Published:Updated:

எழுத்துக்களின் குணங்களும் ஆற்றல்களும்

கா.ஸ்ரீ

எழுத்துக்களின் குணங்களும் ஆற்றல்களும்

திக்க கிரகம் - சுக்கிரன்

ஆதிக்க எண் - 6

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
எழுத்துக்களின் குணங்களும் ஆற்றல்களும்

இந்த எழுத்தைக் கொண்டவர்கள் தூய்மையான எண்ணம் கொண்டவராய் இருப்பார்கள். ஆன்மிகத்தில் அளவுக்கு அதிகமான பற்றுதல் இருக்கும். உலக இன்பங்கள் எல்லாவற்றையும் அனுபவிப்பார்கள். எக்காரியங்களிலும் ஒரு முறைக்குப் பலமுறை நன்கு யோசித்தே முடிவெடுப்பார்கள். உழைப்பால் உயர்ந்த நிலையை அடைவார்கள்.

உலக விஷயங்களைப் பற்றி நன்கு தெரிந்து வைத்திருப்பார்கள். தனக்குத் தெரியாத விஷயங்களை தெரிந்தவர்கள் போலக் காட்டிக்கொள்ளாமல் உண்மையை ஒப்புக்கொள்வார்கள். மனம் எப்போதும் அலைபாய்ந்து கொண்டே இருக்கும். நல்ல நண்பர்களை அதிகம் பெற்றிருப்பார்கள். செய்நன்றி மறவாதவர்கள். செல்வாக்கு மிகுந்திருக்கும். பல வழிகளில் பணம் வந்துகொண்டிருக்கும்.

கொடுக்கலும், வாங்கலும் அதிகமாக நடைபெறும். பல கலைகளைக் கற்று வைத்திருப்பார்கள். நம்பிக்கைக்குப் பாத்திரமானவர்கள். இவர்கள், நல்லொழுக்கத்தைக் கடைப்பிடித்து வந்தால், அதிர்ஷ்டம் விருத்தியாகும். மற்றவர்கள் தங்கள் பணத்தை இவரிடம் நம்பி ஒப்படைப்பார்கள். மனதை ஒருநிலைப்படுத்திக்கொண்டால் பிரபலமாகலாம்.

கலையைக் கற்று முன்னேறுவார்கள். சென்ற இடமெல்லாம் நட்பு வேரூன்றிவிடும். இந்த எழுத்து வயிறு, குடல், ரத்த நாளங்கள், நரம்பு சம்பந்தப்பட்ட பாதிப்பைத் தரலாம்.

இந்த எழுத்தைக் கொண்டவர்கள் முன்னெச்சரிக்கையுடன் நடந்துகொள்வார்கள். தற்காப்பு பலம் உடையவர்கள். தன்னையும், தன்னைச் சார்ந்தவர்களையும் காப்பாற்றுவார்கள். பொறுப்பும், கடமையுணர்ச்சியும் மிக்கவர்கள். ஆராய்ச்சி மனமுடையவர்கள். யாரிடமும், வளைந்து கொடுத்து அனுசரித்துப் போவார்கள். நட்பு விருத்தியடையும்.

எழுத்துக்களின் குணங்களும் ஆற்றல்களும்

திக்க கிரகம் - சுக்கிரன்

ஆதிக்க எண் - 6

இந்த எழுத்தையுடையோர் வாழ்வில் உன்னத நிலையை அடைவார்கள். தூய்மையான எண்ணமும், சுயமாக சிந்தித்துச் செயல்படும் ஆற்றலும் கொண்டவராக இருப்பார்கள். எல்லோரிடமும் நன்கு பிரியத்துடன் பழகுவார்கள். இவர்கள் எளிதில் யாரிடமும் ஏமாற மாட்டார்கள். மற்றவர்களைப் பார்த்தவுடன் அவர்களைப் பற்றி கணித்துவிடுவார்கள்.

நண்பர்களிடம் நல்ல நட்பும் நம்பிக்கையும் இருக்கும். நிறைய நண்பர்கள் இருப்பார்கள். ஓய்வு உறக்கமின்றி சுறுசுறுப்பாக உழைப்பார்கள். ஆன்மிகத்தில் பற்றுதலும் தெய்விக விஷயங்களைப் பற்றிய அறிதலும் அதிகம் இருக்கும். அறிவின் மூலம் பொருள் சேர்ப்பார்கள். பிறருக்கு உதவி செய்வர். தன்னம்பிக்கை மிகுந்து காணப்படும். இவர்களால் மற்றவர்களுக்கு நன்மைகள் உண்டாகும்.

கல்வி கேள்விகளில் சிறந்து விளங்குவார்கள். உறவைவிட நட்பு அதிகரிக்கும். ஏராளமான நண்பர்களைப் பெற்றிருக்கும் இவர்களுக்கு ஒவ்வொரு நண்பரும் ஏதாவது ஒரு விதத்தில் பயனுள்ளவராகவே இருப்பார். சுயநலம் பாராமல் பலருக்கு வேலை வாங்கிக் கொடுப்பார்கள். தொழிலை ஏற்படுத்தி தருவார்கள். இவர்களின் மூலம் உதவியைப் பெற பல பேர் எப்போதும் சுற்றிக்கொண்டே இருப்பார்கள்.

பிறவியிலேயே நல்ல பண்புகளைப் பெற்றிருப்பார்கள். தன்னம்பிக்கையும், பிறர் நலன் பேணும் குணமும் மிகுந்திருக்கும்.  இவர்களின் குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் நிறைந்திருக்கும். கலைகளில் ஆராய்ச்சி உடையவராக இருப்பார்கள். வெற்றிகரமான சிந்தனையும், எதிலும் சாதனையும், நல்ல பேரும், புகழும் பெற்றிருப்பார்கள்.

பொது வாழ்க்கை, கலைத் துறை போன்றவற்றில் சிறந்து விளங்குவார்கள். ஞானம், திறமை, வல்லமை அதிகம் உண்டு. எதிலும் முதன்மை வகிப்பார்கள். அதிக ஜன சக்தியைப் பெற்றிருப்பார்கள்.

எழுத்துக்களின் குணங்களும் ஆற்றல்களும்

திக்க கிரகம் - சுக்கிரன்

ஆதிக்க எண் - 6

விவேகமும், வருமுன் காக்கும் சக்தியும் கொண்டு இருப்பார்கள். சுய முயற்சியால் முன்னேறுவர். தொழில் துறை நன்கு பலிதமாகும். சிறுகச் சிறுக வாழ்க்கைக்குத் தேவையான வசதிகளைப் பெருக்கிக் கொள்வார்கள். சிறு சிறு கஷ்டங்கள் ஏற்பட்டாலும் அதனை எதிர்கொண்டு  வெற்றி பெறுவார்கள்.

விரோதிகளிடம் வளைந்து கொடுத்தும், அனுசரித்தும் ஆபத்திலிருந்து தன்னைக் காத்துக் கொள்வார்கள் அறிவு, ஆற்றல்,  பக்தி நிரம்பப் பெற்றவர்கள். முன்னேற்றத்தில் தீவிர ஆர்வமிருக்கும். பேச்சில் இணையற்றவர். சிறப்பாக வாதம் செய்யும் திறனைப் பெற்றிருப்பார்கள். பல சோதனைகளுக்குப் பின் நிரந்தர வெற்றியைப் பெறுவார்கள்.

பெரும் போராட்டங்களுக்குப்பின் வாழ்வில் சிறப்படைவார்கள். எல்லாரிடத்திலும் அன்பாக பழகுவார்கள். பண்பாக நடந்து கொள்வார்கள். எதையும் சகித்துக்கொள்வார்கள். கலங்காத உள்ளம் கொண்டவர்கள். பொறுமையின் சிகரமாக விளங்குவார்கள். தன் பண்பான குணத்தால் எளிதில் மற்றவர்களைக் கவர்ந்துவிடுவார்கள்.

சந்தர்ப்பச் சூழ்நிலைகளை சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளும் இவர்கள், சூழ்நிலை எப்போது சரியாக அமைகிறதோ அப்போது திட்டமிட்டு செயல்பட்டு, அதில் வெற்றி பெறுவார்கள். எப்படிப்பட்ட நிலையிலும் இவர்களுக்குக் கோபம் வராது. இவர்களுக்கு குடும்ப வாழ்க்கை மிகவும் சந்தோஷத்துடனும் அமைதியுடனும் அமையும்.தொழிலில் அடிக்கடி மாற்றங்கள் ஏற்பட்டுக் கொண்டே இருக்கும். அதன் காரணமாக பல்துறைகளிலும் இவர்களுக்கு அனுபவ அறிவு ஏற்படும்.

இந்த எழுத்தில் தொடங்கும் பெயர்கள் பொதுவாக நம்நாட்டில் அவ்வளவாக இல்லை. பெயரின் இடையில் இந்த எழுத்து வந்தால், பெயரின் முதல் எழுத்தின் அடிப்படையில் இந்த எழுத்துக்கான பலன்கள் அமையும்.

எழுத்துக்களின் குணங்களும் ஆற்றல்களும்

திக்க கிரகம் - புதன்

ஆதிக்க எண் - 5

உலக இன்பங்கள் எல்லாவற்றையும் அனுபவிப்பார்கள். இவ்வெழுத்து, பெயரில் ஒரு முறைக்கு மேல் வருவது அவ்வளவாக சிறப்பில்லை. தெரியாத விஷயத்தை இக்குறியின் மூலம் கோடிட்டு காட்டுவதை அறிவோம். குடும்ப வாழ்க்கையில் அடிக்கடி மாற்றங்கள் நிகழும்.அயராத உழைப்பும், ஊக்கமும் இருக்கும். நிதானத்தின் வடிவமாக இருக்கும் இவர்கள் யாரிடமும் மனம் விட்டுப் பேச மாட்டார்கள்.

மற்றவர்களை எளிதில் நம்பமாட்டார்கள். அப்படி நம்பிவிட்டால் அந்த நம்பிக்கையை யாராலும் அசைக்க முடியாது. குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியும், இனிமையும் நிறைந்ததாக இருக்கும்.

பண விஷயத்தில் எப்போதும் நிறைவாகவே இருப்பார்கள். எடுத்த காரியத்தை முடிக்கும் வல்லமை படைத்தவர்கள். தியாக உணர்வுகள் உள்ளவர்கள். பிறருக்கு உதவும் மனப்பான்மை உள்ளவர்கள்.

எழுத்துக்களின் குணங்களும் ஆற்றல்களும்

திக்க கிரகம் - சூரியன்

ஆதிக்க எண் - 1

பிறரைச் சார்ந்து வாழ்வதையே விரும்புவார்கள். மிகவும் இளகிய மனம் படைத்தவர்கள். கடுமையான வேலைகளைச் செய்ய பயப்படுவார்கள். பெண்களைப் போன்ற மனமுடையவர். மற்றவர்கள் தன்னைப் பலசாலி எனப் போற்றும்படி நடந்துகொள்வர்.

பெயரில் இவ்வெழுத்து ஆரம்பத்திலும், முடிவிலும் வருவது சிறப்பல்ல. மற்ற எழுத்துக்களுடன் சம்பந்தப்பட்டு இடையில் வருவது சிறப்பு.

இவர்கள் எதையும் தன்னிச்சையாகச் செய்யமாட்டார்கள். மற்றவர்களின் எண்ணத்துக்குக் கட்டுப்பட்டவர்கள். கூட்டு முயற்சிகள் நற்பலனைத் தரும். தங்களின்  பிரச்னைகளுக்குத் தாங்களே காரணமாக இருப்பார்கள். தனிமையை அதிகம் நேசிப்பார்கள். மற்ற எழுத்துக்களின் பலம் கூடும்போது இந்த எழுத்தால் ஏற்படக்கூடிய அதிர்ஷ்டம் அதிகரிக்கும்.

எழுத்துக்களின் குணங்களும் ஆற்றல்களும்

திக்க கிரகம் - கேது

ஆதிக்க எண் - 7

இவ்வெழுத்துக்கு தற்காப்பு சக்திகள் அதிகம் இருக்கும். இவர்கள் தங்களுக்கு வரும் ஆபத்தை முன்கூட்டியே அறிந்துகொண்டு தடுத்து விடுவார்கள். நல்ல குணங்கள் அதிகமிருக்கும். செய்தொழிலில் மேன்மை கிட்டும். நயமாகப் பேசி காரியம் சாதிப்பதில் வல்லவர்கள். நுண்ணறிவு பெற்றவர்கள். காரியத்தில் கண்ணாய் இருந்து வெற்றி பெறுவார்கள்.

மனதில் அடிக்கடி தேவையற்ற கவலைகள் வாட்டும். இதனால் உடல் நலம் பாதிப்படையும். எல்லாத் துறைகளைப் பற்றியும் அறிந்து வைத்திருப்பார்கள். வளைந்து கொடுத்துச் செயல்படும் சக்தியும் இருக்கும். நிர்வாகத் திறமையும், உறுதியான லட்சியமும் கொண்டிருப்பார்கள். ராஜ தந்திரம், காரிய ஸித்தி கைகூடப் பெற்றவர்கள். காரியவாதிகளாகவும் திகழ்வார்கள்.

பெயரில் இவ்வெழுத்து இரு முறையோ பல முறையோ வந்தால் தூக்கம் கெடும். கடினமான மனமுடையவர். தன் செயலில் பிறர் குறுக்கிடுவதை விரும்பமாட்டார்கள்.

மக்கள் மத்தியில் பெரும்புகழ் பெற்றுத் தலைவனாக விளங்குவார்கள். பொதுக் காரியங்களை முன் நின்று நடத்தி வைப்பவராக விளங்குவர். இவர்களின் பேச்சு இனிமையாக இருக்கும். பேச்சால் பாக்கியமும் ஏற்படும். அதிக அலைச்சலும் உண்டு.

- முற்றும்