Published:Updated:

வளம் தரும் வாஸ்து!

வித்யாவாரிதி சுப்ரமணிய சாஸ்திரிகள்

வளம் தரும் வாஸ்து!

வித்யாவாரிதி சுப்ரமணிய சாஸ்திரிகள்

Published:Updated:

தியில் இருந்து தற்காலம் வரையிலும் மனிதனின் வசிப்பிடங்கள் எங்ஙனம் வளர்ச்சி பெற்றன, கோடானு கோடி ஆண்டுகளாக நிகழ்ந்த இந்த பரிணமிப்பில் நம் முன்னோர்கள் சந்தித்த அனுபவங்கள் என்னென்ன என்பதை கடந்த இதழில் படித்தறிந்தோம்.

இதன் அடிப்படையில் தங்களின் அனுபவங்கள் மூலம் எண்ணற்ற வழிமுறைகளை, வசிப்பிடம் அமைப்பதற்கான நியதிகள் குறித்து நம் முன்னோர்கள் நமக்கு நிறைய அறிவுரைகளை வழங்கியிருக்கிறார்கள். நமக்கும் நமது அடுத்த தலைமுறைக்குமான சிறந்த பாடங்களாக திகழும் அவர்களின் வழிகாட்டலை ஒவ்வொருவரும் அறிந்து வைத்திருக்கவேண்டும்.

அதற்குமுன்னதாக ஜோதிட சாஸ்திரம் சொல்லும் சில தகவல்களைத்  தெரிந்துகொள்வது அவசியம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

யார் யாருக்கெல்லாம் வீடு-மனை யோகம் உண்டு, வீடுவாசல் இருந்தாலும் அதில் சுகபோகமாக வாழும் பாக்கியம் கிடைக்குமா, வாஸ்து சாஸ்திரம் எல்லோருக்கும் பலனளிக்குமா... என்பனப் போன்ற பல்வேறு கேள்விகளுக்கும் ஜோதிடம் நமக்கு பதில் தருகிறது.

வளம் தரும் வாஸ்து!

நான்காம் இடமும் கிரகங்களும்!

ஒருவரது ஜனன ஜாதகத்தில் 4-ம் வீட்டில் (ஜன்ம லக்னத்தில் இருந்து) நவகிரகங்களில் ஒன்றான சூரியன் அமைந்திருப்பின், அவரது ஆயுளின் மத்திய காலத்துக்கு பிறகே வீடு வாசல் நன்கு அமைய வாய்ப்பு உண்டு. பெற்றோர் மீது வாஞ்சை இருக்கும். அதேநேரம், குடும்ப அங்கத்தினரின் ஒத்துழைப்பு  கிடைப்பதில் சிரமங்கள் ஏற்படலாம். இவர்களுக்கு எத்தகைய வீடு அமையப் பெற்றாலும் உடல் ஆரோக்கியம், அவ்வப்போது லேசான பாதிப்புக்கு உள்ளாகும்.

ஒருவரது ஜனன ஜாதகத்தில் ஜன்ம லக்னத்திற்கு 4-ஆம் வீட்டில் ராசிக்கட்டத்தில் சந்திரன் அமையப் பெற்றிருந்தால், அவர்கள் எத்தகைய வீட்டில் வசித்தாலும், சுகபோகங்களை அனுபவிப்பதில் தடை ஏற்படாது. ஆனால், அடிக்கடி இடம் மாறி வாழவேண்டியது வரலாம்.

ஜன்ம லக்னத்துக்கு நான்காம் வீட்டில் செவ்வாய் அமைந்திருப்பின் நல்ல வீடு-மனை யோகங்கள் உண்டு. அதேநேரம், மற்றவர்களுடன் இவர்கள் அனுசரித்துச் செல்வது கடினம். குரு பார்வை ஏற்பட்டால் நல்ல வீடு, மனை யோகம் கிட்டும். கெட்ட கிரகங்களின் பார்வை இருப்பின், வாஸ்து சாஸ்திரம்ப்படி அமைந்த வீட்டில் வாழ்ந்தாலும் அமைதி கிடைக்காது.

ஜன்ம லக்னத்து நான்காம் வீட்டில் புதன் அமையப்பெற்றிருந்தால், கலை நயம் மிகுந்த வீடு-வாசல் நிச்சயம் அமையும்.  இனபந்துக்களால் நன்மைகள் உண்டு. இயற்கையி லேயே இவர்கள் நிரம்ப படித்தவர்களாக இருப்பார்கள். எனவே, எத்தகைய வீடுகளில் வசித்தாலும் தங்களுடைய புத்திசாலித்தனத்தால் சிரமங்களை சமாளித்துவிடுவார்கள்.

ஜன்ம லக்னத்துக்கு நான்காம் வீட்டில் குரு அமையப்பெற்றால், வயதின் மத்தம பாகத்துக்கு மேல் அந்திம பாகத்தில் சிறப்பான வீடும், மனை யோகமும் கிடைக்கும். இவர்களுக்கு வயதின் இறுதி காலம் சுகமாகவும் அமைதியாகவும் இருக்கும். எத்தகைய அமைப்புடைய வீடாக இருந்தாலும் தோஷம் ஏற்படாமல், குலம்  தழைத்தோங்கும்.

ஜன்ம லக்னத்துக்கு நான்காம் வீட்டில் சுக்கிரன் அமைந்திருப்பின் இயற்கையிலேயே நல்ல வீடுவாசல், வாகன யோகங்கள் அமைந்துவிடும். வாடகை வீட்டில் வசித்தால்கூட, அந்த வீடு அழகாகவும் ஆடம்பரமாகவும் அமைந்திருக்கும். அதேபோன்று எத்தகைய அமைப்புள்ள வீடும் இவர்களுக்கு துன்பம் தராது. அதேநேரம்... தனுசு, மீனம் ஆகிய லக்னங்களில் பிறந்தவர்களுக்கு மட்டும், நான்கில் சுக்கிரன் இருந்து நல்ல வீடுவாசல் அமையப் பெற்றாலும் வீட்டில் அமைதி ஏற்படுவது கஷ்டம். வாஸ்து சாஸ்திரம் பயன்படாது. வேறு பரிகாரங்கள் அவசியம்.

ஜன்ம லக்னத்துக்கு 4ஆம் வீட்டில் சனி இருப்பின், கல்விகேள்விகளில் முழுமை அடையாமல் போவதாலோ, தகுதியற் றவர்களின் நட்புறவாலோ குடும்பத்தில் அபிப்பிராய பேதங்கள் வரக்கூடும். ஆசாரம் குறைவுபடும். சனி பகவான் நல்ல ஆதிபத்தியம் பெற்று சுபக்கிரகப் பார்வை, சேர்க்கை பெற்று அமைந்திருந்தால், இவர்களுக்கு நல்ல வீடுமனை யோகங்கள் உண்டாகும். இல்லையெனில் மன அமைதியுடன் வாழ்க்கை நடத்துவது கஷ்டம்தான். இவர்களுக்கும் வேறு பரிகாரங்கள் தேவைப்படும்.

வளம் தரும் வாஸ்து!

ஜனன ஜாதகத்தில் நான்காம் வீட்டில் ராகு அமையப் பெற்றிருந்தால், நீசர்களுக்கு மத்தியில் வசிக்கவேண்டியது வரும். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன் அபிப்பிராய பேதங்கள் வரக்கூடும். அதேபோன்று அடிக்கடி வீடுவாசலையும் மாற்ற வேண்டியது வரலாம். இல்லற சுகம் பாதிப்பு அடையாது. ஆனாலும் வீட்டில் திருப்தியின்மை நிலவும். இவர்கள் வசிப்பது வாஸ்து அமைப்புள்ள வீடாக இருந்தாலும், வாஸ்து சாஸ்திரப்படி வீட்டை மாற்றி அமைத்தாலும் மன அமைதி கிடைப்பது அரிது.

ஜனன ஜாதகத்தில் நான்காம் வீட்டில் கேது இருப்பின் பூர்வீக வீடுகளில் வசிக்க இயலாது. வீடு வாசல் இழப்புகள் ஏற்படும். பூர்விகச் சொத்து இருந்தாலும் பயன் இருக்காது. இவர்கள் மற்றவர்கள் பெயரில் சொத்துசுகங்களை ஏற்படுத்திக்கொள்வது நல்லது. இவர்களுக்கு வாஸ்து சாஸ்திரம் பயன்படாது.

ஜனன ஜாதகத்தில் நான்காம் வீட்டில் மாந்தி இருப்பின், செல்வச் செழிப்பு ஏற்படும். ஆனால், மாந்தி அமைந்துள்ள ராசியாதிபதி லக்ன கேந்திரம் பெற வேண்டும். அப்போதுதான் நல்ல வீடுவாசல் அமையும்.

ராகு, கேது, சனி, செவ்வாய் போன்ற கிரகங்கள் மாந்தியுடன் சம்பந்தப்பட்டால் கிரக தோஷ பரிகாரங்களால் நிவர்த்தி செய்து கொள்ளலாம். பெரும்பாலும் இவ்வாறான அமைப்பு உடையவர்களுக்கு மனை வீடு போன்றவை... ஒரு காலத்தில் களவு, கொலை நடந்த இடங்களிலோ, மயானங்களின் அருகிலோ இயற்கையாகவே அமைந்துவிடும். வாஸ்து சாஸ்திரம் பயன்படாது.

இதேபோன்று கிரகங்களின் பார்வை, சேர்க்கையின் அடிப் படையிலும் சில விளக்கங்களைச் சொல்கிறது ஜோதிட சாஸ்திரம். அதுபற்றி தொடர்ந்து பார்ப்போம்.

- தொடரும்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism