Published:Updated:

ராசிபலன்

டிசம்பர் 9 முதல் 22 வரைஜோதிடரத்னா கே.பி.வித்யாதரன்

ராசிபலன்

காலம் தவறாமையை கடைப்பிடிப்பவர்களே!

உங்கள் ராசிக்கு சுக்ரனும், புதனும் சாதகமாக இருப்பதால், பணப்புழக்கம் அதிகரிக்கும். கல்யாணப் பேச்சு வார்த்தை நல்ல விதத்தில் முடியும்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் ராசிநாதன் செவ்வாய் 10-ம் வீட்டில் கேந்திர பலம் பெற்று அமர்ந்திருப்பதால், சகோதரர்கள் ஆதரவாக இருப்பார்கள். ராகு தொடர்ந்து உங்களுக்கு சாதகமாக இருப்பதால், சாதுர்யமாகவும், சமயோசிதமாகவும் பேசி சாதிப்பீர்கள்.

சூரியன் 16-ம் தேதி முதல் 9-ல் அமர்வதால், தந்தையாரின் உடல் நிலை பாதிக்கும். இதுவரை உங்கள் ராசிக்கு 7-ல் கண்டச் சனியாக அமர்ந்து, உங்கள் மனைவிக்கு மருத்துவச் செலவுகளையும் தந்த சனிபகவான் 16-ம் தேதி முதல் 8-ம் வீட்டில் அமர்வதால், மனைவியின் ஆரோக்கியம் சீராகும். என்றாலும், அஷ்டமத்துச் சனியாக இருப்பதால், யாருக்காகவும் சாட்சி கையெழுத்திட வேண்டாம்.

 வியாபாரத்தில் வழக்கமான லாபம் உண்டு. 

உத்தியோகத்தில் கடினமான வேலைகளையும் எளிதாக முடிப்பீர் கள். சக ஊழியர்களால் நெருக்கடிகள் வந்து நீங்கும்.

 ஏமாற்றங்கள், எதிர்ப்புகளைக் கடக்கும் நேரம் இது.

ராசிபலன்

வெளுத்ததெல்லாம் பால் என நினைப்பவர்களே!

செவ்வாய் 9-ம் வீட்டில் உச்சம் பெற்று அமந்திருப்பதால், எதிர்பார்த்த காரியங்கள் தடையின்றி முடியும். வழக்குகளில் இருந்த தேக்க நிலை மாறி சாதகமாக முடியும்.

வீடு, மனை வாங்குவதற்கு வங்கிக் கடன் உதவி கிடைக்கும். கல்யாணப் பேச்சு வார்த்தை சுமுகமாக முடியும். சுக்ரனும், புதனும் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால், வாகனத்தை சீர் செய்வீர்கள்.
இதுவரை உங்கள் ராசிக்கு 6-ம் வீட்டில் அமர்ந்து நற்பலன்களைத் தந்துகொண்டிருந்த சனிபகவான் 16-ம் தேதி முதல் 7-ம் வீட்டில் அமர்ந்து கண்டச் சனியாக தொடங்குவதால், வீண் சந்தேகம், ஈகோ பிரச்னையால் கணவன்-மனைவிக்குள் பிரிவுகள் ஏற்படக்கூடும்.

 குரு 3-ம் வீட்டில் மறைந்திருப்பதால், வேலைச்சுமை இருந்துகொண்டே இருக்கும். தாழ்வுமனப்பான்மை தலை தூக்கும். சூரியன் சாதகமாக இல்லாததால், உடல் உஷ்ணம் அதிகமாகும்.

வியாபாரத்தில் போட்டிகள் இருக்கும். பங்குதாரர்களை அனு சரித்துப் போகவும். உத்தியோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். சக ஊழியர்களால் சங்கடங்கள் வரும். அனுசரித்துச் செல்லவும்.

சவால்களைச் சமாளிக்க வேண்டிய வேளை இது.

ராசிபலன்

குலம், கோத்திரம் பார்க்காமல் மனித நேயத்துடன் உதவுபவர்களே!

குருபகவான் 2-ம் வீட்டில் அமர்ந்திருப்பதால், வருமானம் உயரும். எதிர்பாராத தொகை ஒன்று கைக்கு வரக்கூடும். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். 15-ம் தேதி வரை சூரியன் 6-ல் நிற்பதால், அரசால் அனுகூலம் உண்டு.

16-ம் தேதி முதல் 7-ல் அமர்ந்து உங்கள் ராசியைப் பார்க்க இருப்பதால், அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம். மனைவிக்கு மருத்துவச் செலவுகள் வந்து நீங்கும். செவ்வாய் 8-ம் வீட்டில் மறைந்திருப்பதால், சிறுசிறு விபத்துகள், மனஉளைச்சல், செலவினங்கள் வந்து செல்லும்.

புதனும் சுக்ரனும் சாதகமான வீடுகளில் செல்வதால், கணவன்-மனைவிக்குள் அந்நியோன்யம் பிறக்கும். அடகிலிருந்த நகையை மீட்பீர்கள். உறவினர், நண்பர்களால் உதவிகள் உண்டு.

16-ம் தேதி முதல் சனிபகவான் 6-ம் வீட்டில் நுழைவதால், இனி தொட்ட காரியங்களெல்லாம் துலங்கும். அண்டை மாநிலத்தவர்களால் திடீர் திருப்பம் உண்டாகும். வியாபாரத்தில் ஏற்பட்ட இழப்புக்களைச் சரிசெய்வீர் கள். இரட்டிப்பு லாபம் உண்டு. தள்ளிப் போன ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்தியோகத்தில் பதவி, சம்பள உயர்வு உண்டு.

புது எண்ணங்களால் புகழடையும் தருணம் இது. 

ராசிபலன்

தையும் உடனே கிரகிக்கும் அறிவாற்றல் மிக்கவர்களே!

16-ம் தேதி முதல் சூரியன் 6-ம் வீட்டில் நுழைவதால், உங்களின் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். அரசாங்கத்தில் பெரிய பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். திடீர் பணவரவு உண்டு. அரசால் ஆதாயம் உண்டு. சுக்ரனும் 6-ல் மறைந்திருப்பதால், வாகனப் பழுது, விபத்துகள் வரக்கூடும்.

புதனும் 6-ம் வீட்டிலேயே நிற்பதால், ஓய்வெடுக்க முடியாதபடி வேலைச்சுமை இருக்கும்.

இதுவரை 4-ம் வீட்டில் அமர்ந்து வீண் பழியையும், தாயாருடன் மோதல்களையும் தந்த சனி, 16-ம் தேதி முதல் 5-ல் நுழைவதால், தாயாரின் உடல் நிலை சீராகும். என்றாலும் பூர்வ புண்ய ஸ்தானத்தில் சனி அமர்வதால், கர்ப்பிணிப் பெண்கள் மருத்துவரின் ஆலோசனை யின்றி எந்த மருந்தையும் உட்கொள்ள வேண்டாம். பிள்ளைகளால் அலைச்சலும், செலவுகளும் வந்து நீங்கும். பூர்வீக சொத்துப் பிரச்னை தலைதூக்கும். வியாபாரம் மந்தமாக இருக்கும். புது முதலீடுகளைத் தவிர்க்கவும். உத்தியோகத்தில் சின்னச் சின்ன அவமானங்கள் ஏற்படக்கூடும். மேலதிகாரி சில நேரத்தில் கடிந்து பேசினாலும் பல சமயங்களில் கனிவாக நடந்துகொள்வார்.

 அலுப்பு சலிப்புக் கொள்ளாமல் ஆக வேண்டியதை பார்க்கும் காலம் இது.

ராசிபலன்

பிரச்னைகளைப் பெரிதுபடுத்தாமல் சமாதானத்தால் சாதிப்பவர்களே!

உங்களுக்குச் சாதகமாக சுக்ரன் நிற்பதால், புதிய திட்டங்கள் நிறைவேறும். வாகனம் சரியாகும். தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள்.

உங்களின் பிரபல யோகாதிபதியான செவ்வாய் 6-ல் அமர்ந்திருப்பதால், பெரிய பதவிக்கு தேர்ந்தெடுக்கப் படுவீர்கள். எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள்.

 சகோதர வகையில் இருந்த பிணக்குகள் நீங்கும். 16-ம் தேதி முதல் சூரியன் 5-ல் அமர்வதால், பிள்ளைகளை அவர்களின் எண்ண ஓட்டத்திலேயே சென்று பிடிப்பது நல்லது.

இதுவரை உங்கள் ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3-ம் வீட்டில் அமர்ந்து பணவரவையும், தன்னம்பிக்கையையும் தந்த சனிபகவான் 16-ம் தேதி முதல் 4-ம் வீட்டில் நுழைந்து அர்த்தாஷ்டமச் சனியாக வருவதால், இடமாற்றம் உண்டு. வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகமாகும். உங்கள் மீது சிலர் வீண் பழி சுமத்த முயற்சிப்பார்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த புது சலுகைகளை அறிமுகம் செய்வீர்கள்.

உத்தியோகத்தில் சின்னச் சின்ன எதிர்ப்புகள் இருக்கும். அவசர முடிவுகளை தவிர்க்கவும்.

விடாமுயற்சியால் வெற்றி பெறும் நேரம் இது.

ராசிபலன்

ழைய கலைப் பொருட்களை பத்திரப்படுத்தி வைக்கும் பழக்க முள்ளவர்களே!

கடந்த ஏழரை ஆண்டுகளாக உங்களை ஆட்டிப் படைத்த சனி பகவான் 16-ம் தேதி முதல் தைரியஸ்தானமான 3-ம் வீட்டில் நுழைவதால் படபடப்பு, பதற்றம், தயக்கம், தடுமாற்றம் எல்லாம் இனி நீங்கும். மனோபலம் கூடும்.

குடும்பத்தில் இருந்து வந்த சலசலப்புகள் நீங்கும். வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். கல்யாணப் பேச்சு வார்த்தை சுமுகமாக முடியும்.

சூரியன் சாதகமான வீடுகளில் சஞ்சாரம் செய்வதால், அரசு காரியங்கள் நல்ல விதத்தில் முடியும். புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். ராசிக்குள் ராகு நிற்பதால், நரம்புக் கோளாறு, மூச்சுப் பிடிப்பு, சளித் தொந்தரவு வந்து நீங்கும்.

குரு சாதகமாக இருப்பதால், திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். செவ்வாய் 5-ல் நிற்பதால், பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள். உடன்பிறந்தவர்கள் கோபப்படுவார்கள். வியாபாரம் லாபம் தரும். அயல்நாடு தொடர்புடைய நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். உத்தியோகத்தில் பாராட்டுக்கள் கிடைக்கும். சக ஊழியர் கள் மத்தியில் உங்கள் கருத்துக்கு ஆதரவு பெருகும்.

அச்சம் விலகி அதிகாரம் பெருகும் வேளை இது.

ராசிபலன்

விடாமுயற்சியால் முதலிடத்தைப் பிடிப்பவர்களே!

16-ம் தேதி முதல் சூரியன் 3-ல் அமர்வதால், நினைத்த காரியம் முடியும். அரசாங்கத்தால் ஆதாயம் உண்டு. சுக்ரனும் புதனும் சாதகமான வீடுகளில் செல்வதால், ஆடை, அணிகலன் சேரும். கல்யாண முயற்சிகள் நல்ல விதத்தில் முடியும்.

கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தைத் தந்து முடிப்பீர்கள். உறவினர், நண்பர்கள் பக்கபலமாக இருப்பார்கள். செவ்வாய் சாதகமான வீடுகளில் செல்வதால், மனைவிவழி உறவினர்கள் மதிப்பார்கள். 10-ல் குரு தொடர்வதால், வேலைச்சுமை இருந்து கொண்டேயிருப்பதாக ஆதங்கப் படுவீர்கள்.

சொன்ன சொல்லைக் காப்பாற்று வதற்காக கொஞ்சம் போராட வேண்டி வரும். உங்கள் ராசிக்குள்ளேயே ஜென்மச் சனியாக அமர்ந்து உங்களை பல பிரச்னைகளிலும் சிக்க வைத்து வேடிக்கை பார்த்த சனிபகவான் 16-ம் தேதி முதல் உங்கள் ராசியை விட்டு விலகுவதால் சிரமங்கள் குறையும்.

ஆரோக்கியம் சீராகும். பழைய பிரச்னைகளுக்குத் தீர்வு கிடைக்கும். என்றாலும் பாதச் சனியாக வருவதால், பேச்சில் கவனம் தேவை. வியாபாரத்தில் பழைய சரக்குகளை தள்ளுபடி விலைக்கு விற்றுத் தீர்ப்பீர்கள். கடையை விரிவுபடுத்தும் முயற்சியில் இறங்குவீர்கள். உத்தியோகத்தில் உங்களின் கோரிக்கையை மேலதிகாரி ஏற்பார். என்றாலும் சக ஊழியர்களின் விடுப்பால் வேலைச் சுமை அதிகரிக்கும்.
பலவீனங்களை

சரிசெய்துகொள்ள வேண்டிய காலம் இது. 

ராசிபலன்

ல துறைகளிலும் ஆழ்ந்த சிந்தனை கொண்டவர்களே!

16-ம் தேதி முதல் உங்கள் ராசியை விட்டு சூரியன் விலகுவதால், மனஇறுக்கம், வேனல் கட்டி, கண் வலியிலிருந்து விடுபடுவீர்கள். ஆனால் 2-ல் அமர்வதால், பேச்சில் காரம் வேண்டாம். சுக்ரன் சாதகமாக இருப்பதால், கணவன்-மனைவிக்குள் இருந்த கருத்து மோதல் விலகும்.

புது டிசைனில் மனைவிக்கு ஆபரணம் வாங்கித் தருவீர்கள். மனைவிவழியில் செல்வாக்கு உயரும். செவ்வாய் 3-ம் வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால், வீடு, மனை வாங்குவது, விற்பது லாபகரமாக அமையும். சகோதர வகையில் நன்மைகள் ஏற்படும். பெரிய பதவிக்கும் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள்.

வழக்கில் வெற்றி உண்டு. 16-ம் தேதி முதல் சனி உங்கள் ராசிக்குள் அமர்ந்து ஜென்மச் சனியாக வருவதால், உடல் நலத்தில் கவனம் தேவை. உங்கள் குடும்ப விஷயத்தில் மற்றவர்கள் தலையிட அனுமதிக்கா தீர்கள். யாருக்கும் ஜாமீன், கேரண்டர் கையெழுத்திட வேண்டாம். தூக்கம் குறையும். பழைய கசப்பான சம்பவங்களை நினைத்துக் கோபப் படுவீர்கள். 

வியாபாரத்தில் தரமான சரக்குகளை மொத்த விலையில் வாங்க முடிவு செய்வீர்கள். வேலையாட்கள், பங்குதாரர்களுடன் போராட வேண்டி வரும். உத்தியோகத்தில் புது பொறுப்புகளை ஏற்பீர்கள். சக ஊழியர்கள் அதிசயிக்கும்படி சில வேலைகளைச் செய்து முடிப்பீர்கள்.

ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய வேளை இது.

ராசிபலன்

றப்போம், மன்னிப்போம் என்ற கொள்கை உடையவர்களே!

சுக்ரனும் புதனும் சாதகமாக இருப்பதால், எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். பணப்பற்றாக் குறையை சாமர்த்தியமாக சமாளிப்பீர் கள்.

16-ம் தேதி முதல் சூரியன் ராசிக் குள் நுழைவதால், சில நேரங்களில் எதிர்மறை எண்ணங்கள் வரும். சின்னச் சின்ன சச்சரவுகள் வரக்கூடும். அரசாங்க விஷயங்கள் தள்ளிப் போய் முடியும். தந்தையாரின் உடல் நிலை பாதிக்கும். அவருடன் மோதல்களும் வரக்கூடும். வழக்குகளில் பிற்போக்கான நிலைமையே காணப்படும்.

குரு 8-ல் தொடர்வதால், விமர்சனங் களைக் கண்டு அஞ்ச வேண்டாம். வேற்று மொழி, இனத்தவர்களால் ஆதாயமடைவீர்கள். சிலருக்கு அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும்.

16-ம் தேதி முதல் ஏழரைச்சனி தொடங்குவதால், திடீர்ப் பயணங்கள் அதிகரிக்கும். செலவுகளைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறுவீர்கள். கனவுத் தொல்லையால் தூக்கம் குறையும். பழைய கடன், பகையை நினைத்து அவ்வப்போது கலங்குவீர்கள்.

வியாபாரத்தில் புது முடிவுகளோ, முதலீடுகளோ வேண்டாம். வேலையாட்களின் ஒத்துழைப்பு சுமாராகத்தான் இருக்கும். வாடிக்கை யாளர்கள் அதிருப்தி அடைவார்கள்.

உத்தியோகத்தில் மேலதிகாரியின் ஆலோசனையின்றி புது முயற்சிகளில் ஈடுபடாதீர்கள். சக ஊழியர்களைப் பற்றிக் குறைகூற வேண்டாம்.  உங்கள் பணிகளில்  கவனமாக இருக்கவும்.

காத்திருந்து காய் நகர்த்த வேண்டிய காலம் இது.

ராசிபலன்

காயத்தில் பறந்தாலும் நடந்து சென்ற நாட்களை மறவாதவர்களே!


3-ம் வீட்டில் அமர்ந்திருக்கும் கேது உங்களை வித்தியாசமாக யோசிக்க வைப்பார். மற்றவர்கள் சொல்வதை அப்படியே ஏற்றுக் கொள்ளாமல், எல்லாவற்றையும் யோசிப்பீர்கள்.

7-ம் வீட்டில் குரு தொடர்வதால், தொட்ட காரியம் துலங்கும். ஆன்மிகப் பெரியோர்கள், அரசியல் தலைவர்கள் அறிமுகமாவார்கள். உங்களின் புகழ், செல்வாக்கு பலமடங்கு உயரும்.

16-ம் தேதி முதல் உங்கள் ராசி நாதன் சனி லாப வீட்டில் அமர்வதால், தடைகள் நீங்கும். புது வேலை கிடைக்கும். எங்கு சென்றாலும் முதல் மரியாதை கிடைக்கும். கோயில் விழாக்களை முன்னின்று சிறப்பாக நடத்துவீர்கள்.

வி.ஐ.பி.கள் அறிமுகமாவார்கள். பிரபல யோகாதிபதிகளான சுக்ரனும், புதனும் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால், படிப்படியாக குடும்ப வருமானம் உயரும். பழைய கடன் பிரச்னையில் ஒன்றை பைசல் செய்ய முயற்சிப்பீர்கள். தொழிலுக்காக குறைந்த வட்டியில் புதுக் கடன் வாங்குவீர்கள்.

சூரியன் 16- தேதி முதல் 12-ல் மறைவதால், கொஞ்சம் அலைச்சல், தூக்கமின்மை, சிறுசிறு விபத்துகள் வந்து போகும். வியாபாரத்தில் நவீன யுக்திகளைக் கையாளுவீர்கள். வாடிக்கையாளர்களின் கருத்தைக் கேட்டு, கடையை இடமாற்றம் செய்வீர்கள். உத்தியோகத்தில் உங்கள் திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கும். மேலதிகாரிகள் சில முக்கிய அறிவுரைகள் தருவார்கள்.

 அனைவராலும் மதிக்கப்படும் நேரம் இது.

ராசிபலன்

சொந்தப் பிரச்னைகளைச் சொல்லிப் புலம்பாமல், வந்தவர்களை வாழ வைப்பவர்களே!

பிரபல யோகாதிபதிகளான சுக்ரனும், புதனும் சாதகமான வீடுகளில் செல்வதால், பணப்புழக்கம் அதிகரிக்கும். பழைய கடன் பிரச்னையைத் தீர்க்க வழி பிறக்கும். கல்யாணப் பேச்சு வார்த்தை சுமுகமாக முடியும். கணவன்-மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்கும். அரசாங்கத்தால் ஆதாயம் உண்டு. குடும்பத்துடன் வெளியிடங்களுக்குச் சென்று வருவீர்கள். குலதெய்வப் பிரார்த்தனை களை முடிப்பீர்கள்.

செவ்வாய் 12-ல் மறைந்திருப்பதால், சகோதரர்களால் அலைச்சல் இருக்கும்.

சொத்துக்கள் சம்பந்தப்பட்ட பத்திரங்கள், ஆவணங்களையெல்லாம் பாதுகாத்து வையுங்கள். சூரியன் சாதகமான வீடுகளில் செல்வதால், அரசு அதிகாரிகள், நாடாளுபவர்களின் நட்பு கிடைக்கும். இழுபறியாக இருந்த வேலைகளெல்லாம் உடனே முடியும்.

குருபகவான் 6-ம் வீட்டில் நிற்பதால், எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்து வைக்க முடியாதபடி செலவுகள் இருக்கும். 16-ம் தேதி முதல் உங்கள் ராசிநாதன் சனிபகவான் 10-ம் வீட்டில் நுழைவதால், தொலைநோக்குச் சிந்தனை அதிகரிக்கும். தோல்வி மனப்பான்மையிலிருந்து விடுபடுவீர்கள். வியாபாரத்தில் மாறுபட்ட அணுகுமுறை யால் லாபம் ஈட்டுவீர்கள். வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். உத்தியோகத்தில் உங்களின் பரந்த மனசை மூத்த அதிகாரி புரிந்துகொண்டு உதவுவார்.

 வாக்கு சாதுர்யத்தால் பிரச்னைகளைத் தீர்க்கும் வேளை இது.

ராசிபலன்

டப்பதெல்லாம் நன்மைக்கே என நினைப்பவர்களே!

உங்களின் பிரபல யோகாதிபதியான செவ்வாய் லாப வீட்டில் அமர்ந்திருப்ப தால், திடீர் யோகம், மகிழ்ச்சி உண்டாகும். வீடு, மனை வாங்குவீர்கள். சகோதரர்கள் உங்களைப் புரிந்து கொள்வார்கள்.

9-ம் வீட்டில் அமர்ந்துகொண்டு உங்களுக்கும் தந்தையாருக்கும் இடையே மனவருத்தங்களையும், சிக்கல்களையும் தந்துகொண்டிருக்கும் சூரியன் 16-ம் தேதி முதல் 10-ல் நுழைவதால், தந்தையாரின் உடல் நிலை சீராகும். அவருடன் இருந்து வந்த மனக்கசப்பு நீங்கும்.

புது வேலை கிடைக்கும். புதனும், சுக்ரனும் சாதகமாக இருப்பதால், பழுதான மின்னணு, மின்சார சாதனங்கள் புதிதாக வாங்குவீர்கள். மனைவிவழியில் உதவிகள் உண்டு. ஆனால் ராகுவும், கேதுவும் சாதகமாக இல்லாததால், கணவன்-மனைவிக்குள் பிணக்குகள் ஏற்படக்கூடும். ஒருவரையொருவர் அனுசரித்துச் செல்லவும். கடந்த இரண்டரை ஆண்டுகளாக அஷ்டமத்துச்சனியாக இருந்து உங்களைச் சின்னா பின்னமாக்கிய சனிபகவான் 16-ம் தேதி முதல் 9-ம் வீட்டில் நுழைவதால், வீண் பயம், கோபம் நீங்கும். அழகு, ஆரோக்கியம் கூடும். தன்னம்பிக்கை பிறக்கும்.

வியாபாரத்தில் புது முதலீடு செய்யலாம். பழைய பாக்கிகளும் வசூலாகும். உத்தியோகத்தில் இழந்த தகுதி மற்றும் சலுகைகளை மீண்டும் பெறுவீர்கள். பெரிய பொறுப்புக்கள் உங்களைத் தேடி வரும்.

 எதிர்பாராத நன்மைகள் சூழும் தருணம் இது.