சிறப்பு கட்டுரை
Published:Updated:

ராசிபலன்

ஜனவரி 6 முதல் 19 வரை ‘ஜோதிடரத்னா’ கே.பி.வித்யாதரன்

ராசிபலன்

சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்திருக்கும் உங்களின் பேச்சும் சுத்தமாக இருக்கும். சுக்ரனும், புதனும் சாதகமான வீடுகளில் செல்வதால், உங்கள் செயலில் வேகம் கூடும். எதிர்பாராத பணவரவு உண்டு. பிரபலங்கள் அறிமுகமாவார்கள். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். 

வெளியூர்ப் பயணங்களால் புது அனுபவம் உண்டாகும். 15ம் தேதி முதல் சூரியன் 10ல் அமர்வதால், தந்தையின் உடல் நலம் சீராகும். சிலருக்கு புது பதவி, பொறுப்பு தேடி வரும். புது வேலை கிடைக்கும். பிள்ளைகளின் பிடிவாத குணம் தளரும். ராசிநாதன் செவ்வாய் லாப வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால், சகோதர வகையில் பயனடைவீர்கள்.

மனைவிவழி ஆதாயம் உண்டு. அஷ்டமத்துச் சனி தொடர்வதால், எதிலும் ஈடுபாடற்ற நிலை, அவ்வப் போது ஒருவித அச்சம், வரவுக்கு மிஞ்சிய செலவுகள், ஒய்வெடுக்க முடியாதபடி வேலைச்சுமை ஏற்படும். குரு ராசிக்கு 4ம் வீட்டில் தொடர்வ தால், தாயாருக்கு கை, கால் வலி, அசதி, சோர்வு, வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் ஏற்படும்.

வியாபாரத்தில் புது முதலீடுகளைத் தவிர்ப்பது நல்லது. பற்று வரவு கணிச மாக உயரும். வேலையாட்களின் ஒத்துழைப்பு குறையும். உத்தியோகத் தில் பணிகளை போராடி முடிக்க வேண்டி வரும். சக ஊழியர்களுடன் கவனமாக பழகுங்கள்.

சகிப்புத் தன்மையால் சங்கடங்கள் தீரும் வேளை இது.

ராசிபலன்

கவிதை, கற்பனை என்று சிறகடிக்கும் நீங்கள், இரக்கப்பட்டு ஏமாறுவீர்கள். செவ்வாய் வலுவாக 10ம் வீட்டில் நிற்பதால், உங்களின் நிர்வாகத் திறன், ஆளுமைத் திறன் அதிகரிக்கும். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். வாகனம் வாங்குவீர்கள். சகோதரர்களால் உதவிகள் உண்டு.

கணவன்மனைவிக்குள் அந்நியோன்யம் அதிகரிக்கும். ஆனால் கண்டகச் சனி தொடர்வதால், சின்னச் சின்ன விவாதங்களும் ஏற்பட சாத்தியம் உள்ளது. புதன் சாதகமாக இருப்பதால், பிள்ளைகள் குடும்பச் சூழ்நிலையறிந்து பொறுப்பாக நடந்து கொள்வார்கள்.

பூர்வீகச் சொத்து கைக்கு வரும். நட்பால் ஆதாயம் உண்டு. சுக்ரன் வலுவடைந்திருப்பதால், திடீர் பணவரவு உண்டு. புது டிசைனில் நகை வாங்குவீர்கள். 15ம் தேதி முதல் 9ல் சூரியன் நுழைவதால், தந்தைக்கு நெஞ்சு வலி, அலைச்சல் உண்டாகும். அரசு காரியங்கள் இழுபறியாகும்.

ராகு 5ம் வீட்டில் நிற்பதால், இனம் தெரியாத கவலை, டென்ஷன் வந்து செல்லும். வியாபாரத்தில் பழைய சரக்குகளைத் தள்ளுபடி விலைக்கு விற்றுத் தீர்ப்பீர்கள். வேலையாட்கள், பங்குதாரர்களால் பிரச்னைகள் வெடிக்கும். உத்தியோகத் தில் மேலதிகாரிகள் உங்கள் கோரிக்கைகளை ஏற்க மறுப்பார்கள். சக ஊழியர்களால் அலைக்கழிக்கப் படுவீர்கள்.

தான் உண்டு தன் வேலையுண்டு என்றிருக்க வேண்டிய காலம் இது.

ராசிபலன்

இயற்கையை நேசிக்கும் நீங்கள், பாரம்பரிய வழக்கங்களை விட்டுக் கொடுக்கமாட்டீர்கள். ராஜ கிரகங்களான குருவும், சனியும் உங்களுக்கு வலுவாக இருப்பதால், எதையும் சாதிக்கும் வல்லமை உண்டாகும். சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும்.

தன்னிச்சையாக செயல்படத் தொடங்குவீர்கள். வழக்கில் வெற்றி உண்டு. எதிரிகள் அடங்கிப் போவார்கள். குழந்தை பாக்கியம் கிடைக்கும். மகளுக்கு நல்ல வரன் அமையும். மகனுக்கு வேலை கிடைக்கும். பழைய கடன் பிரச்னை தீரும். அயல்நாடு செல்ல விசா கிடைக்கும்.

கோயில் விழாக்களில் முதல் மரியாதை கிடைக்கும். யோகாதிபதி சுக்ரனும், ராசிநாதன் புதனும் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால், வாகனம் வாங்குவீர்கள். வீடு மாறுவீர்கள். தந்தைவழியில் மகிழ்ச்சி தங்கும். தந்தைவழி சொத்துக்கள் வந்து சேரும்.

சூரியன் சாதகமாக இல்லாததால், வீண் அலைச்சல் அதிகமாகும். திடீர்ப் பயணங்கள் உண்டு. வியாபாரத்தில் இரட்டிப்பு லாபம் உண்டு. அனுபவம் மிகுந்த பணியாட்கள் அமைவார்கள். பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும்படி நடந்துகொள்வீர்கள். உங்கள் திறமையை சக ஊழியர்கள் பாராட்டுவார்கள்.

சாதிப்பவர்களின் பட்டியலில் இடம் பிடிக்கும் தருணம் இது.

ராசிபலன்

எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும் என்று நினைப்பவர்கள் நீங்கள்தான். சுக்ரனும், புதனும் சாதகமான வீடுகளில் செல்வதால், தடைப்பட்ட வேலைகள் முடிவடையும். உதாசீனப்படுத்தியவர்கள் மதிப்பார் கள். பழுதாகிக் கிடந்த வாகனத்தை மாற்றுவீர்கள். ஆனால், சனி 5ல் தொடர்வதால், பிள்ளைகள் அவ்வப் போது பிடிவாதமாக இருப்பார்கள்.

சூரியன் சாதகமான நட்சத்திரங் களில் செல்வதால், கறாராகப் பேசுவீர்கள். அரசு வேலைகள் முடியும். 8ல் செவ்வாய் நிற்பதால், எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்து வைக்க முடியாதபடி செலவுகள் இருக்கும். வீடு, நிலம் வாங்குவது, விற்பதில் சிக்கல்கள் வந்து விலகும்.

3ல் ராகு வலுவடைந்து நிற்பதால், தைரியமாகச் சில முடிவுகள் எடுப்பீர்கள். வீடு மாறுவீர்கள். தாய்வழி சொத்துப் பிரச்னைக்கு சுமுகத் தீர்வு கிடைக்கும். வெளிவட்டாரத்தில் மதிப்பு, மரியாதை கூடும். குரு ராசிக்குள்ளேயே தொடர்வதால், சிலர் உங்களைப் பற்றி அவதூறாகப் பேசுவார்கள்.

வியாபாரத்தில் பழைய பாக்கி களைப் போராடி வசூலிப்பீர்கள்.வாடிக்கையாளர்களை சுலபத்தில் திருப்திப்படுத்த முடியாமல் திணறுவீர் கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் உங்களை மதிப்பார்கள். ஆனாலும், சக ஊழியர்களுடன் மோதல்கள் வரக்கூடும் என்பதால், அவர்களிடம் எச்சரிக்கையாக நடந்துகொள்ள வேண்டியது அவசியமாகும்.

பக்குவமாகப் பேசி சாதிக்கும் நேரம் இது.

ராசிபலன்

தோல்வியைக் கண்டு துவளாத நீங்கள், அடைக்கலம் தேடி வருபவர்களை ஆதரிப்பவர்கள். 15ம் தேதி முதல் ராசிநாதன் சூரியன் 6ல் அமர்வதால், எதிரிகளை வீழ்த்துவீர்கள். வி.ஐ.பி.களின் தொடர்பு கிடைக்கும். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். அரசாங்க விஷயங்களும் விரைந்து முடியும். வேலை கிடைக்கும்.

ராசிக்கு 7ல் செவ்வாய் நிற்பதாலும், புதனும், சுக்ரனும் 6ம் வீட்டில் மறைந்து நிற்பதாலும் வீடு, மனை வாங்குவது, விற்பது தாமதமாகி முடியும் கணவன்மனைவிக்குள் மனஸ்தாபம் வந்து நீங்கும்.

பணப்பற்றாக்குறை ஏற்படும். வழக்கில் தீர்ப்பு தள்ளிப் போகும். வாகனம் பழுதாகும். சர்ப்ப கிரகங்களின் சஞ்சாரம் உங்களுக்குச் சாதகமாக இல்லாததால், வீண் பழி, பல் வலி, கால் வலி, வந்துசெல்லும்.

சிறுசிறு விபத்துக்கள் ஏற்படக் கூடும் என்பதால் பயணத்தின்போது எச்சரிக்கையாக இருக்கவும். குரு 12ல் மறைந்திருப்பதால், நீண்ட நாட்களாகச் செல்லவேண்டுமென்று நினைத்திருந்த அண்டை மாநிலப் புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். சாதுக்கள், மகான்களின் தரிசனமும் அவர்களின் ஆசியும் கிடைக்கப் பெறுவீர்கள்.

வியாபாரத்தில் போட்டிகளால் லாபம் குறையும். பங்குதாரர்களுடன் மனத்தாங்கல் வரும். உத்தியோகத்தில் உங்களைப் பற்றிய வதந்திகள் வரும். பொறுமை அவசியம்.

ஒரே நேரத்தில்

பல வேலைகளை முடிக்கும் காலம் இது.

ராசிபலன்

நகைச்சுவையாகவும், நாசூக்காக வும் பேசும் நீங்கள், நாலும் அறிந்தவர் கள். யோகாதிபதி சனி 3ம் வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால், கம்பீர மாகப் பேசி சாதிப்பீர்கள். பணவரவு உண்டு. உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள்.

பெரிய மனிதர்களின் அறிமுகம் கிட்டும். வழக்கு சாதகமாகும். ஹிந்தி, தெலுங்கு பேசுபவர்களால் உதவிகள் உண்டு. குடும்பத்தினருடன் சென்று குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். மகளுக்கு எதிர்பார்த்தபடி நல்ல வரன் அமையும்.  

செவ்வாய் 6ம் வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால், பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். 15ம் தேதி முதல் சூரியன் 5ல் நுழைவதால், பிள்ளைகளால் அலைச்சல், டென்ஷன், வாக்குவாதம் உண்டாகும். ராகுவும், கேதுவும் உங்களுக்குச் சாதகமாக இல்லாத தால், வாகன விபத்து, மனைவிக்கு ஆரோக்கியக் குறைவு வந்து நீங்கும்.

சிலர் வீடு மாற வேண்டிய கட்டாயம் வரும். சுக்ரனும், புதனும் சாதகமான வீடுகளில் செல்வதால், புதிய ஆடை, ஆபரணம் வாங்குவீர்கள்.

வியாபாரத்தில் சில நுணுக்கங் களைக் கற்றுக் கொள்வீர்கள். வேலையாட்களைத் தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். உத்தியோகத் தில் எல்லோரும் பாராட்டும்படி நடந்து கொள்வீர்கள். சக ஊழியர்கள் மத்தியில் செல்வாக்கு கூடும்.

தகுதி, கௌரவம் உயரும் தருணம் இது.

ராசிபலன்

தொலைநோக்கு சிந்தனை கொண்ட நீங்கள், எதிலும் உண்மையை விரும்புபவர்கள். உங்கள் ராசிநாதன் சுக்ரனும், பாக்யாதிபதி புதனும் 4ம் வீட்டில் அமர்ந்திருப்பதால், உங்களின் பிடிவாதப் போக்கை கொஞ்சம் மாற்றிக் கொள்வீர்கள்.

பூர்வீக சொத்துச் சிக்கல் தீரும். உறவினர்கள், நண்பர்களின் ஆதரவு பெருகும். விருந்தினர்களின் வருகை யால் வீட்டில் உற்சாகம் பொங்கும். எதிர்பாராத பணவரவு உண்டு. சூரியன் சாதகமான வீடுகளில் செல்வதால், அரசு காரியங்கள் விரைந்து முடிவடையும்.

செவ்வாய் 5ம் வீட்டில் நிற்பதால், பிள்ளைகளிடம் கோபப்படாதீர்கள். அவர்களை அன்பால் அரவணைத்துப் போகவும். பாதச் சனி நடை பெறுவதால், முக்கிய கோப்புகளில் கையெழுத்திடுவதற்கு முன்பாக சட்ட நிபுணர்களை கலந்தாலோசிப்பது நல்லது. குரு 10ல் தொடர்வதால், அநாவசியமாக யாருக்காகவும் எந்த உறுதி மொழியும் தர வேண்டாம். கேது 6ம் வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால், எதிர்ப்புகள் அடங்கும். யோகா, தியானத்தில் மனம் லயிக்கும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும்.

வேலையாட்களின் ஒத்துழைப்பு சுமாராக இருக்கும். உங்கள் ரசனைக் கேற்ப கடையை மாற்றியமைப்பீர்கள். உத்தியோகத்தில் உங்களுடைய கடின உழைப்பை மூத்த அதிகாரி புரிந்துகொள்ள மாட்டார்.

பழைய பிரச்னைகள் தீரும் நேரம் இது.

ராசிபலன்

எதிலும் கறாராக இருக்கும் நீங்கள், பிறர் தயவில் வாழ விரும்ப மாட்டீர்கள். 14ம் தேதி வரை 2ல் அமர்ந்து ஏடாகூடமாகப் பேச வைக்கும் சூரியன் 15ம் தேதி முதல் 3ல் அமர்வதால், எதிலும் வெற்றி பெறுவீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். பதவிகள் தேடி வரும். புது வேலை அமையும். அரசாங்க வகையில் எதிர்பார்த்திருந்த காரியங்கள் சாதகமாக முடியும்.

குடும்பத்தில் அமைதி நிலவும். தாயாரின் உடல் நலம் சீராகும். சுக்ரனும், புதனும் சாதகமாக இருப்பதால், திடீர் பயணங்கள் உண்டு. குருபகவான் சாதகமாக இருப்பதால், சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். பணவரவு அதிகரிக்கும்.

பிள்ளைகள் தங்கள் தவறை உணருவார்கள். செவ்வாய் 4ல் தொடர்வதால், உங்களின் ஆளுமைத் திறன் அதிகரிக்கும். பேச்சில் கம்பீரம் தெரியும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். சகோதரர்களின் அரவணைப்பு அதிகரிக்கும்.

ஜென்மச் சனி தொடர்வதால், பகை, ஏமாற்றம், நிம்மதியின்மை, மருத்துவச் செலவுகள் வந்து போகும். வியாபாரத்தில் அதிரடியான செயல் களால் போட்டிகளைச் சமாளிப்பீர்கள். வேலையாட்கள், பங்குதாரர்கள் மதிப் பார்கள். வேலையாட்கள் உங்கள் முயற்சிகளுக்கு ஒத்துழைப்பார்கள். உத்தியோகத்தில் சிற்சில பிரச்னைகள் ஏற்பட்டாலும் அவற்றைச் சாமர்த்தி யமாகச் சமாளித்து விடுவீர்கள்.

வெளிச்சத்தை நோக்கிப் பயணிக்கும் வேளை இது.

ராசிபலன்

மொழிப்பற்று, இனப்பற்றுள்ள நீங்கள், ஒற்றுமை உணர்வு அதிகம் உள்ளவர்கள். பூர்வ புண்ணியாதிபதி செவ்வாய் 3ம் வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால், சவாலில் வெற்றி பெறுவீர்கள். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும்.

அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் வேலைகளைப் பகிர்ந்து கொள்வார்கள். புதனும், சுக்ரனும் சாதகமான வீடுகளில் செல்வதால், வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். பொன், பொருள், ஆபரணச் சேர்க்கை உண்டு.

வாகனம் வாங்குவீர்கள். கல்யாணப் பேச்சு வார்த்தை சாதக மாக முடியும். வர வேண்டிய பூர்வீக சொத்து கைக்கு வரும். பால்ய நண்பர்கள் உங்கள் தேவையறிந்து உதவுவார்கள்.

குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். புது வீடு கட்டத் தொடங்குவீர்கள். 15ம் தேதி முதல் உங்கள் ராசியை விட்டு விலகி சூரியன் 2ல் நுழைவதால், உடல் வலி, முன்கோபம் விலகும். விரயச் சனி தொடர்வதால், ஆழ்ந்த உறக்கமில்லாமல் போகும்.

சாதுக்கள் உதவுவார்கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். வேலையாட்களிடம் அதிக கண்டிப்பு காட்ட வேண்டாம். உத்தியோகத்தில் அதிகாரிகளிடம் அதிக உரிமை எடுத்துக் கொள்ள வேண்டாம்.

விடாமுயற்சியால் வெற்றி பெறும் காலம் இது.   

ராசிபலன்

மனசாட்சிக்கு மதிப்பளிக்கும் நீங்கள், தன்மானம் தவறாதவர்கள். ராஜ கிரகங்களான சனியும், குருவும் வலுவாக நிற்பதால், தொட்ட காரியங்கள் துலங்கும். புதிதாக சொத்து வாங்குவீர்கள். பெரிய பதவியில் இருப்பவர்களின் நட்பும் அவர்களால் ஆதாயமும் கிடைக்கும். குடும்பத்தில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள்.

சிக்கனமாகச் செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். கடன் பிரச்னை கட்டுப்பாட்டுக்குள் வரும். உங்கள் ராசிக்குள் புதனும், சுக்ரனும் அமர்ந்திருப்பதால், பணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர்கள், நண்பர்கள் வீட்டு விசேஷங்களை எடுத்து நடத்துவீர்கள்.

கல்யாணப் பேச்சு வார்த்தை வெற்றியடையும். ஆடை, ஆபரணம் சேரும். ராசிக்கு 2ல் செவ்வாய் நீடிப்பதால், அலைச்சல், பணப் பற்றாக்குறை, ஒருவித பயம், டென்ஷன், பேச்சால் பிரச்னைகள் வந்து போகும். சகோதரர்களிடம் அதிக உரிமை எடுத்துக் கொள்ள வேண்டாம்.

வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட லாபம் அதிகரிக்கும். பிரபலமான தெருவிற்கு கடையை மாற்றுவீர்கள். பழைய பாக்கிகள் வசூலாகும். புதிய வாடிக்கையாளர்கள் வருவார்கள். உத்தியோகத்தில் உங்களின் கடின உழைப்புக்கு அங்கீகாரம் கிடைக்கும். சக ஊழியர்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள்.

நினைத்ததை முடித்துக் காட்டும் தருணம் இது.

ராசிபலன்

மனக்கணக்குப் போடும் நீங்கள், திட்டமிடுவதில் வல்லவர்கள். சுக்ரனும், புதனும் சாதகமான வீடுகளில் செல்வதால், மனத்தெளிவு, உற்சாகம் பிறக்கும். எதிர்பார்த்த பணம் வரும். எதிலும் மகிழ்ச்சி தங்கும். வி.ஐ.பி.கள் அறிமுகமாவார்கள்.  

பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். கணவன்மனைவிக்குள் அந்நியோன்யம் பிறக்கும். பிள்ளைகளின் நட்பு வட்டம் விரியும். வீடு கட்ட, வாங்க வங்கிக் கடன் உதவி கிடைக்கும். எதிர்பார்த்த இடத்தில் இருந்து நல்ல செய்தி வரும். அயல்நாட்டில் இருப்பவர்கள் உதவுவார்கள்.

6ல் குரு மறைந்திருப்பதால், சந்தேகத்தால் நல்லவர்களின் நட்பை இழந்துவிடாதீர்கள். சில காரியங் களைப் போராடி முடிக்க வேண்டி வரும். ராசிக்குள் செவ்வாய் நிற்பதால், முன்கோபம், வீண் டென்ஷன், சகோதர வகையில் சங்கடங்கள், சொத்துப் பிரச்னைகள் வந்துபோகும்.

15ம் தேதி முதல் சூரியன் 12ல் மறைவதால், தூக்கமின்மை, திடீர் பயணங்கள் ஏற்படும். அரசு காரியங்கள் தாமதமாகி முடிவடையும். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். வேலையாட் களிடம் கனிவாகப் பேசி வேலை வாங்குங்கள். உத்தியோகத்தில் மற்றவர்களின் வேலைகளையும் சேர்த்து பார்க்க வேண்டி வரும். சக ஊழியர்களுடன் வீண் விவாதம் ஏற்படும்.

தன்கையே தனக்கு உதவி என்பதை உணரும் நேரம் இது. 

ராசிபலன்

மனித நேயமுள்ள நீங்கள், வாடி வருபவர்களுக்கு உதவுபவர்கள். சூரியனும், புதனும் சாதகமான வீடுகளில் செல்வதால், புதுத் திட்டங்கள் நிறைவேறும். பெரிய பதவிகள் கிடைக்கும். மேல்மட்ட அரசியல்வாதிகள் உதவுவார்கள்.

கணவன்மனைவிக்குள் அந்நியோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. வெளிவட்டாரத்தில் மரியாதை, செல்வாக்கு கூடும். அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். ராசிநாதன் குருபகவான் வலுவாக அமர்ந்திருப்பதால், சுப நிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். விலை உயர்ந்த ஆபரணம் வாங்குவீர்கள். புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள்.

9ம் வீட்டில் சனி அமர்ந்திருப்ப தால், பிறமொழி பேசுபவர்களால் ஆதாயம் உண்டு. வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். சுக்ரன் சாதகமாக இருப்பதால், திடீர் யோகம், ஆடை, ஆபரணச் சேர்க்கை எல்லாம் உண்டு. ராகுவும், கேதுவும் சாதகமாக இல்லாததால், மனைவிக்கு மருத்துவச் செலவுகள், பிறர் மீது நம்பிக்கையின்மை, வீண் விரயம், கவலைகள் வந்து நீங்கும்.

வியாபாரிகள் புது முதலீடு செய்து வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். வாடிக்கையாளர்களின் ரசனையைப் புரிந்துகொள்வீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் சொந்த விஷயங்களை உங்களிடம் சொல்லி ஆறுதல் அடைவார்கள்.

ஒசைப்படாமல் வளரும் வேளை இது.