Published:Updated:

பால்கனி... எந்த திசையில் ?

வித்யாவாரிதி சுப்ரமணிய சாஸ்திரிகள்

பால்கனி... எந்த திசையில் ?

வித்யாவாரிதி சுப்ரமணிய சாஸ்திரிகள்

Published:Updated:

வாஸ்துவின் அறிவுரைப்படி, வீடு கட்டும்போது நாம் கவனிக்க வேண்டிய செயல்படுத்த வேண்டிய அம்சங்களை சென்ற அத்தியாயத்தில் பார்த்தோம். அதன் தொடர்ச்சியாக மேலும் சில தகவல்களை அறிந்துகொள்வோம். 

தினசரி கொத்தனார் வேலையை முடிக்கும்போது தெற்கு மற்றும் மேற்கு சுவர்களை வடக்கு மற்றும் கிழக்கு சுவர்களைவிட, ஒரு செங்கல் அளவாவது உயரமாக இருக்கும்படி அமைத்து,  கட்டுமான வேலையை முடிக்கவும்.

கட்டட கட்டுமானத்தில் முக்கியமானது, வாசல்களை நிர்மாணிக்கும் தருணம். எனவே, வாஸ்து பிளானில் உள்ளபடி, உரிய இடங்களில் வாசல்களுக்கு இடம் விட்டுக் கட்டவேண்டும். அதுபோல், எல்லா அறைகளையுமே நான்கு  மூலைகள் இருக்குமாறு கட்ட வேண்டும். குறைந்தபட்சம் நான்கரை அங்குலம் அளவில், ஒவ்வோர் அறைக்கும் நான்கு மூலைகளுக்கும் மடக்கு வைத்து செங்கல் கட்டுமானம் கட்டியபிறகே, நிலைக்கால் வைக்க வேண்டும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தள கான்கரீட் போடும்போது நிருதி மூலையில் துவங்கி ஈசானிய மூலையில் முடிக்கவும். அதேபோல், கூரை அமைப்புக்கு சென்ட்ரிங் பலகை அமைத்தல், கம்பி கட்டுமானம், கான்கிரீட் போடும் வேலைகளை நிருதி மூலையில் ஆரம்பிக்கவும்.

பால்கனி... எந்த திசையில் ?

லாஃப்ட் கான்கிரீட் அமைக்க விரும்பினால், அறைகளின் தெற்கு மற்றும் மேற்குச் சுவரில் அமைக்கவும். வடக்கு மற்றும் கிழக்கு சுவர்களில் அமைக்கவே கூடாது. மாடி கைப்பிடிச் சுவர் தெற்கைவிட வடக்கிலும், மேற்கைவிட கிழக்கிலும் உயரமாக இருக்கக் கூடாது. நான்கு புறமும் சமமாக இருக்கலாம்.

மாடியில் மழை நீரும், வீட்டைக் கழுவிவிடும் நீரும் வடக்கு, வடகிழக்கு, கிழக்கு திசைகளில் வெளியேறும்படி மடைத் துவாரங்கள் அமைக்கவும்.

வீட்டின் தளம் நிருதி அறையில் உயரமாக அமைக்கவும். ஈசானிய அறையின் தளமானது மற்ற அறைகளைவிட தாழ்வாக இருக்கும்படி அமைக்கவும். இல்லையெனில் எல்லா அறைகளிலும் தளத்தின் உயரம் சமமாக இருக்கும்படி அமைக்கவும்.

பால்கனி அமைப்பதாக இருந்தால், கூரை சென்ட்ரிங் அமைக்கும்போதே, வீட்டுக்கு வடக்கிலும், கிழக்கிலும் பால்கனி முழுமையாக வரும்படி அமைக்கவும்.

தெற்கிலும், மேற்கிலும் போர்டிகோ அமைத்தால் கூரை மட்டத்துக்கு அமைக்கவும். செப்டிக் டேங்கை காலி இடத்துக்கு வடக்கில் மையமாகவோ அல்லது காலி இடத்துக்கு கிழக்கே மையமாகவோ அமைக்கவேண்டும். இடத்துக்கு ஈசானியத்தில், வடக்கில் அல்லது கிழக்கில் 'சம்ப்’ (பூமிக்குள் தண்ணீர் தொட்டி) அமைக்கலாம்.

மதிலின் உயரம் குறைந்தது 11 அடி அளவுக்கு இருப்பது சிறப்பு (கொடைக்கானல், ஊட்டி முதலான மலைவாழிடங்கள் நீங்கலாக)

சமையல் அறையில் சமையல் மேடை வடக்குச் சுவரைத் தொடக்கூடாது. வடக்குச் சுவருக்கும், 'சிங்’க்கும் (பாத்திரம் கழுவும் இடம்) குறைந்தது முக்கால் அடி அல்லது ஒரு அடி இடைவெளி விட்டு கட்டவும். இப்படி வாஸ்து சொல்லும் விதிமுறைப்படி நமது வீடு அமைந்தால், சகல சுபிட்சங்களும் அங்கே பல்கிப்பெருகும். அசுப  விஷயங்களும் தீவினைகளும் விலகும்.

அதுசரி...! இந்த விஷயங்களையெல்லாம் நாம் தனிப்பட்ட முறையில் வீடுகட்டும்போது செயல்படுத்த இயலும். ஆனால், தற்காலத்தில் பில்டர்கள் கட்டித்தரும் தொகுப்புவீடுகள்  ஃபிளாட்டுகளை வாங்கிக் குடியேறும் நிலையே அதிகம். இந்த நிலையில் வாஸ்து விஷயங்களை கவனிப்பதும், செயல்படுத்துவதும் சாத்தியமா எனும் கேள்வி எழலாம்.

இதற்கான விளக்கங்களை விரிவாக பின்னர் காண்போம். முன்னதாக... யார் யாருக்கெல்லாம் வீடு கட்டும் யோகம் உண்டு, பங்களாவில் வசிக்கும் பாக்கியம் கிட்டுமா என்பது குறித்தெல்லாம் ஜோதிடம் சொல்லும் விளக்கங்களை அறிந்துகொள்ளலாம்.

வீடு கட்டும் யோக அமைப்பு

பால்கனி... எந்த திசையில் ?

ஒருவர் பிறந்த ஜாதகத்தின் லக்னம் அல்லது சந்திரனுக்கு 4ஆம் அதிபதி,  4ஆம் பாவத்தில் உள்ள கிரகம், காரக கிரகம் ஆகியவற்றின் நிலையையும் செவ்வாய் மற்றும் சுக்கிரன் ஆகியோரின்  பலத்தையும் அறிந்து, அந்த ஜாதகருக்கு வீடு அமையுமா என்பதை அறியலாம்.

செவ்வாய் பூமிக்குக் காரகன். இவரே, அசையாத சொத்துக்களைக் குறிப்பவர். ஜாதகத்தில் இவருடைய நிலை பலம் பெற்றிருந்தால் மாடமாளிகை அமையும்.

வாழும் இடம் வசதியாக அமையுமா அல்லது குடிசை வாழ்க்கையே நிரந்தரமா என்பதைத் தெரிவிப்பவர் சுக்கிரன்.

லக்னாதிபதியும், 4ஆம் அதிபதியும் பலம் பெறுவது அல்லது பரிவர்த்தனை பெறுவது.

நான்காம் அதிபதி ஆட்சி, உச்சம் பெறுவது.

நான்காம் அதிபதி இருக்கும் வீட்டின் அதிபதி பலம் பெறுவது.

நான்காம் அதிபதி இருக்கும் நட்சத்திராதிபதி ஆட்சி, உச்சம், கேந்திர   திரிகோணம் பெறுவது.

5ஆம் அதிபதி இருக்கும் அம்சாதிபதி ராசியில் கேந்திர திரிகோணம்  பெறுவது.

9ஆம் அதிபதி  கேந்திரத்திலும் 4ஆம் அதிபதி ஆட்சி, உச்சம் பெற்றும் 3ஆம் பாவத்தில் உச்சம் பெற்ற கிரகம் இருப்பது.

4ஆம் அதிபதி 25911 ஆகிய இடங்களில் சுபக் கிரகங்களுடன் சம்பந்தம் பெற்றிருப்பது.

4ஆம் பாவத்துக்கு 5 மற்றும் 9ம் அதிபதிகள் (812) சம்பந்தம் பெற்றிருப்பது, 4ம் பாவத்தில் இருப்பது, 4ம் அதிபதி சம்பந்தம்  பெற்றிருப்பது.

ஜாதகத்தில் இந்த நிலைகள் இருந்தால் வசதியாக, சொந்த வீட்டில் வாழும் யோகம் உண்டு. அதேபோல் 4ம் பாவம் அல்லது 4ம் அதிபதிக்கு, 5ம் அதிபதியின் சம்பந்தம் ஏற்படுமானால், சொந்தமாக வசதியாக வீடு  கட்டிக்கொள்வார்கள். ஆனால் இவை ஒன்றுக்கொன்று பகைக் கிரகமானால் வீடு கட்டினாலும், அதில் வசிக்க இயலாது, வாடகைக்கு விடும் நிலையே ஏற்படும்.

வசதிகள் நிறைந்த பங்களாவில் வசிக்கும் யோகம் 

பால்கனி... எந்த திசையில் ?

3ம் பாவத்தில் சுபர் இருந்து, 4ம் அதிபதி இருக்கும் அம்சாதிபதி பலம் பெறுவது. சந்திரன்  ஆட்சி உச்சம் பெற்று குருவால் பார்க்கப்படுவது.

4,10ம் அதிபதிகள் இணைந்து கேந்திர கோணம் பெறுவது, சுபர் பார்வை பெறுவது.

1,4ம் அதிபதி இணைந்து பலம் பெறுவது அல்லது 4ம் பாவத்தில் இருப்பது.

4ம் அதிபதி லக்னத்தில் அல்லது 11ல் இருந்து குருவால் பார்க்கப்படுவது.

குருவும், 4ம் அதிபதியும் பலம் பெற்று 4ம் பாவத்தைப் பார்ப்பது.

இந்த நிலைகள் இருந்தால் பங்களாவில் வசிக்கும் நிலை உண்டு.

மாடி வீட்டு யோகம் !

நவாம்சம் லக்னத்துக்கு 4ல் சந்திரனும் சுக்கிரனும் பலமாக அமைவது. நவாம்சம் லக்னத்துக்கு 4ல் ஆட்சி, உச்சம் பெற்ற கிரகம் இருப்பது அல்லது ராகு, சூரியன் இருப்பது.

ஜாதகத்தில் இந்த அமைப்புகள், மாடி வீடு கட்டி வாழும் நிலையை உணர்த்தும்.

எல்லாம் சரி! ஆனால் சில அன்பர்களுக்கு, பிரமாண்டமாக வீடு கட்டியும் அதில் தொடர்ந்து வசிக்கும் வாய்ப்பு இல்லாமல் போகிறதே... ஏன்?

- தொடரும்...

வீட்டு மனை வாங்க ஏற்ற காலம் !

வீடு கட்டுவதற்கான மனை வாங்கும் காலம்... கடக லக்னமாக அமைவதும், அப்போது பரணி, விசாகம், அனுஷம் அல்லது அஸ்த நட்சத்திரம் பொருந்தியிருப்பதும் சிறப்பு. நவாம்சத்தில் லக்னத்தில் சூரியன், கேது இணைந்திருந்தாலும் சிறப்புதான்! அப்போது வாங்கும் இடம், வீடு ஆகியவை வாங்கியவரிடமே நிலைத்திருக்கும்.

வசிக்கும் இடத்துக்கு குறிப்பிட்ட திசைகளில் நிலம்  மனை வாங்குவதற்கு, குறிப்பிட்ட நட்சத்திர நாட்கள் விசேஷமானவை.

தெற்கு – மகம், சுவாதி, அஸ்தம், உத்திரம்.

மேற்கு – உத்திராடம், திருவோணம், மூலம்

வடக்கு – உத்திராடம், சித்திரை, சதயம்

கிழக்கு – ரோகிணி, மிருகசீரிடம், புனர்பூசம்

ரேவதி நட்சத்திரத்தன்று எந்தப் பகுதியிலும் நிலம்மனை வாங்கலாம். அதேபோன்று நகரங்களில் வாங்குவதற்கு அஸ்வினி,  சித்திரை, ரேவதி நட்சத்திரங்கள் உகந்தவை.

சித்தயோகம், அமிர்தயோக காலமானது கால்கோள் விழா எடுக்கவும், முதல் செங்கல்லை பதிக்கவும் ஏற்றது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism