Published:Updated:

ராசி பலன்கள்

டிசம்பர் 17-ம் தேதி முதல் 30-ம் வரை’ஜோதிட ரத்னா’ கே.பி.வித்தியாதரன்

ராசி பலன்கள்

டிசம்பர் 17-ம் தேதி முதல் 30-ம் வரை’ஜோதிட ரத்னா’ கே.பி.வித்தியாதரன்

Published:Updated:
ராசி பலன்கள்

ஆபரண யோகம்!

மேஷம்: முன்னெச்சரிக்கை உணர்வு அதிகமுள்ள வர்களே! ராசிநாதன் செவ்வாய் 10ம் வீட் டில் உச்சம் பெற்று அமர்ந்திருப்பதால், கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவீர்கள். புது வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு நல்ல பதில் வரும். சகோதர வகையில் ஆதாயமடைவீர்கள். புது டிசைனில் ஆபரணம் வாங்குவீர்கள். சூரியன் சாதகமாக இல்லாததால், பிள்ளைகளால் அலைச்சலும், செலவினங்களும் இருக்கும். யாருக்காகவும் பணம், நகை வாங்கித் தருவதில் ஈடுபடாதீர்கள். வியாபாரம் சுமாராக இருக்கும். உத்யோகத்தில் அதிகாரிகளிடம் அதிக உரிமை எடுத்துக்கொள்ள வேண்டாம்.

ராசி பலன்கள்

விருப்பங்கள் கைகூடும்!

கடகம்: கற்பனையில் கோட்டை கட்டுபவர்களே! சூரியன் வலுவாக 6ம் வீட்டில் நிற்பதால், நினைத்த காரியம் நிறைவேறும். அரசால் அனுகூலம் உண்டு. சுக்கிரன் 6ல் மறைந்திருப்பதால், உடல்நலக் கோளாறு வந்து விலகும். 27ம் தேதி வரை புதனும் 6ல் மறைந்திருப்பதால், அநாவசிய செலவுகள் ஏற்படும். சனி உங்கள் ராசிக்கு 5ல் அமர்ந்திருப்பதால், பிள்ளைகளிடம் அதிக கண்டிப்பு காட்ட வேண்டாம். ஜென்ம குருவும் தொடர்வதால், வீண் டென்ஷன் வந்து போகும். வியாபாரத்தில் பழைய சரக்குகளைப் போராடி விற்பீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களின் சொந்த விஷயங்களில் தலையிட வேண்டாம்.

ராசி பலன்கள்

ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும்!

ரிஷபம்: 'மறப்போம், மன்னிப்போம்’ என்றிருப்பவர் களே! கேது வலுவாக இருப்பதால், உங்களுக்கு பிரச்னைகளை சமாளிக்கும் சக்தி கிடைக்கும். பணம் வந்தாலும் பற்றாக்குறையும் நீடிக்கும். அயல்நாட்டிலிருப்பவர்களால் உதவிகள் உண்டு. ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். கண்டகச் சனி தொடங்கியிருப்பதால், கவலைகள் வந்து செல்லும். சிறுசிறு அவமானம் ஏற்படக்கூடும். 5ல் ராகு தொடர்வதால், பிள்ளைகளின் நட்பு வட்டத்தைக் கண்காணியுங்கள். வியாபாரத்தில் புது முதலீடுகளைத் தவிர்ப்பது நல்லது. அலுவலகத்தில் வேலைச்சுமையும், விமர்சனங்களும் அதிகரிக்கும்.

ராசி பலன்கள்

தேக்க நிலை மாறும்!

சிம்மம்: சிக்கல்களைக் கண்டு அஞ்சாதவர்களே! செவ்வாய் 6ம் வீட்டில் உச்சம் பெற்று நிற்பதால்... வீடு, மனை வாங்குவது விற்பதில் இருந்த தேக்க நிலை மாறும். சூரியன் 5ல் நிற்பதால், அரசு காரியங்கள் தாமதமாக முடியும். உங்கள் ராசிக்கு அர்த்தாஷ்டமச் சனி தொடங்கியிருப்பதால், வீடு, வாகனப் பராமரிப்பு செலவுகள் அதிகமாகும். 28ம் தேதி முதல் புதன் ராசிக்கு 6ல் மறைவதால், உறவினர், நண்பர்களுடன் மனத்தாங்கல் வந்து விலகும். வியாபாரத்தில் லாபம் உண்டு. உத்யோகத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது அவசியம். அலுவலக ரகசியங்களை வெளியிட வேண்டாம்.

ராசி பலன்கள்

எங்கு சென்றாலும் மரியாதை!

மிதுனம்: ஆரவாரமில்லாமல் சாதிப்பவர்களே! சனிபகவான் 6ம் வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால், தன்னம்பிக்கையுடன் எதையும் செய்யத் தொடங்குவீர்கள். எங்கு சென்றாலும் மதிப்பு, மரியாதை கூடும். வாழ்க்கைத் துணைவர் உங்கள் விருப்பங்களை நிறைவேற்றுவார். குருபகவான் 2ல் தொடர்வதால், குழந்தை இல்லாதவர் களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். 7ல் சூரியன் நிற்பதால், உடல் உபாதை வந்து நீங்கும். வியாபாரத்தில் பெரிய நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் உங்கள் கோரிக்கையை ஏற்றுக்கொள்வார்கள்.

ராசி பலன்கள்

செல்வம் வந்து சேரும்!

கன்னி: கேள்விக் கணைகளைத் தொடுப்பதில் வல்லவர்களே! குருபகவான் வலுவாக இருப்ப

தால், பணவரவு திருப்தி தரும். புது வீடு கட்டி குடிபுகுவீர்கள். சிலருக்கு அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். சனிபகவான் 3ம் வீட்டில் அமர்ந்திருப்பதால், தைரியம் கூடும். திருமணம் தள்ளிப் போனவர்களுக்கு விரைவில் கூடி வரும். செவ்வாய் 5ல் நிற்பதால்... மனஇறுக்கம், பிள்ளைகளின் வருங்காலம் குறித்த கவலைகள் வந்து போகும். ராசிக்குள் ராகு நிற்பதால் படபடப்பு, முன்கோபம் வந்து செல்லும். வியாபாரத்தில் எதிர்பார்த்ததைவிட லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் உங்களின் திறமைகள் வெளிப்படும். 

ராசி பலன்கள்

மனப்போராட்டங்கள் மறையும்!

துலாம்: நீதியின் பக்கம் நிற்பவர்களே! சூரியன் 3ம் வீட்டில் நிற்பதால்... சவால்களில் வெற்றி பெறுவீர்கள். பழைய வீட்டை இடித்துக் கட்டும் முயற்சியில் இறங்குவீர்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வீர்கள். புது வாகனம் வாங்குவீர்கள். ஜென்மச் சனி விலகி, ராசிக்கு 2ல் சனி அமர்ந்திருப்பதால், மனப்போராட்டங்கள் விலகும். ஆரோக்கியம் சீராகும். புதனும், சுக்கிரனும் சாதகமாக இருப்பதால், உறவினர், தோழிகள் வலிய வந்து உறவாடுவார்கள். வியாபாரத்தில் இருப்பதை வைத்து லாபம் சம்பாதிக்கப்பாருங்கள். உத்யோகத்தில் அதிகாரி களைப் பகைத்துக்கொள்ள வேண்டாம்.

ராசி பலன்கள்

மாலை சூடும் நேரம்!

மகரம்: வீரியத்தைவிட காரியத்தில் கண்ணாக இருப்பவர்களே! சனிபகவான் லாப வீட்டில் அமர்ந்திருப்பதால், புது பொறுப்புகளும், வாய்ப்புகளும் தேடி வரும். எதிர்பார்த்து ஏமாந்த தொகை கைக்கு வரும்.  திருமணம் தள்ளிப் போன வர்களுக்கு விரைவில் நடைபெறும். விருந்தினர்களின் வருகையால் வீட்டில் உற்சாகம் பிறக்கும். குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். சூரியன் 12ல் மறைந்திருப்பதால்... திடீர் பயணங்கள், செலவுகள் வந்து செல்லும். வியாபாரத்தில், வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்யோகத்தில் உங்களின் நிர்வாகத் திறமைக்குப் பாராட்டு கிடைக்கும்.

ராசி பலன்கள்

மகன்  மகள் மகிழும் வேளை!

விருச்சிகம்: விளம்பரத்தை விரும்பாதவர்களே! புதனும், சுக்கிரனும் சாதகமான வீடுகளில் செல்வதால், எதிர்பாராத பணவரவு உண்டு. மகளுக்கு நல்ல வரன் அமையும். மகனுக்கு எதிர்பார்த்த நிறுவனத்தில் வேலை கிடைக்கும். பூர்விக சொத்தை புதுப்பிப்பீர்கள். 2ல் சூரியன் நிற்பதால், வீண் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. உங்கள் ராசிக்கு ஜென்மச் சனி தொடங்கியிருப்பதால், உணவு விஷயத்தில் கட்டுப்பாடு அவசியம். உடல் உபாதை வந்து போகும். வியாபாரத்தில் வர வேண்டிய பாக்கிகளைப் போராடி வசூலிப்பீர்கள். உத்யோகத்தில் மூத்த அதிகாரிகள் உங்களுக்கு முன்னுரிமை தருவார்கள்.

ராசி பலன்கள்

மனவலிமை கூடும்!

கும்பம்: வீண் ஆடம்பரத்தை விரும்பாதவர்களே! சூரியன் லாப வீட்டில் வலுவாக அமர்ந்திருப்ப தால், மனவலிமை அதிகரிக்கும். அரசு காரியங்கள் விரைந்து முடியும். புதிதாக வீடு, மனை வாங்கும் யோகம் உண்டாகும். உங்கள் ராசிநாதன் சனிபகவான் 10ம் வீட்டில் அமர்ந்திருப்பதால், புண்ணிய தலங்களுக்கு சென்று வருவீர்கள். உறவினர்கள் உங்கள் ஆலோசனையை நாடுவார்கள். செவ்வாய் 12ல் நிற்பதால்... அலைச்சல், தூக்கமின்மை வந்து செல்லும். குரு 6ல் மறைந்திருப்பதால்... வீண் சந்தேகம் வந்து நீங்கும். வியாபாரத்தில் இரட்டிப்பு லாபம் உண்டு. உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். 

ராசி பலன்கள்

சமூக அந்தஸ்து உயரும்!

தனுசு: வளைந்துகொடுத்துச் செல்பவர்களே! புதனும், சுக்கிரனும் சாதகமாக இருப்பதால், அடிப்படை வசதிகளை மேம்படுத்திக்கொள்வீர்கள். ஓரளவு பணவரவு உண்டு. பிள்ளைகளால் சமூக அந்தஸ்து உயரும். தங்க ஆபரணம் வாங்குவீர்கள். சூரியன் ராசிக்குள் நிற்பதால், உடல்நலக்கோளாறு வந்து செல்லும். ஏழரைச் சனி தொடங்கியிருப்பதால்... தூக்கமின்மை, ஏமாற்றம் வந்து செல்லும். ராசிநாதன் குரு 8ல் மறைந்திருப்பதால், வீடு, வாகனப் பராமரிப்பு செலவுகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் ரகசியங்கள் கசியாமல் பார்த்துக்கொள்ளுங்கள். உத்யோகத்தில் மற்றவர்களை அனுசரித்துச் செல்லுங்கள். 

ராசி பலன்கள்

இல்லறத்தில் நிம்மதி!

மீனம்: பாசவலையில் சிக்குபவர்களே! சூரியன்10ல் நிற்பதால், உங்களின் நிர்வாகத் திறன் அதிகரிக்கும். அரசால் அனுகூலம் உண்டு. நட்பு வட்டம் விரியும். பழைய இடத்தை விற்று புது வீடு வாங்குவீர்கள். வெள்ளியாலான பொருட்கள் வாங்குவீர்கள். சனிபகவான் 9ம் வீட்டில் நுழைந்திருப்பதால், கணவன்  மனைவிக்குள் இருந்து வந்த சண்டை, சச்சரவுகள் விலகும். தாமதமான காரியங்கள் விரைந்து முடிவடையும். சொத்து சம்பந்தப்பட்ட பிரச்னைகள் தீரும். புது முதலீடு செய்து வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். உத்யோகத்தில், புதிய அதிகாரிகளால் உதவிகள் உண்டு.