Published:Updated:

ராசி பலன்கள்

ஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன்பிப்ரவரி 11-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை  

ராசி பலன்கள்

ஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன்பிப்ரவரி 11-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை  

Published:Updated:

முன்கோபத்தைத் தவிருங்கள்!

ராசி பலன்கள்

மேஷம்: இளகிய மனசு கொண்டவர்களே! உங்கள் பூர்வ புண்யாதிபதி சூரியன் சாதகமான வீடுகளில் செல்வதால், சாதிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். வீடு கட்டும் பணியைத் தொடங்குவீர்கள். உங்கள் ராசிநாதன் செவ்வாய், கேதுவுடன் சேர்ந்து 12-ம் வீட்டில் மறைந்து நிற்பதால்... வீண் அலைச்சல், தூக்கமின்மை வந்து போகும். முன்கோபத்தை தவிர்க்கப் பாருங்கள். அஷ்டமத்துச் சனி தொடர்வதால், பணப்பற்றாக்குறை ஏற்படும். வியாபாரத்தில் பழைய சரக்குகளை விற்றுத் தீர்ப்பீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரிகளால் ஆதாயமடைவீர்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஏமாற்றங்கள், எதிர்ப்புகளைக் கடக்கும் காலமிது.

வெளிச்சத்துக்கு வரும் வேளை!

ராசி பலன்கள்

ரிஷபம்: அடிமனதில் தோன்றுவதை அப்படியே பேசுபவர்களே! சப்தமாதிபதி செவ்வாய் வலுவாக லாப வீட்டில் அமர்ந்திருப் பதால், தன்னம்பிக்கை பிறக்கும். எதிர்த்தவர்கள் நண்பர்களாவார்கள். 13-ம் தேதி முதல் சூரியன் 10-ம் வீட்டில் நுழைவதால், அரசு காரியங்கள் விரைந்து முடியும். சிலருக்கு அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். கண்டகச் சனி தொடர்வதால், மற்றவர்கள் உங்களை சரியாக மதிக்கவில்லை என்று ஆதங்கப்பட்டுக் கொள்வீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த ஒப்பந்தம் கிடைக்கும். உத்யோகத்தில் பதவி உயர்வு உண்டு.

நீங்கள் வெளிச்சத்துக்கு வரும் நேரமிது.

வரவு உயரும்!

ராசி பலன்கள்

மிதுனம்: சுற்றியிருப்பவர்கள் சுகமாக வாழ பாடுபடுபவர்களே! சுக்கிரன் சாதகமான வீடுகளில் செல்வதால், குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். ஆடை, ஆபரணம் சேரும். 13-ம் தேதி முதல் சூரியன் 9ம் வீட்டில் நுழைவதால், சேமிப்புகள் கரையும். குருவும், சனியும் வலுவாக அமர்ந்திருப்பதால், வெளிநாட்டில் இருப்பவர்களால் ஆதாயமடைவீர்கள். ஷேர் மூலமாக பணம் வரும். வியாபாரத்தில் வரவு உயரும். உத்யோகத்தில் செல்வாக்கு கூடும். என்றாலும், சின்னச் சின்ன நெருக்கடிகளும் வந்து போகும்.

எல்லோராலும் பாராட்டப்படும் காலமிது.

எதிர்பார்ப்புகள் நிறைவேறும்!

ராசி பலன்கள்

கடகம்: நாட்டுப்பற்று மிக்கவர்களே! புதன் சாதகமான வீடுகளில் செல்வதால், எதிர்பார்ப்புகள் தடையின்றி நிறைவேறும். உறவினர், நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். ஜென்ம குரு தொடர்வதால், வாழ்க்கையின் வெற்றி, தோல்வி பற்றிய சிந்தனைகளால் சில நேரங்களில் குழப்பம் அடைவீர்கள். சனி 5ல் தொடர்வதால், பிள்ளைகளின் உயர்கல்வி, உத்யோகம் குறித்த கவலைகள் வந்து போகும். சூரியன் சாதகமில்லாததால் பண இழப்பு, அலைச்சல் ஏற்படலாம். வியாபாரத்தில் வரவு சுமார்தான். உத்யோகத்தில் அதிகாரிகளால் அலைக்கழிக்கப்படுவீர்கள்.

சூட்சுமங்களை அறிந்துகொள்ள வேண்டிய வேளையிது.  

மனதில் உறுதி வேண்டும்!

ராசி பலன்கள்

சிம்மம்: அதிரடித் திட்டங்களைத் தீட்டுவதில் வல்லவர்களே! சுக்கிரன் சாதகமான வீடுகளில் செல்வதால், வீடு வாங்க, கட்ட வங்கிக் கடன் உதவி கிடைக்கும். புதன் 6-ல் மறைந்திருப்பதால், உடல் உபாதை ஏற்படலாம். மற்றவர்களின் குற்றம், குறைகளை குத்திக் காட்ட வேண்டாம். ராசிக்கு 8-ல் செவ்வாய் நிற்பதால், சகோதர வகையில் மனத்தாங்கல் வந்து நீங்கும். அர்த்தாஷ்டமச் சனி தொடர்வதால்... வேலைச்சுமை அதிகரிக்கும். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிக்க கடுமையாக உழைப்பீர்கள்.

அலுத்துத்கொள்ளாமல், ஆகவேண்டியதை பார்க்க வேண்டிய நேரமிது.

ஒளிமயமான எதிர்காலம்!

ராசி பலன்கள்

கன்னி: சுற்றிவளைக்காமல் எண்ணங்களை வெளிப்படுத்துபவர்களே! சனிபகவான் 3-ம் வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால், மனோபலம் கூடும். பணப்புழக்கம் அதிகரிக்கும். புது சொத்து வாங்கும் யோகம் உண்டாகும். 13-ம் தேதி முதல் சூரியன் 6-ம் வீட்டில் நுழைவதால், அரசால் அனுகூலம் உண்டு. சுக்கிரன் 17-ம் தேதி முதல் ராசிக்கு 7-ல் அமர்வதால்... சோர்வு நீங்கி உற்சாகமடைவீர்கள். சிலருக்கு அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். வியாபாரத்தில் அதிரடியாக சில திட்டங்கள் தீட்டுவீர்கள். உத்யோகத்தில் சூழ்ச்சிகளை முறியடித்து முன்னேறுவீர்கள்.

சவால்களில் வெற்றி பெறும் காலமிது.

திட்டமிட்ட காரியங்கள் கைகூடும்!

ராசி பலன்கள்

துலாம்: தடை வந்தபோதும் தளராதவர் களே! பாக்யாதிபதி புதன் சாதகமான வீடுகளில் செல்வதால், திட்டமிட்ட காரியங்கள் கைகூடும். 17-ம் தேதி முதல் ராசிநாதன் சுக்கிரன் 6-ல் மறைவதால், உடல்நலக் கோளாறு வந்து நீங்கும். 6-ல் செவ்வாய் இருந்தாலும், கேதுவுடன் நிற்பதால்... சகோதர வகையில் சங்கடங்கள் வந்து விலகும். 13-ம் தேதி முதல் சூரியன் 5-ல் நுழைவதால், பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள். வியாபாரத்தில் பாக்கிகளைப் போராடி வசூலிப்பீர்கள். உத்யோகத்தில் உங்கள் உழைப்புக்கு அங்கீகாரம் கிடைக்கவில்லையே என ஆதங்கப்படுவீர்கள்.

யோகா, தியானம் தேவைப்படும் நேரமிது.

குடும்பத்தில் மரியாதை!

ராசி பலன்கள்

விருச்சிகம்: மனக்கோட்டை கட்டினா லும், ஒருபோதும் பணக்கோட்டைக்கு அடிமை யாகாதவர்களே! சூரியன் சாதகமான வீடுகளில் செல்வதால், குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். பணவரவு அதிகரிக்கும். உறவினர்கள் உங்களின் பெருந்தன்மையைப் பாராட்டுவார்கள். ராசிநாதன் செவ்வாய், கேதுவுடன் சேர்ந்து 5-ம் வீட்டில் நிற்பதால், பிள்ளைகளால் அலைச்சல்கள், செலவுகள் ஏற்படும். வியாபாரத்தில் கடுமையான போட்டிகள் இருக்கும். புதிய விளம்பர யுக்தியைக் கையாளுவீர்கள். உத்யோகத்தில் உங்களின் நிர்வாகத் திறமை கூடும்.

எதிர்நீச்சல் போடும் வேளையிது.

நாகாக்க வேண்டிய நேரம்!

ராசி பலன்கள்

தனுசு: முடியாது என்பதையும் கடின உழைப்பால் முடித்துக்காட்டுபவர்களே! சுக்கிரனும், புதனும் சாதகமான வீடுகளில் செல்வதால், குடும்பத்தில் நல்லது நடக்கும். வீடு, மனை வாங்குவது, விற்பது லாபகரமாக முடியும். ராகுவும், கேதுவும் சரியில்லாததால், உங்கள் வாயை சிலர் கிளறி வேடிக்கை பார்ப்பார்கள். எனவே, அதிகம் பேச வேண்டாம். ஏழரைச் சனி இருப்பதால், பழைய கசப்பான சம்பவங்கள் நினைவுக்கு வரும். வியாபாரத்தில் ஏற்றுமதி  இறக்குமதி வகைகளால் லாபம் கூடும். உத்யோகத்தில் உயரதிகாரிகளால் மதிக்கப்படுவீர்கள்.

புதிய அணுகுமுறையால் வெற்றி பெறும் தருணமிது.

இல்லத்தில் இன்பம் பொங்கும்!

ராசி பலன்கள்

மகரம்: எதையும் ஆழமாக யோசிப்பவர் களே! சனியும், குருவும் வலுவாக அமர்ந் திருப்பதால், சுப நிகழ்ச்சிகளால் வீடு களை கட்டும். விலை உயர்ந்த ஆடை, ஆபரணம் வாங்குவீர்கள். வாழ்க்கைத் துணவர் பாசமழை பொழிவார். 13-ம் தேதி முதல் சூரியன் ராசியை விட்டு விலகுவதால், தடைகளெல்லாம் நீங்கும். என்றாலும், ராசிக்கு 2-ல் நுழைவதால் உடல் உபாதை வந்து போகும். வியாபாரத்தில் லாபம் வரும். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்யோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும்படி நடந்துகொள்வீர்கள்.

தைரியமாக முடிவுகள் எடுக்கும் தருணமிது.

உறவினர்கள், தோழிகளால் ஆதாயம்!

ராசி பலன்கள்

கும்பம்: எப்போதும் இதயத்தால் பேசுபவர்களே!  ராசிக்குள் புதன் நிற்பதால், எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். ஓரளவு பணவரவு உண்டு. உங்கள் அறிவுரைகளைப் பிள்ளைகள் ஏற்றுக்கொள்வார்கள். உறவினர்கள், தோழிகளால் ஆதாயம் உண்டு. 13-ம் தேதி முதல் ராசிக்குள் சூரியன் நுழைவதாலும், 2-ல் செவ்வாயும், கேதுவும் நிற்பதாலும் உடல்நலக் கோளாறுகள் வந்து நீங்கும். வீடு, மனை வாங்குவது, விற்பதில் அவசரம் வேண்டாம். வியா பாரத்தில் புதியவர்களை நம்பி முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டாம். உத்யோகத்தில்  உயரதிகாரி ஆதரிப்பார்.

பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டிய நேரமிது.

நினைத்தது நடக்கும்... கேட்டது கிடைக்கும்!

ராசி பலன்கள்

மீனம்: மன்னிக்கும் குணம் கொண்டவர்களே! சுக்கிரன் சாதகமாக இருப்பதால், கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். உங்கள் ரசனைக்கேற்ப வீடு, வாகனம் அமையும். உறவினர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். சூரியன், செவ்வாய் மற்றும் கேது சாதகமாக இல்லாததால்... வீண் டென்ஷன் வந்து போகும். தூக்கம் குறையும். அலைச்சல் அதிகரிக்கும். ராசிநாதன் குருபகவான் வலுவாக இருப்பதால் புது பதவிகள், பொறுப்புகளுக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும்.

காத்திருந்து காய் நகர்த்த வேண்டிய காலமிது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism