Published:Updated:

உள்ளங்கை மேடுகள்!

உள்ளங்கையில் சில உண்மைகள்‘சேவாரத்னா’ டாக்டர் டி.எஸ்.நாராயணஸ்வாமி

உள்ளங்கை மேடுகள்!

உள்ளங்கையில் சில உண்மைகள்‘சேவாரத்னா’ டாக்டர் டி.எஸ்.நாராயணஸ்வாமி

Published:Updated:
உள்ளங்கை  மேடுகள்!

ஞ்சாங்குலி எனும் ரேகை சாஸ்திரத்தின் முக்கியமான பகுதி உள்ளங்கையில் உள்ள மேடுகள். சதைப்பற்று மிக்க பகுதிகளே மேடுகளாக அமைந்துள்ளன. ஒவ்வொரு மேடும் நமது வாழ்வின் ஒருசில அம்சங்களைக் கட்டுப்படுத்தும் கேந்திரம். ஒவ்வொன்றுக்கும் ஒரு கிரகம் அதிபதி. ஒவ்வொரு கிரகத்துக்கும் ஓர் அடையாளக் குறி உண்டு. எந்தெந்த மேட்டில் எந்தெந்த கிரகங்களின் அடையாளக் குறிகள் அமைந்திருக்கின்றன என்பதைப் பொறுத்தே பலன்கள் ஏற்படுகின்றன. 

ஜோதிட சாஸ்திரப்படி, ஒருவரது ஜாதகத்தில் எந்தெந்த கிரகங்கள் எந்தெந்த வீட்டில் உள்ளன அல்லது ஆட்சிஉச்சம் நீசம் பெற்ற நிலையில் இருக்கின்றன என்று குறிக்கப்படுகிறதோ, அதே ரீதியில் அந்தந்த மேட்டில் அமைந்துள்ள ரேகை அடையாளங்களை வைத்து, கிரஹங் களின் உச்ச நீச நிலையும் நிர்ணயிக்கப்படுகிறது. முதலில்... நம் கையிலுள்ள மேடுகள் எவை, அவை எங்கே அமைந்தி ருக்கின்றன என்பதைத் தெரிந்துகொள்வோம் (படம்1).

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உள்ளங்கையை ஒன்பது பகுதிகளாகப் பிரிக்கலாம்.  ஒவ்வொன்றும் நவகிரகங்கள் ஒவ்வொன்றின் ஆதிக்கத்துக்கு உரிய மேடுகளாகக் குறிக்கப்பட்டுள்ளன. அவை: குரு மேடு (jupiter mount), சனி மேடு (saturn mount), சூரிய மேடு (sun mount), புத மேடு (mercury mount), மேல் செவ்வாய் மேடு (upper mars mount), கீழ்ச் செவ்வாய் மேடு (lower mars mount), சந்திர மேடு (solar/lunar mount ), சுக்கிர மேடு (venus mountராகு மேடு (dragon's tail mount), கேது மேடு (dragon's head mount).

இவை தவிர, உள்ளங்களையின் நடுப்பகுதி பிரம்மகுண்டம், பிரம்மமேடு அல்லது பிரஜாபதி ஸ்தலம் எனப்படும் (mount of harshal of brahma). ஜோதிட சாஸ்திரப்படி ஒவ்வொரு கிரகமும் மனித வாழ்க்கையின் ஒரு சில அம்சங்களுக்குக் காரகன் அல்லது மாரகன் என்று சொல்வார்கள். காரகனாக இருக்கும் கிரகம் அந்த அம்சத்துக்குச் சாதகமான காரியங்களைச் செய்யும்; மாரகமான கிரகம் பாதகமான பலன்களைத் தரும்.

சூரியன் முதலான நவகிரகங்கள் எந்தெந்த அம்சங்களுக்குக் காரகனாக உள்ளனர் என்பதைத் தெரிந்துகொள்க.

கிரகம் காரகன் காரகத்துவம்

உள்ளங்கை  மேடுகள்!

சூரியன் பித்ரு காரகன் பிதா

சந்திரன் மாத்ரு காரகன் மாதா

செவ்வாய் ப்ராத்ரு காரகன் சகோதரன், பூமி

புதன் வித்யா மாதுல காரகன் கல்வி, ஞானம்

குரு புத்ர காரகன் புத்திரர்கள்

சுக்கிரன் களத்ர காரகன் வீடு, மனைவி

சனி ஆயுள் காரகன் ஆயுள், ஜீவனம்

ராகு பிதாமஹ காரகன் தந்தைவழிப் பாட்டன்

கேது மாதாமஹ காரகன் தாய்வழிப் பாட்டன் 

இனி, ஒவ்வொரு கிரக மேடும், வாழ்க்கையின் எந்தெந்த அம்சங்களைக் கட்டுப்படுத்துகிறது... அதன் அமைப்பின்படி, அல்லது அந்த மேட்டில் அமையும் குறிகள் அல்லது ரேகைகளின்படி ஒருவனது வாழ்க்கையில் பல்வேறு அம்சங்கள் எவ்வாறு இருக்கும் என்பதைச் சுருக்கமாகத் தெரிந்துகொள்வோம்.

ஒவ்வொரு மேடும், குறிப்பிட்ட குணாதிசயங்களையும் செயல்களையும் எடுத்துக்காட்டுகின்றன.

குரு மேடு: புத்தி, அறிவாற்றல், சிந்தனைத் திறன், செயலாற்றும் திறன், தன்னம்பிக்கை, நிர்வாகத் திறன்.

சனி மேடு: செல்வம், வசதி, அதிகாரம், வெற்றி, தொழில் வளம், பொருளாதார மேம்பாடு, சொத்து சுகம்.

சூரிய மேடு: செல்வாக்கு, பட்டம், படிப்பு, பதவி, மக்கள் தொடர்பு, கலைத்திறன், புகழ், பெருமை, தனித்தன்மை, பொறுப்பு.

புத மேடு: குடும்ப வாழ்க்கை, மனைவி, மக்கள், சொந்த பந்த உறவுகள், வாழ்க்கை வசதிகள், நிம்மதியான வாழ்க்கை, தொழில் திறமை, வெற்றி வாய்ப்பு.

உள்ளங்கை  மேடுகள்!

செவ்வாய் மேடு: மேல் செவ்வாய் மேடு வளர்ச்சி வாய்ப்புகளையும், கீழ்ச்செவ்வாய் மேடு வீழ்ச்சிக்கான அறிகுறிகளையும் காட்டும். சொத்து சேர்த்தல், செல்வம் ஈட்டுதல், ஈட்டிய செல்வத்தை அனுபவித்தல், வாழ்க்கை, மாங்கல்யபாவம், தைரியம், மனோபலம் போன்ற குணாதிசயங்கள் செவ்வாய் மேட்டில் தெரிகின்றன.

சந்திர மேடு: தோற்றம், அழகு, அங்க அமைப்பு, மனோபாவம், மன நிலை, பற்றுதல், பாசம், ஈடுபாடு, கலை ஆர்வம், கலைத் திறமை, உள்நாட்டு, வெளிநாட்டுப் பிரயாணங்கள், வாழ்க்கையின் ஏற்றத்தாழ்வுகள், இருதய சம்பந்தமான பலம் அல்லது பலவீனங்கள்.

சுக்கிர மேடு: உணர்ச்சிகள், ஆசாபாசங்கள், நட்பு, காதல், பாலுணர்வு, கோபதாபங்கள், செயல்படும் திறன், நேர்மை உணர்வு, கடமை உணர்வு, சௌகர்யங்கள்.

ராகு மேடு: உடல் ஆரோக்கியம், விபத்துகள், ஏற்றத் தாழ்வுகள், ஏமாற்றம், குடும்பப் பிரச்னைகள், மனநிலை, ரோகங்கள், திடீர் அதிர்ஷ்டங்கள்.

கேது மேடு: ஞானம், தெய்வீகக் காரியங்கள், அமானுஷ்ய சக்திகள், குடும்பப் பிரச்னைகள், மனநிலை, ரோகங்கள், திடீர் அதிர்ஷ்டங்கள்.

பிரம்ம குண்டம்: கையின் முக்கியமான எல்லா ரேகைகளும் இந்தக் குண்டத்தைக் கடந்து செல்கின்றன. 'பிரம்மலிபி’ எனப்படும் விதியின் நிர்ணய மண்டலம் இது. மற்ற கிரகங்களுக்குள்ள தொடர்புகளையும், நன்மை தீமைகள் தவிர்க்கப்படுவதையும், இந்த மையம் நிர்ணயிக்கிறது.

கையில் உள்ள ஒவ்வொரு நவகிரக மேட்டுக்கும், ஒரு குறிப்பிட்ட சங்கேதக் குறி உண்டு. ஜோதிட சாஸ்திரத்தில், எந்த ராசி வீட்டில் எந்தக் கிரகத்தின் ஆட்சி அல்லது உச்ச நீச நிலை இருக்கிறது என்பதை வைத்து, ஜாதகப் பலன்கள் கணக்கிடப்படுகின்றன. அதுபோல, எந்த மேட்டில் எந்தக் கிரகத்தின் குறி இருக்கிறது என்பதை வைத்து, எந்தக் கிரகத்தின் ஆட்சி அல்லது உச்ச நீச நிலை இருக்கிறது என்பதைக் கண்டு, கையிலும் பலன் சொல்ல முடியும். சரியாகக் கணித்தால், ஜாதகத்தில் காணப்படும் நிலையும், கையின் கிரக மேடுகளின் குறிகளின் அமைப்பும் ஒரே மாதிரியாக இருக்கும். உதாரணமாக... குருமேட்டில் சந்திரன் குறி இருந்தால், அது குரு சந்திர யோகம் எனலாம். சூரிய மேட்டில் சனியின் சின்னமோ, சனி மேட்டில் சூரியனின் சின்னமோ இருந்தால் நல்ல பலன்கள் இல்லை எனக் கூறலாம்.

கிரகங்களுக்குரிய சின்னங்கள் தவிர, கையில் வேறு சில சங்கேதக் குறிகளும், கோடுகளும்கூட உண்டு. அவை எங்கே எப்படி, எந்த வடிவில் அமைந்துள்ளன என்பதைப் பொறுத்து பலன் சொல்ல வேண்டும். பல்வேறு சங்கேதச் சின்னங்களையும் குறிகளையும் இங்குள்ள அட்டவணை உங்களுக்குத் தெளிவாக அடையாளம் காட்டும். இந்த சங்கேதக் குறிகள் அல்லது சின்னங்கள் என்னென்ன பலன்களைத் தருகின்றன என்பதை அடுத்த அத்தியாயத்தில் பார்க்கலாம்.

- தொடரும்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism