சிறப்பு கட்டுரை
Published:Updated:

பிறந்த நாள் பலன்கள்

‘நவக்கிரக ரத்னஜோதி’ சந்திரசேகரபாரதி

பிறந்த தேதிகள்: 1, 10, 19, 28 

தோற்றப்பொலிவு கூடும் நேரம் இது. குடும்பத்தில் குதூகலம் அதிகரிக்கும். ஒன்றுக்கு மேற்பட்ட இனங்களால் வருவாய் வந்து சேரும். பேச்சில் இனிமையும் திறமையும் வெளிப்படும்.

உற்றார், உறவினர்களாலும், வாழ்க்கைத்துணைவராலும் அனுகூலம் உண்டாகும். எதிரிகள் விலகுவார்கள். புத்திசாலித்தனம் பளிச்சிடும். போட்டிகளில் வெற்றி கிடைக்கும்.

மூத்த சகோதர, சகோதரிகளால் நலம் உண்டாகும். தாய் நலனில் அக்கறை தேவைப்படும். கனவுத் தொல்லையால் தூக்கம் கெடும்.

15ம் தேதி முதல் தொழிலாளர் களுக்கும் விவசாயிகளுக்கும் பிரச்னைகள் குறையும். செல்வ வளம் பெருகும். குடும்பத்தாரால் அனுகூலம் உண்டாகும்.இயந்திரங்கள், எரிபொருட்கள், விளைபொருட்கள் ஆகியவற்றின் மூலம் ஆதாயம் கிடைக்கும்.

1ம் தேதி பிறந்தவர்களுக்கு: பொருளாதார நிலை உயரும். குடும்பத்தில் நற்காரியங்கள் நிகழும். பேச்சாற்றல் வெளிப்படும்.

10ம் தேதி பிறந்தவர்களுக்கு: புதிய பொறுப்புக்கள் கிடைக்கும். வியாபாரம் பெருகும்.

19ம் தேதி பிறந்தவர்களுக்கு: வெற்றி வாய்ப்புகள் கூடும். இயந்திரப்பணிகளால் ஆதாயம் கிடைக்கும்.

28ஆம் தேதி பிறந்தவர்களுக்கு: 14ம் தேதிக்குப் பிறகு விசேஷமான நன்மைகள் உண்டாகும். பொருளாதார நிலை உயரும். குடும்ப நலம் சீராகும்.

அதிர்ஷ்டத் தேதிகள்: ஜனவரி 10, 11, 13, 18, 19.

பிறந்த தேதிகள்: 2, 11, 20, 29

உயர் பொறுப்புகளும் பதவிகளும் உங்களைத் தேடிவரும் நேரம் இது. அரசுப் பணிகள் ஆக்கம் தரும். பயணத்தால் முக்கியமான காரியங்கள் நிறைவேறும்.

போக்குவரத்து இனங்களால் ஆதாயம் கிடைக்கும். ஏற்றுமதிஇறக்குமதி இனங்களில் ஈடுபாடு உள்ளவர்களுக்கு வருமானம் இப்போது அதிகரிக்கும். மக்களாலும், வாழ்க்கைத் துணைவராலும் சிறுசிறு பிரச்னைகள் ஏற்படும்.

மறதியால் அவதிப்படுவீர்கள். வயிறு சம்பந்தமான உபாதைகள் ஏற்படும். உடன்பிறந்தவர்களால் மன அமைதி கெடும்.  

15ம் தேதி முதல் எதிர்ப்புக்கள் சற்று கூடும். உடல்நலனில் கவனம் தேவை. வாழ்க்கைத் துணைவரால் நலம் உண்டாகும். எலெக்ட்ரானிக், கம்ப்யூட்டர் போன்ற துறைகள் லாபம் தரும். மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்துவது அவசியமாகும்.

2ம் தேதி பிறந்தவர்களுக்கு: அரசு உதவி கிடைக்கும். பயணத்தால் அனுகூலம் உண்டாகும்.

11ம் தேதி பிறந்தவர்களுக்கு: உயர் பொறுப்புகளும் பதவிகளும் தேடிவரும். பண வரவு கூடும். குடும்ப நலம் சிறக்கும்.

20ம் தேதி பிறந்தவர்களுக்கு: மறதி ஏற்படும். மக்களால் மன அமைதி குறையும். எதிலும் நிதானமாக ஈடுபடுவது நல்லது.

29ம் தேதி பிறந்தவர்களுக்கு: மன அமைதி குறையும். உடன் பிறந்தவர்களால் சங்கடம் உண்டாகும்.

அதிர்ஷ்டத் தேதிகள்: ஜனவரி 7, 11, 12, 16, 19.

பிறந்த தேதிகள்: 3, 12, 21, 30

உங்கள் ஆற்றல் வெளிப்படும் நேரம் இது. குடும்பத்தில் நற்காரியங்கள் நிகழும். பண வரவு அதிகரிக்கும். புனிதமான காரியங்களில் ஈடுபாடு கூடும். மக்களாலும், வாழ்க்கைத் துணைவராலும், தந்தையாலும் அளவோடு நலம் உண்டாகும்.

ஏற்றுமதிஇறக்குமதி இனங்கள் லாபம் தரும். பயணத்தின் மூலம் முக்கியமான காரியங்கள் நிறைவேறும். அரசுப்பணியாளர்களது நிலை உயரும். உடன்பிறந்தவர்களால் சில இடர்ப்பாடு கள் ஏற்படும்.

15ம் தேதி முதல் பண வரவு சற்று கூடும். நிறுவன, நிர்வாகத்துறைகளைச் சேர்ந்தவர்களுக்கும் எலெக்ட்ரானிக், கம்ப்யூட்டர் துறைகளைச் சேர்ந்தவர் களுக்கும் முன்னேற்றமான சூழ்நிலை உருவாகும். கணவன் மனைவி இடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு விலகும். கூட்டுத் தொழிலில் கவனம் தேவை.

3ம் தேதி பிறந்தவர்களுக்கு: அரசாங்கத்தாரால் அனுகூலம் உண்டாகும். பயணத்தால் முக்கியமான எண்ணம் நிறைவேறும்.  

12ம் தேதி பிறந்தவர்களுக்கு: பண வரவு கூடும். குடும்ப நலம் சிறக்கும். முக்கியப் பொறுப்புக்கள் கிடைக்கும்.

21ம் தேதி பிறந்தவர்களுக்கு: மன மகிழ்ச்சி பெருகும். நிர்வாகத்திறமை வெளிப்படும். நூதன பொருட்சேர்க்கை நிகழும்.

30ம் தேதி பிறந்தவர்களுக்கு: பொருளாதார நிலை உயரும். திறமை வீண்போகாது. உடன்பிறந்தவர்களால் மன அமைதி கெடும்.

அதிர்ஷ்டத் தேதிகள்: ஜனவரி 6, 8, 11, 12, 15, 19.

பிறந்த தேதிகள்: 4, 13, 22, 31

மனதுக்கினிய சம்பவங்கள் நிகழும் நேரம் இது. புத்திசாலித்தனம் பளிச்சிடும். மக்களால் பெற்றோருக்கும் பெற்றோரால் மக்களுக்கும் அனுகூலம் உண்டாகும். ஸ்பெகுலேஷன், கொடுக்கல்வாங்கல் இனங்கள் லாபம் தரும். வழக்கில் வெற்றி கிடைக்கும்.

போட்டிப் பந்தயங்களில் ஈடுபாடு உள்ளவர்களுக்குப் பரிசுகளும் விருதுகளும் கிடைக்கும். விளையாட்டு வீரர்கள் வெற்றி பெறுவார்கள். மகப்பேறு பாக்கியம் கிடைக்கும்.

குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். இயந்திரப்பணியாளர்கள் ஏற்றம் பெறுவார்கள். கலைஞர்களுக்கு சுபிட்சம் கூடும். மாதர்கள் தங்கள் எண்ணம் ஈடேறப் பெறுவார்கள். மாணவர்களது திறமை வெளிப்படும்.

எழுத்தாளர்களுக்கும் பத்திரிகை யாளர்களுக்கும் வரவேற்பு அதிகரிக்கும். தெய்வப் பிரார்த்தனைகள் நிறைவேறும். வாழ்க்கைத்துணைவராலும், தொழில் பங்குதாரர்களாலும் சிறுசிறு பிரச்னைகள் ஏற்பட்டு விலகிவிடும். வீண் அலைச்சலைத் தவிர்ப்பது நல்லது. மக்கள் நல முன்னேற்றத்துக்காக சுபச் செலவுகள் செய்ய வேண்டிவரும்.

4ம் தேதி பிறந்தவர்களுக்கு: அதிர்ஷ்ட வாய்ப்புகள் கூடும். மக்களால் நலம் உண்டாகும். மன உற்சாகம் பெருகும். எதிர்ப்புகள் விலகும்.

13ம் தேதி பிறந்தவர்களுக்கு: பொருளாதார நிலை உயரும் என்றாலும் செலவுகளும் சற்று கூடும். அலைச்சலைக் குறைத்துக் கொள்வது நல்லது.

22ம் தேதி பிறந்தவர்களுக்கு: நல்ல வாய்ப்புகள் கூடிவரும். மதிப்பு உயரும். புதிய பதவி, பட்டங்கள் கிடைக்கும்.

31ம் தேதி பிறந்தவர்களுக்கு: செல்வாக்கு உயரும். புதிய பொருட்களின் சேர்க்கை நிகழும். நண்பர்கள் உதவுவார்கள்.

அதிர்ஷ்டத் தேதிகள்: ஜனவரி 10, 13, 14, 15, 19.

பிறந்த தேதிகள்: 5, 14, 23

வசீகர சக்தி கூடும் நேரம் இது. பொது நலனுக்காகப் பாடுபடுவீர்கள். சமயோசிதமாக நடந்துகொள்வீர்கள். பொருளாதார நிலை திருப்திகரமாகவே இருந்துவரும். நல்லோர் தொடர்பு கிட்டும். அதனால் அனுகூலமும் உண்டாகும். குடும்பத்தார் உங்களுக்கு உதவுவார்கள். கலைஞானம் கூடும்.

கொடுக்கல்வாங்கல் லாபம் தரும். வெளிநாட்டுத் தொடர்புகள் ஆக்கம் தரும். ஆன்மிகப்பணியாளர்கள், ஜோதிடர்கள், கலைஞர்கள், இயந்திரப்பணியாளர்கள், தோட்டப் பணியாளர்கள் ஆகியோர் தங்கள் நிலை உயரப் பெறுவார்கள்.

பிறரால் பாராட்டப்படுவீர்கள். மக்களால் ஓரிரு எண்ணங்கள் நிறைவேறும். ஸ்பெகுலேஷன் துறைகள் லாபம் தரும். தந்தை நலனில் கவனம் தேவைப்படும். அரசியல், நிர்வாகம் போன்ற துறைகளைச் சேர்ந்தவர்கள் 14ம் தேதி வரை விழிப்புடன் இருப்பது நல்லது. அதன்பிறகு நல்ல திருப்பம் உண்டாகும்.

எலெக்ட்ரானிக், கம்ப்யூட்டர் இனங்களைச் சேர்ந்தவர்களுக்கு 15ம் தேதி முதல் வருமானம் அதிகரிக்கும். முக்கியப் பொறுப்புக்களும் பதவிகளும் பெறச் சந்தர்ப்பம் உருவாகும்.

5ம் தேதி பிறந்தவர்களுக்கு: பொதுப்பணிகளில் ஆர்வம் கூடும். பல வழிகளில் ஆதாயம் கிடைக்கும். இயந்திரப்பணிகள் லாபம் தரும்.

14ம் தேதி பிறந்தவர்களுக்கு: தந்தையின் உடல் நலம் பாதிக்கும். விரும்பத்தகாத இடமாற்றம் உண்டாகும். 15ம் தேதி முதல் நல்ல திருப்பம் உண்டாகும். தொலைதூரத் தொடர்பு பயன்படும்.

23ம் தேதி பிறந்தவர்களுக்கு: அறிவாற்றல் பளிச்சிடும். நல்லவர்களின் தொடர்பு கிட்டும். ஆன்மிகப்பணிகளில் ஈடுபாடு கூடும். வாழ்வில் முன்னேற்றம் காண நல்ல வாய்ப்புக்கள் கூடிவரும்.

அதிர்ஷ்டத் தேதிகள்: ஜனவரி 6, 7, 8, 14, 16, 17.

பிறந்த தேதிகள்: 6, 15, 24

சமுதாய நல முன்னேற்றப் பணிகளில் ஈடுபாடு கூடும் நேரம் இது. புதிய ஆடை, அணிமணிகளின் சேர்க்கை நிகழும். தொழில் நுட்பத் திறமை கூடும். மக்களாலும், வாழ்க்கைத் துணைவராலும் அனுகூலம் பெறுவீர்கள்.

குடும்ப நலம் சீராகும். பண வரவு அதிகரிக்கும். ஒன்றுக்கு மேற்பட்ட இனங்களால் ஆதாயம் பெறுவீர்கள். தொழிலாளர்கள், விவசாயிகள், ஆன்மிகவாதிகள், பேச்சாளர்கள் ஆகியோருக்கெல்லாம் முன்னேற்றமான பாதை புலப்படும். நல்லவர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள்.   தந்தை வழியில் சங்கடம் ஏற்படும்.

அரசியல்வாதிகள், அரசுப்பணியாளர் கள், நிர்வாகத்துறைகளைச் சேர்ந்தவர்கள் ஆகியோருக்கெல்லாம் முன்னேற்றம் தடைப்படும். கண் சம்பந்தமான உபாதைகள் ஏற்படும். அக்கம்பக்கத்தில் உள்ளவர்களால் தொல்லைகள் ஏற்படும். 15ம் தேதி முதல் வீண் செலவுகள் குறையும். டெக்னாலஜி சம்பந்தப்பட்ட படிப்பில் வெற்றி காணலாம். கலைத்துறை யினருக்கு புதிய ஒப்பந்தங்கள் கைக்கு வந்து சேரும். இயந்திரப்பணிகள் லாபம் தரும். கறுப்பு மற்றும் கருநீல நிறப் பொருட்களால் ஆதாயம் கிடைக்கும்.

6ஆம் தேதி பிறந்தவர்களுக்கு: கலைத்துறை ஊக்கம் தரும். நல்லவர்கள் நலம் புரிவார்கள். செல்வ நிலை உயரும். குடும்ப நலம் சிறக்கும். நற்காரியங்களில் ஈடுபடுவீர்கள்.

15ஆம் தேதி பிறந்தவர்களுக்கு: செலவுகள் சற்று கூடும். அரசு விவகாரங்களில் விழிப்பு தேவை. உடல்நலனில் கவனம் தேவைப்படும். கண் உபாதை ஏற்படும்.

24ஆம் தேதி பிறந்தவர்களுக்கு: தொலைதூரத் தொடர்பு பயன்படும். வாழ்க்கைத்துணைவரால் அனுகூலம் உண்டாகும். நல்லவர்களின் நட்புறவு கிடைக்கும். பிறருக்கு உதவி செய்வீர்கள்.

அதிர்ஷ்டத் தேதிகள்: ஜனவரி 6, 9, 12, 15, 16, 17.

பிறந்த தேதிகள்: 7, 16, 25

உங்கள் புத்திசாலித்தனம் பளிச்சிடும் நேரம் இது. பொருள்வரவு கூடும். ஒன்றுக்கு மேற்பட்ட இனங்களால் ஆதாயம் கிடைத்துவரும். நண்பர்களும் உறவினர்களும் உங்களுக்கு நலம் புரிய முன்வருவார்கள்.

கணவரால் மனைவிக்கும் மனைவியால் கணவருக்கும் அனுகூலம் உண்டாகும். மக்கள் நலம் மகிழ்ச்சி தரும். புதிய பதவி, பட்டங்கள் கிடைக்கும். நல்ல இடத்துக்கு மாற்றம் கிடைக்கும். கொடுக்கல்வாங்கல் இனங்கள் லாபம் தரும்.

வியாபாரத்தில் முன்னேற்றம் காணச் சந்தர்ப்பம் கூடிவரும். எழுத்தாளர்களுக்கும் பத்திரிகையாளர் களுக்கும் வரவேற்பு கூடும்.  

பெண்களுக்கு மன உற்சாகம் பெருகும். மாணவர்கள் வெற்றி நடைபோடுவார்கள். வியாபார முன்னேற்றத் திட்டங்கள் இப்போது நிறைவேறும். தந்தையால் அனுகூலம் உண்டாகும். என்றாலும், எதிர்பாராத செலவுகளும் ஏற்படும்.

15ம் தேதி முதல் வெற்றி வாய்ப்புகள் அதிகரிக்கும். எதிரிகள் கூட மனம் மாறி உங்களுக்கு உதவுவார்கள்.

7ம் தேதி பிறந்தவர்களுக்கு: வியாபாரம் பெருகும். நண்பர்களும் உறவினர்களும் உதவுவார்கள். வாழ்க்கைத்துணைவரால் அனுகூலம் உண்டாகும்.

16ம் தேதி பிறந்தவர்களுக்கு: உயர் பொறுப்புகளும் பதவிகளும் கிடைக்கும். அரசு உதவி பெறச் சந்தர்ப்பம் கூடிவரும்.

25ம் தேதி பிறந்தவர்களுக்கு: அதிர்ஷ்ட வாய்ப்புகள் கூடிவரும். மக்களால் நலம் உண்டாகும். பெரியவர்களது ஆதரவு கிடைக்கும். தெய்வப்பணிகள் நிறைவேறும்.

அதிர்ஷ்டத் தேதிகள்: ஜனவரி 7, 11, 12, 16, 19.

பிறந்த தேதிகள்: 8, 17, 26

புதியவர்களது நட்பால் நலம் பெறும் நேரம் இது. வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புகள் ஆக்கம் தரும். முன்னேற்றத்துக்கான தகவல் வந்து சேரும். குடும்பத்தில் நற்காரியங்கள் நிகழ அடிகோலப்படும். பண நடமாட்டம் சற்று அதிகமாகும். கலைத்துறையினருக்கு வெற்றிகள் குவியும்.  

நிலம், மனை, வீடு, வாகனங்களால் ஆதாயம் கிடைக்கும். போக்குவரத்து இனங்கள், தோல் பொருட்கள், ஏற்றுமதிஇறக்குமதி போன்றவற்றால் லாபம் கிடைத்துவரும். வியாபாரிகள், எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள் ஆகியோர் பொறுப்புடன் செயல்பட்டால் சங்கடங்களுக்கு ஆளாகாமல் தப்பலாம்.

நல்லவர்களின் நட்புறவை நாடிப் பெற்றால் நலம் கூடப் பெறலாம். 15ம் தேதி முதல் அரசாங்கத்தாரால் அனுகூலம் பெற வாய்ப்பு உண்டாகும்.

புதிய பதவி, பட்டங்கள் கிடைக்கும். நிர்வாகத்துறையினருக்கு முன்னேற்ற மான சூழ்நிலை உருவாகும். உடன் பிறந்தவர்களாலும் தந்தையாலும் அனுகூலம் உண்டாகும் என்றாலும் மார்பு, இதயம் சம்பந்தமான உபாதைகள் உள்ளவர்கள் மட்டும் விழிப்புடன் இருப்பது நல்லது.

8ம் தேதி பிறந்தவர்களுக்கு: கலைத்துறை ஆக்கம் தரும். அயல்நாட்டுத் தொடர்பு பயன்படும். பயணத்தால் அளவோடு நலம் உண்டாகும்.

17ம் தேதி பிறந்தவர்களுக்கு: மனக்குழப்பம் உண்டாகும். வீண்வம்பு கூடாது. மக்கள் நலனில் அக்கறை செலுத்த வேண்டிவரும்.

26ம் தேதி பிறந்தவர்களுக்கு: நல்ல தகவல் கிடைக்கும். உடன்பிறந்தவர்களாலும் தந்தையாலும் அனுகூலம் உண்டாகும். முயற்சி வீண்போகாது.

அதிர்ஷ்டத் தேதிகள்: ஜனவரி 8, 10, 13, 16, 17.

பிறந்த தேதிகள்: 9, 18, 27

உங்கள் நிர்வாகத்திறமை வெளிப்படும் நேரம் இது. முக்கியஸ்தர் களது சந்திப்பால் நலம் பெறுவீர்கள். புதிய பதவி, பட்டங்கள் உங்களை இப்போது தேடிவரும். அரசாங்கத்தாரால் அனுகூலம் உண்டாகும். கணவன் மனைவி உறவு நிலை திருப்தி தரும். கூட்டாகத் தொழில் செய்பவர்களுக்கு ஆதாயம் அதிகம் கிடைக்கும்.

கலைத்துறையினருக்கு வரவேற்பு கூடும். தொழிலாளர்களது நிலை உயரும். பொது நலப்பணிகளில் ஆர்வம் கூடும். குடும்பத்தில் சிறுசிறு பிரச்னைகள் தலைதூக்கும். உணவுப் பழக்கத்தில் கட்டுப்பாடு தேவைப்படும். முன்பின் அறிமுகம் இல்லாதவர்களை நம்பி எதிலும் ஈடுபடலாகாது.

பயணத்தால் சிறு சங்கடம் ஏற்படும். மக்கள் நலனில் கவனம் தேவைப்படும். குடும்பத்தாரிடம் சுமுகமாகப் பழகுவது நல்லது. வியாபாரிகள் அகலக்கால் வைக்கலாகாது. மாணவர்கள் படிப்பில் அதிக கவனம் செலுத்தவும்.

15ம் தேதி முதல் வாழ்க்கைத் துணைவராலும் தந்தையாலும் செலவுகள் அதிகரிக்கும். அரசு விவகாரங்களில் எச்சரிக்கை தேவை. வெளிநாட்டுத் தொடர்புடன் தொழில் புரிபவர்கள் எச்சரிக்கையுடன் இருந்தால் சங்கடங்களுக்கு ஆளாகாமல் தப்பலாம்.

9ம் தேதி பிறந்தவர்களுக்கு: உழைப்புக்கு உரிய பயன் கிடைக்கும். வாழ்க்கைத்துணைவராலும் தந்தையாலும் அனுகூலம் உண்டாகும்.  

18ம் தேதி பிறந்தவர்களுக்கு: நல்ல வாய்ப்புகள் கூடிவரும். புதிய பொறுப்புக்கள் கிடைக்கும். காரியத்தில் வெற்றி கிட்டும். மதிப்பு உயரும்.

27ம் தேதி பிறந்தவர்களுக்கு: குடும்பத்தில் குழப்பம் ஏற்படும். புதியவர்களிடம் எச்சரிக்கையுடன் பழகுவது நல்லது.உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

அதிர்ஷ்டத் தேதிகள்: ஜனவரி 6, 9, 15, 18. .