Published:Updated:

ராசிபலன்

நவம்பர் 25 முதல் டிசம்பர் 8 வரை ஜோதிடரத்னா கே.பி.வித்யாதரன்

ராசிபலன்

நவம்பர் 25 முதல் டிசம்பர் 8 வரை ஜோதிடரத்னா கே.பி.வித்யாதரன்

Published:Updated:
ராசிபலன்

தவும் குணத்தால் உயர்ந்தவர் நீங்கள்.

ராகு பகவான் 6ம் வீட்டிலேயே பலம் பெற்று அமர்ந்திருப்பதால் எத்தனை இடர்கள் வந்தாலும் அவற்றை எல்லாம் சமாளித்து  காரியம் சாதிப்பீர்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வெளிநாட்டில் இருப்பவர்களால் ஆதாயம் அடைவீர்கள். புதனும், சுக்கிரனும் சாதகமான நட்சத்திரங் களில் செல்வதால் வி.ஐ.பிகளின் நட்பு கிட்டும். உறவினர்களுடன் மகிழ்ச்சியான தருணங்களை செலவிடுவீர்கள்.

ராசிநாதன் செவ்வாய் 10ம் வீட்டில் உச்சம் பெற்று அமர்ந்திருப்பதால், நல்ல வேலை கிடைக்கும். உடன் பிறந்தவர்களின் அன்பு அதிகரிக்கும். வீடு மனை வாங்குவது, விற்பது சுலபமாக முடிவடையும்.

குரு 4ம் வீட்டில் நீடிப்பதால்  மருத்துவச் செலவும் வீண் அலைச் சல்களும் அதிகரிக்கும். சூரியன் 8ல் நிற்பதால் பிள்ளைகளின் உயர்கல்வி, உத்தியோகம், திருமணம் சம்பந்தப்பட்ட முயற்சிகள் தாமதமாகி முடியும்.கர்ப்பிணிப் பெண்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி, எந்த மருந்தையும் உட்கொள்ள வேண்டாம். சிறுசிறு விபத்துகள் நிகழக்கூடும். நல்ல மனிதர்களின் நட்பு கி்ட்டும்.

வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டு. உத்தியோகத்தில் ஆற்றலுடன் செயல்பட்டு, வேலைகளை விரைந்து முடிப்பீர்கள்.  

போராடி வெற்றி பெறும் நேரம் இது.

ராசிபலன்

திர்நீச்சல் போடுபவர் நீங்கள்.

உங்களின் பூர்வ புண்யாதிபதி புதன் 7ம் வீட்டில் அமர்ந்து உங்கள் ராசியைப் பார்த்துக் கொண்டிருப்பதால், உங்களின் அறிவாற்றலை வெளிப் படுத்த நல்ல வாய்ப்புகள் வரும்.  ஆரோக்கியம் கூடும்.

பூர்வீகச் சொத்தை விரிவுப்படுத்து வீர்கள். சிலருக்கு, குழந்தை பாக்கியம் கிடைக்கும். பிள்ளைகளை நல்வழிப் படுத்துவீர்கள். உறவினர்கள்  மத்தியில் நல்ல அபிப்பிராயம் ஏற்படும்.  

ராசிநாதன் சுக்கிரனும் சாதகமான வீடுகளில் செல்வதால் மறைமுக எதிர்ப்புகள் குறையும். விலை உயர்ந்த  மின் சாதனங்களை வாங்குவீர்கள். சப்தமாதிபதி செவ்வாய் 9ம் வீட்டில் உச்சம் பெற்று அமர்ந்திருப்பதால், மனைவி வழியில் மதிப்புக் கூடும்.

வீடு மனை வாங்குவது, விற்பது லாபகரமாக அமையும். வழக்கு சாதகம் ஆகும். கடன் பிரச்னைகள் தீரும். 7ம் வீட்டிலேயே சூரியனும் நிற்பதால் தம்பதிக்குள் பிரச்னைகள் வந்து போகும். மனைவிக்கு மருத்துவச் செலவுகள் வந்து நீங்கும்.

சனி பகவான் 6ம் வீட்டிலேயே தொடர்வதால், புதுத் தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியடையும். பங்குதாரர்களின் ஒத்துழைப்பு குறையும். உத்தியோகத்தில் அதிகாரி கள் உங்களின் கடின உழைப்பை புரிந்துகொள்ளாமல் பாரபட்சமாக நடந்துகொள்வர்.

தன்னடக்கத்துடன் செயல்படும் தருணம் இது.

ராசிபலன்

வாரி வழங்கும் வள்ளல் நீங்கள்.

6ல் சூரியன் வலுவாக அமர்ந்து இருப்பதால் எடுத்தக் காரியத்தில் வெற்றி கிட்டும். புது வேலை அமையும். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். பண வரவு அதிகரிக்கும். அயல்நாடு செல்லும் வாய்ப்பு கூடும். கடன்  சுமை குறையும்.

6ம் தேதி வரை சுக்கிரன் 6ம் வீட்டில் மறைந்து கிடப்பதால் கழுத்து வலி வரக்கூடும். கணவன்மனைவிக் குள் மனஸ்தாபங்கள் ஏற்படும். 7ம் தேதி முதல் சுக்கிரன் 7ல் அமர்ந்து உங்களைப் பார்க்க இருப்பதால் சோர்வு நீங்கி உற்சாகம் அடைவீர்கள். 8ல் செவ்வாய் அமர்ந்திருப்பதால் சொத்து சார்ந்த அலைச்சல் ஏற்படும்.

உங்கள் ராசிநாதன் புதனும் 6ம் வீட்டில் மறைந்திருப்பதால் உடல் நலக் குறைவு ஏற்படும். வாகன விபத்துகள் வந்துசெல்லும். அநாவசியச் செலவுகளை தவிருங்கள்.

சனி 5ம் வீட்டில் அமர்ந்து இருப்பதால் இனந்தெரியாத கவலை கள் வந்து செல்லும். குடும்பத்தில் பிள்ளைகளின் பங்களிப்பை எதிர் பார்ப்பீர்கள். புதியவரின் நட்பால் உற்சாகம் அடைவீர்கள்.

வியாபாரத்தில் வாடிக்கையாளரின் ரசனையை அறிந்து, அதற்கேற்ப செயல்பட்டால், லாபம் நன்கு பெருகும். உத்தியோகத்தில் உங்களின் மதிப்பு கூடும். உங்களின் பேச்சு எடுபடும். சக ஊழியர்களின் ஆதரவுப் பெருகும்.  

பொறுப்புகள் அதிகரிக்கும் நேரம் இது.

ராசிபலன்

னசாட்சிப்படி நடப்பவர் நீங்கள்.

புதன் சாதகமான வீடுகளில் செல்வதால் உங்களின் புத்திசாலித் தனம் வெளிப்படும். பண வரவு அதிகரிக்கும். பூர்வீகச் சொத்தில் மாற்றம் செய்வீர்கள். உறவினர், நண்பர்கள் உங்களை ஆலோசித்து, சில முடிவுகள் எடுப்பார்கள்.

6ம் தேதி வரை சுக்கிரன் சாதகமாக இருப்பதால் வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள்.  வெளி வட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும்.

செவ்வாய் 7ல் உச்சம் பெற்று அமர்ந்து இருப்பதால் மனைவி வழியில் உதவிகள் கிடைக்கும். தம்பதிக்குள் அந்நியோன்யம் பிறக்கும். சகோதரர்களால் மகிழ்ச்சி கிட்டும். வீடு, மனை வாங்குவீர்கள் .

சூரியன் 5ல் நிற்பதால் பிள்ளை களுடன் கருத்து வேறுபாடு நிலவும். கர்ப்பிணிகள் பயணங்களின்போது கவனமாக இருக்கவும். அரசாங்க விஷயங்கள் தாமதமாக முடியும். ராகு 3ம் வீட்டிலேயே நீடிப்பதால் மதிப்பு  கூடும். சுப நிகழ்ச்சிகளால் வீடு களை கட்டும். ஜென்ம குரு தொடர்வதால் ஆரோக்கியம் கெடும்.

தொழிலில், வேலையாட்களின் ஒத்துழைப்பு இல்லாமையால் லாபம் குறையும். பணியில் வேலை  அதிகரிக்கும். இடமாற்றம் உண்டு. சக ஊழியர்களிடம் இடைவெளி விட்டு பழகுவது நல்லது.  

அலைச்சலும் அதனால் பயனும் நிறைந்த நேரம் இது.

ராசிபலன்

ன்மானம் மிகுந்தவர் நீங்கள்.

சூரியன் கேந்திர ஸ்தானத்தில் அமர்ந்து இருப்பதால் உங்கள் கை ஓங்கும். வெளிநாட்டு, நிறுவனங்களில் வேலை கிடைக்கும். அதிகாரத்தில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள்.

வீடு கட்டும் வேலை விரைவு பெறும். சுக்கிரனும், புதனும் சாதகமாக இருப்பதால் பண வரவு இருக்கும்.  உறவினர் வீட்டு கல்யாணத்தை திறம்பட எடுத்து நடத்துவீர்கள். நண்பர்கள் சிலரின் சுயரூபத்தை இப்போது உணர்வீர்கள். மனைவி வழியில் நல்ல செய்தி உண்டு.

செவ்வாய் வலுவாக 6ம் வீட்டில் அமர்ந்து இருப்பதால் பழைய மனையை விற்றுவிட்டு, புது வீடு வாங்குவீர்கள். சகோதரர்களால் பயனடைவீர்கள்.

சனி பகவான் 3ம் வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால் யோசித்து  செயல்பட்டு சிக்கல்களை தீர்ப்பீர்கள். அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். ராகு கேது சாதகமாக இல்லாததால் சேமிப்புகள் கரையும். உடல் நலம் பாதிப்படையும். எதிலும் பிடிப்பற்ற போக்கு வந்து செல்லும். 12ல் குரு தொடர்வதால் சிறு சிறு அவமானம், தூக்கமின்மை ஏற்படும் .

வியாபாரத்தில் சூட்சுமங்களை உணர்ந்து செயல்படுவீர்கள். உத்தியோகத்தில் பணிகளைப் போராடி முடிப்பீர்கள். சக ஊழியர்கள் உதவி கரமாக இருப்பார்கள்.

தடுமாற்றத்துடன் முன்னேறும் காலம் இது.

ராசிபலன்

பிறந்த மண்ணை மறவாதவர் நீங்கள்.

சூரியன் 3ம் வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால் சவால்கள், விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. வழக்கு சாதகமாகும். கட்டட வேலைகளைத் தொடங்குவீர்கள்.

குரு பகவான் வலுவாக இருப்பதால் மனைவி வழியில் செல்வாக்கு கூடும். குழந்தை பாக்கியம் உண்டாகும். செவ்வாய் 5ல் நிற்பதால் பிள்ளைகளின் நட்பு வட்டத்தை கண்காணிப்பது நல்லது. சொத்து வாங்குவது, விற்பதில் அலைச்சலும், வில்லங்கமும் வந்து சேரும்.

கர்ப்பிணிப் பெண்கள் எடை மிகுந்தப் பொருட்களை சுமக்க வேண்டாம். புதனும், சுக்ரனும் சாதகமாக இருப்பதால் பணப்புழக்கம் அதிகரிக்கும். உங்களிடம் பழகும் நண்பர்கள், உறவினர்களின் பலம்  பலவீனத்தை உணர்வீர்கள்.

ராசிக்குள் ராகுவும், கேது 7ம் வீட்டிலும் அமர்ந்து இருப்பதால் குடும்பத்தில் சச்சரவுகள் வரக்கூடும். வாகன விபத்துகளும் ஏற்படக்கூடும். பாதச் சனி தொடர்வதால், யதார்த்த மாக நீங்கள் பேசுவதைக்கூட சிலர் தவறாகப் புரிந்துகொள்வார்கள்.

வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டு. உத்தியோகத்தில் நல்ல மாற்றம் உண்டு. சக ஊழியர்கள் மதிப்பார்கள்.  

எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறும் காலம் இது.

ராசிபலன்

லைகளில் ஆர்வமும் ஈடுபாடும் மிகுந்தவர் நீங்கள்.

ராசி நாதன் சுக்கிரன் சாதகமான நட்சத்திரத்தில் செல்வதால், தடைப் பட்டுக் கிடந்த வேலைகள் முடியும். எதிர்பாராத வகையில் பணம் வரும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். வீட்டில் பராமரிப்பு வேலைகளைத் தொடங்கு வீர்கள்.

செவ்வாய் சாதகமான வீடுகளில் செல்வதால் தைரியமாக முடிவு எடுப்பீர்கள். ரத்த சொந்தங்கள் வலிய வந்து உதவுவார்கள். சொத்து வாங்க முன்பணம் தருவீர்கள். மனைவி வழியில் ஆதரவு பெருகும்.

புதன் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால் உறவினர், நண்பர்களின் பாசமான விசாரிப்பால் ஆறுதல் அடைவீர்கள்.

ஜென்மச் சனி தொடர்வ தால் எதிலும் ஒருவித படபடப்பு, பயம், உடல் நலக் குறைவு ஏற்படும். சூரியன் 2ல் நிற்பதால் சோர்வு, சலிப்பு, கண் எரிச்சல் வந்து செல்லும்.

திருமணமாகாத பெண்கள் தங்கள் வருங்காலம் பற்றிய சில முக்கிய முடிவுகளை பெற்றோருடன் கலந்து ஆலோசித்து எடுப்பீர்கள்.

வியாபாரத்தில் லாபம் சுமாராக இருக்கும். சில யுக்திகளைக் கையாள வேண்டும். வேலையாட்களிடம் தொழில் ரகசியங்களைப் பகிர்ந்துகொள்ள வேண்டாம்.

உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் தாமதமாகக் கிடைக்கும். சக ஊழியர்களின் சொந்த விஷயங் களில் தலையிட வேண்டாம்.

புதிய பாதையில் பயணிக்கும் நேரம் இது.

ராசிபலன்

சொன்ன சொல் தவறாத பண்பாளர் நீங்கள்.

குரு 9ல் வலுவாக அமர்ந்து இருப்பதால் உங்களின் செல்வாக்கு உயரும். தொழிலதிபர்களின் அறிமுகம் கிடைக்கும். வங்கிக் கடன் கிடைத்து, வீடு கட்ட துவங்குவீர்கள். கல்யாண பேச்சுவார்த்தை கூடிவரும். மகனுக்கு அயல்நாட்டுத் தொடர்புடைய

நிறுவனத்தில் வேலை கிடைக்கும்.

விலை உயர்ந்த ஆடை, ஆபரணம் சேரும். மனைவி வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். ராகு லாப வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால், மறைமுக எதிர்ப்புகள் அடங்கும். இதமாகவும் இங்கிதமாகவும் பேசி சில காரியங்களை சாதித்துக் கொள்வீர்கள். பழைய கடனைத் தீர்க்க, புது வழி பிறக்கும்.

கேது 5ல் நீடிப்பதால், ஆன்மிக பயணங்கள் சென்று வருவீர்கள். புதனும், சுக்கிரனும் சாதகமாக இருப்பதால், எதிர்பார்த்த பண வரவு உண்டு. ராசிக்குள் சூரியன் நிற்பதால் வீண் டென்ஷன் ஏற்படும்.

12ல் சனி தொடர்வதால், குடும்ப அந்தரங்க விஷயங்களை வெளி நபர்களிடம் பகிர்ந்துகொள்ள வேண்டாம். கன்னிப் பெண்களுக்கு, பெற்றோரின் அன்பும், ஆதரவும் அதிகம் கிடைக்கும்.

வியாபாரத்தில் வேலையாட்கள், பங்குதாரர்கள் உங்களிடம் விசுவாசமாக நடந்துகொள்வார்கள். உங்கள் கடையை விரும்பியபடி மாற்றி அமைப்பீர்கள். உத்தியோகத்தில், உங்களின் திறமை களை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும்.

நினைத்த காரியங்களை செயல்படுத்தும் வேளை இது.

ராசிபலன்

நியாயமான விஷயங்களுக்கு தலைவணங்குபவர் நீங்கள்.

லாப வீட்டில் சனி வலுவாக இருப் பதால் கடினமான காரியங்களையும் எளிதாக முடித்து, வெற்றிவாகை சூடுவீர்கள். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். எதிர்பார்த்த வகையில் பணப்புழக்கம் அதிகரிக்கும். மூத்த சகோதரர்களின் வகையில் நன்மை உண்டு.

வீடு கட்டுவதற்காக மனை வாங்கும் முயற்சி்யைத் துவங்குவீர்கள். வேற்று மொழிக்காரர்கள் நண்பர்கள் ஆவார்கள். பதவிகளும் பொறுப்புகளும் உங்களைத் தேடி வரும்.

சூரியன் 12ல் மறைந்திருப்பதால் உங்கள் தந்தைக்கு வேலைச்சுமை, வீண் டென்ஷன், செலவுகள் வந்து போகும்.

சுக்கிரனும், புதனும் சாதகமான வீடுகளில் செல்கிறார்கள். எனவே, ஆடை, அணிகலன்களின் சேர்க்கை உண்டு. மனதுக்குப் பிடித்த உறவினர் கள், நண்பர்களுடன் மனம் விட்டு பேசுவீர்கள்.

வியாபாரத்தில் வாடிக்கையாளர் களின் ரசனைக்கேற்ற பொருட்களை கொள்முதல் செய்து, லாபத்தை பெருக்குவீர்கள். புதிய வாடிக்கை யாளர்களின் வரவு அதிகரிக்கும்.

உத்தியோகத்தில், உங்கள் மீது உள்ள மதிப்பும் மரியாதையும் கூடும். உங்கள் வேலையிலும் செயல்பாடு களிலும் வேகம் அதிகரிக்கும். பதவி உயர்வுக்காக உங்களுடைய பெயர் பரிசீலிக்கப்படும். சக ஊழியர்களுடன்  நட்புறவாடுவதில் கவனம் தேவை; அளவுடன் பழகுவது நல்லது.

எதிர்பார்ப்புகளின்றி உழைக்கும் நேரம் இது.

ராசிபலன்

கொள்கைப் பிடிப்பு கொண்டவர் நீங்கள்.

குரு வலுவாக இருப்பதால் வாழ்க்கையின் நெளிவு சுளிவுகளைக் கற்றுக் கொள்வீர்கள். தடைப்பட்ட வீடு கட்டும் வேலை, இனி விரைந்து முடியும். பூர்வீகச் சொத்து சேரும். பிள்ளைகளால் பெருமை அடைவீர்கள்.

கோயில் கும்பாபிஷேகத்தை முன்னின்று நடத்துவீர்கள். சுக்கிரனும், புதனும் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால், புதிதாக வீட்டு

உபயோகப் பொருட்கள் வாங்கும் வாய்ப்பு ஏற்படும். உறவினர்களால் ஆதாயம் கிடைப்பதுடன், கௌரவமும் ஒருபடி உயரும். நட்பாலும் ஆதாயம் உண்டு. வெளியூரில் இருந்து நல்ல செய்தி வரும்.

ராசிக்குள் செவ்வாய் நிற்பதால் வீடு மனை வாங்கும்போது, கவனமாக இருப்பது நல்லது. உடன்பிறந்தோர் உங்களை சரியாகப் புரிந்து கொள்ளவில்லையே என வருந்துவீர்கள்.

சூரியன் லாப வீட்டில் நிற்பதால் புது வேலை கிடைக்கும். அரசாங்க அதிகாரிகளின் நட்பு கிடைக்கும். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும்.

வியாபாரத்தில் எதிர்பார்த்ததைவிட லாபம் அதிகரிக்கும். வாடிக்கை யாளர்களின் நம்பிக்கையைப் பெறுவீர் கள். அயல்நாட்டுத் தொடர்புடைய நிறுவனங்களில் இருந்து வாய்ப்புகள் வரும். உத்தியோகத்தில் பழைய சிக்கல்கள் தீரும். மேலதிகாரி உங்களை நம்பி புதிய பொறுப்புகளை ஒப்படைப்பார். உங்கள் வேலையில் ஆற்றல் அதிகரிக்கும்.

திறமையால் சாதிக்கும் தருணம் இது.

ராசிபலன்

துணிச்சல் மிக்கவர் நீங்கள்.

சூரியன் 10ல் வலுவாக அமர்ந்து இருப்பதால் உங்களின் நிர்வாகத்திறன், ஆளுமைத் திறன் அதிகரிக்கும். மேல்மட்ட அதிகரிகள் உதவுவார்கள். அரசாங்க விஷயங்கள் சாதகமாக முடியும். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். அயல்நாடு செல்லும் வாய்ப்பு பிரகாசிக்கும்.

செவ்வாய் 12ம் வீட்டில் மறைந்து இருப்பதால் திடீர் பயணங்கள் உண்டு. பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். சுகபாக்கியாதிபதியான சுக்ரன் சாதகமாக இருப்பதால் பண வரவு உண்டு. கட்டட வேலைகளை தொடங்க, வங்கிக் கடன் கிடைக்கும்.

தாய்வழி உறவினர்கள் மதிப்பார்கள். வீட்டுக்குத் தேவையானப் பொருட்கள் வாங்குவீர்கள். புதன் சாதகமான வீடுகளில் செல்வதால் உங்கள் ரசனை மாறும். உறவினர்கள் மத்தியில் ஒருபடி உயர்ந்து நிற்க வேண்டுமென எண்ணு வீர்கள். பள்ளி, கல்லூரி கால நண்பர் களைச் சந்தித்து மகிழ்வீர்கள்.

குரு பகவான் 6ல் மறைந்து நிற்பதால் சந்தேகத்தால் நல்ல வர்களின் நட்பையும் இழக்க நேரிடும்.  கன்னிப் பெண்களின் புதிய முயற்சி களை பெற்றோர் ஆதரிப்பார்கள்.

வியாபாரத்தில், அதிரடியான திட்டங்களால் லாபம் ஈட்டுவீர்கள். வாடிக்கையாளர்களிடம் நற்பெயர் சம்பாதிப்பீர்கள். உத்தியோகத்தில், உங்களுக்கு வேலைச்சுமை அதிகரிக்கும். காலநேரம் இல்லாமல்  கடுமையாக உழைக்க வேண்டியது வரும். உயரதிகாரிகள் உங்களைப் புரிந்துகொள்வார்கள்.

சோர்ந்திருந்த முகம் மலரும் நேரம் இது.

ராசிபலன்

னுபவ அறிவு அதிகம் உள்ளவர் நீங்கள்.

புதனும், சுக்கிரனும் சாதகமான வீடுகளில் செல்வதால் புதிய யோசனைகள் பிறக்கும். பிள்ளை களால் ஆறுதல் அடைவீர்கள். ஓரளவு பண வரவு உண்டு என்றாலும், சேமிக்க முடியாதபடி செலவுகள் துரத்தும். நண்பர்கள் பக்கபலமாக இருப்பர். உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

செவ்வாய் வலுவாக இருப்பதால் சகோதரர்கள் உங்கள் வளர்ச்சிக்கு சாதகமாக இருப்பார்கள். ஒரு சொத்தை விற்று, சில பிரச்னைகளில் இருந்து வெளி வருவீர்கள்.

அஷ்டமத்துச் சனி தொடர்வதால் எடுத்த செயல் முடிவதற்கு, காலதாமதம் ஆகும். அவ்வப்போது உடல் நலக் குறைவு ஏற்படும். கேது ராசிக்குள் நிற்பதாலும், ராகு 7லும் அமர்ந்திருப்ப தால் குடும்பத்தினருடன் சண்டை, சச்சரவு, சிறு விபத்துகள், எதிலும் பிடிப்பற்ற போக்கு, செலவுகள் வந்து செல்லும்.

சூரியன் 9ல் நிற்பதால் தந்தை யுடன் வீண் விவாதங்கள் வந்து போகும். அரசு காரியங்கள் தள்ளிப் போய் முடியும்.  வியாபாரத்தில், தொழில் ரகசியங்கள் கசியாமல் பார்த்துக்கொள்ளுங்கள். பழைய வாடிக்கையாளர்களை தக்கவைத்துக் கொள்ளுங்கள்.

உத்தியோகத்தில் மூத்த அதிகாரி களிடம் அதிக உரிமை எடுத்துக் கொள்ள வேண்டாம். சக ஊழியர்கள் உங்களைப் பற்றி விமர்சித்தாலும் அனுசரித்துப் போங்கள்.

பழைய அனுபவங்களால் சாதிக்கும் நேரம் இது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism