அன்பார்ந்த வாசகர்களே!

மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றாலும் மேன்மை பெற்ற பல்லாயிரம் க்ஷேத்திரங்களைத் தன்னகத்தே கொண்ட புண்ணிய பூமி நம் பாரதம். இந்தத் தலங்கள் அனைத்தையும் தரிசிக்க இந்த ஒரு பிறவி போதாது. என்றாலும், நாம் யாத்திரையாகச் சென்று தரிசித்து வழிபட்டு வரம்பெற்று மகிழ்வதற்கு வசதியாக, குறிப்பிட்ட தலங்களை வகைப்படுத்தி, வரிசைப்படுத்தி வைத்துள்ளனர் நம் முன்னோர். சக்தி பீடங்கள், திவ்யதேசங்கள், தேவாரத் திருத்தலங்கள், பஞ்ச துவாரகைகள், காசி - ராமேஸ்வரம், திருக்கயிலாய தரிசனம்... என்று பெரியோர்களால் பாடல் பெற்ற, புராணங்களால் போற்றப்பட்ட புண்ணிய திருத்தலங்களுக்கு யாத்திரை செல்வதும், அந்தத் தலங்களின் மேன்மையை அறிந்து வணங்குவதும், அங்கு செய்ய வேண்டிய கடமைகளை நிறைவேற்றி வருவதும், நமக்கு மட்டுமல்ல நம் சந்ததிக்கும் பெரும்பேற்றினைப் பெற்றுத் தரும் வழிபாடுகளாகும். அவ்வகையில், ‘சக்தி விகடன்’ வாசகர்கள் பயனடையும் விதம், அவர்களோடும் ஆன்மிகப் பெரியோர்களுடனும் புண்ணிய க்ஷேத்திரங்களை தரிசிக்கும் வகையில் துவங்கவுள்ளது, சக்தி யாத்திரை!

முதல் யாத்திரையில் - ஆறுமுகன் அருள்பாலிக்கும் ஆறு திருத்தலங்கள் இடம்பெறுகின்றன. தலங்கள் - தரிசனம் மட்டுமின்றி, ஆன்மிக உரையாடல்கள், சிறப்பு சங்கல்பம், வேல்மாறல் பாராயணம், திருப்புகழ் மகாமந்திர பூஜை ஆகிய விசேஷ வழிபாடுகள் என களைகட்டப் போகிறது சக்தி யாத்திரை.

ஜூன் 29, 30 மற்றும் ஜூலை-1 ஆகிய தேதிகளில் நிகழவுள்ள சக்தி யாத்திரையில் நீங்களும் கலந்துகொள்ள வேண்டுமா? உடனடியாக முன்பதிவு செய்யுங்கள். கட்டணம் ரூ.5000 மட்டுமே! முந்துவோருக்கே முன்னுரிமை எனும் அடிப்படையில் முன்பதிவு ஏற்கப்படும்.

20-06-2018வெள்ளி

காஞ்சி - குமரக்கோட்டம்

openion1

ஞானமலை

openion1
வேல்மாறல் பாராயண வழிபாடு

இரவு தங்குதல் - சுவாமிமலை

30-06-2018சனி

சுவாமிமலை

openion1

குன்றக்குடி

openion1
தவத்திரு குன்றகுடி அடிகளாருடன் கலந்துரையாடல்

இரவு தங்குதல் - திருநெல்வேலி

01-07-2018ஞாயிறு

வள்ளியூர்

openion1

தோரணமலை

openion1
திருப்புகழ் மகா மந்திர பூஜை

உங்கள் கவனத்திற்கு...

யாத்திரையில் பங்கேற்கவுள்ள வாசகர்களுக்கு வாழ்த்து களும் வணக்கமும்.

சக்தி யாத்திரை வாகனம் சென்னையில் புறப்படும் இடமும், நேரமும் யாத்திரையில் பங்கேற்கும் வாசகர்களுக்குப் பிரத்யேகமாகப் பின்னர் அறிவிக்கப்படும்.

பயண காலமாகிய 3 நாள்களும் வாசகர்களுக்கான உணவு, தேநீர் - காபி, மற்றும் 2 நாள்கள் இரவில் தங்குவதற்குச் சிறப்பான விடுதி ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

திருக்கோயில்களில் வாசகர்களுக்குச் சிறப்பு தரிசனத் துடன், குறிப்பிட்ட கோயில்களின் வரலாறு, மகத்துவம், வழிபாட்டுச் சிறப்புகளை விவரிக்கும்விதமாக ஆன்மிகப் பெரியோர்களின் விளக்கவுரைகளும், வீடியோ தொகுப்புகளும் யாத்திரையில் இடம்பெறும்.

ஞானமலை - வேல்மாறல் பாராயணம், தோரணமலை - திருப்புகழ் மகாமந்திர பூஜை ஆகிய வழிபாடுகளில், யாத்திரையில் பங்கேற்கும் வாசகர் ஒவ்வொருவருக்கும் சங்கல்பம் செய்துவைக்கப்படும்.

யாத்திரையில் சில ஆலயங்கள் மலைக்கோயில்கள் என்பதால், 25 முதல் 55 வயதுக்குட்பட்ட அன்பர்கள் மட்டும் விண்ணப்பிக்கவும். குழந்தைகளுக்கு அனுமதியில்லை.

யாத்திரையில் கலந்துகொள்ளும் அன்பர்களின் உடல் நலம், உடல் சுகவீனம் சார்ந்த விஷயங்கள், அவரவர் சொந்த பொறுப்பாகும்.

பயணத்தின் நடுவே எதிர்பாராமல் ஏதேனும் தடங்கல்கள் ஏற்பட்டால், உரிய மாற்று ஏற்பாடுகள் உடனுக்குடன் செய்யப்படும். எனினும் அவற்றின் காரணமாக விளையும் நேர விரயம், மனச் சங்கடம் முதலானவற்றுக்கு விகடன் நிறுவனம் பொறுப்பேற்க இயலாது.

முன்பதிவு செய்தபிறகு, எக்காரணம் கொண்டும் ரத்து செய்யவோ, திரும்பப் பெறவோ இயலாது.

முந்துபவருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் சக்தி யாத்திரைக்கான முன்பதிவுகள் ஏற்கப்படும்.முன்பதிவு விண்ணப்பங்களை ஏற்பது மற்றும் தவிர்ப்பதில் ஆசிரியர் முடிவே இறுதியானது.

Personal Details

Choose from any one of the following payment gateway and click on "Submit" to proceed further.

(Debit card / credit card) powered by ICICI

(Debit card / credit card / Netbanking) POWERED BY TPSL