Published:Updated:

ஆலயம் சென்று தொழமுடியாத லாக்டௌன் காலத்தை ஆன்மிகத்தில் பயனுள்ளதாக்க 10  யோசனைகள்!

கோயில்
கோயில்

ஆலயம் சென்று தொழமுடியாத லாக்டௌன் காலத்தை ஆன்மிகத்தில் பயனுள்ளதாக்க 10  யோசனைகள்!

இன்றைய பஞ்சாங்கம்

8. 5. 21 சித்திரை 25 சனிக்கிழமை

திதி: துவாதசி மாலை 5.55 வரை பிறகு திரயோதசி

நட்சத்திரம்: உத்திரட்டாதி மாலை 5.14 வரை பிறகு ரேவதி

யோகம்: சித்தயோகம் மாலை 5.14 வரை பிறகு மரணயோகம்

ராகுகாலம்: காலை 9 முதல் 10.30 வரை

எமகண்டம்: பகல் 1.30 முதல் 3 வரை

நல்லநேரம்: காலை 10.30 முதல் 11.30 வரை/ பகல் 4.30 முதல் 5.30 வரை

ஆஞ்சநேயர்
ஆஞ்சநேயர்

சந்திராஷ்டமம்: மகம் மாலை 5.14 வரை பிறகு பூரம்

சூலம்: கிழக்கு

பரிகாரம்: தயிர்

வழிபடவேண்டிய தெய்வம்: ஆஞ்சநேயர்

லாக்டௌன் காலத்தைப் பயனுள்ளதாக்க 10  யோசனைகள்!

ஆலயம் செல்வது என்பது நம் பண்பாட்டோடு இணைந்தது. கோயில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் என்பதுதான் மூத்தோர் வாக்கு. ஆனால் இன்றோ ஊர் தோறும் கோயில்கள் இருந்தும் சென்று தொழ முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. துன்பம் நேரும் காலங்களில் பக்தர்கள் ஆலயம் சென்று இறைவனை தரிசித்துத் தம் துன்பங்களைக் கூறி வழிபாடு செய்து திரும்பினாலே ஒரு நம்பிக்கையும் ஆறுதலும் பெற்றுவிடுவார்கள். ஆனால் லாக்டௌன் காலத்தில் ஆலயங்கள் பக்தர்கள் தரிசனத்துக்கு மூடப்பட்டுள்ளன. இதனால் பெரும்பான்மையான பக்தர்கள் வருத்தத்தில் இருக்கிறார்கள். ஆனால், இந்த லாக்டௌன் காலத்தில் நம்முள் ஆன்மிகம் பெருக்க, இந்த ஊடரங்கு கட்டுப்பாடுகள் உள்ள காலத்தைப் பயனுள்ளதாக்க சில யோசனைகள் உள்ளன. இதுகுறித்து அறிந்துகொள்ள கீழே உள்ள வீடியோவைப் பார்க்கவும்.

8.5.21 - இன்றைய சுருக்கமான ராசிபலன்

விரிவான இன்றைய பலன்களை அறிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.

மேஷம்

நிதானம் : அனுகூலமான நாள். செயல்கள் வெற்றியாகும். மனதில் உற்சாகமும் அதிகரிக்கும். ஆனாலும் புதிய முயற்சிகளில் முன்யோசனை இன்றி இறங்க வேண்டாம். - ஸ்லோ அண்ட் ஸ்டெடி வின்ஸ் தி ரேஸ்!

ரிஷபம்

சாதகம் : அனைத்துவகையிலும் சாதகமான நாள். சகோதர உறவுகள் ஆலோசனை கேட்டு வருவார்கள். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். செலவுகளால் மகிழ்ச்சி ஏற்படும். - சாதகமான ஜாதகம் இன்று!

மிதுனம்

உற்சாகம் : நேற்றுவரையிருந்த தயக்கமும் கவலைகளும் விலகும். மனதில் உற்சாகம் அதிகரிக்கும். பணவரவுக்கும் வாய்ப்புண்டு. குடும்பத்தில் விட்டுக்கொடுத்துப் போவது நல்லது. - விட்டுக்கொடுத்தவர்கள் கெட்டுப்போவதில்லை.

கடகம்

தெளிவு : சின்னச் சின்னக் குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். உறவினர்களிடம் கோபப்படுவதைத் தவிர்ப்பது நல்லது. நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். - நாளை உங்க நாள்!

சிம்மம்

பொறுமை : அதிக அளவில் பொறுமை தேவைப்படும் நாள். பேசும்போது சொற்களில் கவனம் தேவை. தேவையற்ற வார்த்தைகளால் வம்பு வரலாம். உணவு விஷயங்களிலும் அக்கறை தேவை. - நா காக்க!

கன்னி

கவனம் : வழக்கமான பணிகளில் மட்டுமே கவனம் செலுத்தி வாருங்கள். சகோதரர்களிடம் எதிர்பார்த்த உதவி தாமதமாகும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்புண்டு. - லெஸ் டென்ஷன் மோர் வொர்க்!

துலாம்:

அனுகூலம் : செயல்கள் அனுகூலமாகும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். குடும்பத்தினர் உங்கள் முயற்சிகளுக்கு அனுகூலமாக இருப்பார்கள். எதிர்பார்த்த உதவிகள் தேடிவரும். - நாள் நல்ல நாள்!

விருச்சிகம்

அலைச்சல் : பொறுமையுடன் செயல்பட வேண்டிய நாள். தேவையின்றி வெளியில் அலைவதைத் தவிர்ப்பது நல்லது. புதிய முயற்சிகளில் அனுபவஸ்தர்களின் வழிகாட்டுதல் அவசியம். - ரிலாக்ஸ் ப்ளீஸ்!

தனுசு:

துணிவு : மனதில் துணிச்சல் அதிகரிக்கும். சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். குடும்பத்தினர் உங்கள் மனம் கோணாமல் நடந்துகொள்வார்கள். மகிழ்ச்சியான நாள். - துணிவே துணை!

மகரம்

செலவு : செலவுகள் அதிகரிக்கும். சகோதர உறவுகள் உதவி கேட்டு வருவார்கள். எடுத்த காரியத்தில் வெற்றி கிடைக்கும். தேவையற்ற விவாதங்களில் தலையிடுவதைத் தவிர்ப்பது நல்லது. - செலவே சமாளி!

கும்பம்

பணவரவு : நீண்ட நாள்களாக வராமல் இருந்த பணம் கைக்குவரும். குடும்பத்தில் உள்ளவர்களிடம் விட்டுக்கொடுத்துப் போவது நல்லது. சின்னச் சின்ன பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும். - என்ஜாய் தி டே!

மீனம்

பணிச்சுமை : பணிச்சுமை அதிகரிக்கும். அதனால் உடல் அசதியும் சோர்வும் உண்டாகும். குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். பொறுமையும் அவசியம். - உழைக்கும் கரங்கள்!

அடுத்த கட்டுரைக்கு