Published:Updated:

ராசிபலன்

அக்டோபர் 28 முதல் நவம்பர் 10 வரைஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன்

ராசிபலன்

அக்டோபர் 28 முதல் நவம்பர் 10 வரைஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன்

Published:Updated:
ராசிபலன்

ன்மானம் மிக்கவர்களே!

தனாதிபதி சுக்ரன் உங்கள் ராசியைப் பார்த்துக்கொண்டே இருப்பதால், உங்களின் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். எதிர்பார்த்த பணம் வரும். 2ம் தேதி முதல் புதன் 6ம் வீட்டை விட்டு விலகி 7ல் அமர்வதால், மனப்போராட்டங்கள் விலகும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்களின் பூர்வ புண்ணியாதிபதி சூரியன் நீசமாகி 7ல் நிற்பதால், பிள்ளைகளால் அலைச்சல், செலவுகள் அதிகமாகும். ராசிநாதன் செவ்வாய் 9ல் நிற்பதால், சகோதர வகையில் பயனடைவீர்கள்.

கண்டகச் சனி தொடர்வதால், கணவன்மனைவிக்குள் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. மனைவி உங்கள் குறை, நிறைகளைச் சுட்டிக் காட்டினால் அமைதியாக ஏற்றுக் கொள்ளப் பாருங்கள்.

ராகு வலுவாக 6ம் வீட்டிலேயே நீடிப்பதால், எதிர்ப்புகளை சமாளிக்கும் மனப்பக்குவம் உண்டாகும். அரசியல் வாதிகளே! தலைமைக்கு எதிராகப் பேசுபவர்களிடம் நட்பு வைத்துக் கொள்ளாதீர்கள். கன்னிப் பெண்களே! முடிவுகளெடுப்பதில் இருந்த தடுமாற்றம் நீங்கும். வியாபாரத்தில் புதுத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவீர்கள். உத்தியோகத்தில் அடுக்கடுக்கான வேலைகளால் மனஇறுக்கம் அதிகரிக் கும். கலைத்துறையினரே! தள்ளிப் போன ஒப்பந்தம் கையெழுத்தாகும்.

போராட்டங்களையும் கடந்து சாதிக்கும் வேளை இது.

ராசிபலன்

ழைப்பதற்குத் தயங்காதவர்களே!

உங்கள் ராசிக்கு லாப வீட்டில் கேது நிற்பதால், கடினமான காரியங்களையும் எளிதாகச் செய்து முடிப்பீர்கள். பிரபலங்களின் நட்பு கிட்டும். குரு 3ல் மறைந்தாலும் சாதகமான நட்சத்திரத்தில் செல்வதால், எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள்.

உங்கள் ராசிநாதன் சுக்ரன் 6ம் வீட்டில் மறைந்திருப்பதாலும், 2ம் தேதி முதல் பூர்வ புண்ணியாதிபதி புதனும் 6ல் நுழைவதாலும், ஓய்வெடுக்க முடியாதபடி வேலைச்சுமை, வீண் டென்ஷன் வந்து நீங்கும்.

சப்தமாதிபதி செவ்வாயும் 8ல் நிற்பதால், சிறுசிறு நெருப்புக் காயங்கள் ஏற்படக்கூடும். சகோதர வகையில் சச்சரவு வரும். சனிபகவான் 6ம் வீட்டிலேயே தொடர்வதால், உங்கள் பலவீனங்களையெல்லாம் பட்டியலிட்டு அவற்றையெல்லாம் மாற்றிக்கொள்ள முயற்சி செய்வீர்கள். சூரியனும் 6ல் நீசமாகி நிற்பதால், பெற்றோரின் உடல் நிலை பாதிக்கும். அரசியல்வாதிகளே! கட்சிக்குள் உங்களைப் பற்றிய விமர்சனங்கள் அதிகமாகும். கன்னிப் பெண்களே! தவறான எண்ணங்களுடன் பழகியவர்களை ஒதுக்கித் தள்ளுவீர்கள். வியாபாரத்தில் போட்டிகள் இருக்கும். உத்தியோகத்தில் பணிகளைப் போராடி முடிப்பீர்கள். உயரதிகாரிகள் உதவிகர மாக இருப்பார்கள். கலைத்துறையினரே! உங்களுடைய படைப்புகளுக்கு வேறு சிலர் உரிமை கொண்டாடுவார்கள்.

வளைந்து கொடுக்கவேண்டிய தருணம் இது.

ராசிபலன்

ன்மையாளர்களையும் மென்மையாய் மாற்றுபவர்களே!

2ல் குருபகவான் நிற்பதால், சமூகத்தில் அந்தஸ்து ஒருபடி உயரும். குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். குழந்தை பாக்யம் கிடைக்கும்.

புது வேலைக்கு முயற்சி செய்தவர்களுக்கு நல்ல பதில் வரும். சுக்ரனும், புதனும் சாதகமான வீடுகளில் செல்வதால், கல்யாண முயற்சிகள் பலிதமாகும்.  

உறவினர்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். நட்பு வட்டம் விரிவடையும். என்றாலும், சூரியனும், சனியும் 5ம் வீட்டில் நிற்பதால், மகளின் திருமண விஷயத்தில் அவசரம் வேண்டாம்.

பூர்வீக சொத்துப் பிரச்னைக்கு சுமுகத் தீர்வு காண்பது நல்லது. செவ்வாயும் 7ல் அமர்ந்து உங்கள் ராசியைப் பார்த்துக்கொண்டிருப்பதால், உடல் உஷ்ணம், அடிவயிற்றில் வலி, வந்து நீங்கும். வீடு, மனை வாங்குவது, விற்பதில் அலட்சியம் வேண்டாம்.

அரசியல்வாதிகளே! உங்களின் செயல்பாடுகளை மேலிடம் உற்று நோக்கும். தொகுதியில் நல்ல மதிப்பு கிடைக்கும். கன்னிப் பெண்களே! வருங்காலம் குறித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட லாபம் அதிகரிக் கும்.  உத்தியோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். கலைத்துறையினரே! உங்களின் கற்பனைத்திறன் வளரும்.

அறிவினால் முன்னேறும் காலம் இது.

ராசிபலன்

லங்கி வருபவர்களை கனிவான பேச்சால் கரையேற்றுபவர்களே!

ராகுபகவான் உறுதுணையாக இருப்பதால், கடின உழைப்பால் இலக்கை எட்டிப் பிடிப்பீர்கள். சமூகத் தில் பெரிய அந்தஸ்தில் இருப்ப வர்களின் தொடர்புகள் கிடைக்கும். எதிர்பார்த்த தொகை வரும். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். சுக்ரனும், புதனும் சாதகமான வீடுகளில் செல்வதால், உறவினர்கள், நண்பர்கள் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள்.

தந்தை வழியில் ஆதாயம் உண்டு. அரசு காரியங்கள் விரைந்து முடியும். சொந்த ஊரில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். செவ்வாய் வலுவாக 6ல் நிற்பதால், மகளுக்கு நல்ல வரன் அமையும். மகனுக்கு வேலை கிடைக்கும். சனி 4ல் நிற்பதால், தாயாருக்கு கணுக்கால் வலி, சோர்வு ஏற்படும் அரசியல்வாதிகளே! கட்சியின் மூத்த உறுப்பினர்களைச் சந்தித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள்.

கன்னிப் பெண்களே! உங்களின் புது முயற்சிகளை பெற்றோர் ஆதரிப்பர். வியாபாரத்தில் புது யுக்திகளால், தேங்கிக் கிடந்த சரக்குகளை விற்றுத் தீர்ப்பீர்கள். உத்தியோகத்தில் அதிகாரி கள் குறை கூறுவார்கள். சக ஊழியர்களால் மறைமுகப் பிரச்னைகள் ஏற்படும். கலைத்துறையினரே! உங்களுக்குப் பட்டிதொட்டியெங்கும் பாராட்டுக்கள் கிடைக்கும்.

அதிரடி முன்னேற்றங்களை சந்திக்கும் நேரம் இது.

ராசிபலன்

ங்கும் எதிலும் வெற்றியை நாடுபவர்களே!

தனாதிபதி புதன் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால், சலிப்பு, சோர்வு நீங்கும். பணம் வரும். ஆடை, அணிகலன் வாங்குவீர்கள். சுக்ரனும் சாதகமாக இருப்பதால், தன்னிச்சையாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். சனி பகவான் வலுவாக இருப்பதால், மறைமுக எதிரிகளால் ஆதாயம் உண்டு.

ராசிநாதன் சூரியன் சனியுடன் நிற்பதால், பார்வைக் கோளாறு, பல் வலி, கழுத்து வலி வந்து நீங்கும். செவ்வாய் 5ல் இருப்பதால், பிள்ளைகளை அவர்களின் எண்ண ஓட்டத்திலேயே சென்று பிடிப்பது நல்லது. சொத்து வாங்குவது, விற்பதில் இடைத்தரகர்களை நம்பிப் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம். பழைய கடனை நினைத்து அவ்வப்போது தூக்கம் குறையும். அரசியல்வாதிகளே! ஆதாரமின்றி எதிர்க்கட்சிக்காரர்களை விமர்சிக்க வேண்டாம். கன்னிப் பெண்களே! உயர்கல்வியில் ஆர்வம் பிறக்கும். வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். பழைய வேலையாட்கள் மீண்டும் பணியில் வந்து சேர்வார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் ஒதுக்கப்பட்டாலும் அதிகாரிகளால் மதிக்கப்படுவீர்கள். கலைத்துறையினரே! பொது நிகழ்ச்சிகளில் தலைமை தாங்கும் அளவுக்குப் பிரபலமாவீர்கள்.

திட்டமிட்ட காரியங்களில் வெற்றி பெறும் வேளை இது.

ராசிபலன்

தார்த்தமான முடிவுகள் எடுப்பவர்களே!

சுக்ரன் தன ஸ்தானத்தில் ஆட்சி பெற்று அமர்ந்திருப்பதால், பணவரவு உண்டு. சமயோசித புத்தியால் சாதிப்பீர்கள். இழுபறியாக இருந்த வேலைகள் முடிவடையும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். வெள்ளிப் பொருட்கள் வாங்குவீர்கள்.

ராசிநாதன் புதனும் சாதகமாக இருப்பதால், உறவினர்கள், நண்பர் களுடன் மனம்விட்டுப் பேசுவீர்கள். வீட்டை அழகுபடுத்துவீர்கள். ராசிக்குள்ளேயே நிற்கும் ராகு உங்களை அவ்வப்போது சீண்டிப் பார்த்தாலும் குருபகவான் உங்களுக்கு சாதகமாக இருப்பதால், யதார்த்தமாகப் பேசுவீர்கள்.

செவ்வாய் சாதகமான வீடுகளில் செல்வதால், சமூகத்தில் அந்தஸ்து உயரும். பாதச் சனி நீடிப்பதால், தூக்கமின்மை, வீண் பயம் வந்து நீங்கும். கேது சரியில்லாததால், பழைய பிரச்னைகள் தலைதூக்கும்.

அரசியல்வாதிகளே! பொதுக்கூட்டம், போராட்டங்களில் முன்னிலை வகிப்பீர்கள். கன்னிப் பெண்களே! உங்கள் மனதுக்கேற்ப நல்ல வரன் அமையும். வியாபாரத்தில் வர வேண்டிய பாக்கிகளை நயமாகப் பேசி வசூலிப்பீர்கள். உத்தியோகத்தில் உங்களின் திறமையைக் கண்டு மேலதிகாரி வியப்பார். கலைத் துறையினரே! வாய்ப்புகள் தேடி வரும்.

மாறுபட்ட அணுகுமுறையால் சாதிக்கும் தருணம் இது.  

ராசிபலன்

குழந்தை மனமும், கொள்கைப் பிடிப்பும் உள்ளவர்களே!

உங்கள் ராசிக்குள்ளேயே ராசிநாதன் சுக்ரன் ஆட்சி பெற்று அமர்ந்திருப்பதால், உற்சாகமாக வேலை பார்ப்பீர்கள். கல்யாணப் பேச்சு வார்த்தை கைகூடும். வீண் அலைச்சல் குறையும். புதன் சாதகமாக இருப்பதால் புது திட்டங்கள் தீட்டுவீர்கள். உங்கள் ராசிக்குள்ளேயே சூரியன் நீசமாகி நிற்பதால், முன்கோபம் அதிகமாகும். தந்தையாரின் உடல் நலனில் கவனம் தேவை.

அரசு காரியங்கள் தாமதமாகி முடியும். வழக்கில் வழக்கறிஞரை மாற்றுவது நல்லது. செவ்வாய் ராசிக்கு 3ம் வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால், உங்களின் திறமைகள் கூடும். வழக்கு சாதகமாகும். சொத்து வாங்குவது, விற்பது சாதகமாக அமையும். உடன்பிறந்தவர்களுடன் இருந்த மனவருத்தம் நீங்கும்.

ஆனால் 10ல் குரு நிற்பதால், மரியாதைக்குறைவான சம்பவங்கள் நிகழ்ந்துவிடுமோ என்ற அச்சம் வந்து நீங்கும். சூரியனும், சனியும் ராசிக்குள் நிற்பதால், எதிலும் ஒருவித படபடப்பு, முன்கோபம் வந்து போகும். அரசியல்வாதிகளே! கோஷ்டிப் பூசலில் சிக்கிக் கொள்ளாதீர்கள். கன்னிப் பெண்களே! குழப்பங்கள் நீங்கும். தடைப்பட்ட உயர்கல்வியை தொடரும் வாய்ப்பு சிலருக்கு வரும்.

வியாபாரத்தில் புது இடத்துக்கு கடையை மாற்றுவீர்கள். உத்தியோகத் தில் உழைப்புக்கு அங்கீகாரம் கிடைக்கவில்லையே என ஆதங்கப் படுவீர்கள். கலைத்துறையினரே! முடங்கிக் கிடந்த உங்களுக்கு இனி முன்னேற்றமான காலம்தான்!

ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டிய நேரம் இது.

ராசிபலன்

விவாதம் செய்யத் தயங்காதவர்களே!  

உங்களுடைய ராசிக்குச் சாதகமாக சுக்ரனும், புதனும் செல்வதால், உங்களுடைய புத்திசாலித்தனம் வெளிப்படும். திடீர் பணவரவு உண்டு. குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். மகளுக்குத் திருமணம் கூடி வரும்.

நட்பு வழியில் நல்ல செய்தி கேட்பீர்கள். புது வேலை கிடைக்கும். உங்கள் ராசியை குரு பார்த்துக் கொண்டேயிருப்பதால், யதார்த்தமாகப் பேசி எல்லோரையும் கவருவீர்கள். குழந்தை பாக்யம் கிடைக்கும். ஏழரைச் சனி நடைபெறுவதாலும், யோகாதிபதி சூரியன் 12ல் மறைந்திருப்பதாலும், பணப்பற்றாக் குறையால் வெளியில் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை உருவாகும்.  

அரசு காரியங்களில் அலட்சியம் வேண்டாம். ராசிநாதன் செவ்வாய் 2ல் நிற்பதால், சகோதர வகையில் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டாகும். கேது 5ல் நிற்பதால், குடும்பத்தினருடன் சென்று குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள்.

கன்னிப் பெண்களே! உங்களின் தனித்திறமையை வளர்த்துக் கொள் வீர்கள். அரசியல்வாதிகளே! எதிர்க்கட்சி யினரை வரம்பு மீறி தாக்கிப் பேச வேண்டாம். வியாபாரத்தில் மாறுபட்ட அணுகுமுறையால் லாபம் ஈட்டுவீர்கள். உத்தியோகத்தில் உங்களின் கோரிக்கையை உயரதிகாரிகள் ஏற்றுக் கொள்வார்கள்.

கலைத்துறையினரே! கிசுகிசு தொல்லைகளிலிருந்து விடுபடுவீர்கள். புது வாய்ப்புகளும் வரும்.

கடின உழைப்பால் இலக்கை எட்டும் நேரம் இது.

ராசிபலன்

ராஜதந்திரிகளே!

உங்கள் ராசியிலேயே பூர்வ புண்ணியாதிபதி செவ்வாய் நிற்பதால், அரைகுறையாக நின்ற வேலைகள் முடியும். பிள்ளைகளால் அந்தஸ்து உயரும். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். பூர்வீகச் சொத்து கைக்கு வரும். உடன்பிறந்தவர்கள் உங்கள் வேலைகளைப் பகிர்ந்து கொள்வார்கள்.

குழந்தை பாக்யம் கிடைக்கும். சகோதரியின் திருமணத்தை முன்னின்று நடத்துவீர்கள். சூரியன் லாப வீட்டில் நிற்பதால், கடனாகக் கொடுத்த பணம் கைக்கு வரும். தந்தையின் உடல் நலம் சீராகும். அரசால் அனுகூலம் உண்டு.

சுக்ரனும், புதனும் சாதகமாக இருப்பதால், பிரபலங்களின் அறிமுகம் கிடைக்கும். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்ய முயல்வீர்கள். மனைவியின் உடல் நலத்தில் கவனம் தேவை.  

அரசியல்வாதிகளே! கட்சித் தலைமைக்கு நெருக்கமாவீர்கள். கன்னிப் பெண்களே! போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவீர்கள். ராசிநாதன் குருபகவான் 8ல் மறைந்து நிற்பதால், முன்கோபத்தால் நல்ல வர்களின் நட்பை இழந்துவிடாதீர்கள். உங்கள் மீது சிலர் வீண் பழி சுமத்த முயற்சிப்பார்கள்.

வியாபாரத்தில் இரட்டிப்பு லாபம் உண்டு. பழைய பங்குதாரர் மீண்டும் வந்து இணைவர். உத்தியோகத்தில் வேலைச்சுமை அதிகமானாலும் சக ஊழியர்களின் ஒத்துழைப்பால் விரைந்து முடிப்பீர்கள். கலைத் துறையினர்களே! வெளிநாட்டு புது நிறுவனங்களிலிருந்து நல்ல பல வாய்ப்புக்கள் தேடி வரும்.

வெற்றிக்கு வித்திடும் காலமிது.

ராசிபலன்

சிந்தனைகளைச் செயலாக்கு பவர்களே!

உங்கள் ராசிக்கு 10ம் வீட்டில் யோகாதிபதியான சுக்ரன் நிற்பதுடன் 2ம் தேதி முதல் புதனும் அமர்வதால், சாதிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். எதிர்பார்த்த பணம் வரும். பிள்ளைகளால் மகிழ்ச்சி தங்கும். வீட்டை மாற்றுவீர்கள்.

மனைவிவழியில் அனுகூலம் உண்டு. வெளிவட்டாரத்தில் செல்வாக்கு கூடும். சூரியன் 10ல் நிற்பதால், புது உத்தியோகம், சம்பள பாக்கி கைக்கு வரும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். செவ்வாய் 12ல் மறைந்திருப்பதால், வரவுக்கு மிஞ்சிய செலவுகள், சொத்து வாங்குவது, விற்பதில் சிக்கல்கள் வரக்கூடும்.

குருபகவான் 7ம் வீட்டில் வலுவாக நிற்பதால், தள்ளிப் போன திருமணம் கூடி வரும். பழைய நகையை மாற்றி புது டிசைனில் ஆபரணம் வாங்குவீர்கள்.

அரசியல்வாதிகளே! ராஜ தந்திரத்தால் முன்னேறுவீர்கள். எதிர்க்கட்சிக்காரர்களின் ஆதரவால் சில முக்கிய வேலைகளை முடிப்பீர்கள். கன்னிப் பெண்களே! வேலைக்கு விண்ணப்பித்து காத்திருந்தவர்களுக்கு நல்ல நிறுவனத்திலிருந்து அழைப்பு வரும். வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளைக் கற்றுக்கொள்வீர்கள். பழைய வேலையாட்கள், வாடிக்கை யாளர்கள் தேடி வருவார்கள்.

உத்தியோகத்தில் மூத்த அதிகாரி கள் முக்கிய அறிவுரைகள் தருவார்கள். சக ஊழியர்கள் மத்தியில் செல்வாக்கு கூடும். கலைத்துறையினரே! மூத்த கலைஞர்களின் வழிகாட்டுதல் மூலம் வெற்றியடைவீர்கள்.

நீண்ட கால ஆசைகள் நிறைவேறும் வேளை இது.

ராசிபலன்

பொறுப்புகளை மேற்கொண்டதும் புயலென மாறுபவர்களே!

செவ்வாய் லாப வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால், தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். ஆன்மிகப் பெரியவர் களின் நட்பு கிடைக்கும். உடன்பிறந்த வர்களுடன் மனம் விட்டுப் பேசுவீர்கள். பிள்ளைகளால் ஆறுதல் அடைவீர்கள். தாய்வழியில் மதிப்பு, மரியாதை கூடும். என்றாலும், குரு 6ல் மறைந்திருப்பதால், தவிர்க்க முடியாத செலவுகளும், கருத்து மோதல்களும் வரும்.

வழக்கில் தீர்ப்பு தள்ளிப் போகும். 9ல் சூரியன் நிற்பதால், செலவினங்கள் அதிகமாகும். தந்தையாருக்கு வேலைச்சுமை, வீண் டென்ஷன் ஏற்படும். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். சுக்ரனும் புதனும் சாதகமான வீடுகளில் செல்வதால், எதையும் சமாளிக்கும் தைரியம் பிறக்கும். உறவினர்கள், நண்பர்கள் சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். பூர்வீகச் சொத்தால் வருமானம் வரும்.

அரசியல்வாதிகளே! தலைமையைப் பற்றிய ரகசியங்களை யாரிடமும் சொல்லிக் கொண்டிருக்காதீர்கள். கன்னிப் பெண்களே! பெற்றோர் உங்களின் உணர்வுகளை புரிந்து கொள்வார்கள். வியாபாரத்தில் போட்டி களையும் தாண்டி ஓரளவு லாபம் வரும். அயல்நாட்டுத் தொடர்புள்ள நிறுவனங்களுடன் புது ஒப்பந்தங்கள் செய்வீர்கள். உத்தியோகத்தில் மாற்றம், புது வேலை கிடைக்கும். கலைத் துறையினரே! உங்களை சிலர் விமர்சித்துப் பேசிக்கொண்டுதான் இருப்பார்கள். அதையும் தாண்டி முன்னேறுவீர்கள்.

சகிப்புத் தன்மையால் முன்னேறும் வேளை இது.  

ராசிபலன்

பூமியைப் போன்ற பொறுமை சாலிகளே!

ராசிநாதன் குருபகவான் 5ம் வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால், புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். கல்வியாளர்கள், அறிஞர்களின் நட்பால் தெளிவடைவீர்கள். அடுத்தடுத்து சுப நிகழ்ச்சிகளாலும், நண்பர்கள், உறவினர்களின் வருகையாலும் வீடு களைகட்டும்.

அநாவசியச் செலவுகளைக் கட்டுப் படுத்துவீர்கள். பிள்ளைகள் குடும்ப சூழ்நிலையறிந்து பொறுப்பாக நடந்துகொள்வார்கள். சுக்ரனும், புதனும் சாதகமான வீடுகளில் செல்வதால், பணவரவு கூடும். புது வீடு, வாகனம் வாங்குவீர்கள். தள்ளிப் போன திருமணம் கூடி வரும்.

மனைவியின் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். செவ்வாய் 10ல் அமர்ந்திருப்பதால், வெகுநாள் கனவாக இருந்த வீடு வாங்கும் ஆசை இப்போது நிறைவேறும். வழக்கு சாதகமாகும்.

தாயாரின் உடல் நலம் சீராகும். எதிர்பார்த்தபடி நல்ல நிறுவனத்தில் புது வேலை கிடைக்கும். அஷ்டமத்துச் சனி தொடர்வதால், மற்றவர்களை நம்பி முக்கிய வேலைகளை ஒப்படைக்க வேண்டாம். அரசியல்வாதிகளே! மற்றவர்களால் மதிக்கப்படுவீர்கள். கன்னிப் பெண்களே! உங்களின் நீண்ட நாள் கனவு நனவாகும். கூடுதல் மொழி கற்றுக்கொள்ள முயற்சி செய்வீர் கள். வியாபாரத்தில் அதிரடி லாபம் உண்டு. புதிய வாடிக்கை யாளர்கள் தேடி வருவார்கள். உத்தி யோகத்தில் திறமைகளை வெளிப் படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். கலைத்துறையினரே! வசதி, வாய்ப்புகள் பெருகும்.

சூழ்ச்சிகளைத் தாண்டி முன்னேறும் காலம் இது.    

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism