ஸ்பெஷல் 2
ஸ்பெஷல் 1
Published:Updated:

ராசி பலன்கள்

ஜனவரி 14-ம் தேதி முதல் 27-ம் தேதி வரை ‘ஜோதிட ரத்னா

பணவரவு திருப்தி தரும்!

ராசி பலன்கள்

மேஷம்: ஆக்கும் சக்தி அதிகமுள்ளவர்களே! உங்கள் ராசிநாதன் செவ்வாய் லாப வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால், மற்றவர்களால் செய்ய முடியாத காரியங்களையும் செய்து முடிப்பீர்கள். பணவரவு திருப்தி தரும். வீடு, மனை வாங்குவது, விற்பது லாபகரமாக அமையும். சூரியன் சாதகமாக இருப்பதால், மகளுக்கு நல்ல வரன் அமையும். அஷ்டமத்துச் சனி நடப்பதால், யாருக்காகவும் யாரிடமும் பரிந்துரை செய்யாதீர்கள். முக்கிய ஆவணங்களில் கையெழுத்திடும்போது கூடுதல் கவனம் தேவை. வியாபாரத்தில் வரவு உயரும். உத்யோகத்தில் அதிகாரிகள் உங்களைக் குறை கூறுவார்கள்.

வீண் செலவுகள் ஏற்படும்!

ராசி பலன்கள்

ரிஷபம்: 'கற்றது கை மண்ணளவு’ என்பதை அறிந்தவர்களே! புதன் சாதகமான வீடுகளில் செல்வதால், புதிய கோணத்தில் சிந்தித்து பழைய பிரச்னைகளைத் தீர்ப்பீர்கள். வீட்டை புதுப்பிக்க திட்டமிடுவீர்கள். பிள்ளைகளின் கலைத்திறனை கண்டறிந்து ஊக்குவிப்பீர்கள். சூரியன் 9ம் வீட்டில் நுழைவதால், வீண் செலவுகள் ஏற்படும். கண்டகச் சனி நடைபெறுவதால், வாழ்க்கைத் துணைவர் கடந்த கால கசப்புச் சம்பவங்களைப் பற்றி பேசினாலும், பொறுமையுடன் இருங்கள். குரு தொடர்ந்து மறைந்து கிடப்பதால், தாழ்வுமனப்பான்மை வந்து செல்லும். வியாபாரத்தில் லாபம் குறையும். உத்யோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும்.

மனம் மகிழும் நேரம்!

ராசி பலன்கள்

மிதுனம்: எதிலும் உடனடித் தீர்வை விரும்புபவர்களே! ராஜ கிரகங்களான குருவும், சனியும் வலுவாக அமர்ந்திருப்பதால்,  பணப்புழக்கம் அதிகரிக்கும். வாழ்க்கைத் துணவர் நேசிப்பார். புது வாகனம் வாங்குவீர்கள். உறவினர்கள் உங்கள் நல்ல மனதைப் புரிந்துகொள்வார்கள். திருமணம் தாமதமானவர்களுக்கு விரைவில் கூடி வரும். சூரியன் சரியில்லாததால், அரசாங்க விஷயங்கள் தாமதமாக முடியும். சர்ப்ப கிரகங்கள் உங்களுக்கு சாதகமாக இல்லாததால், அவ்வப்போது சலிப்பு ஏற்படும். வியாபாரத்தில் இரட்டிப்பு லாபம் உண்டு. உத்யோகத்தில் உங்கள் உழைப்புக்கு பாராட்டு கிடைக்கும்.

முன் எச்சரிக்கை தேவைப்படும் சமயம்!

ராசி பலன்கள்

கடகம்: எதையும் கலைநயத்துடன் செய்யக் கூடியவர்களே! சுக்கிரனும், புதனும் சாதகமான வீடுகளில் செல்வதால், வீடு வாங்க வங்கி லோன் கிடைக்கும். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த உறவினரை சந்திப்பீர்கள். சூரியன், செவ்வாயின் போக்கு சரியில்லாததால், பிள்ளைகளின் உரிமையில் தலையிடாதீர்கள். வாகனம், மின்னணு, மின்சார சாதனங்களைக் கவனமாக கையாளுங்கள். ஜென்ம குரு தொடர்வதால் திடீரென்று அறிமுகமாகுபவரை அதிகம் நம்ப வேண்டாம். வியாபாரம் சுமார்தான். போட்டிகளால் விழிபிதுங்குவீர்கள். உத்யோகத்தில் சின்னச் சின்ன இடர்பாடுகளை சமாளிக்க வேண்டியிருக்கும்.

வருமானம் உயரும்!

ராசி பலன்கள்

சிம்மம்: சலனப்படாமல் சங்கடங்களை எதிர்கொள்பவர்களே! ராசிநாதன் சூரியன் வலுவாக 6-ம் வீட்டில் நுழைவதால், அரசாங்க விஷயங்கள் சாதகமாக முடியும். வருமானம் உயரும். 23-ம் தேதி வரை சுக்கிரன் 6-ல் நிற்பதால், உடல்நலக் கோளாறு வந்து நீங்கும். அர்த்தாஷ்டமச் சனி நடப்பதால், வீடு, வாகனப் பராமரிப்பு செலவுகள் அதிகரிக்கும். புதன் 6-ல் மறைந்திருப்பதால், உறவினர், தோழிகளுடன் விரிசல்கள் வரக்கூடும். வியாபாரத்தில் ரகசியங்கள் யார் மூலம் கசிகிறது. என்பதை அறிந்து தக்க முடிவு எடுப்பீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகளால் அலைக்கழிக்கப்படுவீர்கள்.

உத்யோகத்தில் செல்வாக்கு!

ராசி பலன்கள்

கன்னி: பிரதிபலன் பாராமல் பிறருக்கு உதவுபவர்களே! குருவும், சனியும் வலுவாக இருப்பதால், நெடுநாட்களாக எதிர்பார்த்த தொகை கைக்கு வரும். தங்க ஆபரணம் வாங்குவீர்கள். உறவினர், தோழிகள் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். 5-ல் சூரியன் நிற்பதால், உடல் உபாதை வந்து செல்லும். சுக்கிரன் 23-ம் தேதி முதல் ராசிக்கு 6-ம் வீட்டில் நுழைவதால், சமையலறையில் கூடுதல் கவனத்துடன் செயல்படுங்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனைக்கேற்ற பொருட்களைக் கொள்முதல் செய்து லாபத்தை பெருக்குவீர்கள். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும்.

பயணங்கள் பயன் தரும்!

ராசி பலன்கள்

துலாம்: திட்டமிடுதலில் வல்லவர்களே! புதனும், சுக்கிரனும் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால், அடுக்கடுக்கான செலவுகளைச் சமாளிக்கும் ஆற்றல் கிடைக்கும். பயணங்களால் பயனடைவீர்கள். 2-ல் சனியும், 5-ல் செவ்வாயும் தொடர்வதால், பிள்ளைகளால் அலைச்சல், செலவுகள் இருக்கும். உறவினர்களிடம் வீண் விவாதம் செய்வதைத் தவிர்க்கவும். சூரியன் சாதகமான வீடுகளில் செல்வதால், வீட்டை விரிவுபடுத்திக் கட்டும் முயற்சிகள் பலிதமாகும். வியாபாரத்தில் மறைமுக எதிர்ப்புகளையும் தாண்டி லாபம் சம்பாதிப்பீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகளுடன் அளவாகப் பழகுங்கள்.

இல்லம் களைகட்டும்!

ராசி பலன்கள்

விருச்சிகம்: சவாலான காரியங்களையும் செய்து முடித்துக் காட்டுபவர்களே! சூரியன் 3-ம் வீட்டில் நுழைவதால், தைரியம் அதிகரிக்கும். அரசு காரியங்கள் விரைந்து முடியும். உங்கள் ரசனைக்கேற்ப சொத்து வாங்குவீர்கள். ஜென்மச் சனி தொடர்வதால், மற்றவர்களுக்காக ஜாமீன், கேரண்டர் கையொப்பமிட்டு சங்கடத்தில் சிக்கிக்கொள்ளாதீர்கள். குருபகவான் சாதகமாக இருப்பதால், சுப நிகழ்ச்சிகளால் வீடுகளைகட்டும். வியாபாரத்தில் பழைய சரக்குகளை விற்றுத் தீர்ப்பீர்கள். பாக்கிகளைப் போராடி வசூலிப்பீர்கள். உத்யோகத்தில் சில புதுமைகளைச் செய்து எல்லோரின் கவனத்தையும் ஈர்ப்பீர்கள்.

நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும்!

ராசி பலன்கள்

தனுசு: அழுத்தமாகவும், ஆணித்தரமாகவும் வாதாடுபவர்களே! சுக்கிரனும், புதனும் சாதகமான வீடுகளில் செல்வதால், உங்கள் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். செவ்வாய் 3-ம் வீட்டில் நிற்பதால் மகளின் திருமணத்தைச் சிறப்பாக நடத்துவீர்கள். உறவினர், தோழிகளுடன் மனம் விட்டு பேசி மகிழ்வீர்கள். ராசிநாதன் குரு 8-ல் மறைந்திருப்பதால், மறைமுக விமர்சனம், தாழ்வுமனப்பான்மை வந்து செல்லும். சூரியன் சாதகமாக இல்லாததால். உடல் உபாதை ஏற்படலாம். வியாபாரத்தில் புது யுக்திகளால் விற்பனையை அதிகரிப்பீர்கள். உத்யோகத்தில் உங்கள் திறமைகளை அதிகாரிகள் குறைத்து மதிப்பீடுவார்கள்.

உறவினர்களால் அனுகூலம்!

ராசி பலன்கள்

மகரம்: எப்போதும் யதார்த்தத்தை விரும்புபவர்களே! குரு 7-ல் நிற்பதால், உங்களுடைய திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். பூர்விக சொத்தால் வருமானம் வரும். உறவினர்களால் அனுகூலம் உண்டு. குலதெய்வப் பிரார்த்தனையை குடும்பத்தினருடன் சென்று நிறைவேற்றுவீர்கள். சூரியன் ராசிக்குள் நுழைவதாலும், ராசிக்கு 2-ல் செவ்வாய் இருப்பதாலும்... காரிய தாமதம், உடல் உபாதை ஏற்படலாம். சகோதர வகையில் சங்கடங்கள் வரும். வியாபாரத்தில் சில நுணுக்கங்களைக் கற்றுக்கொள்வீர்கள். அலுவலகத்தில் உங்களுக்கு  அதிகாரிகளிடம் செல்வாக்கு கூடும்.

பிள்ளைகள் மதிப்பார்கள்!

ராசி பலன்கள்

கும்பம்: மற்றவர்களின் உணர்வுகளுக்கு மரியாதை தருபவர்களே! சுக்கிரனும், புதனும் சாதகமான வீடுகளில் செல்வதால், சுற்றியிருப்பவர்களின் சுயரூபம் தெரிய வரும். சுபச் செலவுகள் அதிகமாகும். வருமானத்தைப் பெருக்க சில முயற்சிகள் மேற்கொள்வீர்கள். பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக்கொள்வார்கள். சூரியன், செவ்வாயின் சஞ்சாரம் சரியில்லாததால்... தூக்கமின்மை, வீண் செலவுகள் வந்து செல்லும்.  வியாபாரத்தில் வழக்கமான லாபம் உண்டு. உத்யோகத்தில் சின்னச் சின்ன வீண் பழிகள் வந்து செல்லும். சக ஊழியர்களின் சொந்த விஷயங்களில் தலையிட வேண்டாம்.

நிர்வாகத் திறமை உயர வைக்கும்!

ராசி பலன்கள்

மீனம்: இடம்பெயர்ந்து சென்றாலும் குலப்பெருமையை காப்பவர்களே! சூரியன் லாப வீட்டில் நுழைவதால், கடினமான காரியங்களையும் எளிதாக முடிப்பீர்கள். புது பொறுப்புகள், பதவிகள் தேடி வரும். வீடு கட்டும்  பணியைத் தொடங்குவீர்கள். சிலருக்கு அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். ராகுவும், கேதுவும் சாதகமாக இல்லாததால், யாரும் உங்களைப் புரிந்துகொள்ளவில்லை என அவ்வப்போது ஆதங்கப்படுவீர்கள். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள்

தீட்டுவீர்கள். உத்யோகத்தில் உங்களின் நிர்வாகத் திறமை கூடும். சக ஊழியர்களால் நன்மை ஏற்படும்.