Published:Updated:

மன்மத வருடம் இப்படிதான்!

ஜோதிடர் ‘நவக்கிரக ரத்னஜோதி’ சந்திரசேகரபாரதி

மன்மத வருடம் இப்படிதான்!

ஜோதிடர் ‘நவக்கிரக ரத்னஜோதி’ சந்திரசேகரபாரதி

Published:Updated:

மன்மதத்தின் மாரி உண்டு வாழும் உயிர் எல்லாமே நன்மை மிகும் பல்பொருளும் நண்ணுமே  மன்னவரால் சீனத்திற்சண்டை உண்டு தென் திசையில் காற்றுமிகும் கானப் பொருள் குறையும் காண்.

ன்மத வருடத்தில் நல்ல மழை பொழியும். உலகின் அனைத்து உயிர்களுக்கும் மிகுந்த நன்மை ஏற்படும். மனிதர்களுக்குத் தேவையான அனைத்துப் பொருட்களும் மிகுதியாகக் கிடைக்கும். சீன நாட்டுடன் சண்டை ஏற்படும். இந்தியாவின் தென் திசையில் மிகுந்த காற்று வீசும். காட்டிலிருந்து கிடைக்கும் பொருட்கள் குறையும் என்கிறது மேற்கண்ட பாடல்.

சித்திரை மாதம் 1ம் தேதி (14.4.15) செவ்வாய்க்கிழமை அன்று மன்மத வருடம் பிறக்கிறது. மன்மத

மன்மத வருடம் இப்படிதான்!

வருடத்தின் ராஜாவாக சனி வருவதால், இந்தியாவின் மேற்குத்திசையில் செல்வம் செழிக்கும். தொழிற்சாலைகள், சுரங்கங்கள், தோட்டங்களில் பணி புரிபவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். உழைப்பாளர்களின் கோரிக்கைகளில் முக்கியமானவை நிறைவேறும். அரசாங்கத்தினரால் அனுகூலம் உண்டாகும். விஞ்ஞானிகளுக்கு நற்பெயரும் விருதுகளும் கிடைக்கும். விவசாய மூலப்பொருட்கள் தாராளமாகக் கிடைக்கும். விவசாயத்தில் புதிய யுக்திகள் மூலம் விளைச்சல் அதிகமாகும். தாதுப் பொருட்களின் உற்பத்தி அதிகமாகும். எண்ணெய் வகையறாக்கள் அதிக லாபம் தரும். இரும்பு, எஃகு ஆகியவற்றின் மூலம் ஆதாயம் பெருகும். கறுப்பு, கருநீலநிறப்பொருட்கள், பழைய பொருட்கள், கச்சாப் பொருட்கள் மற்றும் பூமியிலிருந்து வெளிப்படும் பொருட்களாலும் ஆதாயம் கிடைக்கும்.

மன்மத வருடம் இப்படிதான்!

இந்த வருடத்தின் மந்திரியாக அங்காரகன் வருவதால், தெற்கில் மழை குறையும். இயந்திரங்கள், எரிபொருட்கள், வெடிபொருட்கள், ஆயுதங்கள் ஆகியவற்றால் ஆதாயம் கிடைக்கும். ரியல் எஸ்டேட் இனங்கள் லாபம் தரும். சேனாதிபதியாக சந்திரன் வருவதால், மழை வளம் பெருகும். வடநாட்டில் பிரச்னைகளும் கலவரங்களும் அதிகரிக்கும். இந்தப் புத்தாண்டில் பால் வளம் பெருகும். நெய் மற்றும் எண்ணெய் வித்துக்கள் மற்றும் திடப்பொருட்களின் உற்பத்தி பெருகும்.

இந்த ஆண்டில் சனிபகவானுக்கு அதிக முக்கியத்துவம் இருப்பதால், தர்ம நெறிப்படி வாழ்ப வர்களுக்கு நன்மைகள் கூடும்.  சனிபகவானை வழிபடுவதன் மூலம் நலம் கூடப் பெறலாம். சனிபகவானுக்குக் குருவாக இருப்பவர் கால பைரவர். கால பைரவரையும், ஆஞ்சநேயரையும், ஐயப்பனையும் வழிபடுவதன் மூலமும் சனிபகவானின் அருளுக்குப் பாத்திரமாகலாம்.