ஸ்பெஷல் 1
Published:Updated:

ராசி பலன்கள்

நவம்பர் 5ம் தேதி முதல் 18ம் தேதி வரைஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன்

ராசி பலன்கள்

பணம்... ஆபரணம் வந்து சேரும்!

மேஷம்: சமூக சீர்திருத்த சிந்தனை கொண்டவர்களே! சுக்கிரனும், புதனும் சாதகமான வீடுகளில் செல்வதால், உங்களிடம் மறைந்து கிடந்த திறமைகள் வெளிப்படும். பணவரவு அதிகரிக்கும். விலை உயர்ந்த ஆபரணங்கள் சேரும். வீட்டை விரிவுபடுத்திக் கட்டுவீர்கள். சொந்தக்காரர்கள் வீடுதேடி வருவார்கள். புதிய சமையலறை சாதனங்கள் வாங்குவீர்கள். 17ம் தேதி வரை சூரியன் 7ல் நிற்பதால், வீண் டென்ஷன் வந்து நீங்கும்.

வியாபாரத்தில் தேங்கிக் கிடந்த சரக்குகள் விற்றுத் தீரும். உத்யோகத்தில் மேலதிகாரிகள் உங்கள் கோரிக்கையை ஏற்பார்கள்.

ராசி பலன்கள்

சனிபகவான் துணை நிற்பார்!        

ரிஷபம்: தன்னிடம் இருப்பதை பிறருக்கு பகிர்ந்தளித்து, துயரம் போக்குபவர்களே! சனிபகவான் வலுவாக இருப்பதால், எத்தனை இடர்பாடுகள் வந்தாலும் அதை சமாளிக்கும் சாமர்த்தியம் கிடைக்கும். 12ம் தேதி வரை ராசிநாதன் சுக்கிரன் 6ல் மறைந்திருப்பதாலும், செவ்வாய் 8ல் நிற்பதாலும் உடல்நலக் கோளாறு வந்து நீங்கும். மின்னணு, மின்சார சாதனங்களை கவனமாக கையாளுங்கள். சூரியனும் 6ல் மறைந்திருப்பதால், அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம்.

வியாபாரத்தில் பாக்கிகளை போராடி வசூலிப்பீர்கள். உத்யோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும்.

ராசி பலன்கள்

கனிவான பேச்சு கைகொடுக்கும்!

மிதுனம்: தனக்கென எதையும் தேக்கி வைத்துக்கொள்ளாதவர்களே! 12ம் தேதி வரை சுக்கிரன் சாதகமாக இருப்பதால், கனிவான பேச்சால் காரியம் சாதிப்பீர்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும். வீடு, வாகன வசதி பெருகும். 13ம் தேதி முதல் சுக்கிரன் 6ல் மறைவதால், வீண் செலவுகள்  ஏற்படும். குருபகவான் 2ல் நிற்பதால், வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். 5ல் சூரியன் நிற்பதால்... முன்கோபம், வீண் அலைச்சல் வந்து போகும்.

வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். லாபம் இரட்டிப்பாகும். உத்யோகத்தில் சில சூட்சுமங்களைக் கற்றுக்கொள்வீர்கள்.

ராசி பலன்கள்

நன்மைகள் விளையும் காலம்!

கடகம்: வருங்காலத் திட்டங்களை வடிவமைப்பதில் வல்லவர்களே! செவ்வாய் 6ம் வீட்டில் வலுவாக நிற்பதால், நீங்கள் சொன்ன சொல்லைக் காப்பாற்றுவீர்கள். பூர்விக சொத்தை விற்று புது வீடு, மனை வாங்குவீர்கள். வாழ்க்கைத் துணைவர் உங்களின் பெருந்தன்மையைப் புரிந்துகொள்வார். அரசாங்கத்தால் ஆதாயம் உண்டு. ஜென்ம குரு தொடர்வதால் வீண் பழி, சிறுசிறு மரியாதைக் குறைவான சம்பவங்கள் வந்து போகும்.

வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள். உத்யோகத்தில் உங்கள் உழைப்புக்கு வேறு சிலர் உரிமை கொண்டாடுவார்கள்.

ராசி பலன்கள்

பண மழை பொழியும்!

சிம்மம்: சாதுர்யமான பேச்சால் எதிராளி களைக் கலங்கடிப்பவர்களே! புதனும், சுக்கிரனும் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால், சோர்ந்து கிடந்த நீங்கள் சுறுசுறுப்படைவீர்கள். பணப்புழக்கம் கணிசமாக உயரும்.  ராசிநாதன் சூரியன் சாதகமாக இருப்பதால், உறவினர், தோழிகள் வீட்டு விசேஷங்களில் கலந்துகொண்டு  மகிழ்வீர்கள். செவ்வாய் 5ல் நிற்பதால், பிள்ளைகளை அவர்கள் போக்கிலேயே விட்டுப் பிடிப்பது நல்லது.

வியாபாரத்தில் கடையை விரிவுபடுத்தும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். உத்யோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும்.

ராசி பலன்கள்

கலகலப்பான நேரம்!

கன்னி: நாடி வந்தவர்களுக்கு நல்லதை செய்பவர்களே! குருபகவான் வலுவாக இருப்பதால், புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். மகனுக்கு அயல்நாடு தொடர்புடைய நிறுவனத்தில் வேலை கிடைக்கும். புதிய டி.வி., ஃப்ரிட்ஜ் வாங்குவீர்கள். விருந்தினர்களின் வருகையால் வீடு களைகட்டும். சர்ப்ப கிரங்களின் சஞ்சாரம் சாதகமாக இல்லாததால்...  மறைமுக எதிர்ப்பு, மருத்துவச் செலவுகள் வந்து நீங்கும்.

வியாபாரத்தில் லாபம் வரும். சிலர் பிரபலமான இடத்துக்கு கடையை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரிகள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள்.

ராசி பலன்கள்

கடன் பிரச்னை தீரும்!

துலாம்: யார், எதைப் பேசினாலும் கலங்காதவர்களே! செவ்வாய் 3ம் வீட்டில் அமர்ந்திருப்பதால், கம்பீரமாகப் பேசி காரியங்களை சாதிப்பீர்கள். புது வீடு வாங்கும் யோகம் உண்டாகும். பழைய கடன் பிரச்னை தீரும். சகோதர வகையில் நன்மை உண்டு. 17ம் தேதி வரை ராசிக்குள் சூரியன் நிற்பதால் வேலைச்சுமை,  உடல் உபாதை வந்து நீங்கும். ஏழரைச் சனி தொடர்வதால், நோய் இருப்பதைப் போன்ற பயம் வந்து போகும்.

வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி ஓரளவு லாபம் வரும். உத்யோகத்தில் உயரதிகாரிகளிடம் அதிக உரிமை எடுத்துக்கொள்ள வேண்டாம்.

ராசி பலன்கள்

வர வேண்டிய பணம் கைக்கு வரும்!

விருச்சிகம்: 'வாழ்க்கை வாழ்வதற்கே’ என்பதை அறிந்தவர்களே! சுக்கிரனும், புதனும் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால், உங்களுக்கு வர வேண்டிய பணம் கைக்கு வரும். நவீன ரக வாகனம் வாங்குவீர்கள். உறவினர்களுடன் இருந்த கசப்புணர்வு நீங்கும். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்தவர்களை சந்திப்பீர்கள். சூரியனும், சனியும் 12ல் மறைந்திருப்பதால், அரசு காரியங்கள் தாமதமாகி முடியும்.

வியாபாரத்தில் அதிரடி லாபம் வரும். பங்குதாரர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் உயரதிகாரிகள் உங்களைக் கலந்தாலோசித்துவிட்டு சில முக்கிய முடிவுகள் எடுப்பார்கள்.

ராசி பலன்கள்

வில்லங்கம் விலகும்!

தனுசு: வாதாடும் குணம் கொண்டவர்களே! சனிபகவான் லாப வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால், உங்கள் ரசனைக்கேற்ற வீட்டுக்கு மாறுவீர்கள். பிள்ளைகள் நல்லபடியாக நடந்துகொள்வார்கள். உறவினர்கள் உங்களுக்காக பரிந்து பேசுவார்கள். பூர்விக சொத்திலிருந்த வில்லங்கம் விலகும். குருபகவான் 8ல் நிற்பதால், முன்கோபத்தால் நல்லவர்களின் நட்பை இழக்க நேரிடலாம்.

வியாபாரத்தில் வாடிக்கையாளர்களைக் கவர சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்யோகத்தில் நீங்கள் சக ஊழியர்களால் ஒதுக்கப்பட்டாலும், அதிகாரிகளால் மதிக்கப்படுவீர்கள்.

ராசி பலன்கள்

கனவு நனவாகும் நேரம்!

மகரம்: இடம் பெயர்ந்து சென்றாலும் குலப்பெருமையைக் காப்பவர்களே! யோக கிரகங்கள் வலுவாக இருப்பதால், புது முயற்சிகள் நல்ல விதத்தில் முடியும். வாழ்க்கைத் துணைவரின் நீண்ட நாள் கனவுகள் நனவாகும். மகளின் திருமணத்தை சிறப்பாக நடத்துவீர்கள். சொந்த ஊரில் மதிக்கப்படுவீர்கள். புது டிசைனில் நகை வாங்குவீர்கள். வெளிநாட்டிலிருந்து நல்ல செய்தி வரும். செவ்வாயால் தூக்கமின்மை, வீண் கவலைகள், சகோதர வகையில் சிக்கல்கள் வந்து நீங்கும்.

வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனையைப் புரிந்துகொள்வீர்கள். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும்.

ராசி பலன்கள்

வளமான வருங்காலம்!

கும்பம்: தன் பத்து விரல்களையே சொத்தாக நினைப்பவர்களே! புதனும், சுக்கிரனும் சாதகமாக இருப்பதால், நீங்கள் குழப்பம் நீங்கி, தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். வாழ்க்கைத்துணைவரின் ரசனைக்கேற்ப உங்களை மாற்றிக்கொள்வீர்கள். பிள்ளைகளின் வருங்காலத் திட்டங்கள் நிறைவேறும். நீங்கள் கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். குரு 6ல் மறைந்து நிற்பதால், உங்கள் மீது சிலர் வீண் பழி சுமத்தினாலும், மீண்டு வெளியே வருவீர்கள்.

வியாபாரத்தில் சில தந்திரங்களைக் கற்றுக்கொள் வீர்கள். உத்யோகத்தில் எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள்.

ராசி பலன்கள்

வருமானம் உயரும்!

மீனம்: தன்னலத்தை முக்கியமாக கருதாது செயல்படுபவர்களே! செவ்வாய் 10ல் நிற்பதால், உங்களுடைய ஆளுமைத் திறன் அதிகரிக்கும். குடும்ப வருமானம் உயரும். வீடு வாங்குவது, விற்பது சாதகமாக முடியும். 17ம் தேதி வரை சூரியன் 8ல் நிற்பதால்... உறவினர், நண்பர்களால் ஆதாயமடைவீர்கள். என்றாலும், சூரியன் சனியுடன் சேர்ந்திருப்பதால் காரிய தாமதம், உடல் உபாதை வந்து போகும். வேலை தேடிக்கொண்டிருப்பவர்களுக்கு நல்ல நிறுவனத்திலிருந்து அழைப்பு வரும்.

வியாபாரத்தில் லாபம் பெருகும்். உத்யோகத்தில் கடினமான காரியங்களையும் எளிதாக செய்து முடிப்பீர்கள்.