Published:Updated:

12 ராசிகளுக்குமான குருப் பெயர்ச்சிப் பலன்கள்! #Astrology

12 ராசிகளுக்குமான குருப் பெயர்ச்சிப் பலன்கள்! #Astrology
12 ராசிகளுக்குமான குருப் பெயர்ச்சிப் பலன்கள்! #Astrology

12 ராசிகளுக்குமான குருப் பெயர்ச்சிப் பலன்கள்! #Astrology

குரு பகவான், 'பிரகஸ்பதி', 'மந்திரி' மற்றும் 'தென் திசைக்கடவுள்' என பலவிதமான பெயர்களில் அழைக்கப்படுகிறார். புத்திரக்காரகனாகவும், அறிவுக்காரகனாகவும் இருக்கிறார். வேதாந்த ஞான கிரகமான வியாழ பகவான் எனும் குரு பகவான் நிகழும் ஹேவிளம்பி வருடம் ஆவணி மாதம் 17-ம் தேதி சனிக்கிழமை (2.9.17) அன்று, சுக்ல பட்சத்து ஏகாதசி திதி மேல்நோக்குள்ள உத்திராடம் நட்சத்திரம், காலை 9.25 மணிக்கு துலாம் லக்னத்தில், கன்னி ராசியிலிருந்து சர வீடான துலாம் ராசிக்குள் சென்று அமர்கிறார். 2.10.18 வரை அங்கு அமர்ந்து தனது அதிகாரத்தை வெளிப்படுத்துவார். குருதான் இருக்கும் இடத்தை விட பார்க்கும் இடங்கள்தான் விசேஷப் பலன்களைப் பெறுகின்றன. 12 ராசிகளுக்குமான குருப் பெயர்ச்சிப் பலன்களை ஜோதிட முனைவர் கே.பி.வித்யாதரன் கணித்துள்ளதை இங்கு காண்போம். 

மேஷம்:

உங்கள் ராசிக்கு 7-ல் 2.9.17 முதல் 2.10.18 வரை குரு பகவான் அமர்ந்து பலன்களைத் தர இருக்கிறார். உங்கள் திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கும். அறிவாற்றலை வெளிப்படுத்த வாய்ப்புகள் அமையும். உடல் நலம் சீராகும். தடைப்பட்ட காரியங்கள் முடியும். வி.ஐ.பி-க்களின் அறிமுகம் கிடைக்கும். கொடுத்த கடன் திரும்ப வரும். பண வரவும் அதிகரிக்கும். கணவன் மனைவி ஒன்று சேருவீர்கள். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். குலதெய்வப் பிரார்த்தனை நிறைவேறும். வழக்குகள் சாதகமாகும்.


ரிஷபம்: 

2.9.17 முதல் 2.10.18 வரை குரு பகவான் உங்கள் ராசிக்கு 6-ம் வீட்டில் பிரவேசிக்க இருக்கிறார். சகட குரு கலக்கத்தைத் தருவாரே என்று அச்சப்பட வேண்டாம். சின்னச் சின்னப் போராட்டங்களைச் சந்திக்க வேண்டியிருந்தாலும், அதனால் பெரிதும் பாதிப்பு ஏற்படாது. செலவுகளும் துரத்தும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தம்பதிகள் ஒருவரையொருவர் அனுசரித்துச் செல்லவும். கடன்கள் கவலை தரும். புதியவர்களை நம்பி முடிவு எடுக்க வேண்டாம்.

மிதுனம்: 

உங்கள் ராசிக்கு பூர்வ புண்ணிய ஸ்தானமாகிய 5-ம் வீட்டில் 2.9.17 முதல் 2.10.18 வரை குரு பகவான் அமர இருக்கிறார். எனவே, அடிப்படை வசதிகள் பெருகும். பிரச்னை களுக்குத் தீர்வு கிடைக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். கணவன் மனைவிக்கு இடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும். வெளிநாடு தொடர்புடைய நிறுவனத்தில் வேலை கிடைக்கும். தாயாரின் உடல் நலம் சீராகும். வழக்கு சாதகமாகும். விலகிச் சென்றவர்கள் மீண்டும் வந்து பேசுவார்கள். குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள்.


கடகம்: 

உங்கள் ராசிக்கு 4-ம் இடத்தில் 2.9.17 முதல் 2.10.18 வரை குரு பகவான் அமர்ந்து பலன் தர இருக்கிறார். பொறுமை காப்பது நல்லது. நல்லவர்களின் தொடர்பை வளர்த்துக்கொள்ளுங்கள். வீட்டுச் செலவுகள் அதிகரிக்கும். குடும்பத்தினருடன் அனுசரித்துச் செல்வது நல்லது. கணவன் மனைவி விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. தாயாரின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. சிலருக்கு வீடு மாற வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும். 


சிம்மம்:

குரு பகவான் உங்கள் ராசிக்கு 3-ம் இடத்தில் 2.9.17 முதல் 2.10.18 வரை அமர்ந்துகொண்டு பலன் தர இருக்கிறார். சகிப்புத் தன்மை அவசியம். பணப் பற்றாக்குறை நீடிக்கும். முக்கிய விஷயங்களில் ஆலோசித்து முடிவெடுப்பது நல்லது. குடும்ப விஷயத்தில் மற்றவர்களின் தலையீட்டை அனுமதிக்க வேண்டாம். 

கன்னி: 

உங்கள் ராசிக்கு தனஸ்தானமான 2-ம் இடத்தில் குரு பகவான் 2.9.17 முதல் 2.10.18 வரை அமர்ந்து பலன்களைத் தர இருக்கிறார். மனதில் உற்சாகம் ஏற்படும். பணவரவு அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் நிம்மதியும் நிலவும். பிரிந்திருந்த கணவன் மனைவி ஒன்று சேருவார்கள். கட்டடப் பணியை மீண்டும் தொடங்க வங்கிக் கடனுதவி கிடைக்கும். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். புதிய ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள்.

துலாம்: 

குரு பகவான் 2.9.17 முதல் 2.10.18 வரை உங்கள் ராசியில் ஜன்ம குருவாக அமர்வதால் சகிப்புத் தன்மையுடன் நடந்துகொள்வது நல்லது. வேலைச் சுமை அதிகரிக்கும். தம்பதிகள் அனுசரித்துச் செல்வது நல்லது. நண்பர்களை மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்தி வைக்க வேண்டாம். சிலருக்கு உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படக்கூடும். 

விருச்சிகம்:

உங்கள் ராசிக்கு விரயஸ்தானமாகிய 12-ம் வீட்டில் குரு பகவான் 2.9.17 முதல் 2.10.18 வரை அமர்வதால் சவால்களைச் சந்திக்க வேண்டி வரும். செலவுகள் துரத்தும். கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு நீங்கும். சொத்துப் பிரச்னைக்குச் சுமுகமாகத் தீர்வு காண முயலவும். பணப்பற்றாக் குறையின் காரணமாக வெளியில் கடன் வாங்கவும் நேரிடும். வீடு கட்ட வங்கிக் கடனுதவி கிடைக்கும்.

தனுசு: 

உங்கள் ராசிக்கு லாப ஸ்தானமாகிய 11-ம் வீட்டில் குரு பகவான் 2.9.17 முதல் 2.10.18 வரை அமர்வதால் கடினமான வேலைகளையும் எளிதாக முடித்துக் காட்டுவீர்கள். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். கணவன் மனைவிக்குள் அந்நியோன்யம் அதிகரிக்கும். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். பிள்ளைகளின் உயர்கல்வி, உத்தியோகம் தொடர்பான முயற்சிகள் வெற்றி பெறும். அரசாங்கக் காரியங்கள் சாதகமாக முடியும். வழக்குகள் சாதகமாகும்.   

மகரம்:

உங்கள் ராசிக்கு 10-ம் இடத்தில் 2.9.17 முதல் 2.10.18 வரை குரு பகவான் அமர்வதால் வேலைகளைத் திட்டமிட்டபடி முடிக்க முடியாது. உழைப்புக்கான அங்கீகாரமோ, பாராட்டோ கிடைக்காது. பல வேலை களையும் நீங்களே பார்க்க வேண்டி வரும். தன்னம்பிக்கை குறையும். கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் ஏற்படக்கூடும். சிலர் பணியின் காரணமாகக் குடும்பத்தைப் பிரிந்து செல்ல நேரிடும். 

கும்பம்:

உங்கள் ராசிக்கு 2.9.17 முதல் 2.10.18 வரை குரு பகவான் 9-ம் இடத்தில் அமர்ந்து பலன் தர இருக்கிறார். வாழ்க்கையின் நெளிவுசுளிவுகளைக் கற்றுக்கொள்வீர்கள். பேச்சில் கனிவு பிறக்கும். முடியாத காரியங்களையும் முடித்துக் காட்டுவீர்கள். எதிர்பார்த்த தொகை கைக்கு வரும். கணவன் மனைவிக்கு இடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும். கோயில்களுக்குச் சென்று வருவீர்கள்.

மீனம்:

குரு பகவான் 2.9.17 முதல் 2.10.18 வரை உங்கள் ராசிக்கு 8-ல் அமர்ந்து பலன்களைத் தர இருக்கிறார். அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டாகும். எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் உண்டாகும். சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். கடன்களால் கலக்கம் உண்டாகும். திடீர்ப் பயணங்களால் அலைச்சலும் டென்ஷனும் ஏற்படும். வழக்குகள் சுமுகமாகும்.

அடுத்த கட்டுரைக்கு