தொடர்கள்
Published:Updated:

புதிர் முத்திரை!

தெய்வா

க்தி விகடனில் வெளியாகிவரும் சிவமகுடம் தொடரைப் படித்து வருகிறீர்கள்தானே?

அந்தக் கதையின் நாயகி சோழ இளவரசி மானிக்கு உதவும் வாய்ப்பை உங்களுக்குப் பெற்றுத் தரப்போகிறது இந்த இதழுக்கான புதிர்.

பாண்டிய நாடு சென்று வந்த இளவரசி மானி, தன் தந்தை மணிமுடிச் சோழரைக் காண மந்திராலோசனை அறைக்குச் செல்கிறாள். அவள் உள்ளே நுழைந்த அதே தருணம், எதிரே சாளரப் பகுதியில் இருந்து பாய்ந்து வந்தது ஒரு குறுவாள். அதை தனது சுழற்படையால் தடுத்து வீழ்த்துகிறாள் மானி. ஆனால், வாள் வீசிய உருவம் கோட்டையை ஒட்டிப் பாயும் காவிரியில் குதித்து மறைந்து போகிறது. வாள் வீசியவன் யார்? பாண்டிய தேசத்தைச் சேர்ந்தவனா?

‘இல்லை’ என்பது மணிமுடிச் சோழரின் முடிவு. காரணம், பாண்டியர்கள் இப்படிக் கோழைத்தனமாக நடந்து கொள்ளமாட்டார்கள்; இத்தகைய இழிசெயலுக்குப் பாண்டிய மன்னன் கூன் பாண்டியனும் உடன்படமாட்டான் என்பது அவரது கருத்து.

அப்படியென்றால், கொலை முயற்சி செய்தது யார்? சோழ தேசத்தின் துரோகியா அல்லது வேறு ஏதேனும் புரட்சிக் கூட்டத்தைச் சேர்ந்தவனா என்பதை அறிய வேண்டியது அவசியம்.
அவன் இன்னார் என்பதை ஓரளவு கணித்து, வாள் வீசியவனும் அவன் கூட்டாளியும் சிராப்பள்ளி குன்றின் ஒரு குகையில் மறைந்திருப்பதை அறிந்த பரமேசுவரப்பட்டரும் எதிர்பாராத அபாயத்தில் சிக்கிக் கொண்டதை சென்ற அத்தியாயத்தில் படித் திருப்பீர்கள்.

புதிர் முத்திரை!

இந்த நிலையில், வாள் வீசியவனும், அவனது கூட்டாளியும் எந்தக் கூட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்பதைக் கண்டறிந்து சொல்ல உங்களுக்கு ஒரு வாய்ப்பு!

நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்...

• இந்தப் பக்கத்தில் உள்ளது போன்ற சோழ முத்திரைகள் இந்த இதழில் ஆங்காங்கே இடம்பெற்றுள்ளன. ஒவ்வொரு முத்திரையின் கீழேயும் ஒரு கேள்வி கொடுக்கப்பட்டுள்ளது.

•   முதலில் இந்தப் பக்கத்தில் இருந்தே உங்களின் ஒற்றாடலைத் தொடங்குங்கள். இந்த முத்திரைக் கேள்விக்கான பதில், வேறொரு கேள்வியின் துவக்க வார்த்தையாக அமைந்திருக்கும். அந்தக் குறிப்பிட்ட முத்திரைக் கேள்வி எங்கே என்று தேடுங்கள். இரண்டாவதான அந்தக் கேள்விக்கு உரிய பதில் வேறொரு கேள்வியின் துவக்கமாக இருக்கும்.

•   இப்படியே தொடர்ந்தால்... இறுதியாக எந்தக் கேள்விக்கான பதிலை முதல் வார்த்தையாகக் கொண்ட வேறு கேள்வி இல்லாமல் போகிறதோ, அதுவே கடைசிக் கேள்வி. அந்தக் கேள்விக்கான பதில், இந்த இதழில் ஏதேனும் ஒரு பக்கத்தில் புகைப்படமாக இடம்பெற்றிருக்கும். அதே பக்கத்திலேயே துணுக்கு ஒன்றில், வாள் வீசியவன் எந்தக் கூட்டத்தைச் சேர்ந்தவன் என்பதற்கான பதிலும் இருக்கிறது. அந்த விடையை கீழ்க்காணும் கட்டத்தில் எழுதி அனுப்புங்கள்.

விடை: _________________________________________

சிறப்புக்கேள்வி:

விடையாகக் கிடைக்கும் கூட்டத்தினர் குறித்து, உங்களுக்குத் தெரிந்த சிறப்புத் தகவலை நறுக்கென ஒரே வரியில் எழுதி அனுப்புங்கள்.

போட்டிக்கான விதிமுறைகள்:

•   இந்தப் பக்கத்தைப் பூர்த்தி செய்து, அப்படியே கத்தரித்து எங்களுக்கு அனுப்பிவையுங்கள்.

    ஜெராக்ஸ் எடுத்தும் அனுப்பலாம். தனித்தாளில் எழுதி அனுப்பக்கூடாது.

•   சரியான விடையோடு, சிறப்புக் கேள்விக்கும் கச்சிதமான பதிலை அனுப்பும் பத்து வாசகர்களுக்கு தலா 300 ரூபாய் பரிசாக வழங்கப்படும். விடைகள் எங்களுக்கு வந்து சேரவேண்டிய கடைசி தேதி 26.1.16.

•   விடைகளை சாதாரண தபாலில்தான் அனுப்ப வேண்டும். நேரில், கூரியர் மற்றும் பதிவுத் தபாலில் அனுப்பப்படுபவை ஏற்கப்படமாட்டாது.

•   விடைகளை இ.மெயில் மூலமாகவும் அனுப்பலாம். இந்த புதிர் பக்கத்தை நிரப்பி, ஸ்கேன் செய்து svdesk@vikatan.com என்ற இ-மெயில் முகவரிக்கு அனுப்பவும்.

•   ஆசிரியர் தீர்ப்பே இறுதியானது!

அனுப்ப வேண்டிய முகவரி:

சக்தி விகடன் - புதிர் வட்டம் பகுதி, 757, அண்ணா சாலை,  சென்னை-600 002.

சென்ற வார புதிர் போட்டியின் விடை மற்றும் பரிசு பெற்றோர் தகவல்:

புதிர் முத்திரை!