ஸ்பெஷல் 1
Published:Updated:

ராசி பலன்கள்

ஜோதிட ரத்னா கே.பி. வித்யாதரன்ஜனவரி 28-ம் தேதி முதல் பிப்ரவரி 10-ம் தேதி வரை

ரசனைக்கேற்ற வீடு அமையும்!

மேஷம்: வெள்ளை உள்ளம் கொண்டவர்களே! ராசிநாதன் செவ்வாயும், பூர்வ புண்யாதிப

ராசி பலன்கள்

தி சூரியனும் வலுவாக அமர்ந்திருப்பதால் உங்களின் அணுகுமுறை மாறும். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். மகளுக்கு வரன் தேடுவீர்கள். ரசனைக்கேற்ப வீடு, வாகனம் அமையும். சகோதரர்கள் மதிப்பார்கள். என்றாலும், அஷ்டமத்துச் சனி தொடர்வதால் எல்லோருக்கும் நல்லது செய்தாலும் கெட்ட பெயர்தானே மிஞ்சுகிறது என்றெல்லாம் ஆதங்கப்படுவீர்கள். குரு 4-ல் நீடிப்பதால் திடீர் பயணங்கள், செலவுகளால் திணறுவீர்கள். வேலையாட்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும்.

சூழ்ச்சிகளைத் தாண்டி முன்னேறும் காலமிது.

சாதிக்கும் வேளையிது!

ராசி பலன்கள்

ரிஷபம்: தேனீ போல் சுறுசுறுப்பானவர்களே! உங்கள் சப்தமாதிபதி செவ்வாய் 10-ல் நிற்பதால், பழைய பிரச்னைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறை மூலமாகத் தீர்வு காண்பீர்கள். கணவர், உங்களைப் புரிந்து கொள்வார். வீட்டை புதுப்பிப்பீர்கள்.  சகோதரிக்கு நல்ல வாழ்க்கைத் துணை அமையும். பூர்வீகச் சொத்தை சீர் செய்வீர்கள். 5-ல் ராகு நிற்பதாலும், 7-ல் சனி தொடர்வதாலும் யாரும் புரிந்துகொள்ளவில்லை என்று புலம்புவீர்கள். குரு 3-ல் தொடர்வதால் வேலைகளை இழுத்துப் போட்டு பார்க்க வேண்டி வரும்.

சாதுர்யமான பேச்சால் சாதிக்கும் வேளையிது.

குறைகூறுவோர், மாறுவார்கள்!

ராசி பலன்கள்

மிதுனம்: சகிப்புத்தன்மை கொண்டோரே! முக்கிய கிரகங்கள் சாதகமாக இருப்பதால் திடீர் யோகம், பணவரவு உண்டாகும். கணவர் முக்கியத்துவம் தருவார். பிள்ளைகள் பொறுப்பாக இருப்பார்கள். சொத்து வாங்குவது, விற்பது லாபகரமாக அமையும். குறைகூறும் மாமியார், நாத்தனார் மனம் மாறுவார்கள். சூரியன் 8-ல் மறைந்திருப்பதால் அரசு காரியங்கள் இழுபறியாகி முடியும். வாகனத்தில் செல்லும்போது நிதானம் அவசியம். உத்யோகத்தில் அதிகாரிகளின் பலம் எது, பலவீனம் எது என்பதை உணர்ந்து உங்களின் நடவடிக்கைகளை மாற்றிக்கொள்வீர்கள்.

முன்னேற்றப் பாதையில் பயணிக்கும் நேரமிது.

தர்மசங்கட காலம்!

ராசி பலன்கள்

கடகம்: சீர்திருத்த சிற்பிகளே! ராகு வலுவாக 3-ம் வீட்டில் அமர்ந்திருப்பதால், இடர்ப்பாடுகளை  சமாளிக்கும் சக்தி உண்டாகும். பூர்வீகச் சொத்தை விற்று சில பிரச்னைகளிலிருந்து வெளிவருவீர்கள். சூரியனும், செவ்வாயும் சாதகமாக இல்லாததால் தர்மசங்கடமான சூழ்நிலைகள் ஏற்படக்கூடும். எதார்த்தமாக பேசுவதை மாமியார், நாத்தனார் தவறாக புரிந்துகொள்வார்கள். ஜென்ம குரு தொடர்வதால் சவால்கள் தொடரலாம். வியாபார ரகசியங்கள் கசியாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

அலுத்துக் கொள்வதைத் தவிர்க்க வேண்டிய தருணம் இது.

எதிர்ப்புகள் குறையும்!

ராசி பலன்கள்

சிம்மம்: தீர்க்கமாக முடிவெடுப்பவர்களே! சுக்கிரன் சாதகமாக இருப்பதால், புதிய முயற்சிகள் பலிதமாகும். கணவரின் போக்கில் மாற்றம் உண்டாகும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். மச்சினரின் திருமணத்தை முன்னின்று நடத்துவீர்கள். புது வீடு கட்டி குடிபுகுவீர்கள். செவ்வாய்  7-ல் அமர்ந்திருப்பதால் கணவருக்கு மருத்துவச் செலவு வரக்கூடும். ராசிநாதன் சூரியன் வலுவாக அமர்ந்திருப்பதால் எதிர்ப்புகள் குறையும். அர்த்தாஷ்டமச் சனி தொடர்வதால் வீண் பழி வரலாம். உத்யோகத்தில் சக ஊழியர்களால் சங்கடங்கள் வரும்.

எதிர்நீச்சல் போட்டு வெற்றிபெறும் வேளையிது.

பொறுப்புகள் தேடி வரும்!

ராசி பலன்கள்

கன்னி: துயரங்களைக்கண்டு துவளாதவர்களே! குருபகவான் வலுவாக இருப்பதால் பிரச்னைகளைக் கண்டு அஞ்சமாட்டீர்கள். வீடு, மனை அமையும். கணவர் ஒத்தாசையாக பணிகளைச் செய்வார். நாத்தனார், கொழுந்தனார் மதிப்பார்கள். 5-ல் சூரியன் நிற்பதால் டென்ஷன், வாகனப்பழுது வந்து நீங்கும். செவ்வாய் வலுவாக இருப்பதால் புதுப் பொறுப்புகள் தேடிவரும். சுக்கிரன் 6-ல் நிற்பதால் கணவருக்கு அலைச்சல், சளித் தொந்தரவு வந்து போகும். வியாபாரத்தில் கிளைகள் தொடங்குவீர்கள்.

வெளுத்ததெல்லாம் பாலில்லை என்பதை உணரும் தருணமிது.

தைரியம் பிறக்கும்!

ராசி பலன்கள்

துலாம்: நீதிக்குத் தலைவணங்குபவர்களே! புதன் சாதகமான வீடுகளில் செல்வதால் ஓரளவு பணவரவு உண்டு. வி.ஐ.பிகளின் உதவியால் சில காரியங்களை முடிப்பீர்கள். மகனுக்கு, நல்ல குடும்பத்திலிருந்து பெண் அமையும். ராசிநாதன் சுக்கிரனும் சாதகமாக இருப்பதால் தைரியம் பிறக்கும். யாருக்கும் சாட்சி கையெழுத்திட வேண்டாம். செவ்வாய் 5ல் நிற்பதால் குழப்பம், முன்கோபம் வந்து விலகும். நாத்தனார், உடன்பிறந்தவர்கள் வகையில் பிரச்னைகள் வரக்கூடும். குரு 10-ல் தொடர்வதால் உத்யோகத்தில் வேலைச்சுமையும், விமர்சனங்களும் அதிகரிக்கும்.

சுற்றியிருப்பவரின் சுயரூபத்தை அறியும் நேரமிது.

தடை விலகும்!

ராசி பலன்கள்

விருச்சிகம்: தராதரம் அறிந்து பழகுபவர்களே! சுக்கிரன் சாதகமாக இருப்பதால் பணப்புழக்கம் அதிகரிக்கும். கணவர் உங்களிடம் முக்கிய விஷயங்களை பகிர்வார். இங்கிதமான பேச்சால் மாமனார், மாமியாரை கவருவீர்கள். தடைப்பட்ட வீடு கட்டும் பணி முடியும். ஜென்மச் சனி தொடர்வதால் உடம்பில் இரும்புச் சத்து, சுண்ணாம்புச் சத்துக் குறையும். உணவில் பழவகைளை அதிகம் சேர்த்துக்கொள்ளுங்கள். அந்தரங்க விஷயங்களை வெளிநபர்களிடம் பகிர வேண்டாம். அதிகாரிகளிடம் செல்வாக்கு கூடும்.

நாவன்மையால் வெல்லும் காலமிது.

வியாபாரம் சூடு பிடிக்கும்!

ராசி பலன்கள்

தனுசு: மென்மையான சிந்தனை உடையவர்களே! செவ்வாயும், சுக்கிரனும் சாதகமாக இருப்பதால் தள்ளிப் போன விஷயங்கள் உடனே முடியும். கணவரின் அலட்சியப் போக்கு மாறும். சகோதர வகையில் இருந்த பிரச்னைகள் தீரும். கொழுந்தனார், மாமியார் அன்பாக நடந்துகொள்வார்கள். சூரியன் 2-ல் நிற்பதால் பேச்சால் பிரச்னை, கண் எரிச்சல் வந்து போகும். ராகுவும், கேதுவும் சாதகமாக இல்லாததால் வேலைச்சுமை, உங்களைப் பற்றிய வதந்தி வந்து செல்லும். வியாபாரம் சூடுபிடிக்கும். அலுவலகத்தில் அதிகாரிகளின் பாராட்டு ஆறுதல் தரும்.

வெளிவட்டாரத்தில் மதிக்கப்படும் தருணமிது.

புதுப் பதவிகள் கிடைக்கும்!

ராசி பலன்கள்

மகரம்: இலக்கை எட்டும் வரை ஓயாதவர்களே! சுக்கிரன் சாதகமாக இருப்பதால், புதிய எண்ணங்கள் தோன்றும். சுப காரியங்கள் ஏற்பாடாகும். வி.ஐ.பிகள் ஆதரிப்பார்கள். குருவும், சனியும் வலுவாக இருப்பதால் புதுப்பதவிகளுக்குத் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். ராசிக்குள் சூரியன் நிற்பதால் முன்கோபம் வந்து போகும். 2ல் செவ்வாய் நிற்பதால் அநாவசியச் செலவுகளைத் தவிர்க்கப் பாருங்கள். உத்யோகத்தில் மறைமுக எதிர்ப்புகளை முறியடிப்பீர்கள்.

வளைந்து கொடுக்க வேண்டிய வேளையிது.

தோற்றப் பொலிவு கூடும்!

ராசி பலன்கள்

கும்பம்: மண்மணம் மாறாதவர்களே! சுக்கிரன் ஆதரவாக இருப்பதால் தோற்றப் பொலிவு கூடும். நாத்தனாரின் வளையல் காப்பை எடுத்து நடத்துவீர்கள். புண்ணியத் தலங்களுக்குச் சென்று, காணிக்கை செலுத்துவீர்கள். சூரியன், செவ்வாயின் போக்கு சரியில்லாததால் உணர்ச்சிவசப்படுவீர்கள். கோபத்தில் வார்த்தைகளைக் கொட்டிவிடாதீர்கள். சனி, குரு, ராகு, கேதுவும் உங்களுக்குச் சாதகமாக இல்லாததால் யாருக்காகவும் சாட்சி கையொப்பமிட வேண்டாம்.

சிக்கனமும், பொறுமையும் தேவைப்படும் தருணமிது.

சூழ்ச்சிகள் மிரண்டோடும்!

ராசி பலன்கள்

மீனம்: அன்புக்கு அடிமையாகுபவர்களே! ராசிநாதன் குருபகவான் வலுவாக இருப்பதால், வருமானம் உயரும். வீட்டை அழகுபடுத்துவீர்கள். உறவினர்களால் அனுகூலம் உண்டு. சூரியன் லாப வீட்டில் நிற்பதால் நாடாளுபவர்களால் ஆதாயம் அடைவீர்கள். தாயாரின் உடல் நலம் சீராகும். 7-ல் ராகுவும், ராசிக்குள் கேதுவும் தொடர்வதால் இனந்தெரியாத கவலைகள், காய்ச்சல், வீண் செலவுகள் வந்து செல்லும். வியாபாரத்தில் எதிர்பார்த்த ஒப்பந்தம் கிடைக்கும். உத்யோகத்தில் சூழ்ச்சிகளை முறியடித்து வெற்றி பெறுவீர்கள்.

செல்வாக்கு கூடும் நேரமிது.