வெளியீடு த்வனி ஆடியோ,
43/30, பிளாட் - 15,
3-வது தெரு, அபிராமபுரம்,
சென்னை - 600 018
போன் 044- 2499 6963
விலை ரூ.299/-
ரசனையுடன் கதாகாலட்சேபம் செய்வதில், திருவையாறு அண்ணாஸ்வாமி பாகவத ருக்கு தனியிடம் உண்டு. ஸ்ரீராம ஜனனம், சீதா கல்யாணம், கைகேயி வரம், சபரி மோட்சம், சுக்ரீவ பட்டாபிஷேகம், ஹனுமன் இலங்கைப் பிரவேசம், விபீஷண சரணாகதி, ஸ்ரீராமர் பட்டாபிஷேகம்... என கதையும் பாடலும், நையாண்டியும் சோகமும் கலந்து சொல்லப்பட்ட இந்த ராமாயண கதாகாலட்சேபம், 4 டிஸ்க்கு களாக தரப்பட்டுள்ளது; அருமையான முயற்சி. பெரியவர்கள், வெளிநாட்டு நட்பு மற்றும் உறவுகள், குழந்தைகள் ஆகியோருக்குப் பரிசாகத் தரலாம்.
|