மற்ற எபிசோடுகள்
Published:Updated:

புத்தக விமர்சனம்!

புத்தக விமர்சனம்!

##~##

வைகுந்த வாழ்வு

ஆசிரியர்: குலசேகர ராமாநுஜதாசன்
வெளியீடு: அன்னை நிலையம்
54/2, ராஜாபாதர் தெரு, தி.நகர், சென்னை-17.
பக்கங்கள்: 320          விலை:

புத்தக விமர்சனம்!

120

படைப்புலகம், பிறப்பு-இறப்பு, ஞானம், வேத வாக்கியங்களின் அர்த்தங்கள், தத்துவங்களை உணர்ந்து வாழ்தல், உருவ வழிபாட்டின் மேன்மை, பரமாத்ம ஞானம் என இறைவனை அடைவதற்கான வழிகளையும் நெறிகளையும் தந்துள்ளார் நூலாசிரியர்.

சிவபெருமானின் மகிமையும் சிவனடியார்களும் (2ஆம் பாகம்)

ஆசிரியர்: சாந்தா வரதராஜன்
வெளியீடு: சாந்தா வரதராஜன் பதிப்பகம்
ஜி-1, நாதன்ஸ் ஆகாஷ்,
புதிய எண்: 10, லட்சுமி தெரு, மேற்கு மாம்பலம்.
சென்னை-34.
பக்கங்கள்: 160    விலை:

புத்தக விமர்சனம்!

100

புத்தக விமர்சனம்!

பன்னிரு திருமுறைகளின் சிறப்பு, பெரியபுராணம் அதை எழுதியவரின் பெருமை, சமயக்குரவர்கள், சேக்கிழார் கண்ட சிவபக்தைகள் என சிவனாரின் பெருமைகளையும் அவரின் அடியார்களது மேன்மைகளையும் அழகுறத் தொகுத்துத் தந்துள்ளார் நூலாசிரியர். நல்ல முயற்சி.

ஆன்மிகம் அறிவோம்

ஆசிரியர்: இளசை சுந்தரம்
வெளியீடு : புகழ் பதிப்பகம்
நிர்மல் பிஎஸ் - 3, அக்ரிணி குடியிருப்பு,
ஆண்டாள்புரம், மதுரை-3.
பக்கங்கள்: 148    விலை: 

புத்தக விமர்சனம்!

 90

எது வழிபாடு?, கும்பாபிஷேகம் எதற்காக? அர்த்தநாரீஸ்வர தத்துவம், ஸ்ரீகிருஷ்ண லீலை, வழிகாட்டும் ஸ்ரீராமபிரான், கர்ணன் பிறந்த கதை, ருத்திராட்ச மகிமை, பிரதோஷப் பெருமை, கந்த சஷ்டி விரத மேன்மை என சின்னச் சின்ன வழிபாடுகளையும் வரம் தரும் கடவுளின் பெருமைகளையும் தனக்கே உரிய பாணியில், அற்புதமாகத் தந்துள்ளார் ஆசிரியர்.

அறிவியல் பொதிந்த ஆன்மிகம்

ஆசிரியர்: இரா.மணிமேகலை
வெளியீடு: மணிமேகலைப் பிரசுரம்,
7, தணிகாசலம் சாலை, தி.நகர், சென்னை-17.
பக்கங்கள்: 160   விலை: 

புத்தக விமர்சனம்!

 60

பக்தி இலக்கியத்தில் சரணாகதித் தத்துவம், இறைவனை அடைவதற்கான வழிகள் என்ன, பிரணவப் பொருளின் மேன்மை என்ன, பிள்ளையர் சுழியின் பொருள்... ஆகியன குறித்து விவரித்துள்ளார் நூலாசிரியர். எளிமையாகவும் தெளிவான அச்சிலும் உள்ளது நூல்.

ஆன்மிகப் புத்தகங்கள் மற்றும் சி.டி-கள் குறித்த விமர்சனங்கள்/தகவல்கள் இந்தப் பகுதியில் இடம்பெற, இரண்டு பிரதிகள் அனுப்பி வைக்கவும். முகவரி: சக்தி விகடன், (விமர்சன பகுதி), 757, அண்ணா சாலை, சென்னை-2.