Published:Updated:

எழுத்துக்களின் குணங்களும் ஆற்றல்களும்

கா.ஸ்ரீ

எழுத்துக்களின் குணங்களும் ஆற்றல்களும்

கா.ஸ்ரீ

Published:Updated:
எழுத்துக்களின் குணங்களும் ஆற்றல்களும்

ஆதிக்க எண்: 7

ஆதிக்க கிரகம்: கேது

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இந்த எழுத்து ஆக்க சக்தி கொண்டது. இந்த எழுத்தில் தொடங்கும் பெயரைக் கொண்டவர்கள், உலக மக்கள் நலமுடனும் வளமுடனும் இருக்கப் பாடுபடுவார்கள். தெய்வ பலத்தால், கடினமான காரியத்தையும் வெகு எளிதில் முடித்துவிடுவார்கள். இவர்களின் உடல் முழுவதும் காந்த சக்தி பரவியிருக்கும். முக்காலத்தையும் அறியும் ஆற்றல் இவர்களுக்கு உண்டு.

பலதரப்பட்ட காரியங்களைச் செய்து வாழ்வில் முன்னேற்றம் அடைவார்கள். மனதில் நல்ல கருத்துக்கள் தோன்றிய வண்ணம் இருக்கும். ஆராயும் மனத்திறன் உடையவர்கள். சுயமுயற்சி அதிகம் இருக்கும். தன் சொந்த விருப்பப்படியே எல்லாக் காரியங்களையும் செய்வார்கள். மனதில் அபூர்வ சக்திகள் குடிக்கொண்டிருக்கும். எடுக்கும் முயற்சிக்கு எதிர்ப்பு கிளம்பினாலும், விரைவில் அடங்கிவிடும்.

எழுத்துக்களின் குணங்களும் ஆற்றல்களும்

உலக அனுபவம் அதிகம் பெற்றிருப்பார்கள். பல நண்பர்களைப் பெற்றிருப்பார் கள். மந்திரம், மாயசக்தி, யோக முறைகளை நன்கு அறிந்திருப்பர். மனம் எப்போதும் தனிமையையே விரும்பும். பிறர் நலன் காப்பர். வாக்கில் சக்தி இருக்கும்.

மனபலம் மிக்கவர். குடும்பப் பாசம் ஒருபுறமும், சந்நியாசம் எதிர்ப்புறமும் கவர்ந்திழுக்கும். மருத்துவம், ஜோதிடம் பலிதமாகும். இவர்களின் ஒவ்வொரு பேச்சும் மந்திர சக்தியாக விளங்கும்.

எழுத்துக்களின் குணங்களும் ஆற்றல்களும்

ஆதிக்க எண்: 8

ஆதிக்க கிரகம்: சனி

இந்த எழுத்தைத் தன் பெயரில் கொண்டவர்கள், சொல்வன்மை மிக்கவர்கள். பேச்சாற்றலில் சிறந்து விளங்குவார்கள். இவர்களின் பேச்சுக்கு யாவரும் கட்டுப்படு வார்கள். வாக்கு பலிக்கும். கலை, காவியங்களில் புகழ் பெறுவார்கள். இவர்களின் பேச்சைக் கேட்கப் பல பேர் காத்திருப்பார்கள். எதிலும் தலைமையை விரும்புவார்கள். கலைகளில் பல

அரிய படைப்புகளை உருவாக்குவார்கள். பலருக்கு யோசனை சொல்லும் புத்திமான். பக்தியில் தனித்தன்மை இருக்கும்.

தான தருமங்கள் மனமுவந்து செய்வார்கள். கற்பனை வளம் மிகுந்திருக்கும். கதை, கவிதை, கட்டுரைகளை மிகச் சிறப்பாக எழுதுவார்கள். எழுத்தின் மூலமும், பேச்சின் மூலமும் இவர்களுக்குப் பணம், பதவி, புகழ் கிட்டும். தெய்விக சிந்தனை கவர்ந்திழுக்கும்.இவர்களின் வாக்குக்கு வசீகர சக்தியும் உயிரோட்டமும் உண்டு. இவர்கள் தவறான நடத்தையில் ஈடுபடாமல் இருந்தால், உடல்பலம் மிகும். இல்லாவிடில் நரம்புச் சக்தி வலுவிழந்து போகும். நிர்வாகத் திறமை மிக்கவர்கள். எதற்கும் துணிந்தவர்கள். மற்றவர்களின் மனதை மாற்றும் சக்தி இவர்களுக்கு உண்டு. கலைகளின் பிரியர். வசீகரத் தோற்றமுள்ளவராக இருப்பார் கள். தேசப்பற்றும், பக்தியும் மிகுந்து காணப்படும். சந்தர்ப்ப சூழ்நிலைகளைச் சரியாகக் கணக்கிட்டு வெற்றி கொள்வார்கள். அமைதியானவர். நற்புகழ் பெற்றிருப்பார்கள்.

எழுத்துக்களின் குணங்களும் ஆற்றல்களும்

ஆதிக்க எண்: 1

ஆதிக்க கிரகம்: சூரியன்

இந்த எழுத்து தெய்விக சக்தி கொண்டது. ஆனால், பெயரில் இதன் முன்னும் பின்னும் சக்திவாய்ந்த நல்ல எழுத்துக்கள் சேராவிடில், குழப்பத்தையும் பயத்தையும் விளைவிக்கும். இருவிதமான மனோநிலைகளை உண்டாக்கும். பலவிதமான சோதனைகளுக்குப் பின் சுகவாழ்க்கை உண்டாகும்.

இந்த எழுத்துடன் பெயரில் ஏதாவது ஓர் இடத்தில் A, I, K, R என்ற எழுத்துக்கள் கூடி நின்றால், நல்ல பலன்களைத் தரும் உறுதியான கொள்கை களைத் தோற்றுவிக்கும். எதிலும் தலைமை தாங்கும் சக்தியைத் தரும்.

இந்த எழுத்துக்களில் வரும் பெயர்கள் நம் நாட்டில் அதிகம் காணப்படுவதில்லை. அமெரிக்கா, சீனா, ஜப்பான், அரேபியா போன்ற நாடுகளில் இவ்வெழுத்தைக் கொண்ட பெயர்கள் அதிகம் உண்டு. பல விஷயங்களை சேகரிக்கச் செய்யும். பிறருக்கு உதவி செய்ய முற்படுவார்கள். சொகுசு வாழ்க்கை அமையும். சகல லாபமும் உண்டாகும். தனித்த ஆற்றல் இந்த எழுத்துக்குக் கிடையாது. மற்ற எழுத்துக் களுடன் சேரும்போது, ஆக்க சக்தி அதிகரிக்கும். உழைப்பின் மூலம் உயர்வார்கள்.

எழுத்துக்களின் குணங்களும் ஆற்றல்களும்

 ஆதிக்க எண்: 2

ஆதிக்க கிரகம்: சந்திரன்

ஆழ்ந்த அறிவைத் தரும் இந்த எழுத்து, பெயரின் இடையில் வருவதைவிட, முதலில் வருவது மிகவும் சிறப்பானது. சுய முயற்சியால் முன்னேற்றம் அடையக் கூடியவர்கள். வாழ்க்கையில் உயர்ந்த லட்சியத்தை அடைவார்கள். எப்போதும் சுறுசுறுப்புடன் காட்சி அளிப்பார்கள். உடலுழைப்பு மிக்கவர்கள். புகழ் பெறவேண்டுமென்ற ஆர்வம் அதிகமாக இருக்கும். மற்றவர்களின் மனதை நன்கு அறிந்து வைத்திருப்பார்கள். தனது சுயவிருப்பப்படியே எதையும் செய்து முடிப்பார்கள்.

அரசியல், கலைத்துறை போன்ற இரு துறைகளில் பிரகாசிப்பார்கள். மனோதிடம் கொண்டவர்கள். சாதனை செய்யக்கூடியவர்கள். சந்தர்ப்பங்களை மிகச் சரியாகப் பயன்படுத்தி, வெற்றி பெறக்கூடியவர்கள்.

எழுத்துக்களின் குணங்களும் ஆற்றல்களும்

 ஆதிக்க எண்: 3

ஆதிக்க கிரகம்: குரு

இவர்களின் மனதில் தீவிர கருத்துக்கள் உதிக்கும். நன்மையும் தீமையும் கலந்த குணம் இருக்கும். பிறரைச் சண்டை மூட்டிவிடும் குணமும், சமாதானம் செய்து வைக்கும் குணமும் கலந்திருக்கும். பிறரை ஒரேயடியாகப் போற்றுவார்கள்: இல்லாவிட்டால் தூற்றுவார்கள். மேலான செல்வங்களைப் பெற்றவராயின், மக்களின் துயரைப் போக்குவர். வைத்தியத் தொழில் பலிதம் ஆகும். புகழ் சேரும். மனதில் ஏற்படும் கருத்துக்களை ஒருமுகப்படுத்திக்கொண்டால், வெற்றி மேல் வெற்றி கிட்டும்.

தியானம், யோகம் போன்ற பயிற்சிகளை மேற்கொண்டால் மனபலம் விருத்தி ஆகும். இவர்களின் மன ஆழத்தைக் காண்பது அரிது. திடீர்க் கோபமும், நல்ல குணமும் இருக்கும். செய் நன்றியை மறக்காதவர்கள். தனக்கு உதவியவரை உயிர் உள்ளவரை மறக்க மாட்டார்கள்.

எழுத்துக்களின் குணங்களும் ஆற்றல்களும்

ஆதிக்க எண்: 4

ஆதிக்க கிரகம்: ராகு

இந்த எழுத்து நிதானத்தை யும், முன்னெச்சரிக்கையையும் குறிக்கக்கூடியது. பிடிவாத குணம் இருக்கும். இவர்கள் வைத்ததுதான் சட்டம் என்றிருக்கும். ஒருபோதும் தீர்மானங்களை மாற்றிக்கொள்ள மாட்டார்கள். மற்றவர்களின் கருத்தை ஏற்றுக் கொள்ளமாட்டார்கள்.

பேச்சிலும் செயலிலும் ஒருவித தீவிரவாதம் இருக்கும். பிறருக்கு அறிவுரை கூறுவதில் சாமர்த்தியசாலிகள். சொந்த முயற்சியால் எதிர் நீச்சல் போட்டு வெற்றி பெறுவார்கள். மன உறுதியும், உடல் வலிமையும் கொண்டவர்கள்.

பெயரில் இந்த எழுத்து ஒன்றுக்கு மேற்பட்டுப் பல இடங்களில் இடம்பெற்றால், தீவிரமான தன்மை மிகுந்து காணப்படும். அஷ்டமா சித்திகள் வெகு எளிதில் கைகூடும். மனதின் ரகசியத்தை நன்கு அறிந்து வைத்திருப்பார்கள்.

புலன்களைக் கட்டுப்படுத்தும் அதீத சக்திகள் இருக்கும். மனிதப் புலன்களுக்கு எட்டாத ரகசியங்களையும் அறிவார்கள். தீர்க்கமான, தெளிவான முடிவுகள் இருக்கும். ஆக்கபூர்வமான சிந்தனைகள் தோன்றும். மனோவலிமை மிக்கவர்கள். தெய்வாம்சம் பொருந்தியவர்கள்.

தொடரும்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism