Nanayam Conclave
ரிலையன்ஸ் மியூச்சுவல் ஃபண்ட், பிர்லா சன் லைஃப் மியூச்சுவல் ஃபண்ட், ஐசிஐசிஐ புரூடென்ஷியல் மியூச்சுவல் ஃபண்ட் ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து நாணயம் விகடன், பிப்ரவரி 1, 2 தேதிகளில் சென்னையில் ஃபைனான்ஸ் அண்ட் பிசினஸ் கான்க்ளேவ் என்னும் மாபெரும் கருத்தரங்கத்தை முதல் முறையாக நடத்தியது. அதில் இந்திய அளவிலும் உலக அளவிலும் முக்கியமான நிபுணர்கள் கலந்துகொண்டு பேசினார்கள். பிப்ரவரி 1-ம் தேதி முழுக்க நிதி மற்றும் முதலீடுகள் பற்றியும், பிப்ரவரி 2-ம் தேதி முழுவதும் தொழில் துறை பற்றியும், ஸ்டார்ட் அப் பற்றியும் விவாதிக்கப்பட்டது.
placeholder
டி.ரவிக்குமார் - பங்குச் சந்தை கட்டுப்பாட்டு மற்றும் மேம்பாட்டு வாரியத்தின் தென் மண்டல இயக்குநர்
‘‘ஒரு பிசினஸுக்கு தேவையான பணத்தை பல வழிகளில் திரட்டலாம். அப்படித் தேவையான பணத்தை பங்குச் சந்தை மூலம் திரட்டுவது அதில் மிகவும் முக்கியமானது. அப்படி திரட்டப்படும் பணம் எப்படி, எங்கு முதலீடு செய்யப்படுகிறது, யாரால் நிர்வகிக்கப்படுகிறது என்று தொடர்ந்து கருத்தாக கண்காணித்து வருகிறது செபி. சில வளர்ந்த நாடுகளைவிட நம் இந்தியப் பங்குச் சந்தை மிகவும் நெறிப்படுத்தப் பட்டிருக்கிறது".
placeholder
அர்ஜுன் பார்த்தசாரதி, நிறுவனர், இன்வெஸ்டார் ஆர் இடியட்ஸ் டாட்காம் மற்றும் ஐஎன்ஆர் பாண்ட்ஸ் டாட்காம்
உலக அளவில் நெருங்கிய தொடர்பு கொண்ட சந்தையில் முதலீடு செய்வது எப்படி (Investing your savings in this dynamic & globally interlinked market) என்பது குறித்துப் பேசினார். உலகச் சந்தையின் தாக்கம் இந்தியச் சந்தையையும், இங்குள்ள முதலீட்டாளர்களையும் எப்படி பாதிக்கிறது? ஏன் சர்வதேச அளவில் விலை குறைந்தாலும், உள்நாட்டில் விலை குறைவதில்லை?
placeholder
ஜி.மாறன் - செயல் இயக்குநர், யுனிஃபை கேப்பிட்டல் லிமிடெட்.
‘‘பொதுவாக, ஒரு பங்குச் சந்தை எனில் எஃப்ஐஐ ஃப்ளோ, சீனப் பொருளாதாரம், உலகப் போர்கள், சிரியா பிரச்னை, உலகப் பொருளாதார பிரச்னைகள், கச்சா எண்ணெய் விலை சரிவு, அமெரிக்க ஃபெடரல் வங்கியின் வட்டி விகித முடிவு, அதிகப்படியான பணப்புழக்கம் என பல விஷயங்கள் கண்டிப்பாக இருக்கும். அப்படி இல்லை எனில், இந்திய தேர்தல், ரிசர்வ் வங்கி வட்டி விகிதம், ஆர்பிஐ நிதிக் கொள்கை, செபி, பட்ஜெட், வரி அறிவிப்புகள், கார்ப்பரேட் கவர்ஜென்ஸ் போன்று ஏதாவது இருக்கும். உண்மையில் இவைதான் சந்தையை இயக்குகிறதா என்றால் இல்லை என்பதே என் பதில்".
placeholder
கே.எஸ்.ராவ்-துணைத் தலைவர், பிர்லா சன் லைஃப் மியூச்சுவல் ஃபண்ட்
‘‘இந்தியாவில்தான் பணத்தை கடவுளாக பாவித்து அதை மதிக்கிறோம். ஆனால், மேற்கத்திய கலாசாரத்தில் பணத்தையும் ஒரு பொருளாகவே பார்க்கிறார்கள். ஒவ்வொரு ரூபாயையும் நாம் மதித்து அதை சரியாக கையாண்டால், நம் பணம் நமக்காக உழைக்கும். அப்படி நம் பணத்தை நமக்கு உழைக்க வைக்கும் ஒரு கருவிதான் மியூச்சுவல் ஃபண்ட்".
placeholder
ஶ்ரீகாந்த மீனாட்சி - நிறுவனர், ஃபண்ட்ஸ் இண்டியா.காம்
ஆன்லைனில் முதலீடு செய்வது என்பது இப்போது அதிகரித்து வருகிறது. ஆன்லைன் முதலீட்டில் உள்ள சாதகங்களும் பாதகங்களும் என்ன?
placeholder
அசோக் நஞ்சுண்டராஜ் - தமிழக பிராந்திய தலைவர், ரிலையன்ஸ் மியூச்சுவல் ஃபண்ட்.
“இன்றைய தேதிக்கு மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களால் நிர்வகிக்கப்படும் மொத்த தொகை சுமாராக 14 லட்சம் கோடி ரூபாய். ஆனால், வங்கி டெபாசிட்டுகளின் மதிப்பு சுமாராக 90 லட்சம் கோடி ரூபாய். இந்தியாவில் சேமிப்பு அதிகம் இருக்கிறது, ஆனால் முதலீடு குறைவாக இருக்கிறது".
placeholder
சுரேஷ் பார்த்தசாரதி - நிறுவனர் - myassetconsolidation.com
சர்வதேச அளவில் நிதித் திட்டமிடல் எப்படி இருக்கிறது என்பது குறித்துப் பேசினார். “இந்தியாவில் யார் வேண்டுமானாலும் நிதி ஆலோசகர் ஆகலாம் என்கிற காலம் போய், தற்போது செபி சட்டங்களால் முதலில் 5 வருடம் நிதி ஆலோசகராக பணியாற்றி, அதன்பின் செபி நடத்தும் நிதி ஆலோசகர் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள்தான் ஆலோசனை வழங்க வேண்டும் என்ற நிலை வந்துவிட்டது. இது முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது"
placeholder
எஸ்.ஹரீஷ்- தமிழ்நாடு & கேரளா பிராந்திய தலைவர், ஐசிஐசிஐ புரூடென்ஷியல் மியூச்சுவல் ஃபண்ட்
2016-ம் ஆண்டில் எங்கு, எதில் முதலீடு செய்யலாம் என்பதை பற்றி அவர் பேசினார். ‘‘முதலீட்டாளர்கள் மத்தியில் தேவையில்லாத பயம் நிலவுகிறது. முதலீட்டாளர்கள் உங்கள் முதலீட்டை ஈக்விட்டி சார்ந்த முதலீடுகளில் அதிகரித்துக் கொள்ள வேண்டும்” என்று பேசினார்.
placeholder
விஜய்குமார் சிலிகுரி - எம்.எஸ்.எம்.இ பயிற்றுநர், பிர்லா சன் லைஃப் இன்ஷூரன்ஸ்
“இந்தியாவில் இருக்கும் எம்.எஸ்.எம்.இ.யினரின் பிசினஸ் அளவு சிறியதாக இருக்கலாம். ஆனால் இந்திய ஜிடிபியில் அவர்களின் பங்கு பெரியது. அவர்கள் கனவு பெரியது. அவர்கள் தங்கள் பிசினஸை செய்ய எடுக்கும் ரிஸ்க் இவைகள் எல்லாவற்றையும்விடப் பெரியது".
placeholder
எஸ்.ஸ்ரீராம் - செயல் இயக்குநர் மற்றும் கெளரவ வருகை பேராசிரியர், க்ரேட் லேக்ஸ் இன்ஸ்டிட்யூட் ஆஃப் மேனேஜ்மென்ட்
டிஜிட்டல் பொருளாதாரத்தில் சாத்தியமான புத்தாக்கங்கள் (Innovation in the Digital Economy) பற்றி பேசினார். “இந்தியாவில் நல்ல பிசினஸ் செய்த அனைவருமே, வறண்ட பிரதேசங்கள், விவசாயம் செய்ய முடியாத பகுதிகளில் இருந்து உருவான செட்டியார்கள், மார்வாடிகள், குஜராத்திகள்...தான். அந்த வறட்சியின் தாக்கமும், வலியும், நாம் வாழ வேண்டும் என்கிற தவிப்பும்தான் அவர்களை நல்ல பிசினஸ்மேன்களாக மாற்றியது".
placeholder
மாணிக்கம் ராமசுவாமி - நிறுவனர், லாயல் டெக்ஸ்டைல்ஸ்
இந்தியாவில் ‘மேக் இன் இந்தியா' திட்டம் வெற்றி பெற அரசு என்ன செய்ய வேண்டும் என்கிற தலைப்பில் பேசினார். ‘‘பிரதமர் மோடி ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தைப் பற்றி தீவிரமாக முன்னெடுத்து வருகிறார். ஆனால், இந்தத் திட்டத்தில் சில மாற்றங்களையும் சில சட்ட திருத்தங்களையும் கொண்டுவந்தால், இந்தியா இன்னும் அதிவேகமாக வளரும், வெற்றி அடையும். அவை என்ன?"
placeholder
சி.கே.ரங்கநாதன் - நிறுவனர், கவின்கேர்.
இவர் ஒரு நிறுவனத்தின் ஊழியர்களை வளர்த்தெடுப்பதும், அவர்களுக்கான வாய்ப்புகளை உருவாக்குவதும் எப்படி பிசினஸில் ஜெயிக்க உதவியாக இருக்கும் என்பதைப் பற்றி பேசினார். “ஒரு நல்ல பிசினஸ்மேனிடம் இன்றைக்கு பிசினஸை நடத்த உங்களுக்கு உள்ள பிரச்னைகள் என்ன என்று கேட்டால், நிறுவனத்தை வளர்த்தெடுக்க நல்ல திறமையான ஆட்கள் இல்லை என்று சொல்கிறார். வேலை தேடும் இளைஞனைக் கேட்டால், நல்ல வேலை கிடைக்கவில்லை என்கிறார். இங்குதான் பிரச்னையைப் புரிந்துகொள்ள வேண்டும்".
placeholder
முருகவேல் ஜானகிராமன் - புரமோட்டர் மற்றும் நிர்வாக இயக்குநர், மேட்ரிமோனி.காம்
‘‘2015-ல் இந்திய இ-காமர்ஸ் நிறுவனங்களின் வியாபாரம் 23 பில்லியன் டாலர் அளவுக்கு இருந்தது. 2016-ல் 38 பில்லியன் டாலர் அளவுக்கும், 2020-ல் 137 பில்லியன் டாலர் அளவுக்கும் இந்தியாவில் இ-காமர்ஸ் வளரும் என்று சொல்லி இருக்கிறது மார்கன் ஸ்டான்லி நிறுவனம். இந்தியாவில் நடக்கும் இ-காமர்ஸ் வணிகத்தில் 60 சதவிகிதத்துக்கும் மேற்பட்ட வர்த்தகங்கள் மொபைல் மூலமாகவே நடக்கின்றன. இது இன்னும் அபரிமிதமாக வளரப் போகிறது."
placeholder
விஜயானந்த் - தி ஸ்டார்ட் அப் சென்டரின் (The Startup Centre) துணை நிறுவனர்
எது ஸ்டார்ட் அப் என்பது பற்றி பேசினார். "சிறு, குறு தொழில் என்பதற்கும் ஸ்டார்ட் அப் என்பதற்கும் ஒரு வித்தியாசம் இருக்கிறது. ஒரு நிறுவனத்தின் வளர்ச்சி சீன மூங்கில்களைப் போன்று வேகமாக, ஆலமரம் போன்று விழுது விட்டு பெரும் விருட்சமாக பெரிதாக வளரும் என்றால் அது தான் ஸ்டார்ட் அப். அது மட்டும் தான் ஸ்டார்ட் அப்".
placeholder
ஏ.தில்லைராஜன் - மேனேஜ்மென்ட் துறை பேராசிரியர், ஐஐடி, சென்னை.
"வெஞ்சர் ஃபண்டிங்கை பற்றி தொழில்முனைவோர்கள் தெரிந்துகொள்ள வேண்டியது" என்கிற தலைப்பில் விரிவாக பேசினார். "அமெரிக்கா தான் உலகில் பெரிய வெஞ்சர் கேப்பிடல் முதலீடுகளை பெறுகின்றன. அதில் 1/10 பங்கு தான் இந்தியாவில் முதலீடு செய்யப்படுகின்றன. 1998 - 2000 காலங்களில் இணையம் சார்ந்த தொழில்கள் உலக அளவிலும், இந்திய அளவிலும் எந்த நிலையில் இருந்தன என்பதை சொல்ல வேன்டுமா...?, அதனாலேயே வெஞ்சர் ஃபண்டிங் பெரும்பாலும் இணையம் சார்ந்த தொழில்களில் முதலீடு செய்யப்படுகின்றன.
placeholder
டாக்டர் அனந்த நாகேஸ்வரன் - பொருளாதாரம் மற்றும் நிதியியல் சந்தை நிபுணர், சிங்கப்பூர்.
மத்திய அரசும், பங்குச் சந்தை ஜாம்பவான்களும் ஒவ்வொரு ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் பிரகாசமாக இருக்கும் என்றே கூறிவருகின்றனர். ஆனால், நடைமுறை அப்படி அல்ல. இந்த ஆண்டு மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தலாம். அதனை எதிர்கொள்ள இந்திய அரசு இப்போதே தயாராக வேண்டும் என்று அவர் எச்சரித்தார்.
Sponsors