Published:Updated:

ராசிபுரம் நித்தியசுமங்கலி மாரியம்மன்: `1 டன் பூக்கள் கொண்டு அலங்காரம்'- திரளாகப் பங்கேற்ற பக்தர்கள்

அம்மனுக்கு பூச்சாட்டுதல் நிகழ்வு
News
அம்மனுக்கு பூச்சாட்டுதல் நிகழ்வு

ராசிபுரம் நித்யசுமங்கலி மாரியம்மனின் திருவிழா பூச்சாட்டுதலுடன் வெகு விமர்சையாகத் தொடங்கியது. இதில், ராசிபுரம் மற்றும் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த ஏராளமானோர் கலந்துகொண்டு அம்மனுக்குப் பூச்சாட்டி வழிபட்டனர்.

ராசிபுரம் நித்தியசுமங்கலி மாரியம்மன்: `1 டன் பூக்கள் கொண்டு அலங்காரம்'- திரளாகப் பங்கேற்ற பக்தர்கள்

ராசிபுரம் நித்யசுமங்கலி மாரியம்மனின் திருவிழா பூச்சாட்டுதலுடன் வெகு விமர்சையாகத் தொடங்கியது. இதில், ராசிபுரம் மற்றும் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த ஏராளமானோர் கலந்துகொண்டு அம்மனுக்குப் பூச்சாட்டி வழிபட்டனர்.

Published:Updated:
அம்மனுக்கு பூச்சாட்டுதல் நிகழ்வு
News
அம்மனுக்கு பூச்சாட்டுதல் நிகழ்வு

நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தில் அமைந்துள்ளது நித்தியசுமங்கலி மாரியம்மன் கோயில், மிகவும் பிரசித்திபெற்ற இந்த மாரியம்மனுக்கு, தமிழகம் முழுக்க தீவிர பக்தர்கள் உள்ளனர். எப்போதும் அம்மனின் கழுத்தில் நிலையாகத் தாலி இருந்து வருவதால், இந்த அம்மனுக்கு, 'நித்திய சுமங்கலி' என்று பெயர் விளங்கியிருக்கிறது. இந்த நித்தியசுமங்கலில் அம்மனுக்கு வருடந்தோறும் ஜப்பசி மாதம் திருவிழா நடைபெறுவது வழக்கம். ஆனால், கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா தொற்று காரணமாக திருவிழா நடைபெறவில்லை. இப்போது கொரோனா பரவல் முடிவுக்கு வந்துள்ள நிலையில், இந்த ஆண்டு திருவிழாவை வெகுவிமர்சையாக நடத்தக் கோயில் நிர்வாகத்தினர் முடிவு செய்துள்ளனர்.

அம்மனுக்கு பூச்சாட்டுதல் நிகழ்வு
அம்மனுக்கு பூச்சாட்டுதல் நிகழ்வு

அதன்படி, இந்த ஆண்டுத் திருவிழா முதல் நிகழ்வாக பூச்சாட்டுதலுடன் தொடங்கியது மாரியம்மன் திருவிழா. முன்னதாக, ஊரின் முக்கிய பிரமுகர்கள் கையில் பூக்களுடன் அருள்மிகு செல்லாண்டியம்மன் ஆலயத்திற்குச் சென்று பூக்களால் அம்மனுக்கு அபிஷேகங்கள் செய்து, பின்னர் பெரிய மாரியம்மனான நித்தியசுமங்கலி அம்மன் கோயிலுக்கு வந்து அங்கு பொதுமக்கள் வேண்டுதலுடன் கொண்டுவந்த பூக்களால் அம்மனை அலங்கரித்து அபிஷேக ஆராதனை செய்தனர். பின்னர், பக்தர்கள் வேண்டுதலை நிறைவேற்றும் விதமாக, 1,008 கிலோ பூக்களால் அம்மனை அலங்கரித்து, பல்வேறு பூஜைகள் செய்யபட்டு பக்தர்களுக்குப் பிரசாதங்கள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியை காண ராசிபுரம், பட்டணம், வெண்ணந்தூர், நாமகிரிபேட்டை உள்ளிட்ட சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த ஏராளான பொதுமக்கள் கலந்துகொண்டனர். தொடர்ந்து, நாளை இரவு 8 மணியளவில் மாரியம்மன் கோயிலில் கம்பம் நடும் விழா நடைபெற இருக்கிறது. இதைத் தொடர்ந்து, குழந்தை வரம் வேணடுவோருக்குத் தயிர் சாதம் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற இருக்கிறது. அதேபோல், வரும் 31 - ம் தேதி அதிகாலை 4 மணிக்கு பூவோடு எடுத்தல், 1 - ம் தேதி இரவு 8 மணிக்குக் கொடியேற்று விழா நடைபெற இருக்கிறது. அதேபோல், வரும் 2 - ம் தேதி அம்மை அழைத்தல் நிகழ்வும், பொங்கல் வைக்கும் நிகழ்வும் நடைபெற இருக்கிறது.

அம்மனுக்கு பூச்சாட்டுதல் நிகழ்வு
அம்மனுக்கு பூச்சாட்டுதல் நிகழ்வு

அதேபோல், 3 - ம் தேதி காலை 3 மணிக்கு அக்கினி குண்டம் பிரவேசித்தல் நிகழ்வும், அன்று மாலை 4 மணிக்கு திருத்தேர் உற்சவமும் நடைபெற இருக்கிறது. அதேபோல், 4 - ம் தேதி உடற்கூறு வண்டி வேடிக்கை, 5 - ம் தேதி இரவு மின் விளக்கு ஜோடனையுடன் புஷ்பப் பல்லாக்கில் அம்மன் பவனி உலா வரும் நிகழ்வும் நடைபெற இருக்கிறது. இறுதியாக, 5 - ம் தேதி வசந்தோற்சவத்தோடு 15 நாள் திருவிழா நடைபெற்று முடிவுற இருப்பதாக, கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.