Published:Updated:

ராசிபலன்

நவம்பர் 11 முதல் 24 வரைஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன்

ராசிபலன்

நவம்பர் 11 முதல் 24 வரைஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன்

Published:Updated:
ராசிபலன்

ல்லோரும் எல்லாமும் பெற வேண்டும் என்று நினைப்பவர்கள் நீங்கள். புதனும், சுக்ரனும் சாதகமான வீடுகளில் செல்வதால், பணவரவு உண்டு. தவிர்க்க முடியாத செலவுகளால் வெளியில் கடனும் வாங்க வேண்டி வரும்.

ராசிநாதன் செவ்வாய் சாதகமான வீடுகளில் செல்வதால், பழைய சிக்கலைத் தீர்க்க புது யோசனைகள் பிறக்கும். சகோதர வழியில் உதவி உண்டு. வேலைக்கு விண்ணப்பித்து காத்திருந்தவர்களுக்கு நல்ல நிறுவனத் திலிருந்து அழைப்பு வரும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வீடு, மனை வாங்குவது, விற்பது லாபகரமாக முடியும். வழக்கில் சாதக மான தீர்ப்பு வரும். ராகு வலுவாக 6ல் நிற்பதால், ஷேர் மூலம் பணம் வரும்.

சூரியன் சாதகமாக இல்லாததால், அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம். பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள். சனி 7ல் அமர்ந்திருப் பதால், சில நேரங்களில் ஏமாற்றங்களை உணர்வீர்கள். குரு 4ல் நிற்பதால், நம்பிக்கையின்மை, வீண் செலவு, சோர்வு வந்து நீங்கும்.

பெண்கள், பெற்றோரின் விருப்பங் களை நிறைவேற்றுவார்கள். வியாபாரத் தில் கணிச மாக லாபம் உயரும். புதிய வாடிக்கை யாளர்கள் தேடி வருவார்கள்.

உத்தியோகத்தில் உயரதிகாரி உங்களைக் கடிந்து பேசினாலும், அன்பாக நடந்துகொள்வார்.

மதிப்பு, மரியாதை கூடும் காலம் இது!

ராசிபலன்

சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்திருக்கும் உங்களின் பேச்சும் சுத்தமாக இருக்கும். சனிபகவான் வலுவாக 6ம் வீட்டில் நிற்பதால், தைரியமாக எதையும் முடிப்பீர்கள்.

20ம் தேதி முதல் புதன் 6ம் வீட்டை விட்டு விலகுவதால், சோர்வு, சலிப்பு நீங்கும். பூர்வீக சொத்துப் பிரச்னை முடிவுக்கு வரும்.

நீசமாகி 6ல் நிற்கும் உங்கள் சுகாதிபதி சூரியன் 17ம் தேதி முதல் 7ல் அமர்வதால், எரிச்சல், கோபம் விலகும். தடைப்பட்ட அரசு காரியங்கள் விரைந்து முடியும். பெற்றோரின் உடல் நிலை சீராகும். என்றாலும் மனைவியின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

21ம் தேதி வரை செவ்வாய் 8ல் மறைந்து நிற்பதால், வீண் டென்ஷன், வேலைச்சுமை ஏற்படும். 22ம் தேதி முதல் செவ்வாய் 9ம் வீட்டில் நுழைவதால், தள்ளிப்போன விஷயங் கள் விரைந்து முடியும். மனைவி மற்றும் மனைவிவழி உறவினர்களுடன் இருந்த மனவருத்தம் நீங்கும்.

குரு 3ம் வீட்டிலும், ராகு 5ம் இடத்திலும் நிற்பதால், எதிலும் ஈடுபாடற்ற நிலை, தலைச்சுற்றல், பிள்ளைகளால் செலவுகள் வந்து நீங்கும்.

வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள்.

உத்தியோகத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது.

துணிவே துணை என்று நினைக்கும் நேரம் இது.

ராசிபலன்

னித நேயமுள்ள நீங்கள், வாடி வருபவர்களுக்கு உதவுபவர்கள். குரு பகவான் தனஸ்தானத்தில் வலுவாக நிற்பதால், சாதிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். பணம் வரும். குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும்.

மகளின் திருமணத்தைச் சிறப்பாக நடத்துவீர்கள். 17ம் தேதி முதல் சூரியன் 6ம் வீட்டில் நுழைவதால், புகழ், கௌரவம் கூடும். பிள்ளைகளின் பிடிவாதம் தளரும். அரசாங்க விஷயங் கள் உடனே முடியும். வழக்குகளில் சாதகமான திருப்பம் உண்டாகும்.

சுக்ரன் 6ல் மறைந்திருப்பதால், கணவன்மனைவிக்குள் மனஸ்தாபம் வந்து நீங்கும். பிள்ளைகளை அரவணைத்துப் போவது நல்லது.

20ம் தேதி முதல் புதன் 6ல் மறைவதால், சளித் தொந்தரவு, தொண்டை வலி, காய்ச்சல் வந்து நீங்கும்.

22ம் தேதி முதல் செவ்வாய் 8ல் மறைவதால், சகோதர வகையில் சங்கடங்கள் வரும். வீடு, மனை வாங்குவது, விற்பதில் வில்லங்கம் வந்து விலகும். பெண்கள் திட்டமிட்ட காரியங்கள் கைகூடும். ஆன்மிகப் பெரியோரின் ஆசி கிட்டும்.

வியாபாரம் சூடு பிடிக்கும். வெளி நாட்டு நிறுவனங்களுடன் புது ஒப்பந் தங்கள் கையெழுத்தாகும். உத்தி யோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப் பார்கள்.

அறிவுபூர்வமாகச் செயல்பட வேண்டிய தருணம் இது.

ராசிபலன்

னக்கணக்குப் போடும் நீங்கள், திட்டமிடுவதில் வல்லவர்கள். ராகு 3ம் இடத்தில் அமர்ந்திருப்பதால், கறாராகப் பேசி, காரியங்களை முடிப்பீர்கள். விவாதங்களில் வெற்றி உண்டு. பண வரவு எதிர்பார்த்தபடி இருந்தாலும், எதிர்பாராத செலவுகளால் திணறு வீர்கள். தெய்விகப் பணிகளுக்கு நிதி உதவி செய்வீர்கள்.

வெளிநாடு, வேற்று மாநிலத்தில் இருப்பவர்கள் உதவுவார்கள். 4ல் நிற்கும் சூரியன் 17ம் தேதி முதல் 5ல் அமர்வதால், பிள்ளைகளால் கொஞ்சம் அலைச்சலும், அவர்களின் வருங்காலம் குறித்த கவலைகளும் வந்து நீங்கும்.

சுக்ரன் சாதகமாக இருப்பதால், டி.வி., ஃப்ரி்ட்ஜ் போன்ற சாதனங்கள் வாங்குவீர்கள். 22ம் தேதி முதல் செவ்வாய் 7ல் நுழைவதால், சிறுசிறு விபத்து, வாகனப் பழுது, சொத்துச் சிக்கல்கள் வந்து நீங்கும்.

புதன் சாதகமாக இருப்பதால், இளைய சகோதரர்களால் நிம்மதி உண்டாகும். கன்னிப் பெண்கள் தடைப்பட்ட உயர்கல்வியைத் தொடர்வார்கள்.

தொழில், வியாபாரத்தில் எதிர்பாராத ஏமாற்றங்கள் ஏற்படும். வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள்.

உத்தியோகத்தில் உங்களைப் பற்றிய வதந்திகள் வரும். அதிகாரி களுடன் பனிப்போர் வந்து நீங்கும்.

வளைந்து சென்று வெற்றி பெறும் வேளை  இது.

ராசிபலன்

னசாட்சிக்கு மதிப்பளிக்கும் நீங்கள், தன்மானம் தவறாதவர்கள்.

சுக்ரன் சாதகமான வீடுகளில் செல்வதால், உங்கள் செயலில் வேகம் கூடும். வி.ஐ.பி.கள் நண்பர்களாவார்கள். கணவனமனைவிக்குள் அந்நி யோன்யம் அதிகரிக்கும். பிரிந்திருந்த வர்கள் ஒன்று சேர்வீர்கள்.

தள்ளிப்போன திருமணம் கூடி வரும். பிள்ளைகள் பொறுப்பாக நடந்து கொள்வார்கள்.

நீசமாகி இருக்கும் ராசிநாதன் சூரியன் 17ம் தேதி முதல் 4ல் அமர்வதால், உங்களின் நிர்வாகத் திறன் கூடும். அரசால் அனுகூலம் உண்டு. தாயாரின் உடல் நலம் சீராகும்.

குரு 12ல் மறைந்திருப்பதால், வேலைச்சுமையால் ஓய்வின்மையும், தூக்கமின்மையும் வந்து நீங்கும். புதன் சாதகமான வீடுகளில் செல்வதால், சாதுர்யமாகப் பேசி சாதிப்பீர்கள்.

செவ்வாய் 22ம் தேதி முதல் 6ம் வீட்டில் நுழைவதால், தைரியம் கூடும். சகோதர வகையில் இருந்த பிரச்னை கள் தீரும். வழக்கு சாதகமாகும். சொத்துக்களால் ஆதாயம் உண்டாகும். வேலைக்குக் காத்திருக்கும் பெண்களுக்கு புது வேலை அமையும்.

வியாபாரத்தில் இரட்டிப்பு லாபம் உண்டு. உத்தியோகத்தில் அதிகாரிகள் உங்களை நம்பி புது பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். சக ஊழியர்களால் நெருக்கடிகள் வந்து நீங்கும்.

புதிய கண்ணோட்டத்தில் பயணிக்கும் காலம் இது.

ராசிபலன்

மொழிப்பற்று, இனப்பற்றுள்ள நீங்கள், ஒற்றுமை உணர்வு அதிகம் உள்ளவர்கள். சுக்ரனும், புதனும் சாதகமாக இருப்பதால், புதிய எண் ணங்கள் தோன்றும். திடீர் பணவரவு உண்டு. பிள்ளைகள் நீண்ட நாள் கேட்டுக்கொண்டிருந்ததை வாங்கித் தருவீர்கள். பிள்ளைகள் உங்கள் விருப்பப்படி நடந்துகொள்வார்கள்.

17ம் தேதி முதல் சூரியன் 3ல் அமர்வதால், உங்களின் முதிர்ச்சியான பேச்சில் அறிவு வெளிப்படும். அரசால் அனுகூலம் உண்டு.

22ம் தேதி முதல் செவ்வாய் 5ல் சென்று அமர்வதால், தெளிவான முடிவுகள் எடுக்கமுடியாமல் குழம்பு வீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள்மீது குறைப்பட்டுக் கொள்வார்கள். வழக்கில் வழக்கறிஞரை மாற்றுவீர்கள். புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள்.

சொத்துப் பிரச்னைக்கு சுமுக தீர்வு காண்பது நல்லது. ராகுவும், கேதுவும் சாதகமாக இல்லாததால், யாரையும் முழுமையாக நம்ப வேண்டாம்.

கன்னிப் பெண்கள், பெற்றோருடன் கலந்தாலோசித்து வருங்காலம் குறித்து சில முடிவுகள் எடுப்பர்.

வியாபாரத்தில் சூட்சுமங்களை உணருவீர்கள். வேலையாட்கள், வாடிக்கையாளர்களிடம் கனிவாகப் பழகுங்கள். உத்தியோகத்தில் தலைமையின் நம்பிக்கையைப் பெறுவீர்கள்.

எதையும் சாதிக்க முயலும் வேளை இது.

ராசிபலன்

திலும் கறாராக இருக்கும் நீங்கள், பிறர் தயவில் வாழ மாட்டீர்கள்.

செவ்வாய் சாதகமான வீடுகளில் செல்வதால், உங்களின் ஆளுமைத் திறன் அதிகரிக்கும். பல நாட்களாக எதிர்பார்த்து ஏமாந்த தொகை கைக்கு வரும். குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும்.

சொந்தங்கள் வலிய வந்து உதவு வார்கள். சுக்ரனும், புதனும் சாதகமாக இருப்பதால், வீட்டைக் கட்டி முடிக்க எதிர்பார்த்த வங்கிக் கடன் கிடைக்கும். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள்.

கேது வலுவாக இருப்பதால், வீட்டு விசேஷங்கள், கோயில் கும்பாபி ஷேகத்தை முன்னின்று நடத்துவீர்கள். கௌரவப் பதவிகள் உங்களைத் தேடி வரும்.

17ம் தேதி முதல் சூரியன் ராசியை விட்டு விலகுவதால், உடல் நலம் சீராகும்.

ஏழரைச் சனி தொடர்வதால், யாருக்கும் ஜாமீன் கையெழுத்திட வேண்டாம்.

குரு ராசிக்கு 10ல் நிற்பதால், எதிலும் ஒருவித தயக்கம், தடுமாற்றம், வேலைச்சுமை, மரியாதைக்குறைவான சம்பவங்கள் ஏற்படக்கூடும்.

கன்னிப் பெண்களின் புது முயற்சிகளை பெற்றோர் ஆதரிப்பார்கள்.

வியாபாரத்தில் வாடிக்கையாளர் களின் ரசனையைப் புரிந்து கொள்வீர்கள். வேலையாட்கள் முழுமனதுடன் பணி செய்வார்கள்.

உத்தியோகத்தில் உயர் அதிகாரி களிடம் அளவாகப் பழகுங்கள். சக ஊழியர்களால் பிரச்னைகள் வந்து போகும்.

மன உறுதியுடன் போராடி வெல்லும் நேரம் இது.

ராசிபலன்

கைச்சுவையாகவும், நாசூக் காகவும் பேசும் நீங்கள், நாலும் அறிந்தவர்கள்.

சுக்ரன் சாதகமான வீடுகளில் செல்வதால், இங்கிதமாகப் பேசி கடினமான காரியங்களையும் சாதிப் பீர்கள். எதிர்பார்த்த வகையில் பணம் வரும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். வாகன யோகம் உண்டு.

மனைவியின் உடல் நலம் சீராகும். 22ம் தேதி முதல் ராசிநாதன் செவ்வாய் 3ம் வீட்டில் அமர்ந்திருப்பதால், எதிலும் வெற்றி பெறுவீர்கள். பேச்சில் கம்பீரம் பிறக்கும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். வழக்கில் திருப்பம் ஏற்படும். நல்ல வேலை கிடைக்கும்.

வீடு, மனை வாங்குவது, விற்பது லாபகரமாக அமையும். பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள்.

புதன் சாதகமாக இருப்பதால், உறவினர்களின் வீட்டு விசேஷங்களில் கலந்துகொள்வீர்கள். பூர்வீக சொத்துப் பங்கைக் கேட்டு வாங்குவீர்கள்.

17ம் தேதி முதல் சூரியன் ராசிக்குள் நுழைவதால், முன்கோபம், உஷ்ணத்தால் அடி வயிற்றில் வலி, கண் எரிச்சல் வந்து நீங்கும். கேது 5ல் நிற்பதால், பிள்ளைகளின் வருங் காலம் குறித்து அவ்வப்போது யோசிப்பீர்கள்.  

வியாபாரத்தில் பழைய சரக்குகளை விற்றுத் தீர்ப்பீர்கள். வேலையாட்கள் உங்களிடம் தொழில் யுக்திகளை கற்றுக் கொள்வார்கள்.

உத்தியோகத்தில் சவாலான வேலைகளையும் அநாயாசமாகச் செய்து முடிப்பீர்கள்.

விஸ்வரூபமெடுக்கும் தருணம் இது.

ராசிபலன்

தொலைநோக்குச் சிந்தனை கொண்ட நீங்கள், எதிலும் உண்மையை விரும்புபவர்கள். லாப வீட்டில் சனி பகவான் வலுவாக அமர்ந்திருப்பதால், எதிர்பார்ப்புகள் தடையின்றி முடியும். அறிஞர்களின் நட்பால் தெளிவடை வீர்கள். திருமணம், சீமந்தம் போன்ற சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். பணவரவு கூடும்.

22ம் தேதி முதல் செவ்வாய் 2ம் வீட்டில் உச்சமடைவதால், குழந்தை பாக்யம் கிடைக்கும். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். பூர்வீக சொத் தால் வருமானம் வரும்.

சுக்ரனும், புதனும் சாதகமாக இருப்பதால், உங்கள் ரசனை மாறும். வீட்டை அழகுபடுத்துவீர்கள். விலகிச் சென்ற நண்பர்கள் வலிய வந்து பேசுவார்கள்.

மனைவிவழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வெளிவட்டா ரத்தில் அந்தஸ்து உயரும். குடும்பத் தினருடன் சென்று குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள்.

சூரியன் 17ம் தேதி முதல் ராசிக்கு 12ல் மறைவதால், திடீர் பயணங்கள், தூக்கமின்மை, வீண் செலவுகள் வந்து நீங்கும். பெண்களின் எண்ணங்கள் நிறைவேறும்.

வியாபாரத்தில் தரமான சரக்குகளை மொத்த விலையில் வாங்க முடிவு செய்வீர்கள். பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். பங்குதாரர்கள் உங்கள் ஆலோசனையை ஏற்பார்கள்.

10ல் ராகு தொடர்வதால், உத்தியோகத்தில் நேரம் காலம் பார்க்காமல் உழைக்க வேண்டி வரும். அதிகாரிகள் தொடர்ந்து உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள்.

புதிய திட்டத்தில் ஒன்று நிறைவேறும் காலம் இது.

ராசிபலன்

யற்கையை நேசிக்கும் நீங்கள், பாரம்பரிய வழக்கங்களை விட்டுக் கொடுக்கமாட்டீர்கள். சூரியன் சாதக மான வீடுகளில் செல்வதால், எதிர்ப்பு கள் அடங்கும். அரசு காரியங்கள் அனுகூலமாகும்.

மேல்மட்ட அரசியல்வாதிகள் உதவுவார்கள். ப்ளான் அப்ரூவல் கிடைத்து, வீடு கட்டத் தொடங்குவீர்கள்.

புது பொறுப்புகளும், பதவிகளும் தேடி வரும். குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். பிள்ளைகளின் தவற்றைச் சுட்டிக்காட்டித் திருத்துவீர்கள். வழக்கில் வெற்றி உண்டு. தந்தைவழியில் அனுகூலம் உண்டு.

அரசு காரியங்கள் சுலபமாக முடியும். அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். சுக்ரனும், புதனும் சாதகமாக இருப்பதால், சாதுர்யமான பேச்சால் சாதிப்பீர்கள். வரவேண்டிய பணம் கைக்கு வரும்.

உறவினர்கள், நண்பர்கள் உங்கள் வேலைகளைப் பகிர்ந்துகொள்வார்கள். நினைத்திருந்த டிசைனில் ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள்.

22ம் தேதி முதல் செவ்வாய் ராசிக் குள் உச்சமாவதால், தாழ்வுமனப்பான்மை நீங்கும். நேர்மறை எண்ணங்கள் பிறக்கும். உடன்பிறந்தவர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும்.

வியாபாரத்தில் வி.ஐ.பிகள் வாடிக்கையாளர்களாக அறிமுக மாவார்கள். பற்று வரவு உயரும். பழைய பாக்கிகளை வசூலிப்பீர்கள். வேலையாட்கள் மதிப்பார்கள்.

உத்தியோகத்தில் அதிகாரிகள் உங்களுக்கு முன்னுரிமை தருவார்கள்.

தொலைநோக்குச் சிந்தனையால் சாதிக்கும் வேளை இது.

ராசிபலன்

தோல்வியைக் கண்டு துவளாத நீங்கள், அடைக்கலம் தேடி வருபவர் களை ஆதரிப்பவர்கள். புதனும், சுக்ரனும் சாதகமான வீடுகளில் செல்வதால், புதிய திட்டங்கள் நிறை வேறும். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவர்களின் தொடர்பு கிடைக்கும். புதிதாக வீடு, வாகனம் வாங்குவீர்கள். பிள்ளைகள் உங்கள் விருப்பத்தை நிறைவேற்றுவார்கள்.

திருமணப் பேச்சு வார்த்தை கூடி வரும். பிள்ளைகளுடன் மனம் விட்டுப் பேசுவீர்கள். விலை உயர்ந்த சமைய லறைச் சாதனங்கள் வாங்குவீர்கள்.

உறவினர்களும் நண்பர்களும் உங்களின் பெருந்தன்மையைப் புரிந்துகொள்வார்கள். 17ம் தேதி முதல் சூரியன் 10ல் நுழைவதால், புது வேலை கிடைக்கும். அரசாங்கத்தால் ஆதாயமடைவீர்கள். வழக்குகள் சாதகமாகும். தந்தையின் உடல் நலம் சீராகும். தந்தைவழி உறவினர்கள் மதிப்பார்கள்.

குரு 6ல் மறைந்திருப்பதால், குடும்பத்தில் சலசலப்பு, தர்ம சங்கடமான சூழ்நிலை, வீண் விரயம், ஏமாற்றம் ஏற்படும். செவ்வாய் 12ம் வீட்டில் உச்சமாவதால், பயணங்களால் புத்துணர்ச்சி பெறுவீர்கள். சகோதர வகையில் அன்புத் தொல்லைகள் உண்டு.

கன்னிப்பெண்களின் தேவை களைப் பெற்றோர் பூர்த்தி செய்வார்கள். வியாபாரத்தில் லாபம் குறையாது. வேலையாட்களிடம் கண்டிப்பு காட்ட வேண்டாம். உத்தியோகத்தில் சூழ்ச்சிகளையும் தாண்டி அதிகாரியின் ஆதரவைப் பெறுவீர்கள்.

தராதரம் அறிந்து செயல்படும் காலம் இது.

ராசிபலன்

விதை, கற்பனை என்று சிறகடிக்கும் நீங்கள், இரக்கப்பட்டு ஏமாறுவீர்கள். செவ்வாய் சாதகமான வீடுகளில் செல்வதால், சவால்களில் வெற்றி பெறுவீர்கள். மாறுபட்ட அணுகு முறையால் பழைய சிக்கல்கள், பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும்.

திடீர் பணவரவு உண்டு. குடும்பத் தினர் உங்கள் ஆலோசனையை ஏற்பர். பிள்ளைகளால் மதிப்பு கூடும். உடன் பிறந்தவர்கள் உங்களைப் புரிந்து கொள்வார்கள். தாயாரின் உடல் நலம் சீராகும். வழக்கில் திருப்பம் உண்டாகும்.

சுக்ரனும், புதனும் சாதகமாக இருப்பதால், இழுபறியாக இருந்த வேலைகள் உடனே முடியும். வாகனப் பழுதை சீர் செய்வீர்கள். வீடு கட்ட லோன் கிடைக்கும்.

மனைவி வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். நட்பால் ஆதாயம் உண்டு. வெளிநாட்டில் இருப் பவர்களால் நன்மை உண்டு. அஷ்ட மத்துச் சனி இருப்பதால் வீண் கவலை கள், ஒருவித படபடப்பு, எதிர்ப்புகள் வந்து செல்லும். 17ம் தேதி முதல் சூரியன் 9ல் அமர்வதால், தந்தைக்கு நெஞ்சு வலி, அவருக்கு வேலைச்சுமை வந்து நீங்கும். வரவுக்கு மிஞ்சிய செலவுகளும் இருக்கும்.

வியாபாரத்தில் தேங்கிக் கிடந்த சரக்குகளை புது யுக்திகளால் விற்றுத் தீர்ப்பீர்கள். எதிர்பார்த்த ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். பங்குதாரர்களுடன் இருந்த மோதல்கள் விலகும். உத்தி யோகத்தில் உங்கள் கருத்துக்கு ஆதரவு பெருகும். மேலதிகாரிக்கு நெருக்கமாவீர்கள்.

எதிர்பாராத வெற்றிகளைச் சந்திக்கும் தருணம் இது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism