மேடுகள்...குறியீடுகள்... எதிர்கால ரகசியங்கள்!‘சேவாரத்னா’ டாக்டர் டி.எஸ்.நாராயணஸ்வாமி
உள்ளங்கையில் கிரக மேடுகளைப் போன்று ஒவ்வொரு கிரகத்துக்கும் உரிய சின்னங்களும், வேறு சில குறிகளும் கோடுகளும்கூட நம் கையில் இடம்பெற்றிருக்கும். இதுகுறித்த விவரங்களை இங்குள்ள அட்டவணையைப் பார்த்துத் தெளிவாகத் தெரிந்துகொள்ளலாம். கிரகங்களுக்கு உரிய சின்னங்கள் அந்தந்த மேடுகளில்தான் இருக்கும் என்றில்லை. அவை வெவ்வேறு மேடுகளிலும் அமையும். இனி, இந்த கிரகச் சின்னங்களும், குறிகளும், கோடுகளும் நம் உள்ளங்கையில் எந்தெந்த மேடுகளில், பாகங்களில் இருந்தால் என்னென்ன பலன்கள் என்பதை அறிந்துகொள்வோம்.
குரு மேட்டில்...
ஒரு கோடு: முயற்சிகளில் வெற்றி

ஒன்றுக்கு மேற்பட்ட கோடுகள்: முன்னேற்றம், புதிய தொழிலில் ஊக்கம்
புள்ளி: சமுதாயத்தில் மதிப்புக் குறைவு.
பெருக்கல் குறி: அறிவாற்றல், வெற்றி, சாதனைகள்.
நட்சத்திரம்: உயர்ந்த குறிக்கோள், அதில் வெற்றி
சதுரம்: கற்பனைத் திறன், ஆன்மிக ஈடுபாடு, சமூக சேவை நாட்டம்.
முக்கோணம்: ஏமாற்றங்கள்
வட்டம்: முயற்சிகளில் வெற்றி, சாதனைகள்.
வலை: குழப்பங்கள், தெளிவின்மை
குருவின் சின்னம்: குருமேட்டுக்கு உரிய சிறப்புகள் அமைவது.
சனியின் சின்னம்: எண்ணங்களின் வலிமை, பிடிவாதம்
சூரியன் சின்னம்: கலைகளில் ஈடுபாடு

புதனின் சின்னம்: நிர்வாகத் திறமை
சுக்ரனின் சின்னம்: பெண்களால் மதிக்கப்படுதல்
சந்திரனின் சின்னம்: போராடும் திறன்
செவ்வாயின் சின்னம்: சொத்துக்கள் வாங்கும் திறமை.
ராகுவின் சின்னம்: உடல் நலம், பாதுகாப்பு
கேதுவின் சின்னம்: தீவிர சிந்தனை, விரைந்து செயலாற்றல்.
சனி மேட்டில்...
ஒரு கோடு: திடீர் அதிர்ஷ்டம்,
பல கோடுகள்: தடங்கல்கள், ஏமாற்றங்கள்.
குறுக்குநெடுக்கான கோடுகள் : துரதிர்ஷ்டம், ஏமாற்றம்.
புள்ளி: எதிர்பாராத நிகழ்ச்சிகள் (நல்லதும், கெட்டதும்).

பெருக்கல் குறி: விபத்துக்கள், உடல் நலப் பாதிப்பு
நட்சத்திரம்: பேராசைகள், குறுக்கு வழிச் சிந்தனைகள்
சதுரம்: தற்காப்பு
முக்கோணம்: எதிர்பாராத திருப்பங்கள் நிகழ்வது.
வட்டம்: ஆன்மிக, தெய்விகத் துறைகளில் ஈடுபாடு.
வலை: துரதிர்ஷ்டம்.
சனியின் சின்னம்: சனி மேட்டுக்கு உரிய லட்சணங்கள் அமைவது,
குருவின் சின்னம்: தத்துவத்திலும், ஞான வழியிலும் ஈடுபாடு.
சூரியன் சின்னம்: கலைத் துறையில் ஈடுபாடு

புதனின் சின்னம்: ஜோதிடம் போன்ற சாஸ்திரங்களில் ஈடுபாடு
சுக்ரனின் சின்னம்: பெண்களிடம் ஈடுபாடு, ஆசைகள் மிக்கவன்
செவ்வாயின் சின்னம்: நீதிமான்.
சந்திரனின் சின்னம்: உலகியல் ஈடுபாடுகள்
ராகுவின் சின்னம்: அகம், பிடிவாதம், விரும்பியதைச் செய்வது.
கேதுவின் சின்னம்: நினைத்ததை நடத்துவது, மிக உயர்ந்த பதவிகளை விரும்புவது.

தொடர்ந்து... அடுத்தடுத்த கிரக மேடுகளில் அமையும் சின்னங்களையும், அவற்றுக்கான பலன்களையும் அறிவோம்.
தொடரும்...