Published:Updated:

உள்ளங்கையில் சில உண்மைகள்

ஆயுள் ரேகை ரகசியம்‘சேவாரத்னா’ டாக்டர் டி.எஸ்.நாராயணஸ்வாமி

உள்ளங்கையில் சில உண்மைகள்

ஆயுள் ரேகை ரகசியம்‘சேவாரத்னா’ டாக்டர் டி.எஸ்.நாராயணஸ்வாமி

Published:Updated:
 உள்ளங்கையில் சில உண்மைகள்

ள்ளங்கையிலுள்ள ரேகைகளில் முதலில் குறிப்பிடப் படுவதும், முக்கியத்துவம் வாய்ந்ததும் ஆயுள் ரேகை ஆகும்.

 உள்ளங்கையில் சில உண்மைகள்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

 கட்டை விரலுக்கும் ஆள்காட்டி விரலுக்கும் நடுவில் உள்ள பகுதியில் தொடங்கி மணிக்கட்டின் கீழே உள்ள மணிக்கட்டு ரேகை வரையிலும் வளைந்து செல்வது ஆயுள் ரேகையாகும். உலகிலுள்ள மனிதர்கள் எல்லோருடைய கையிலும் இந்த ரேகை நிச்சயம் இருக்கும். ஆயுள் ரேகை ஆழமாக, தெளிவாக, துண்டு படாமல், செவ்வாய் மேடு அல்லது குரு மேடு முதல் மணிக்கட்டு வரை அமைந்திருந்தால், அது மிகச்சிறந்த ஆயுள் ரேகை என்பதைக் குறிக்கும் (படம்1). இத்தகைய அமைப்புடன் ஆயுள் ரேகை இருந்தால், நீண்ட ஆயுள், திட ஆரோக்கியம், சௌகர்யமான ஜீவனம் அமையும்.

ஆயுள் ரேகையின் நீளத்தையும், தொடர்ச்சி யான அமைப்பையும் வைத்து ஒருவருடைய ஆயுள் காலம் எத்தனை ஆண்டுகள் இருக்கும் என்பதைச் சொல்லலாம். ஆயுள் ரேகை ஆங்காங்கே, அறுபட்டு, வெட்டுப்பட்டு அல்லது தொடர்பில்லாமல் இருக்கக்கூடாது. அப்படி இருப்பின் எந்தெந்த இடங்களில் தொடர்பு அறுபட்டு உள்ளதோ, அந்த இடம் குறிக்கும் வயதில் உடல்நலக்குறைவு, ஆயுள்கண்டம் ஏற்பட வாய்ப்பு உண்டு (படம்2). இதில் ஒரு விஷயத்தை கவனத்தில் கொள்ள வேண்டும். ஆயுள் ரேகையைப் பொறுத்தவரையில் இரண்டு உள்ளங்கைகளிலும் உள்ள ஆயுள் ரேகைகளின் வடிவமைப்பு, நீளம், தொடர்ச்சி, துண்டாகியிருக்கும் நிலை இரண்டையும் ஒப்பிட்டுக் கவனமாகப் பலன்கள் தெரிந்துகொள்ள வேண்டும்.

ஆயுள் ரேகைக்கு பக்க பலமாக செவ்வாய் ரேகை அல்லது சுக்கிர ரேகை இருந்தால், அது ஆயுள் ரேகையின் பலத்தை அதிகப்படுத்தும். ஆயுள் ரேகையிலுள்ள ஆயுள் கண்டம், நோய் அறிகுறிகள், போன்றவற்றால் ஏற்படும் தீய விளைவுகளையும் தவிர்க்கும்.

சில உள்ளங்கைகளில் ஆயுள் ரேகை குரு மேட்டில் இருந்துகூட ஆரம்பமாகலாம் (படம்3). அதனால், ரேகையின் நீளம் அதிகமாக இருக்கும். இதுவும் நீண்ட ஆயுளையும், சிறப்பான வாழ்க்கையையும் குறிக்கும்.

சில உள்ளங்கைகளில் ஆயுள் ரேகையும், புத்தி ரேகையும் ஒன்றாகச் சேர்ந்து அமைந்திருக்கும்.

 உள்ளங்கையில் சில உண்மைகள்

அத்தகைய ஆயுள் ரேகை, குரு மேட்டுக்கு சமீபமாகவோ அல்லது குரு மேட்டிலிருந்தோ ஆரம்பமானால், அது மிகச் சிறந்த வாழ்க்கை அமைப்பையும், தீர்க்க ஆயுளையும், ஆரோக்கியமான வாழ்வையும் குறிக்கும். அத்தகையவர்கள் புத்தி பலத்தையும் செயல்திறனையும் இணைத்து தெளிவாகச் சிந்தித்துச் செயல்படும் திறமை உள்ளவர்களாகத் திகழ்வார்கள்.

ஆயுள் ரேகையும் புத்தி ரேகையும் ஒன்றுக்கொன்று சேராமல் பிரிந்திருந்தால், அவர்கள் சிந்திப்பது ஒன்றாகவும், செயல்கள் வேறாகவும் இருக்கும். இருவகையான சுபாவங்கள் அவர்களிடம் இருக்கும். கொள்கைக்கும் செயலுக்கும் சம்பந்தம் இருக்காது. வெற்றி அடைவதற்கு  எந்த வழியையும் கடைப்பிடிப்பவர்களாக அவர்கள் இருப்பார்கள்.

ஆயுள்ரேகை வளைந்து, தீவுகள் அல்லது சங்கிலி வடிவில் இருந்தால், அவர்களுடைய உடல் நலம் அடிக்கடி பாதிக்கப்படும் (படம்4).

ஆயுள் ரேகையில் இருந்து சிறு சிறு ரேகைகள் பல்வேறு மேட்டை நோக்கி அமைந்திருந்தால், அவர்கள் சுறுசுறுப்புள்ளவர்கள். பல தொழில்களைச் செய்யும் திறமை மிகுந்தவர்களாகவும், அடிக்கடி பிரயாணங்கள் மேற்கொள்பவர்களாகவும், ஆர்வமும் உழைப்பும் மிகுந்தவர்களாகவும் திகழ்வார்கள். இது பொதுவான பலன்தான். ஆயுள் ரேகையில் இருந்து பிரிந்துசெல்லும் சிறு ரேகைகள் எந்த மேட்டை நோக்கிச் செல்கிறது என்பதை வைத்துத் துல்லியமான பலனை அறியலாம்.

ஆயுள் ரேகையிலிருந்து மேல் நோக்கிச் செல்லும் ரேகைகள்

1. குருமேட்டை நோக்கிச் சென்றால்: துணிச்சல், சாகசம், காரிய வெற்றி, புத்திக்கூர்மை  அமையும்(படம்5).

2. சனி மேட்டை நோக்கிச் சென்றால்: தவறான வழிகளிலும் பொருளீட்டும் ஆசை, சிக்கல்கள், விபத்துக்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு (படம்5).

 உள்ளங்கையில் சில உண்மைகள்

3. சூரிய மேட்டை நோக்கிச் சென்றால்: புகழ், பெருமை, செல்வாக்கு, சிறப்பான வாழ்க்கை (படம்6).

4. புதமேட்டை நோக்கிச் சென்றால்: மகிழ்ச்சியான திருமண வாழ்க்கை, வியாபாரத்தில் வெற்றி கிடைக்கும் (படம்6).

5. சந்திரமேட்டை நோக்கிச் சென்றால்: அதிகார ஆசை, பதவி, வெற்றி தோல்விகள் உண்டு (படம்7).

6. கீழ்ச் செவ்வாய் மேட்டை நோக்கிச் சென்றால்: தாழ்வு மனப்பான்மை, தோல்விகள் ஏற்படும் (படம்7).

7. மேல் செவ்வாய் மேட்டை நோக்கிச் சென்றால்: பற்றுதல்கள், பாச உணர்வு, உலக சுகங்களில் ஈடுபாடு ஏற்படும் (படம்7).

8. சுக்கிர மேட்டை நோக்கிச் சென்றால்: காதலில் வெற்றி, விரும்பிய வகையில் திருமணம் (படம்7).

இதே கோடுகள் ஆயுள் ரேகையிலிருந்து கீழ்நோக்கிச் செல்லுமானால் பலன்கள் சாதகமாக இருக்காது.

ஆயுள்ரேகையின் வடிவமைப்பு, அகலம், நீளம் அதன் மீதுள்ள குறிகள் போன்றவற்றை வைத்து, கீழ்க்காணும் முக்கிய பலன்களைத் தெரிந்து கொள்ளலாம்.

1. நீண்ட ஆயுள்ரேகை  நீடித்த ஆயுள்.

2. குறுகிய ஆயுள் ரேகை  குறைந்த ஆயுள்.

3. சங்கிலி போன்ற அமைப்பு  ஆரோக்கியக் குறைவு.

4. துண்டுபட்ட ரேகை  அடிக்கடி நோய்வாய்ப்படுதல்.

5. ஆயுள்ரேகை ஆரம்பத்தில் கிளைகளாக இருந்தால்  வாழ்க்கையில் சிக்கல்கள், சிரமங்கள் இருக்கும். (படம்8)

6. ஆயுள்ரேகை முடியுமிடத்தில் மணிக்கட்டருகில் கிளைகளாகப் பிரிந்து இருந்தால்  வயது காலத்தில் உடல் நலமின்மை மற்றும் சௌகர்யக் குறைவுகளைக் குறிக்கும் (படம்9).

7. பல இடங்களில் குறுக்கு ரேகைகள் இருந்தால், நிரந்தரமான உடல் நலக்குறைவைக் காட்டும்.

 உள்ளங்கையில் சில உண்மைகள்

8. பெருக்கல் குறி இருந்தால், மனக்கஷ்டம், நிம்மதியின்மை, எதிர்பாராத விபத்து ஆகியவற்றைக் குறிக்கும்.

9. தீவு போன்ற அமைப்பு இருந்தால், அதிக நாள் நீடிக்கும் உடல் நலக் குறைவையும், நோயையும் குறிக்கும் (படம்10).

10. ஆயுள் ரேகையை குறுக்காக ரேகை ஒன்று அறுத்தாலும் அல்லது பெருக்கல் குறி கரும்புள்ளிகள் போன்றவை ஆயுள் ரேகை மீது இருந்தாலும் (படம்11), அது சிறிய விபத்துக்கள், நோயினால் ஏற்படும் அறுவை சிகிச்சை, விபத்துக்களில் ஊனமாதல் போன்றவற்றைக் குறிக்கும். இவற்றை சரியாக நிர்ணயிப்பதற்கு இரண்டு உள்ளங்கைகளையும் ஒப்பிட்டுப் பார்த்துச் சொல்ல வேண்டும்.

ஆயுள் ரேகைகளில் இருந்து மற்ற மேடுகளை நோக்கிச் செல்லும் ரேகைகளைப் போலவே, குரு, சனி, சூரியன், புதன், செவ்வாய், சந்திரன், சுக்கிரன் போன்ற மேடுகளிலிருந்து ஆயுள் ரேகையை வந்து சேரும் பல்வேறு ரேகைகள் உண்டு. அவை: குரு ரேகை, சனி ரேகை, சூரிய ரேகை, புத ரேகை, செவ்வாய் ரேகை, சந்திர ரேகை, சுக்கிர ரேகை என்று குறிப்பிடப்படும்.

இவை ஒவ்வொன்றுக்கும் அவற்றின் வடிவமைப்பையும், அவற்றின் மீதுள்ள குறிகளையும் வைத்து, பலவிதமான பலன்கள் அமையும். இந்த ரேகைகள், ஆயுள்ரேகையைத் தொடும் இடத்தை வைத்து, ஒருவருடைய எந்த வயதில் அல்லது எந்த காலகட்டத்தில் என்ன சம்பவங்கள் அல்லது பலன்கள் ஏற்படும் என்பதை நிர்ணயிக்கலாம்.

ஆயுள்ரேகை ஒருவரது வயதின் காலகட்டத்தை எப்படிக் குறிக்கிறது என்பதை படம் 12ல் தெரிந்துகொள்ளலாம். மேலும், கை ரேகை சாஸ்திரத்தில் ஒருவரின் ஆயுள் 7, 14, 21, 28, 35, 42, 49, 56, 63, 70, 77, 84, 91, 98 என்று பார்க்கப்படுகிறது. இது நம் வாழ்க்கை நிகழ்வுகளோடு பொருந்துகிறது. இதுகுறித்தெல்லாம் வரும் அத்தியாயங்களில் விரிவாகக் காண்போம்.

தொடரும்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism