கான ஒரு நாள் வரும். அல்லது, நாமே அதை உருவாக்குவோம். நிச்சயமாக சிறகடிப்போம்!
உழைக்கும் பெண்கள்
உழைக்கும் பெண்கள்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பெண்ணாக பிறந்ததால்

ஓய்வில்லா உழைப்பானேன்.

பெண்ணாக பிறந்ததால்

அனைத்தையும் பொருத்திருந்தேன்

என் அருமைத் தோழிகளே! காத்திருங்கள்... நமக்கான ஒரு நாள் வரும். அல்லது, நாம் அதை உருவாக்குவோம். நல்ல நாள் ஒன்று எல்லார்க்கும் உண்டாகும் என்பதை மறந்துவிடாதீர்கள். நிச்சயமாக சிறகடிப்போம்.

- மு. முத்து மீனா