Published:Updated:

வருமானம் உயரும்... வருத்தங்கள் நீங்கும்... கன்னிராசிக்கான 2021 ஆங்கிலப் புத்தாண்டு ராசிபலன்கள்!

கன்னி  ராசி புத்தாண்டு பலன்கள்
கன்னி ராசி புத்தாண்டு பலன்கள்

3 - ம் வீட்டில் சுக்கிரன் சாதகமாக இருக்கும் வேளையில் இந்த ஆண்டு பிறப்பதால் பணவரவு திருப்திகரமாக இருக்கும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். அதிரடியாகச் செயல்பட்டு குடும்ப வருமானத்தை உயர்த்துவீர்கள்.

இருப்பதைக்கொண்டு நிறைவான மனத்துடன் பதற்றமில்லாத வாழ்வதை விரும்பும் கன்னி ராசி அன்பர்களே...

உங்கள் ராசிக்கு லாப வீட்டில் சந்திரன் நிற்கும் போது இந்தப் புத்தாண்டு பிறப்பதால் வருமானம் உயரும். வருங்காலத் திட்டங்கள் பூர்த்தியாகும். கௌரவப் பொறுப்புகள் தேடி வரும். சொந்த ஊரில் மதிக்கப்படுவீர்கள். மூத்த சகோதர, சகோதரிகளுடன் இருந்த மனத்தாங்கல் நீங்கும். ஷேர், கமிஷன் வகைகளால் பணம் வரும். சகோதர உறவுகளுடன் இருந்த மனவருத்தம் நீங்கும். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து இனி சேமிக்கத் தொடங்குவீர்கள்.

3 - ம் வீட்டில் சுக்கிரன் சாதகமாக இருக்கும் வேளையில் இந்த ஆண்டு பிறப்பதால் பணவரவு திருப்திகரமாக இருக்கும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். அதிரடியாகச் செயல்பட்டு குடும்ப வருமானத்தை உயர்த்துவீர்கள். கணவன் - மனைவிக்குள் இருந்த வருத்தங்கள் நீங்கும்.

குரு பகவான்
குரு பகவான்

குருபகவான் அருளும் பலன்கள்

வருடம் பிறக்கும்போது உங்கள் ராசிக்கு 5 - ம் வீட்டில் குருபகவான் அமர்ந்திருப்பதால் குடும்பத்தில் நிலவி வந்த பிரச்னைகள் விலகும். கணவன் - மனைவிக்குள் தாம்பத்யம் இனிக்கும். வரவுக்கு மிஞ்சிய செலவுகளை இனி கட்டுப்படுத்துவீர்கள்.

பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்யும் அளவிற்குப் பணம் வரும். குழந்தை வரம் வேண்டியவர்களுக்கு அழகான வாரிசு உருவாகும். பிள்ளைகளால் உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் செல்வாக்குக் கூடும். மகன் அல்லது மகளுக்குத் திருமணம் நிச்சயமாகும். வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். தாயாரின் உடல் நிலையில் இருந்த பின்னடைவுகள் நீங்கி ஆரோக்கியம் மேம்படும். குலதெய்வக் கோயிலுக்குச் செய்ய வேண்டிய நேர்த்திக்கடனை உடனே முடிப்பீர்கள்.

ஏப்ரல் 6 - ம் தேதி முதல் செப்டம்பர் 14 - ம் தேதி வரை குருபகவான் உங்கள் ராசிக்கு 6 - ம் வீட்டில் சென்று மறைவதால் வீண்பழி, டென்ஷன், விரையம், விரக்தி, ஏமாற்றம், மறைமுக எதிர்ப்புகள் என வந்து நீங்கும். ஒரே நேரத்தில் பல வேலைகளையும் இழுத்துப் போட்டு பார்க்க வேண்டி வரும். கணவன் - மனைவிக்குள் தேவையற்ற பிரச்னைகள் வந்து போகும்.

சனிபகவான்

இந்த வருடம் முழுக்க சனி பகவான் 5 - ம் வீட்டில் தொடர்வதால் பிள்ளைகள் உங்களைப் புரிந்து கொள்ளாமல் பேசுவார்கள். உயர்கல்வி, உத்தியோகத்தின் பொருட்டு பிள்ளைகள் உங்களைப் பிரிவார்கள். தாய்மாமன் வகையில் செலவுகள் இருக்கும். சின்னசின்ன மனஸ்தாபங்கள் வந்து நீங்கும். குலதெய்வக் கோயிலுக்கு மறக்காமல் சென்று வாருங்கள்.

சனி பகவான்
சனி பகவான்

ராகு - கேது

வருடம் பிறக்கும் போது 3 - ம் வீட்டில் கேது நிற்பதால் திடீர் பணவரவு உண்டு. மூத்த சகோதரர் பக்கபலமாக இருப்பார். ஆனால் இளைய சகோதரருடன் பனிப்போர் வந்து நீங்கும். கொஞ்சம் அனுசரித்துப் போங்கள். போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவீர்கள். துணிச்சலான முடிவுகள் எடுப்பீர்கள். மற்றவர்களை நம்பி எந்த வேலைகளையும் ஒப்படைக்கக் கூடாது என்று முடிவெடுப்பீர்கள். பூர்வீகச் சொத்தை சீரமைப்பீர்கள். பிதுர் வழிச் சொத்தை அடைவதிலிருந்த தடைகள் விலகும். எதிர்பார்த்த வகையில் உதவிகள் கிடைக்கும். ஷேர் மூலம் பணம் வரும். பிரபலங்கள், தொழிலதிபர்களின் நட்பு கிட்டும். அவர்கள் வீட்டு விசேஷங்களில் கலந்து கொள்ளும் அளவிற்கு நெருக்கமாவீர்கள். 9 - ம் வீட்டில் ராகு அமர்ந்திருப்பதால் எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்து வைக்க முடியவில்லையே என ஆதங்கப்படுவீர்கள்.

வியாபாரிகள், உத்தியோகஸ்தர்களுக்கான சிறப்புப் பலன்கள்!

வியாபாரிகளே!

தொழிலில் பெரிய முதலீடுகளைப் போட்டு சிக்கிக் கொள்ளாதீர்கள். வேலையாள்களிடம் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. பங்குதாரர்களால் விரயம் வரும். ரியல் எஸ்டேட், கமிசன், அரிசி, எண்ணெய் மண்டி மூலம் லாபம் உண்டு. புது ஏஜென்சி எடுப்பீர்கள். பழைய வாடிக்கையாளர்கள் மீண்டும் வருவார்கள்.

புத்தாண்டு பலன்கள்
புத்தாண்டு பலன்கள்

உத்தியோகஸ்தர்களே!

கூடுதல் கவனம் செலுத்தப் பாருங்கள். கால நேரம் பார்க்காமல் உழைக்க வேண்டி வரும். உயரதிகாரிகளால் அலைக்கழிக்கப்படுவீர்கள். சக ஊழியர்களின் குறைகளில் கவனம் செலுத்தாதீர்கள். முக்கியக் கோப்புகளைக் கையாளும் போது அலட்சியம் வேண்டாம். வழக்கால் நெருக்கடிகள் வந்து நீங்கும். புது வாய்ப்புகளை யோசித்து ஏற்பது நல்லது. இடமாற்றம் இருக்கும்.

அடுத்த கட்டுரைக்கு