Published:Updated:

எழுத்துக்களின் குணங்களும் ஆற்றல்களும்..!

கா.ஸ்ரீ

எழுத்துக்களின் குணங்களும் ஆற்றல்களும்..!

கா.ஸ்ரீ

Published:Updated:
எழுத்துக்களின் குணங்களும் ஆற்றல்களும்..!

ஆதிக்க எண்: 5

ஆதிக்க கிரகம்: புதன்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ந்த எழுத்து அதி நுட்பமான மனோசக்திகளை உள்ளடக்கியது. கலைகளில் ஆர்வமும் ஞானமும் இருக்கும். மனதில் படபடப்பு, ஒருவித பய உணர்ச்சி இருக்கும். ஆனாலும், அதை வெளியில் காட்டிக் கொள்ள மாட்டார்கள்.

புதுப்புது திட்டங்களை உருவாக்கிக் கொண்டே இருப்பார்கள். எதையும் முன்கூட்டியே அறியக்கூடிய முன்னெச்சரிக்கை சக்தி உள்ளவராதலால், ஆபத்து வந்தபோதும்  நிதானத்துடன் செயல்பட்டு, பூரண வெற்றி பெறுவார்கள். நண்பர்களுக்கு உபகாரியாக இருப்பார்கள். இவர்கள் எடுத்துக்கொண்ட காரியத்தில் வெற்றி ஏற்பட்டால், தன்னைச் சார்ந்த எல்லோரையும் உற்சாகப்படுத்துவார்கள். தோல்வி ஏற்பட்டால், மற்றவர்களையும் சோர்வடையச் செய்துவிடுவார்கள்.

சிறந்த ஆராய்ச்சியாளர். எதையும் யோசித்தே முடிவெடுப்பார்கள். எல்லோரிடமும் வளைந்து கொடுத்து அனுசரித்துப் போகக்கூடியவர்கள். மற்றவர்களை மிக எளிதில் வசப்படுத்திக் கொள்வார்கள். எழுத்து, ஆராய்ச்சித் துறைகளில் சிறந்து விளங்குவார்கள். இந்த எழுத்தைத் தன் பெயரில் அதிகமாகக் கொண்டவருக்கு, நரம்பு மற்றும் குடல் உறுப்புகளில் பிரச்னை இருக்கக்கூடும்.

எழுத்துக்களின் குணங்களும் ஆற்றல்களும்..!
எழுத்துக்களின் குணங்களும் ஆற்றல்களும்..!

ஆதிக்க எண்: 8

ஆதிக்க கிரகம்: சனி

தையும் சீர்தூக்கி ஆராயும் சக்தி கொண்டது இந்த எழுத்து. அபாரமான வாதத் திறமை இருக்கும். தன் சொல்லுக்கு மற்றவர்கள் கட்டுப்பட்டு நடக்க வேண்டுமென்று நினைப்பார்கள். காரியம் சாதிப்பதில் வல்லவர்கள். கடினமான காரியத்திலும்கூட சுலபமாக வெற்றிகளைப் பெறுவார்கள். பேச்சைவிட செயலிலேயே கவனமாக இருப்பார்கள்.

தொழிலில் கண்ணும் கருத்துமாக இருப்பார்கள். நிர்வாக  ஆற்றல் மிக்கவர்கள். நிறைய நண்பர்களைப் பெற்றிருப்பார்கள். மற்றவர்களுக்கு அறிவுரை சொல்லுவதில் சமர்த்தர்கள்.தன்னம்பிக்கை மிகுந்து காணப்படும். தோல்வியை எப்போதும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். ஒருவரிடம் நம்பிக்கை வைத்து விட்டால், அந்த நம்பிக்கை மாறாமல் இருக்கும்.

உடல் வலிமையும், உள்ள வலிமையும் பெற்றவர்கள். சோம்பல் என்பதையே அறியாதவர்கள். பிறரை வசீகரப்படுத்தும் சக்தி பெற்ற இவர்கள் எப்போதும் எளிமையாக இருக்கவே விரும்புவார்கள். கடவுள் பக்தி அதிகம் உள்ளவர்கள். பூஜை, பிரார்த்தனைகளை மனம் லயித்துச் செய்வார்கள். இயற்கைக் காட்சிகளைக் காண்பதில் மகிழ்ச்சி அடைவர்.

எழுத்துக்களின் குணங்களும் ஆற்றல்களும்..!

ஆதிக்க எண்: 3

ஆதிக்க கிரகம்: குரு

ந்த எழுத்து எல்லா வகையிலும் உயர்ந்த எழுத்தாகும். தியாக உள்ளம் கொண்டவர்கள். எப்பேர்ப்பட்ட கடினமான வேலைகளையும் செய்து முடிக்கும் திறமை கொண்டவர்கள். மற்றவர்களின் நலனுக்காகப் பெரிய தியாகங்களைச் செய்யக் கூடியவர்கள்.சோதனைகளை வென்று சாதனை படைக்கக் கூடியவர்கள். இவர்களுடைய திட்டங்கள் எல்லாமே வெற்றி அடையும். புதிய புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கக் கூடியவர்கள். தாய்நாட்டின் நலனுக்காகப் பாடுபடக்கூடிய இவர்கள் நீதி, தர்மங்களுக்குக் கட்டுப்பட்டவர்கள். கடமை தவறாதவர்கள். அன்பு நிறைந்தவர்கள். பொறுமைசாலிகள். இவர்களின் நம்பிக்கையே எதையும் சாதிக்கக்கூடிய ஆற்றலை இவர்களுக்குத் தந்துவிடும். இவர்கள் உயர்ந்த லட்சியங்களைக் கொண்டவர்களாக இருக்க வேண்டியது மிகவும் அவசியம். இல்லையென்றால், மனம் தீய வழிகளில் சென்று, வாழ்க்கையின் போக்கையே திசை மாற்றிவிடும்.

இவர்களின் மனதில் புதுப்புது எண்ணங்கள் உருவாகும். தத்துவம், புராணம், விஞ்ஞானம் போன்றவற்றில் ஆராய்ச்சி செய்வார்கள். வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களுக்குச் சென்று வருவதில் விருப்பம் உள்ளவர்கள். நாட்டுப்பற்றும் தியாக மனப்பான்மையும் கொண்ட இவர்களுக்கு நண்பர்கள் அதிகம்.

எழுத்துக்களின் குணங்களும் ஆற்றல்களும்..!

ஆதிக்க எண்: 5

ஆதிக்க கிரகம்: புதன்

ந்த எழுத்தை பெயரில் அதிகம் கொண்டிருப்பவர்களுக்கு, பின்னாளில் நடக்கப்போவதை முன்கூட்டியே யூகித்துத் தெரிந்துகொள்ளக்கூடிய ஆற்றல் இருக்கும். எடுக்கும் காரியங்களில் வெற்றியைப் பெறுவார்கள். சந்தர்ப்பச் சூழ்நிலைகளை மிகச் சரியாகப் பயன்படுத்தி, வாழ்க்கையில் வெற்றி பெறுவார்கள். எல்லாக் காரியங்களிலும் மிகுந்த எச்சரிக்கையுடன் நடந்து கொள்வார்கள். வெற்றியை நோக்கியே இவர்களின் சிந்தனைகள் இருக்கும். மந்திர சக்திகள் எளிதில் சித்தியாகும். காலத்தைக் கணிக்கும் வல்லமை இருக்கும்.

ஆன்மிகத்தில் அதிக ஈடுபாடு இருக்கும். ஆபத்தைக் கண்டு அஞ்சமாட்டார்கள். மண வாழ்க்கையில் மகிழ்ச்சியும், பொதுவாழ்வில் நற்பெயரும் கிடைக்கும்.

கலைகளில் மிகுந்த ஆர்வம் உடையவர்களாக இருப்பார்கள். சுயகௌரவத்துடன் தலை நிமிர்ந்து நிற்கும் குணமுடையவர்கள். வெளித் தோற்றத்துக்குக் கடுமையானவர்களைப் போலக்் காட்சியளித்தாலும், பழகுவதற்கு மிக மென்மையானவர்கள். வாழ்க்கையில் திட்டமிட்டுச் செயல்பட்டு வெற்றி பெறுவார்கள். தீர்க்க தரிசனம் பெற்றிருப்பர்.

எழுத்துக்களின் குணங்களும் ஆற்றல்களும்..!

ஆதிக்க எண்: 1

ஆதிக்க கிரகம்: சூரியன்

ந்த எழுத்து துணிச்சலையும், விடாமுயற்சியையும், தரக்கூடியது. பெயரின் ஆரம்பத்தில் இவ்வெழுத்து வந்தால், மனதை அடக்கி ஆளும் சக்தி உண்டாகும். சோதனைக்காலங்களில் நண்பர்களின் உதவி இவர்களுக்கு முழுமையாகக் கிடைக்கும்.

சிறந்த நிர்வாகத் திறமை பெற்றவர்கள். எப்படிப்பட்ட காரியத்தையும் மிக எளிதில் செய்து முடித்துவிடுவார்கள். சில வேளைகளில் மனதில் குழப்பங்கள் இருக்கும். இந்த எழுத்து பெயரின் கடைசியில் வந்தால், பணம் மிக எளிதில் சேரும். பணம் சேர்ப்பதையே வாழ்வின் குறிக்கோளாகக் கொண்டிருப்பார்கள்.

இந்த எழுத்து பெயரில் ஒரு தடவைக்கு மேல் வந்தால், அவர்களுக்கு நரம்பு, சதை நோய், கண் சம்பந்தப்பட்ட நோய், நரம்புப் பிடிப்பு போன்ற உபாதைகள் ஏற்பட வாய்ப்புண்டு.

இவ்வெழுத்து பிறரை அடக்கி ஆளும் சக்தி கொண்டது. பெயரின் ஆரம்பத்தில் இந்த எழுத்து வந்தால், இந்தப் பலன் அதிகம் காணப்படும். எதிரிகளை மிக எளிதில் வென்று விடுவார்கள். உறுதிமிக்க உள்ளம் கொண்டவர்கள். நான், என்னுடையது, என்னால் தான் சாதிக்க இயலும் என்று பறைசாற்றுவார்கள். தலைமை ஸ்தானம் கிட்டும்.

தொடரும்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism