Published:Updated:

ஜோதிட சொற்கள்...

ஜோதிட சொற்கள்...

ஜோதிட சொற்கள்...

ஜோதிட சொற்கள்...

Published:Updated:

ஜோதிட விளக்கங்களில் சில சொற்கள் அதிகளவு பயன்படுத்தப்படும். ஆனால், ஜோதிடம் அறிந்தவர்களைத் தவிர மற்றவர்களுக்கு அவற்றுக்கான பொருள் தெரியாது. அவர்களுக்காக சில ஜோதிட சொற்களும் பொருளும் இங்கே...

அபிஜித்: மூன்று நட்சத்திரங்களால் பிரதிநிதித்துவப் படுத்தப்படுகிறது. இவற்றில் வேகா எனும் நட்சத்திரம் ஒன்றாகும். இது, வடவரைக் கோளத்திலுள்ள ஒளிமிக்க நட்சத்திரமாகும். உத்திராட நட்சத்திரத்தின் 4வது பாதம் மற்றும் திருவோணத்தின் முதல் பாதத்தில் பதினைந்தில் ஒரு பங்கு அளவில் உள்ளது.

அஷ்ட வர்க்கம்: எட்டு பிந்துக்களின் வர்க்கம், கோச்சாரத்தில் கோள்கள் நின்ற பாவகங்களின் பலன்களை நிர்ணயித்தல் பல ஜோதிட நூல்களில் விவரிக்கப்பட்டுள்ள பலன் காணும் முறையாகும். இந்த முறையினைக் கொண்டு ஒருவரது வாழ்வில் நிகழக்கூடிய பல்வேறு நிகழ்ச்சிகளையும் கோச்சார பலன்களையும் அறியலாம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஜோதிட சொற்கள்...

அனுஜன்ம: ஜன்ம நட்சத்திரத்திலிருந்து 10வது நட்சத்திரம். உதாரணமாக அசுவினிக்கு அனுஜன்ம நட்சத்திரம் மகம்.

உச்சபலம்: கோள்களின் முழுமையான நற்சக்திகள் வெளிப்படும் ராசி அமைவு நிலை.

உப கிரகங்கள்: குறுங்கோள்கள், கண்ணுக்குத் தெரியாத கோள்கள் மற்றும் துணைக் கோள்கள். தூமன், வியதிபாதன், பரிவேடன், இந்தரதனுசு போன்றவை.

ஏகாதிபத்தியம்: சூரியன், சந்திரன் தலா ஒரு வீட்டுக்கு மட்டும் அதிபதியாக இருப்பது.

ஓரை: ராசி உதயம், முதல் ஒரு மணி நேரத்தினை இரண்டு சரிபாதியாகப் பிரித்து, அது ஆண் ராசியாக இருந்தால் முதல் பாதியைச் சூரியனும் இரண்டாம் பாதியை சந்திரனும் ஆள்கிறார்கள். பெண் ராசிகளின் முதல் பாதியைச் சந்திரனும் 2ம் பாதியை சூரியனும் ஆள்கிறார்கள். சூரியன் ஆள்வதை சூரிய ஓரை என்றும் சந்திரன் ஆள்வதை சந்திர ஓரை என்றும் சொல்வர்.

கர்ம ஸ்தானம்: லக்னத்தில் இருந்து 10ம் வீடு.

குளிகன்: மறைவு எல்லைக்கோள். சனிக்கோளை ஒட்டி கணக்கிடப்படுவது.

கோசாரம்: ஜாதகத்தில் ஒரு கோள் உள்ள நிலைக்கும், தற்போது அதே கோள் வானவீதியில் உள்ள நிலைக்கும் உள்ள அமைவுகளைக் கொண்டு பலன்கள் கூறிடும் முறை.

சங்கராந்தி: சூரியன் ஒரு ராசியில் பிரவேசிக்கும் காலம்.

ஷட்பலம்: ஒரு ஜாதகத்தில் கோள்களின் பலன்களை நிர்ணயிப்பதற்கு உரிய வழியாக ஷட்பலம் கணிதம் விளங்குகிறது. இது ஆறு வகை பலமாகும். ஸ்தான பலம், திருக்பலம், திக்பலம், நைசரிக பலம், ஜேஷ்டாபலம், கால பலம் ஆகியன ஷட்பலம் எனப்படும்.

கால ஹோரா: ஞாயிற்றுக்கிழமை முதலாக அந்தந்த கிழமை அதிபர்களை முதன்மையாகக் கொண்டு சூரியன், சுக்கிரன், புதன், சந்திரன், சனி, குரு, செவ்வாய் என்ற வரிசைக்கிரமத்தில், ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை மாறும் கால அமைப்பு.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism