புத்தக விமர்சனம்
அருணகிரிநாதர் அடிச்சுவட்டில்
ஆசிரியர்: சிவ.இராஜேஸ்வரி வெளியீடு: பார்த்திபன் பதிப்பகம், A-12, எல்.ஐ.சி.காலனி, திருச்சி-620021.
விலை: 100 பக்கங்கள்: 128
தமிழ்நாட்டிலுள்ள திருப்புகழ் பாடல் பெற்ற திருத்தலங்களின் சிறப்பு, இருப்பிடம், செல்லும் வழி, திறந்திருக்கும் நேரம், தொலைபேசி எண்கள் ஆகிய விவரங்கள் மாவட்டவாரியாக, அருணகிரிநாதரின் அடிச்சுவட்டைப் பின்பற்றி இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. முருக பக்தர்களின் எதிர்பார்ப்பை இந்நூல் பூர்த்தி செய்யும் என்பது உறுதி!

பூர்வா
ஆசிரியர்: லஷ்மி தேவ்நாத் தமிழில்: பத்மா நாராயணன் வெளியீடு: கிரி டிரேடிங் ஏஜென்ஸி பிரைவேட் லிமிடெட், 372/1, மாங்காடு பட்டூர் கூட்ரோடு, மாங்காடு, சென்னை-600122.
விலை: 295 பக்கங்கள்: 224
அற்புதங்கள் நிறைந்த பன்னிரு ஆழ்வார்களின் பரவசமூட்டும் வாழ்க்கை வரலாற்றை, பல்வேறு சுவாரஸ்யத்தோடு தொகுத்து அளித்திருக்கிறார் ஆசிரியர். இக்கதையில் வரும் சிறுமியை, கால வாகனத்தில் ஆழ்வார்கள் வாழும் காலத்துக்கே அழைத்துச் சென்று, மாயஜால வித்தைகளைப் போன்று கதையை நகர்த்திச் செல்வது நம்மை வியக்கவைக்கிறது. நல்ல முயற்சி!
வள்ளல் வாரியார்
ஆசிரியர்: பருத்தியூர் டாக்டர் கே.சந்தானராமன் வெளியீடு: பூங்கொடி பதிப்பகம், 14, சித்திரைக்குளம் மேற்குத் தெரு, மயிலாப்பூர், சென்னை-600004.
விலை: 30 பக்கங்கள்: 64
நாளும் தமிழ் பரப்பிய நல்லறிஞர் நம் கிருபானந்த வாரியார் சுவாமிகள் என்பதை உலகத் தமிழர்கள் அனைவரும் நன்கு அறிவர். நாள்தோறும் இரண்டு அல்லது மூன்று சொற்பொழிவுகள் என்ற முறையில், அறுபத்தைந்து ஆண்டுகள் தொடர்ந்து உரையாற்றியவர். இந்நூலில் வாரியாரின் வாழ்க்கை வரலாற்றையும், அவர் சொற்பொழிவிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கருத்துக்களையும் தொகுத்து அளித்திருக்கும் விதம் அற்புதம்!

லீலா மோஹன சாயி (இரண்டாம் பாகம்)
ஆசிரியர்: டி.ஆர்.சாய்மோகன் வெளியீடு: சத்யசாயி புக்ஸ் அண்ட் பப்ளிகேஷன் டிரஸ்ட், ‘சுந்தரம்’, 7, சுந்தரம் சாலை, ராஜா அண்ணாமலைபுரம், சென்னை-600028.
விலை: 150 பக்கங்கள்: 208
பகவான் புட்டபர்த்தி சத்திய சாயிபாபாவின் பல்வேறு அற்புதங்களையும், அவர் நமக்கு வழங்கிச் சென்ற அருளுரைகளையும் அற்புத நூலாகத் தொகுத்திருக்கிறார் ஆசிரியர். இந்நூலில் உள்ள ஒவ்வொரு சம்பவமும் சாயி பாபாவின் சங்கல்பம் என்றே சொல்லலாம். சத்யசாயி பக்தர்களுக்கு நிகழ்ந்த பல்வேறு சம்பங்களைச் சுமந்து வரும் இந்நூல், சாயி பக்தர்களுக்கு இன்னுமொரு பொக்கிஷமாகத் திகழும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.