மற்ற எபிசோடுகள்
Published:Updated:

புத்தக விமரிசனம்

புத்தக விமரிசனம்

புத்தக விமரிசனம்

வைதிக சைவம் வளர்த்த திருஞானசம்பந்தர்

##~##
ஆசிரியர் : கே.சி.லட்சுமிநாராயணன்
வெளியீடு : எல்.கே.எம்.பப்ளிகேஷன்
பழைய எண்: 15/4, புதிய எண்: 33/4,
ராமநாதன் தெரு, தி.நகர், சென்னை-17.
போன்: 044 - 2436 1141/ 2434 0599

வேத நெறியை ஏற்கும் சைவத்தை, வைதிக சைவம் என்பர். சைவத்தைத் தழைக்கச் செய்ததுடன், இறைவனை உருகி உருகி எப்படியெல்லாம் பாடியுள்ளார் திருஞான சம்பந்தர் என்பதை அவரது பாடல்கள் மற்றும் சேக்கிழாரின் விவரணைகள் மூலம் அழகுற உணர்த்தியுள்ளார் ஆசிரியர்.

 உமையாள் அருள் வீழ்ச்சி

ஆசிரியர் : பிரபோதரன் சுகுமார்
வெளியீடு : அயக்கிரிவா பதிப்பகம்,
108/176, பெரிய தெரு, திருவல்லிக்கேணி, சென்னை-5.
போன் : 044 -2844 4275, 98409 17127

பஞ்சபூதங்களின் அமைப்பு, இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி, ஸ்ரீபாலா வழிபாடு, ஸ்ரீசக்ர உபாசனை, ஜீவ பிரம்ம ஐக்கியத்தின் நான்கு நிலைகள், சுவாசத்தின் ரகசியம் என அலசி ஆராயும் நூல் இது. நூலின் தலைப்பில் 'அருள் வீழ்ச்சி’ என்று ஏன் தெரிவித்தார், ஆசிரியர்? இதைத் தவிர்த்து வேறு ஏதேனும் ஒரு பொருத்தமான சொல்லைப் பயன்படுத்தியிருக்கலாமே!

இறை சிந்தனை   

ஆசிரியர் : தவத்திரு. சித்தேஸ்வர் சுவாமிகள்
தமிழில் : முனைவர் வே.கோபாலன்
தொடர்புக்கு : வே.கோபாலன் 'பதஞ்சலி’
18ஏ, எம்.எம்.டி.சி.காலனி, ஸ்ரீவித்யா நகர், நங்கநல்லூர், சென்னை-61.
போன்: 044 - 4357 9285, 098408 27429

கர்நாடக மாநிலம், பீஜாப்பூரில் உள்ள ஞான யோகாஸ்ரமத்தின் சித்தேஸ்வர் சுவாமிகள் அருளிய ஆன்மிகக் கருத்துக்களை, தமிழில் மொழிபெயர்த்து நூலாக்கியுள்ளனர்.

புத்தக விமரிசனம்


பகவான் ஸ்ரீசுவாமி ஐயப்பன்

வெளியீடு: சூப்பர் ரிகார்டிங் கம்பெனி லிமிடெட்,
713, கேரக்ஸ் சென்டர், அண்ணாசாலை, சென்னை-6.
போன்: 044 -4203 7111, 4203 7222
விலை: 75/-

ஐயனின் சகஸ்ரநாமம் மற்றும் அஷ்டோத்திரம் கொண்டது; எஸ். பி.பி, ஹரீஷ்ராகவேந்தர், மதுபால கிருஷ்ணன், வீரமணி ராஜு, வீரமணி தாசன், அனந்தநாராயணன் ஆகியோர் பாடியுள்ளனர். மெய் சிலிர்க்கச் செய்கின்றன, வரிகளும் இசையும்!

 வளம்தரு வள்ளி முருகன்  

வெளியீடு: இறை தமிழ் மன்றம், பிளாட் எண்: 14,
கார்த்திக் அவென்யு, சிட்லபாக்கம், சென்னை-73.
போன்: 94451 10971, 97908 19813
விலை: 50/-

அரசி. அகத்தியனின் முன்னுரை யில் துவங்கி முருகமந்திரம் வரைக்கும் கேட்கக் கேட்க இனிக்கும் முருகனின் பாடல்கள்! பாடல்களின் வரிகள் ரசிக்க வைக்கின்றன; மனதை வருடுகிறது இசை!