குருப்பெயர்ச்சி பலன்கள்
தொடர்கள்
வாசகர் பக்கம்
Published:Updated:

அன்பே தவம்! - 2

வளமுடன் வாழலாம்!ஆர்.கே. பாலா

##~##

ன்பான கணவர், பொறுப்பாகவும் வாஞ்சையுடனும் இருந்து குடும்பத்தைப் பேணிக் காப்பதைவிடப் பெரிய சந்தோஷம் மனைவிக்கு வேறென்ன இருக்கிறது?! கணவனுக்குக் குறைந்த சம்பளமாக இருந்தாலும், அதிலும் நிறைவு கண்டு, சிக்கனத்தைக் கையாண்டு, குதூகலமாகவும் நிம்மதியுடனும் குடும்பத்தை நடத்துகிற பெண்கள் நிறைந்திருக்கிற உலகம் இது. ஆனால், குடும்பத்தின் மீதும் செய்யும் வேலையின் மீதும் அக்கறை இல்லாமல் கணவன் இருப்பானேயானால், மனைவி என்னதான் செய்வாள்?

அன்பே தவம்! - 2

''கல்யாணமாகி பன்னண்டு வருஷம் அப்படி இப்படின்னு சமாளிச்சு ஒருவழியா ஓட்டிட்டேன். பெரிசா வருமானத்துக்கு வழியில்லாத பெல்ட் வியாபாரம்தான் அவர் பண்ணினார். ஆனாலும், வரவுக்கு தகுந்தாற்போல வாழ்க்கையை ஓட்டுவோம்னு சிக்கனமா செலவு செய்து, சந்தோஷமாத்தான் நகர்ந்துச்சு வாழ்க்கை. எப்பவாவது ஒருமுறை குடிச்சிட்டிருந்தவர், சில காலத்துக்கப்புறம் அடிக்கடி குடிக்க ஆரம்பிச்சதும், மெல்லிசா ஒரு பயம் வர ஆரம்பிச்சுது என் மனசுக்குள்ளே. இன்னிக்கி இந்த மனவளக்கலைப் பயிற்சியின் உதவி யால பயமோ பதற்றமோ சுத்தமா கிடையாது. ஆனா அன்னிக்கி என் மனசுல இருந்த பயமும் கலவரமும் இந்த ஜென்மத்துக்கும் மறக்காது'' என்று பதற்றம் விலகாமல் சொல்கிறார் பூங்கொடி.

''பூங்கொடி மாதிரியும் அவர் கணவர் முருகனைப் போலவும் கிராமங்கள்ல நிறையப் பேர் இருக்காங்க. அதைவிட, படிச்சவங்க, மேல்தட்டுக்காரங்க நிறைஞ்சிருக்கிற நகரங்கள்லதான் ஒருத்தரையருத்தர் புரிஞ்சுக்காமலும் பரஸ்பரம் விட்டுக் கொடுத்து அனுசரிச்சுப் போகாமலும், தன் ஆசை, தன் வாழ்க்கைன்னு விட்டேத்தியா வாழறவங்க அதிகமாவே இருக்காங்க. அவங்க அத்தனைபேருக்குமான அருமருந்துதான் மனவளக்கலைப் பயிற்சி. வேதாத்திரி மகரிஷி ஐயா தந்துட்டுப் போன இந்த அரிய, எளிய பயிற்சியை இன்னிக்குப் பலருக்கும் தந்துட்டிருக்கற பணி கிடைச்சது எங்களோட பாக்கியம்!'' என்று நெகிழ்ந்து சொல்கிறார் வெங்கடேசன். மனவளக்கலைப் பயிற்சியில் துணைப் பேராசிரியராக இருக்கும் இவர், தருமபுரி டவுன் ஸ்பெஷல் பிராஞ்ச் சப் இன்ஸ்பெக்டராகப் பணிபுரிகிறார்.

அன்பே தவம்! - 2

''ஜருகு கிராமத்தைத் தத்தெடுத்து அங்கே பயிற்சி கொடுக்கும்போது, என்னுடன் துணைப்பேராசிரியர் செல்வராஜும் சேர்ந்து பயிற்சிகள் கொடுத்து வந்தார். அவர் தருமபுரியில் பெல்ட் வியாபாரம் செய்ய, அவர் மகன் முருகன் பென்னாகரத்தில் பெல்ட் வித்துட்டிருந்தார். ஒருநாள், 'யார் யாருக்கோ பயிற்சி கொடுத்துக்கிட்டிருக்கோம். என் பையனுக்கும் மருமகளுக்கும் முதல்ல பயிற்சி கொடுக்கணும். அப்பத்தான் எங்க வீட்ல நிம்மதி கிடைக்கும்’னு சொன்னார் செல்வராஜ். விவரம் கேட்டப்ப முருகனைப் பத்தியும், அவங்க மருமகள் போலீசில் புகார் கொடுத்திருப்பது பத்தியும் சொல்லி வருத்தப்பட்டார்.

உடனே ரெண்டு பேர் கிட்டயும் பேசி, அவங்களை ஆழியாறுக்கு அனுப்பி வைச்சோம். 'போய் மனவளக்கலைப் பயிற்சியை எடுத்துக்குங்க. அதுக்குப் பிறகும் கொஞ்ச நாளைக்கு அந்தப்

அன்பே தவம்! - 2

பயிற்சியை செஞ்சு பாருங்க. அப்பவும் ரெண்டு பேரும் பிரியணும்னு முடிவு எடுத்தீங்கன்னா, தாராளமா உன் நகைகளை எல்லாம் திருப்பி வாங்கித் தர்றது எங்க பொறுப்பு’ன்னு சொல்லி, ஆழியாறுக்கு அனுப்பினோம்'' என்கிறார் வெங்கடேசன்.

ஆழியாறு போயிருக்கிறீர்களா? பச்சைப் பசேல்னு மலைகள்... நாலா பக்கமும் மரங்களும் செடிகளும் தோப்புகளுமாக இருக்க, ஆழியாறு அணையும் அதன் பிரமாண்டமும் நம்மைக் கவர... மலையடிவாரத்தில், ஆழியாறு அணைக்கு அருகில் மிகப்பிரமாண்டமாக அமைந்திருக் கிறது ஆழியாறு அறிவுத் திருக்கோயில். வாழ்வில் ஒருமுறையேனும் சென்று, அங்கே தங்கிப் பயிற்சி எடுத்துக் கொண்டால், அது நம் வாழ்வை நிச்சயம் மலரச் செய்யும் அனுபவமாக அமையும்!

''அந்த இடமும் சூழலும் அங்கே இருக்கிற மனுஷாளோட அன்பும் பேச்சும், முக்கியமா அவங்க கொடுத்த பயிற்சியும் என் மனசைப் படபடப்பிலேருந்து ஒரு நிதானத்துக்குக் கொண்டு வந்துச்சு. பிராந்தியும் விஸ்கியும் தராத ஒரு பூரண அமைதியை, சந்தோஷத்தை அங்கே இருந்த நாட்கள்ல உணர்ந்தேன். நிரந்தரம் இல்லாத இந்த உலகத்துல, இருக்கிற வரைக்கும் ஆரோக்கியமா, கை கால் உடம்போட மனசையும் நல்லா வைச்சுக்கிட்டு வாழறதுதானே முறைன்னு தோணுச்சு.

அன்பே தவம்! - 2

பெருங்குடிகாரன்னு கெட்ட பேர் சம்பாதிச்சவன் நான். ஒழுங்கா நாலு காசு சம்பாதிக்காம, ஊதாரியா திரிஞ்சவன். குடும்பம், மனைவி, குழந்தை, உறவுகள், மக்கள்னு நான் கொஞ்சம் கொஞ்சமா இந்தப் பக்கம் கவனம் செலுத்த ஆரம்பிச்சதுக்குக் காரணம் இந்த மனவளக்கலைப் பயிற்சிதான்!'' என்று சொல்லும்போதே தோள் குலுங்கி அழுகிறார் முருகன்.

அத்தனைக் காலமாக எல்லோரையும் அழச் செய்து கலங்கடித்தவர், தெளிந்து உணர்ந்து புரிந்து எழுந்த அற்புதத் தருணம் அது!

- வாழலாம்

படங்கள்: க.தனசேகரன்