Published:Updated:

புத்தாண்டில் புது யோகம்!

ராம்திலக்

புத்தாண்டில் புது யோகம்!

ராம்திலக்

Published:Updated:

னிபகவானின் ஆதிக்க எண்ணில் இந்த ஆண்டு பிறக்கிறது.  சனி பகவானின் நட்சத்திரங் களான பூசம், அனுஷம், உத்திரட்டாதி ஆகியவற் றில் பிறந்தவர்களுக்கும், சனிபகவானின் தேதிகளான 8, 17, 26ல் பிறந்தவர்களுக்கும் இந்த ஆண்டு மிகச் சிறப்பாக இருக்கும். 

புத்தாண்டில் புது யோகம்!

ஜனன ஜாதகத்தில் சனிபகவான் தனது சொந்த வீடான மகரத்திலோ, சொந்த ஸ்தானம் மற்றும் மூலத்திரிகோண ஸ்தானமான கும்பத் திலோ, உச்ச ராசியான துலாத்திலோ இருக்கப் பெற்றவர்களுக்கும் 2015 ஆங்கிலப் புத்தாண்டு மிகச் சிறப்பாக அமையும். சனி பலம் பெற்று, தற்போது சனி தசை நடைபெறும் ஜாதகக்காரர் களுக்கும் இந்த ஆண்டு விசேஷமான நற்பலன் களைத் தரும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விவசாயம், விஞ்ஞானம் ஆகிய துறைகள் வளர்ச்சி பெறும். எண்ணெய் வகையறாக்கள், இரும்பு, எஃகு, பூமியிலிருந்து வெளிப்படும் பொருட்கள், கறுப்பு நிறப்பொருட்கள் மூலம் ஆதாயம் கிடைக்கும். தொழிலாளர்களுக்கும், சமுதாயத்தில் பின்தங்கி உள்ளவர்களுக்கும் அரசாங்கத்தால் நலம் உண்டாகும். வயோதிகர் களுக்கு ஆதரவு கிட்டும். சமுதாய நலப் பணி களில் ஈடுபாடு உள்ளவர்கள் புகழ் பெறுவர்.

2015 புத்தாண்டில் சனி பகவான் விருச்சிகத் தில் உலவுகிறார். சனிக்கு விருச்சிகம் அனுகூல மான ராசி ஆகாது. அது செவ்வாயின் ராசி கால புருஷனின் 8ஆவது ராசி  ஜல ராசி  ஸ்திர ராசி  இரட்டை ராசி  பெண் ராசி. சனிக்கு பகை ராசி!

கால புருஷ ராசிக்கு 10, 11ஆம் இடங் களுக்கு அதிபதியான சனி 8ல் விருச்சிகத்தில் இருப்பதால், இந்த ஆண்டு காசநோய் மூலமாகவும், தற்கொலைகள் மூலமாகவும் இறப்பு விகிதம் அதிகரிக்கும்.

சமூக விரோதிகள் அதிகரிப்பார்கள் என்பதால் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. நெருப்பு,

புத்தாண்டில் புது யோகம்!

ஆயுதம், விஷம், ஜலம் ஆகியவற்றால் ஆபத்து ஏற்படும். பொதுவாக, இந்த ஆண்டு சனியின் சஞ்சாரம் சிறப்பாக இல்லாததால் சனிக்கு ப்ரீதி, பரிகாரங்களைச் செய்வது நல்லது. ஆஞ்சநேயருக்கும், ஸ்வாமி ஐயப்ப னுக்கும் அர்ச்சனை, ஆராதனைகள் செய்வது சிறப்பாகும்.

சனி பகவானுக்கு உரிய ஸ்லோகங்களைச் சொல்வது நல்லது. ஹனுமன் சாலீஸா சொல்வதும், கேட்பதும் சிறப்பாகும். மாற்றுத்திறனாளி களுக்கு உதவுவதன் மூலம் சனிப் பிரீதி செய்த பலனைப் பெறலாம். ஏழை எளியவர்களுக்கு அன்னதானம், வஸ்திர தானம் அளிப்பது சிறப்பாகும். திருநள்ளாறு திருத்தலத்துக்குச் சென்று வருவதாலும் விசேஷ பலன்களைப் பெறலாம். மேலும் நேர்மையாகவும், குறுக்கு வழிகளில் செல்லாமலும் இறைச் சிந்தனையுடன் இருப்பதன் மூலம் சனி பகவானின் திருவருளுக்குப் பாத்திரமாகலாம்.

இதுவரையிலும் பொதுவான பலன்களைப் பார்த்தோம். இனி, 2015 புத்தாண்டு எந்தெந்த ராசிக்காரர்களுக்கு எப்படியெப்படி அமையப் போகிறது என்பதைப் பற்றி பார்ப்போம்.

2015 ஜூலை 13 வரையிலும் மிதுனம், கன்னி, விருச்சிகம், மகரம் மற்றும் மீன ராசிக்காரர்களுக்கு சுப பலன்கள் உண்டாகும். அதன் பிறகு மேஷம், கடகம், துலாம், தனுசு, கும்பம் ஆகிய ராசிக்காரர்களுக்கும் சுப பலன்கள் உண்டாகும். கோசாரத்தில் குருவும் சனியும் மிக முக்கியக் கிரகங்கள் ஆவார்கள். குறிப்பிட்ட இந்த கிரகங்கள் வலுத்திருப்பவர்களுக்கு விசேஷமான சுப பலன்கள் உண்டாகும் என்பதில் ஐயம் இல்லை.

குரு உச்ச ராசியில் இருப்பதால் பொதுவாக இந்தப் புத்தாண்டின் முன் பகுதி சுபிட்சமாக இருக்கும். தெய்வ காரியங்கள் சிறப்பாக நடை பெறும் பொருளாதார முன்னேற்றத் திட்டங்கள் கைகூடும். ஆன்மிக சிந்தனை வளரும். அந்த வகையில் மிதுன ராசிக்காரர்களுக்கு குரு 2லும், சனி 6லும் உலவுவது விசேடமாகும். கன்னி ராசிக்காரர்களுக்கு சனி 3,லும், குரு 11லும் உலவுவது குறிப்பிடத்தக்கது. மகர ராசிக் காரர்களுக்கு குரு 7லும் சனி 11லும் உலவுவதால் சுப பலன்கள் அதிகம் உண்டாகும்.

புத்தாண்டில் புது யோகம்!

மேஷ ராசிக்காரர்களுக்கு அஷ்டமச் சனியின் காலம் இது என்பதால் எச்சரிக்கை தேவை. வீண்பழி சுமத்தப்பட நேரலாம். உடல் நலம் பாதிக்கும். காரியம் தாமதம் ஆகும். ஆதாயம் குறையும். உழைப்புக்கு ஏற்ற பயன் கிடைக்காமல் போகும். 13.7.15 முதல் குரு 5ம் இடம் மாறுவதால் சுப காரியங்கள் நிகழச் சந்தர்ப்பம் கூடிவரும். மக்கள் நலம் சீராகும். மக்களால் அனுகூலமும் உண்டாகும். பொருளாதார நிலையில் வளர்ச்சி காண வாய்ப்பு உண்டாகும்.

புத்தாண்டில் புது யோகம்!

ரிஷப ராசிக்காரர்களுக்கு எதிர்ப்புகள் கூடும் நேரம் இது. நெருங்கிப் பழகிய நண்பர்களே விரோதிகள் ஆவார்கள். கூட்டாளிகள் உங்களை விட்டு விலகிச் செல்வார்கள். பொருளாதார நெருக்கடி ஏற்படும். மனதில் நிம்மதி குறையும். ஜாதகப்படி யோக தசை, புக்திகள் நடக்குமானால் கவலைப்படத் தேவையில்லை.

புத்தாண்டில் புது யோகம்!

மிதுன ராசிக்காரர்களுக்கு செல்வாக்கும் மதிப்பும் உயரும். திறமை வீண் போகாது. வீட்டில் சுப காரியங்கள் நிகழும். பண வரவு அதிகமாகும். குடும்ப நலம் சிறக்கும். நாணயமாக நடந்துகொள்வீர்கள். புதிய துறைகளில் ஈடுபாடு உண்டாகும். அதனால் ஆதாயமும் கிடைக்கும். ஆனால் 13715 முதல், குரு 3ம் இடத்துக்கு மாறுவது சிறப்பு ஆகாது. உத்தியோகஸ்தர்கள் பொறுப்புடன் செயல்படுவது அவசியம்.

புத்தாண்டில் புது யோகம்!

கடக ராசிக்காரர்களுக்கு மக்களால் பிரச்னைகள் சூழும். அதிர்ஷ்டம் என்று எதையும் நம்பி ஏமாற வேண்டாம். உழைப் புக்கு முக்கியத்துவம் கொடுப்பது நல்லது. கெட்ட பழக்கவழக்கங்களைத் தவிர்க்கவும். 13.7.15 முதல், குரு உங்கள் ராசிக்கு 2ம் இடத்துக்கு மாறுவதால் பண வரவு கூடும். சுப காரியங்கள் நிகழும். கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீர்கள். ஆன்மிக சிந்தனை அதிகரிக்கும். தத்துவார்த்தங்களில் ஈடுபாடு உண்டாகும். மேடைப் பேச்சாளர்களுக்கு வரவேற்பு கூடும்.

புத்தாண்டில் புது யோகம்!

சிம்ம ராசிக்காரர்களுக்கு அலைச்சல் கூடும். சுகம் குறையும். செலவுகள் அதிகரிக் கும். இடமாற்றம், நிலைமாற்றம் ஆகியவை ஏற்படும். மருத்துவச் செலவுகள் அதிகமாகும். கடன் தொல்லைகளும் உண்டாகும். கெட்டவர்களின் சகவாசம் கூடாது. பேச்சிலும் செயலிலும் நிதானத்தைக் கடைப்பிடிக்கவும். முன்பின் அறிமுகம் இல்லாதவர்களை நம்பி ஏமாற வேண்டாம். பெற்றோர் நலம் கவனிக்கப்பட வேண்டிவரும்.

புத்தாண்டில் புது யோகம்!

கன்னி ராசிக்காரர்களுக்கு வெற்றி மேல் வெற்றி கிட்டும். போட்டிகளிலும், பந்தயங்களிலும், விளையாட்டுகளிலும் ஈடுபாடு  உள்ளவர்கள் பரிசுகளும், விருதுகளும் பெறுவார்கள். உடன்பிறந்த வர்களால் அனுகூலம் உண்டா கும். புதிய முயற்சிகள் கைகூடும். செல்வ வளம் பெருகும். கடன் தொல்லை குறையும். புதிய சொத்துக்கள் சேரும். சொத்துக்களால் ஆதாயமும் கிடைக்கும்.

13.7.15 முதல், குரு 12ம் இடத்துக்கு மாறுவது சிறப்பு ஆகாது. எனினும், குரு பொதுவாக முழு முதல் சுபகிரகம் என்பதால், சுப விரயங்களே ஆகும். குழந்தைகளின் முன்னேற்றத்துக்காக செலவு செய்வீர்கள்.

புத்தாண்டில் புது யோகம்!

துலா ராசிக்காரர்களுக்கு தொழில் ரீதியாக மாற்றங்கள் உண்டாகும். குடும்பத்தில் சிறு சிறு பிரச்னைகள் ஏற்பட்டு விலகும். வீண் வம்பு வேண்டாம். 13.7.15 முதல், குரு உங்கள் ராசிக்கு 11ம் இடத் துக்கு மாறுவதால் மனத் துணிவும் தன்னம் பிக்கையும் கூடும். பொருளாதாரப் பிரச்னைகள் விலகி, கையில் தாராளமாகப் பணம் புழங்கும். சுப காரியங்கள் வருடப் பின்பகுதியில் நிகழும். எதிரிகளாக இருந்தவர்களும் கூட மனம் மாறி உங்களுக்கு உதவுவார்கள். மனத்துக்கு இனிய சம்பவங்கள் நிகழும். முயற்சி வீண்போகாது.

புத்தாண்டில் புது யோகம்!

விருச்சிக ராசிக்காரர்களுக்கு ஆரோக்கியம் பாதிக்கும். அலைச்சல் கூடும். வேலைப்பளு அதிகரிக்கும். என்றாலும் ஜென்மச் சனியை 9ல் உள்ள குரு பார்ப்பதால் சங்கடங்கள் குறையும். பொருளாதார நிலை திருப்தி தரும். மக்களால் நலம் உண்டாகும். குடும்ப நலம் சீராகவே இருந்துவரும். உடன்பிறந்தவர்கள் தக்க தருணத்தில் முன்வந்து உதவுவார்கள். 13715 முதல், குரு 10ம் இடத்துக்கு மாறுவதால், செய்து வரும் தொழிலில் அதிக கவனம் செலுத்தவும். உடன்பிறந்தவர்களாலும், மக்களாலும் சில பிரச்னைகள் சூழும். பக்குவமாகச் சமாளிக்கவும்.

புத்தாண்டில் புது யோகம்!

தனுசு ராசிக்காரர்களுக்கு விரும்பத்தகாத இடமாற்றமும் நிலை மாற்றமும் உண்டாகும். பொருளாதாரப் பிரச்னை ஏற்படும். வீண் செலவுகளைத் தவிர்க்கவும். கைப்பொருள் காணாமல் போகக் கூடுமாதலால், பாதுகாத்துக் கொள்ளவும். மக்க ளாலும் சகோதரர்களாலும் சங்கடங்கள் ஏற்படும். வேலையாட்களால் தொல்லைகள் சூழும். 13.7.15 முதல் குரு உங்கள் ராசிக்கு 9ம் இடத்துக்கு மாறுவது விசேஷமாகும். மதிப்பும் அந்தஸ்தும் உயரும். உடல் நலம் சீராகும். புதிய சொத்துக் களும், பொருட்களும் சேரும். பிரச்னைகள் எளிதில் தீரும். நல்லோர் தொடர்பால் நலம் பெறு வீர்கள். நல்லவர் அல்லாதவர்களின் தொடர்பு கூடாது.

புத்தாண்டில் புது யோகம்!

மகர ராசிக்காரர்களுக்கு எண்ணங்கள் யாவும் ஈடேறும் நல்ல நேரம் இது. வருட முன்பகுதி மிகச் சிறப்பாக அமையும். பொருளாதார நிலை உயரும். புதிய முயற்சிகள் வெற்றி பெறும். மன மகிழ்ச்சி கூடும். சுகானுபவம் உண்டாகும். சொத்துக்கள் சேரும். வாழ்வில் முன்னேற்றம் காண நல்ல வாய்ப்புக்கள் கூடிவரும். பலரும் உங்களைப் பாராட்டுவார்கள். குடும்ப நலம் திருப்தி தரும். சுபிட்சம் பூத்துக் குலுங்கும். 13.7.15 முதல் குரு 8ம் இடத்துக்கு மாறுவது சிறப்பாகாது. எதிர்பாராத செலவுகள் ஏற்படும். உடன்பிறந்தவர்களால் சங்கடம் ஏற்படும். மக்கள் நலனில் அக்கறை தேவைப்படும்.

புத்தாண்டில் புது யோகம்!

கும்ப ராசிக்காரர்களுக்கு உழைப்புக்கும் திறமைக்கும் உரிய பயன் கிடைக்கும். பொதுப் பணிகளில் ஈடுபாடு கூடும். தொழில் ரீதியாக நல்ல இடமாற்றம் உண்டாகும். 13.7.15 முதல் குருபகவான் 7ம் இடம் மாறுவதால் பொருளாதாரப் பிரச்னைகள் விலகும். குடும்ப நலம் சீராகும். கொடுக்கல்வாங்கல் லாபம் தரும். திருமணம் ஆகாதவர்களுக்கு அதற்கான வாய்ப்பு கூடி வரும். பயணத்தால் அனுகூலம் உண்டாகும். கூட்டாளிகள் ஒத்துழைப் பார்கள். வாழ்க்கைத் துணைவரால் நலம் ஏற்படும். பிறரிடம் சுமுகமாகப் பழகுவீர்கள். ஒப்பந்தப் பணிகள் லாபம் தரும். உடல் ஆரோக் கியம் சீராகும். நல்லவர்கள் உங்களுக்குப் பக்கபலமாக இருப்பார்கள். வருடப் பின்பகுதியில் வழக்கில் நல்ல திருப்பத்தைக் காணலாம்.

புத்தாண்டில் புது யோகம்!

மீன ராசிக்காரர்களுக்கு சுபிட்சம் கூடும் நேரம் இது. மகப்பேறு அல்லது மக்களால் பாக்கியம் உண்டாகும். நல்ல எண்ணங்கள் மனதில் உருவாகும். புத்திசாலித்தனம் பளிச்சிடும். பொருளாதார நிலை உயரும். அதிர்ஷ்ட வாய்ப்புகளும் கூடிவரும். தந்தை நலனில் கவனம் தேவைப்படும். 13.7.15 முதல், குரு 6ம் இடத்துக்கு மாறுவதால் உடல் நலம் பாதிக்கும். சுப காரியங்கள் நிகழக் குறுக்கீடுகளும் தடைகளும் ஏற்படும். பெற்றோருக் கும் மக்களுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் உண்டாகும். கொடுக்கல்வாங்கலில் விழிப்புத் தேவை. கோபத்தைக் குறைத்துக்கொள்வது நல்லது.

மேலே சொல்லப்பட்டுள்ள பலன்கள் யாவும் பொதுப்பலன்களே ஆகும். அவரவர் ஜன்ம ஜாதகப்படி இந்தப் புத்தாண்டில் சுப யோக பலம் உள்ள தசை,  புக்தி, அந்தரங்கள் நடை பெறுமானால், சுப பலன்கள் இரட்டிப்பாகும்.

கெடுபலன்கள் சொல்லப்பட்டுள்ள ராசிக்காரர் களுக்கு ஜாதக பலமும் குறைந்திருக்குமானால் சோதனைகள் அதிகமாகும். கிரக வழிபாடு, இறை வழிபாடு ஆகியவற்றில் முழு நம்பிக்கையுடன் ஈடுபடுவதன் மூலம் நலம் பெறலாம். சங்கடங் களையும் குறைத்துக் கொள்ளலாம்.

அனைவருக்கும்

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

புத்தாண்டில் புது யோகம்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism