Published:Updated:

நாமக்கல் ஆஞ்சநேயர் கோயில்: 2023 ம் ஆண்டுக்கான அபிஷேக முன்பதிவு தொடக்கம்! - ஆர்வம் காட்டும் பக்தர்கள்

நாமக்கல் ஆஞ்சநேயர் கோயில்
News
நாமக்கல் ஆஞ்சநேயர் கோயில்

நாமக்கல் நகரில் அமைந்துள்ள ஆஞ்சநேயர் கோயிலில் 2023 - ம் ஆண்டுக்கான தினசரி அபிஷேகம் செய்ய முன்பதிவு தொடங்கியிருப்பதால், பக்தர்கள் ஆர்வத்துடன் அடுத்த ஆண்டு அபிஷேகம் செய்யப் பதிவு செய்து வருகின்றனர்.

நாமக்கல் ஆஞ்சநேயர் கோயில்: 2023 ம் ஆண்டுக்கான அபிஷேக முன்பதிவு தொடக்கம்! - ஆர்வம் காட்டும் பக்தர்கள்

நாமக்கல் நகரில் அமைந்துள்ள ஆஞ்சநேயர் கோயிலில் 2023 - ம் ஆண்டுக்கான தினசரி அபிஷேகம் செய்ய முன்பதிவு தொடங்கியிருப்பதால், பக்தர்கள் ஆர்வத்துடன் அடுத்த ஆண்டு அபிஷேகம் செய்யப் பதிவு செய்து வருகின்றனர்.

Published:Updated:
நாமக்கல் ஆஞ்சநேயர் கோயில்
News
நாமக்கல் ஆஞ்சநேயர் கோயில்

நாமக்கல் நகரில் பேருந்து நிலையத்தையொட்டி, அமைந்திருக்கிறது ஆஞ்சநேயர் கோயில். தமிழகம் அளவில் மிகவும் பிரசித்திப் பெற்ற இந்த ஆஞ்சநேயர் கோயிலுக்கு ஏராளமான பக்தர்கள் உள்ளனர். இந்த ஆஞ்சநேயர் திருமேனி ஒரே கல்லினால் செதுக்கபட்ட 18 அடி உயரம் உடையது. இத்தகைய சிறப்புவாய்ந்த இந்தக் கோயிலின் ஆஞ்சநேய மூர்த்திக்கு தினசரி காலையில் நடை திறக்கப்பட்டு 9 மணி அளவில் 1,008 வடை மலை சாத்தப்பட்டு, சிறப்பு பூஜை நடைபெறும்.

நாமக்கல் ஆஞ்சநேயர்
நாமக்கல் ஆஞ்சநேயர்

இதைத் தொடர்ந்து, காலை 10 மணிக்கு மஞ்சள், குங்குமம், நல்ல எண்ணெய், சீயக்காய், பால், தயிர், தேன், பஞ்சாமிர்தம் போன்ற பல்வேறு வாசனை பொருள்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெறும். தொடர்ந்து, மதியம் 1 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். இப்படி, தினசரி அபிஷேகம் மற்றும் வடை மாலை அலங்காரம் கட்டளைதாரர்கள் மூலம் நடத்தப்படுகிறது. அதற்காக, ஓர் ஆண்டுக்கு முன்பே பக்தர்கள் முன்பதிவு செய்வது வழக்கம்.

ஒரு நாள் நடைபெறும் வடை மாலை அலங்காரம் மற்றும் அபிஷேகத்துக்கு தலா ரூ. 6,000 வீதம் 5 பேர் முன்பதிவு செய்து கொள்ளலாம். பதிவு செய்து பூஜையில் கலந்துகொள்ளும் கட்டளைதாரர்களுக்கு அபிஷேக முடிவில் பிரசாதம் வழங்கப்படும். அதன்படி, வருகிற 2023 - ம் ஆண்டுக்கான ஆஞ்சநேயர் சாமி அபிஷேக முன்பதிவு தொடங்கியது. ஏராளமான பக்தர்கள் வரிசையில் நின்று அபிஷேகத்திற்கு முன்பதிவு செய்து வருகின்றனர். சமீபத்தில் செய்யத் தொடங்கிய இந்த முதல்பதிவு முதல் நாளில் 154 பக்தர்கள் பதிவு செய்தனர். தொடர்ந்து, பக்தர்கள் பலரும் ஆர்வமாக அபிஷேகம் செய்ய முன்பதிவு செய்து வருகின்றனர்.

நாமக்கல் ஆஞ்சநேயர் கோயில்
நாமக்கல் ஆஞ்சநேயர் கோயில்

இதேபோல், ஆஞ்சநேயர் சாமிக்கு தங்க கவசம் அணிவிக்க ரூ. 5,000, வெள்ளிக்கவசத்துக்கு ரூ.750, முத்தங்கி அலங்காரத்துக்கு ரூ.3,000, தங்கத்தேருக்கு ரூ.2,000 கட்டணம் செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம் எனக் கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.