
நடனப் புதிர்!
இந்த இதழில் அட்டைப்படத்தில் சிவனாரின் ஊர்த்துவ தாண்டவக் கோலத்தைத் தரிசித்திருப்பீர்கள். காளிதேவியுடனான போட்டியின்போது, எம்பெருமான் ஊர்த்துவ முகமாக சிரத்தின் உயரத்துக்குக் கால் வீசி ஆடிய ஆட்டம் அது. இதேபோல், திருத்தலம் ஒன்றில் அடியவர் ஒருவருக்காக அதிர வீசி ஆடும் அழகனாக, கால் மாற்றி ஆடும் அற்புதக் கோலத்தில் அருள்கிறார் நடராஜப் பெருமான்.

‘அந்த அடியவர் யார்?’ இதுதான், இந்த இதழுக்கான புதிர்க் கேள்வி.
இந்தப் பக்கத்தில் அடியவர்கள் சிலரது பெயர்களும், அவர்கள் ஒவ்வொருவருடனும் தொடர்புடைய கனி மற்றும் பிராணிகளின் பெயர்களும் இடம்பெற்றுள்ளன. ஓர் அடியார், அவருடன் தொடர்புடைய கனி அல்லது பிராணியின் பெயர் என்ற வகையில், ஜோடி ஜோடியாக பெயர்களை நீக்கினால், ஓர் அடியாரின் பெயர் மட்டும் எந்தத் தொடர்பும் இன்றி தனியே மிஞ்சும். அந்தப் பெயரே புதிருக்கான பதில்!
விடையாகக் கிடைக்கும் அடியவரின் திருப்பெயரை இங்குள்ள கட்டத்தில் பூர்த்தி செய்யுங்கள். அத்துடன், அவரது மகிமை குறித்த சிறப்புத் தகவல் ஒன்றை ஓரிரு வரிகளில் பூர்த்திசெய்து, இந்தப் பக்கத்தைக் கத்தரித்து எங்களுக்கு அனுப்பிவையுங்கள். (ஜெராக்ஸ் எடுத்தும் பூர்த்திசெய்து அனுப்பலாம்). சரியான விடையுடன், அடியவர் குறித்துக் கச்சிதமாகத் தகவல் அனுப்பும் பத்து வாசகர்களுக்கு, தலா 250 ரூபாய் பரிசாக வழங்கப்படும்.

திருத்தலப் புதிர்!
20.6.17 இதழ் புதிருக்கான விடை: அருணகிரிநாதர்

சரியான விடையுடன் கச்சிதமாகத் தகவல் அனுப்பிப் பரிசு பெறுபவர்கள்:
1. எஸ்.விஜயகுமார், சென்னை-49
2. கே.சங்கர், பெங்களூரு-3
3. தேவி, திருப்பத்தூர்-1
4. தமிழமுதன், புதுக்கோட்டை
5. இ.பார்த்தசாரதி, நாமக்கல்
6. சி.சாரதா, திருநெல்வேலி
7. கேசவன், சென்னை-28
8. ஆர்.ரகுபதி, ஹைதராபாத்-3
9. ச.அ.சு.மணியன், மதுரை-16
10. கோகிலாம்பாள், கோவை-1