தொடர்கள்
Published:Updated:

பூச்சரம்!

பூச்சரம்!
பிரீமியம் ஸ்டோரி
News
பூச்சரம்!

பூச்சரம்!

பூச்சரம்!

வ்வொரு உண்மையும், அது வெளிப்படுவதற்கான தருணத்தை எதிர்நோக்கியிருக்கிறது. இதை உண்ர்ந்து நீ பொறுமையாக, உண்மையாக, நம்பிக்கையோடு இருக்க வேண்டியது அவசியம்!

- மகான் ஸ்ரீஅரவிந்தர்

வன்மையானது அழியும்!

ரொம்ப வயதாகி, இறக்கப்போகும் தருணத்தில் ஒரு சந்நியாசி, தன் சீடர்களுக்கு வாழ்க்கைத் தத்துவம் ஒன்றைப் புரியவைக்க விரும்பினார். எல்லாரையும் அழைத்து அருகில் உட்கார வைத்து, அவர்களுக்குத் தனது பொக்கை வாயைத் திறந்து காண்பித்து, ‘வாழ்க்கைத் தத்துவம் இதுதான்’ என்றார்.

சீடர்களுக்கு ஒன்றும் புரியவில்லை. ஒரே ஒரு சீடன் மட்டும் ‘வாய்க்குள் அப்படியென்ன வாழ்க்கைத் தத்துவம் இருந்துவிடப் போகுது’ என்று குழம்பி, மெதுவாக குருவிடமே விளக்கம் கேட்டான்.
‘என் வாய்க்குள் என்ன இருந்தது?’ என்று கேட்டார் அவர். ‘நாக்கு, உள்நாக்கு இரண்டும் இருந்தது!’ என்றான் சீடன்.  ‘பற்கள் இருந்ததா?’ என்று கேட்டார் சந்நியாசி. ‘இல்லை’ என்றான் சீடன்.
‘புரிந்துகொள், இதுதான் வாழ்க்கை. வன்மையானது அழியும்; மென்மையானது வாழும்!’ என்றார் குரு.

தேடினால் கிடைக்கும்!

சோம்பலால் வறுமையில் வாடிய ஒருவன் ஒரு மகானைச் சந்தித்து, தனது வறுமையைப் போக்கும்படி வேண்டினான். அவனது சோம்பலை உணர்ந்த மகான், அவனுக்கு அதை உணர்த்த ஒரு கதையைக் கூறினார்.

ஒரு மரங்கொத்திப் பறவை, தன் கூரிய அலகால் டொக் டொக்கென்று மரத்தைக் கொத்திக்கொண்டே, அந்த மரத்தின் மேல் தாவித் தாவி ஏறிக்கொண்டு இருந்தது. அதைப் பார்த்த ஒரு மனிதன், “மூடப் பறவையே, எதற்காக மரம் முழுவதையும் கொத்திக்கொண்டிருக்கிறாய்? இது வீண் வேலையல்லவா?’’ என்று கேட்டான்.

அதற்கு அந்தப் பறவை, “மனிதனே, நான் என் உணவைத் தேடுகிறேன். தேடினால்தானே கிடைக்கும்?’’ என்றது.

அவன் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, தொடர்ந்து ஒரே இடத்தில் மரத்தைக் கொத்திக் கொத்தி, ஓட்டை போட்டு, அதற்குள் பதுங்கியிருந்த புழுக்களை எடுத்து உண்ண ஆரம்பித்தது. உண்டு முடித்த பிறகு, அது மனிதனைப் பார்த்து, “நீயும் தேடு! மரத்திலும், மண்ணிலும், நீரிலும்... ஏன், எல்லா இடங்களிலும் தேடு. உனக்கும் ஏதாவது கிடைக்கும்’’ என்றது.

கதையைச் சொல்லி முடித்த மகான், “நீயும் இந்தப் பரந்த உலகத்தில் தேடு. உனக்கும் ஏதாவது கிடைக்கும். சோம்பேறியாக இருந்தால் வறுமைதான் மிஞ்சும்’’ என்றார்.

- புனிதாவள்ளி

(வாட்ஸ்-அப்பில் பகிரப்பட்டது)

கவான் ஸ்ரீகிருஷ்ணரிடம் ‘வாழ்க்கை என்றால் என்ன?’ என்ற கேள்வி கேட்கப்பட்டது. “மனிதன் பிறக்கும்போது பெயரில்லாமல் மூச்சுக் காற்றுடன் பிறக்கிறான். இறக்கும்போது மூச்சுக் காற்று இல்லாமல் பெயருடன் இறக்கிறான். மூச்சுக் காற்றுக்கும் பெயருக்கும் இடைப்பட்ட காலம்தான் வாழ்க்கை!” என்று ஸ்ரீகிருஷ்ணர் கூறினார். எவ்வளவு அழகான, எளிமையான வாழ்க்கைத் தத்துவம்!

மற்றவர்களை காயப்படுத்தும் புன்னகையைவிட யாரையும் காயப்படுத்தாத மெளனமே சிறந்தது!

- கிரிஷ் ராம்

டிக்கடி தவறு செய்பவன் அப்பாவி.

ஒரே தவறை மீண்டும் மீண்டும் செய்பவன் மூடன்.

ஒரு தவறுமே செய்யாதவன் ஜடம்.

தன்னையறியாமல் தவறு செய்து, பின்பு உணர்ந்து தன்னைத் திருத்திக்கொள்பவனே மனிதன்!

- கண்ணதாசன்

நோக்கம் எது என்பதை முதலில் தீர்மானி. அதுவே இலக்கு என்பதை உறுதி செய். கையில் பணமில்லையே, உடலில் வலுவில்லையே, உதவி செய்வதற்கு நண்பர்கள் இல்லையே என்றெல்லாம் யோசித்து நேரத்தை வீணாக்காதே! எதற்கும் பயப்படாதே! தயங்காதே! இலக்கை நோக்கி அடியெடுத்து வை. தொடர்ந்து முன்னேறு. சோதனைகள் விலகும். பாதை தெளிவாகும். நோக்கத்தை நீ அடைந்தே தீருவாய். அதை யாராலும் தடுக்க முடியாது!

- சுவாமி விவேகானந்தர்

கிளி வளர்த்தேன்; பறந்துவிட்டது! அணில் வளர்த்தேன்; ஓடிவிட்டது! மரம் வளர்த்தேன்; இரண்டும் திரும்பி வந்துவிட்டன.

- அப்துல் கலாம்